மீண்டும் மாணவர்கள் போராட்டம்?
மாணவர்கள் 1965-ல் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக தமிழகத்தில் 1967-ல் ஒரு ஆட்சி மாற்றம்ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தது.
அன்று ஆட்சியை பறிக் கொடுத்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியவில்லை. இன்று 50 ஆண்டுகள் கழித்து, தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவர்கள் கொதித்தெழுந்து போராடி வருகின்றார்கள்.
சென்னை பச்சையப் பன் கல்லூரி மாணவர்கள் போராட்டக் களத்தில் உள்ளனர்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், வாலிபர்கள், மாதர்கள் ஆகியோரின் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
தமிழக அரசு, ஆயிரக்கணக்கானோரை கைதுசெய்துள்ளது. பலர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்தித் திணிப்புஎதிர்ப்புப் போராட்டம்.
1965ல் மு.பக்தவச்சலம் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார்.
மத்திய அரசில்,ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந் தார். இந்தி மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாக கொண்டுவர மத்தியஅரசு முடிவு செய்து, 1960-ல் நட வடிக்கை எடுத்தது. 1963-ல் அலுவல் மொழிசட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
1964 மே மாதம் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைந்தார். அவரை தொடர்ந்து பாரதபிரதமராக லால்பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றார். இவருடைய அமைச்சரவையில் இருந்த மொரார்ஜி தேசாய் மற்றும் குல் ஜாரிலால் நந்தா ஆகியோர் தீவிர இந்தி ஆதரவாளர்களாக இருந்ததால் அவர்கள் இந்தி மொழி திணிப்பை தீவிரப்படுத்தினர். இதன் எதிர்விளைவாக தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு எதிர்ப்புக் குழு திமுக- வின் ஆதரவோடு போராட்டத்தை துவக்கியது.
திக 1965 ஜனவரி 26-ந்தேதி குடிய ரசு தினத்தை துக்கநாளாக அறிவித்தது.
இந்நிலையில் மத்திய தகவல் மற் றும் பொது தொடர்பு அமைச்சகத்தின் அமைச் சராக இருந்த குல்ஜாரி லால் நந்தா 1965 ஜனவரியில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி இனி தொடர்பு மொழியாக இருக்கும் என அனைத்து மாநிலங்களுக்கும் சுற்ற றிக்கை அனுப்பினார்.
இது தமிழ்நாட்டில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
திமுக தனது 26-ந்தேதி போராட்டத்தை முன்னதாக 25-ந்தேதியே துவக்கியது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் குதித்தனர். ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காவல்துறையைக்கொண்டு இந்த போராட் டத்தை அடக்க முயற்சி செய்தது. மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் பொது மக்களின் போராட்டமாக மாறியது.
காவல் துறையின் அடக்குமுறை, துப்பாக்கிச் சூட்டில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த, மத்திய அமைச்சர்களாக இருந்த சி.சுப்பிர மணியம் மற்றும் ஓ.வி.அளகேசன் ஆகி யோர் தங்களின் அமைச்சர் பதவிகளை 11-02-1965-ல் ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள அன்றைய பிரதமர் பரிந்துரை செய்தும், அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த, ராதாகிருஷ்ணன் ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டார். நிலைமைகள் மோசமடைவதைக் கண்டு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் மத்திய, மாநில அரசுகளின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் தொடரும் என் றும் வாக்குறுதி அளித்தார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
16-02-1965-ல் சி.எஸ்.சுப்பிரமணியம் மற்றும் ஓ.வி.அளகேசன் ஆகியோர் தங்களின் ராஜி னாமாவை திரும்பப் பெற்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக காங்கிரஸ் தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை இழந்தது. 1967-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அது படுதோல்வியை சந்தித்தது. காங்கிரஸின் மிகப்பெரிய தலைவராக விளங் கிய காமராஜர் விருதுநகர் தொகுதியில் தன்னை எதிர்த்து நின்ற இந்தித் திணிப்பு எதிர்ப்பு குழுவின் தலைவர்களில் ஒருவரான, பெ.சீனிவாசனிடம் தோற்றுப் போனார். அன்று ஆட்சியை இழந்த காங் கிரஸ் இன்றுவரை மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இன்று மீண்டும் தமிழகத்தில் மாண வர்கள் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற போராட்டத்தை துவக்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.
ஆளும் அண்ணா திமுக போராட் டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க முயல்கிறது. ஆனால் மதுவிலக்கு குறித்து வாய் திறக்க மறுக்கிறது.
குடும்பங்கள் சீரழிவு வன்முறைகள் அதிகரிப்பு
மது அருந்துவதால், தமிழ்நாட்டில் பலகுடும்பங்கள் சீரழிந்துவருவது மட்டு மல்லாமல், வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. மது அரக்கர்களின் வெறி பெண்களையும் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. ஆங்காங்கே மதுவெறியர்களின் தாக்குதலுக்கு இவர்கள்ஆளாகி வருகின்றனர். இக்கொடுமை களை எதிர்த்து, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்க மும் தொடர் போராட்டங்களை கடந்த சிலஆண்டுகளாக நடத்தி வருகின்றன.
மாவட்டந்தோறும் ‘போதை எதிர்ப்பு கருத் தரங்குகள்’ நடத்தப்பட்டன.மக்கள் குடியிருப்பு, பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளை மூட வேண் டும் என்று பல்வேறு மாவட்டங்களில் மேற் கண்ட இயக்கங்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக இன்றுதமிழக மக்களிடையே, குறிப்பாக மாணவர்களிடையே எழுச்சி ஏற்பட்டு ஆங்காங்கு போராட்டங்கள் நடந்து வருகின் றன.
இதற்கு சில கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்து போராட் டக் களத்தில் இறங்க தமிழகம் இன்று பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.அண்ணா திமுகவைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சொல்லிவருகின்றன.
கருணாநிதி திறந்து பின் மூடிய மதுக்கடைகளைபின் வந்த எம்ஜிஆர் திறந்து டாஸ்மாக் ஆரம்பித்து வளர்த் தெடுத்த பெருமை அண்ணா திமுகவிற் கு உண்டு.
தனியாரிடம் இருந்த மொத்த மற்றும் சில்லரை விற்பனையை 1983ல் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது அரசே ஏற்று நடத்த முடிவு செய்து ‘டாஸ்மாக்’ நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அரசோ, விற்பனையை அதிகரிக்க முனைப்போடு இக்காலக்கட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
கடைகளுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
சமீபத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந் தும் டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடை களுக்கு விடுமுறை விடத் தயாராக இல்லை. சிஐடியு தொழிற்சங்கத்தின் தலையீட்டின் பேரிலேயே கடைசி நேரத் தில் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில்தான் மதுவின் சீரழிவினை கண்டு கொதித்தெழுந்து வெகுஜன இயக்கங்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளன.தமிழ்நாட்டில், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தொடர் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கை யில் தமிழக அரசின் மௌனம் மக்களின் கோபத்தை மேலும் அதிகரித் துள்ளது. காவல்துறையைக்கொண்டு போராட்டங்களை அடக்கிவிடலாம் என தமிழக அரசு நினைத்துக்கொண்டிருக் கிறது.
1965-ல் காங்கிரஸ் இந்த நிலைபாட்டை எடுத்துதான் தமிழக மக்களைசுட்டுத் தள்ளியது. அதன்விளைவி னை இன்றளவும் அது அனுபவித்துக்கொண் டிருக்கிறது. இதை அதிமுக அரசு அறிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
சின்னஞ்சிறிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்த பிறகும் தாக்குவதை தொலைக்காட்சியில் பார்க்கும் மக்கள் ஆட்சி யாளர்களை மன்னிக்க மாட்டார்கள்.
அண்ணா திமுக இதற்கு தக்க விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.
-க.ராஜ்குமார்,
இன்று,ஆகஸ்ட்-11.
- பிரேசில் மாணவர் தினம்
- ஆர்மீனியா அமைக்கப்பட்டது(கிமு 2492)
- மலேசியாவின் பெனாங்க்கில் கேப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவரால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது(1786)
- பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)
இரவு உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுகிற பழக்கம் அனேகம் பேருக்கு உண்டு. மலச்சிக்கலுக்கு அதுதான் மருந்து என்பது காலங்காலமாக மக்களிடம் பதிந்து போன எண்ணம். இது சரியா?
இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது.
அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை.
ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும்.
உடல் எடை அதிகரிக்கும்.
ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது.
பதினைந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.
இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவாக செரிமானம் ஆகும், காலைக்கடன்களை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்ய முடியும் என்று கூறுவதில் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது.
வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மலம் கழிக்க சிரமப்படுபவர்கள் Prunes என்ற பழம் சாப்பிடலாம். யாரெல்லாம் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடலாம் என்பதிலும் கட்டுப்பாடு உள்ளது.
பனிரெண்டு வயது வரை குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம்.
இவர்கள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம்.
தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்படும்.
வயதானவர்களும் நீரிழிவு உள்ளவர்களும் சாப்பிடக்கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்பவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். இதன் காரணமாக இவர்களுக்கு உடலில் கலோரி அளவு அதிகரிக்கும்.
எனவே, இவர்களால் களைப்படையாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சிகள் செய்ய முடியும்.’’