கடன் அட்டை’
த ற்போது ‘கிரெடிட் கார்டு’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்கறிக் கடைகள் முதல் ஓட்டல்கள் வரை இதை உபயோகிக்க முடிவது ஒரு பெரிய வசதி.
ஆனால் சிலருக்கு ஒரு சஞ்சலம், ‘கிரெடிட் கார்டு வாங்கிப் பயன்படுத்தலாமா, வேண்டாமா?’ என்று.
கிரெடிட் கார்டுக்கு சாதகமான விஷயங்கள்…
முதலாவது, பாதுகாப்பு. கையில் மொத்தமாக பணத்தைச் சுமந்து செல்ல வேண்டியதில்லை என்பதால் கிரெடிட் கார்டு, பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. விழாக்கால ஜனநெருக்கடி நேரங்களில், பர்ஸ் பணம் குறித்த கவலையின்றி பொருட்கள் வாங்க ஏற்றது கிரெடிட் கார்டு. பர்சில் கார்டை செருகிக்கொண்டு போய், ஜாலியாக ஷாப்பிங் செய்து வந்துவிடலாம்.
சம்பளதாரர்கள் மாதக் கடைசியில் பர்ஸ் வறண்டு தவிக்கையில் கிரெடிட் கார்டு ஆபத்பாந்தவனாய் கைகொடுக்கும். பிறரிடம் கடன் கேட்டு கையேந்தாமல் நாமே சமாளித்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் கிரெடிட் கார்டு மூலம் பணமாகவும் எடுக்கலாம்.
கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செலவுக்கு குறிப்பிட்ட காலஅளவுக்கு வட்டி கிடையாது. எனவே சரியாகப் பயன்படுத்துவோருக்கு இது, வட்டியில்லா கடன் வழியாக உதவும்.
செலவு செய்த தொகையை மாதாந்திர தவணையாக பிரித்துச் செலுத்தும் வசதியையும் சில கார்டுகள் வழங்குகின்றன.
கிரெடிட் கார்டில் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்…
நமக்கான ‘பில்’ வந்தவுடனே உரிய தேதிக்குள் பணம் செலுத்திவிடுவது அவசியம். இல்லாவிட்டால் வட்டி மேல் வட்டி எகிறிவிடும்.
கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை கூடியமட்டும் தவிர்க்க வேண்டும்.
கார்டு தானே என்று அடுத்தவருக்கு பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, கார்டை பயன்படுத்தினால் இந்தத் தள்ளுபடி, சலுகை கிடைக்கும் என்ற விளம்பரத்தைப் பார்த்து தேவையற்ற பொருட்களை வாங்குவது எல்லாம் சிரமத்தில் தள்ளிவிடும்.

முன்னெல்லாம் வங்கிகள் மட்டும்தான் கிரெடிட் கார்டை கொடுத்தன. இப்போது தனியார் நிதி நிறுவனங்கள், சேவை மையங்கள் எல்லாம் கூட கார்டுகளை தருகின்றன. வங்கிக்கு வங்கி, கார்டுக்கு கார்டு வித்தியாசம் இருக்கும். சிலர் சர்வீஸ் சார்ஜ் குறைவாகப் போடுவார்கள். சில கார்டுகளுக்கு அதை எல்லாக் கடைகளிலும் பயன்படுத்தலாம் என்ற வசதி இருக்கும். வேறு சில கார்டுகளுக்கு கடைகளில் நிறைய சலுகை கிடைக்கும். இவை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ‘கிரெடிட் கார்டு’ என்பது ‘கடன் அட்டை’தான். எதிர்கால வருவாயைச் சுரண்டித்தான் செலவு செய்கிறோம். எனவே அதை கட்டுப்பாட்டோடு பயன்படுத்துவது நலம்!
பொறுப்பின்றி கடன் அட்டையை கையாண்டால் காலாவதி ஆகப்போவது கடன் அட்டை அல்ல நாம்தான்.
=================================================================
இன்று,
ஆகஸ்ட்-02.
- மேசிடோனியா குடியரசு தினம்
- உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)
- அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது(1790)
- தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)
================================================================= தலை சுற்ற வைக்கும்
தன்னார்வக் குழுக்கள்.
இந்தியாவில், பள்ளிகளை விட இரு மடங்குக்கும் அதிகமாக, என்.ஜி.ஓ., எனப்படும், அரசுசாரா அமைப்புகள் உள்ளன. சமூக அமைப்பு பதிவு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட என்.ஜி.ஓ.,க் களில் பெரும்பாலானவை, ஆண்டு வரவு, செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் செயல்படுவது, சி.பி.ஐ., திரட்டிய தகவல்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.
என்.ஜி.ஓ.,க்கள் செயல்பாடு குறித்து பல்வேறு சந்தேகங்களை குறிப்பிட்டு, மூத்த வழக்கறிஞர், எம்.எல்.சர்மா, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட், மொத்த என்.ஜி.ஓ.,க்கள் எண்ணிக்கை, அவை தாக்கல் செய்துள்ள ஆண்டு கணக்கு விவரம் உள்ளிட்ட தகவல்களை திரட்டி, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட என்.ஜி.ஓ.,க் கள் பற்றிய தகவல்களை, சி.பி.ஐ., திரட்டியது.மூன்று மாநிலங்கள் தகவல் அளிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ., இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. சி.பி.ஐ., அளித்த அறிக்கையில், ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.
31 லட்சம் தன்னார்வக் குழக்கள் [என்.ஜி.ஓ.]
31 லட்சம் தன்னார்வக் குழக்கள் [என்.ஜி.ஓ.]
சி.பி.ஐ., திரட்டிய தகவல்படி, 26 மாநிலங்களில், 31 லட்சம் என்.ஜி.ஒ.,க்கள் உள்ளன. ஏழு யூனியன் பிரதேசங்களில், 82 ஆயிரம் என்.ஜி.ஓ.,க்கள் உள்ளன. கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், என்.ஜி.ஓ.,க்கள் பற்றிய தகவல்களை இன்னும் அளிக்கவில்லை. அத்தகவல்கள் கிடைத்தால், என்.ஜி.ஓ., எண்ணிக்கை கணிசமாக உயரும்.
நாடு முழுவதும் உள்ள மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை, வெறும், 15 லட்சம் மட்டுமே. ஆனால், சில மாநிலங்களை விடுத்து, தற்போது கிடைத்த தகவல்படி, என்.ஜி.ஓ.,க்களின் எண்ணிக்கை, பள்ளிகளை விட இரு மடங்குக்கு மேல் உள்ளது.
உ.பி.,யில் அதிகபட்சமாக, 5.48 லட்சம் என்.ஜி.ஓ.,க்கள் உள்ளன. மகாராஷ்டிரா, 5.18 லட்சத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கேரளா, 3.7 லட்சம் என்.ஜி.ஓ.,க்களுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசங்களில் உள்ள மொத்த என்.ஜி.,ஓ.,க்கள், 82,250ல், டில்லியில் மட்டும், 76 ஆயிரம் உள்ளன.

கள்ளக் கணக்குகள்
பதிவு செய்துள்ள என்.ஜி.ஓ.,க்களில், 10 சதவீதத்துக்கும் குறைவானவையே, தமது ஆண்டு கணக்கு விவரங்களை, சமூக அமைப்பு பதிவாளரிடம் சமர்ப்பித்துள்ளன. கேரளாவில், எந்தவொரு என்.ஜி.ஓ.,வும் கணக்கு விவரத்தை தாக்கல் செய்யவில்லை.
மகாராஷ்டிராவிலும், மேற்கு வங்கத்திலும், ஏழு சதவீத என்.ஜி.ஒ.,க்கள் மட்டுமே, கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளன. பிற மாநிலங்களில், என்.ஜி.ஓ.க்கள் கணக்கு விவரம் தாக்கல் செய்வது அரிதாக உள்ளது.
மகாராஷ்டிராவிலும், மேற்கு வங்கத்திலும், ஏழு சதவீத என்.ஜி.ஒ.,க்கள் மட்டுமே, கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளன. பிற மாநிலங்களில், என்.ஜி.ஓ.க்கள் கணக்கு விவரம் தாக்கல் செய்வது அரிதாக உள்ளது.
அனைத்து குழுக்களும் வெளிநாடுகளிடமிருந்து பணத்தைப்பெறுகின்றன.இந்திய அடித்தட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதாகவும் ,உணவு-இருப்பிட வசதி செய்வதாகவும்,பசுமை -வன பாதுகாப்புப் பணிகள் செய்வதாகவும்,சட்ட உதவி செய்வதாகவும் இந்த வெளிநாட்டு பண உதவிகளுக்கு காரணம் சொல்லுகிறரகள்.ஆனால் 60%தன்னார்வக்குழுக்கள் சுயலாபத்துக்காவே நடத்தப்படுகின்றன.
இவை இருப்பதே யாருக்கும் தெரியாது.வெறும் கடிதத் தலை சங்கங்கள்தான்.[லெட்டெர் பேட் ]
20 % இந்தியாவை பற்றிய உள்ளடிச்செய்திகளை வெளிநாடுகளுக்கு உளவு சொல்வது,அரசுக்கு எதிராக அறிக்கைகள் விட்டு குழப்பம் உண்டாக்குபவை.அணு உலைகளுக்கு எதிராக தன்னார்வக்குழுக்கள் போராட்டங்களை நடத்தி ஆண்டுக்கணக்கில் நடந்த போராட்டத்தில் பணம் செலவிட்டதாக செய்திகள் வந்ததை பார்த்திருக்கலாம்.{கூடங்குளம் போராட்ட தலைவர் உதயக்குமார் இது போன்ற தன்னார்வக்குழு நடத்துபவர் என்பதும்.அந்த பணத்தில் பள்ளி நடத்துபவர் என்பதும்,இது போன்ற குழுக்களுக்கு வெளினாட்டு பணஉதவிகள் பெற்றுத் தருவதை பணியாக செய்து வந்தவர் என்பதும் கூடுதல் செய்திகள்.}
மீதி இருப்பவைகளில் சிலதான் உள்ளபடியே நற்பணிகள் செய்யும் நோக்கில் செயல் படுபவை.
இந்தியா முழுவதும், 11,993 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில், 7.84 லட்சம் படுக்கைகள் இடம்பெற்றுள்ளன. 7,447 மருத்துவமனைகள், கிராமப் புறங்களில் உள்ளன.
* நகர்ப்புறங்களில், 4,146 மருத்துவமனைகள் செயல்படுகின்றன. நாட்டில் உள்ள அரசு மருத்துவமனை எண்ணிக்கையை போன்று, 250 மடங்கு அதிகமாக, என்.ஜி.ஓ.,க்கள் உள்ளன.
* கடந்த, 2014ல், தேசிய குற்ற ஆவண அமைப்பு அளித்த தகவல்படி, நாடு முழுவதும், 17.3 லட்சம் போலீசார் உள்ளனர்.
* ஆயுதப் படையில், 13 லட்சம் போலீசார் உள்ளனர். மொத்த போலீசாரின் எண்ணிக்கைக்கு நிகராக, என்.ஜி.ஓ.,க்கள் இருப்பது வியப்புக்குரிய விஷயம்.

இக்குழுக்கள் மீது அரசு தன பார்வையை திருப்பி கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்து களை எடுக்கா விட்டால் நாட்டுக்கு கேடுதான்.
========================================================================