சனி, 15 ஆகஸ்ட், 2015

கடுப்பேத்துறார் நம் முதல்வர்.
இடுகையே இன்று தமிழக மக்களின் மனதை வெளிப்படுத்தும் இந்த பாலகிருஷ்ணனின் காவல்துறை கட்டுப்பட்டு அறை  முதல்வர் ஜெயலலிதா மீதான குற்ற சாட்டுதான்.
படித்து மன்னிக்கவும் கேட்டு தெரின்து கொள்ளுங்கள்.

நன்றி:விகடன்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-15.

  • இந்திய சுதந்திர தினம்(1947)
  • தென் கொரியா உருவாக்கப்பட்டது(1948)
  • இந்திய ஆன்மிகவாதி அரவிந்தர் பிறந்த தினம்(1872)
  • பனாமா கால்வாய் திறக்கப்பட்டது(1915)
  • பஹ்ரைன் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1971)


"இரண்டாவதாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை நழுவ விடாதீர்கள்.
இன்னொரு சந்தர்ப்பத்திற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டி வரலாம்."
========================================================================

இம்மி, மும்மி, அணு போன்ற நுண்ணிய அளவுகளை உலகில் முதலில் சொன்னவர்கள் தமிழர்கள்.................
இம்மி அளவுகூட பிசகாது செய்தனர் என்பர்.
இம்மி என்றால் என்ன?
ஒன்றை 21,50,400 ஆகப்பிரித்தால் கிடைப்பது இம்மி.
மூன்று இம்மி சேர்ந்தது மும்மி.
இம்மியை விட அணுதான் சிறியது. 
லகில் உள்ள ஸ்மார்ட் போன்களில் 96 சதவிகிதத்திற்கும் அதிகமான போன்கள் ஆப்பிள் அல்லது ஆண்ட்ராய்ட் இயங்கு பொறியை கொண்டே செயல்படுவதாக ஐ.டி.சி. (IDC-International data corporation) என்ற தொழில்நுட்ப வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட் உலகை ஆண்டு கொண்டிருக்கும் இந்நிறுவனங்களுக்கு போட்டியாக, புதிய இயக்கு பொறியை அறிமுகப்படுத்த இருக்கிறது மோசிலா (Mozila).
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை (கூகுள் குரோமின் வருகைக்கு முன்பு) கணினிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த தேடு பொறியாக விளங்கியது மோசிலா பயர்பாக்ஸ். அதில் தான் பெற்றிருந்த செல்வாக்கை இழந்த காரணத்தினால், தற்போது ஸ்மார்ட் போன்கள் பக்கம் தன் சிலிக்கான் தலையைத் திருப்பியுள்ளது இந்நிறுவனம். அடுத்து வருகின்ற 2016ல் H5OS என்ற தனது இயங்கு பொறியை அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளது இந்த நிறுவனம்.

இதுகுறித்து மோசிலாவின் முன்னாள் தலைவரான சீனாவைச் சேர்ந்த லீ கோங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இப்பொழுது பயன்பாட்டில் இருக்கும் இயங்கு பொறிகள் எல்லாவற்றையும்விட அதிக சக்தி வாய்ந்த, எளிமையான H5OS என்ற இயங்கு பொறியை வருகின்ற 2016 ஆம் ஆண்டில் மோசிலா அறிமுகப்படுத்தப் போகிறது. இது, ஸ்மார்ட் போன்களின் உலகில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
இந்த இயங்கு பொறி, ஆண்ட்ராய்டுடன் ஒப்பிடும்போது அதிக வேகத்துடனும், குறைவான சக்தியை (energy) மற்றும் இடத்தை (storage) பயன்படுத்தும் திறனுடனும் அமைத்திருக்கும். மேலும், இது மிகமிக எளிமையான, அனைவராலும் புரிந்துகொள்ளக் கூடிய தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது" என்றார்.

எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட இருப்பதாக கூறப்படும் இந்த இயங்கு பொறி, எந்த வகையான மொபைல் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்படுமாம். இது அனைத்து வகையான தொடுதிரை, டி.வி., கார், டேப்லெட், வாட்ச் போன்றவற்றில் எளிமையாக பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படுமாம்.

ஏற்கனவே ஸ்மார்ட் போன் உலகில் தன் கால்களை பதிக்க நினைக்கும் லினக்ஸ் நிறுவனத்தின் உபுன்டு (ubuntu), சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களில் பயன்படுத்தப்படும் டிசன் (Tizen), ஹவாய் (huawei) நிறுவனத்தின் ஓ.எஸ் போன்றவை  பெரிதாக பிரபலம் அடையாத நிலையில், புதிதாக மோசிலா வேறு தனது H5OS இயங்கு பொறி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.