பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்?

பெண்கள் மட்டும்தான் அழகாக இருக்க ஒப்பனைகள் செய்து கொள்ள வேண்டுமா?அவர்களுக்கு மட்டும்தான் அழகுக் குறிப்புகளா?
ஆண்கள் தோற்றம் அவ்வளவாக எதிர் பார்க்கப்படுவதில்லையா?
முன்பு அப்படித்தான் நிலைமை இருந்தது.
இன்று ஆண்களும் வெளியே வருகையில் தங்கள் தோற்றம் பொழிவுடன் இருக்க ,பளீச் என்று இருக்க தங்களைத் தயார் படுத்திக்கொள்கிறார்கள்.
அதற்கு ரசாயனகே கலவை ஒப்பனை பொருட்களை பயன் படுத்தாமல் இயற்கையான பொருட்களை வைத்து தமக்கு தாமே பொழிவை உண்டாக்கிக்கொள்ளலாம்.
இதோ சில குறிப்புகள்.

வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற, வீட்டிலேயே உள்ளது கண்கண்ட அழகு சாதன பொருட்கள்.
அவற்றை பயன்படுத்தி பார்த்தால், கருப்பு மறைந்து முகம் களையாக மாறும்.
அன்றாட சமையலில், முக்கிய இடம்பெறுவது தேங்காய்; 
இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. 
தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து, இரண்டையும் கலந்து பசைபோல கலந்து, இந்த பசையை முகத்தில் பூசிக்கொண்டு, உலர்ந்ததும் தண்ணீர் கொண்டு கழுவிவிட வேண்டும். 
வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால், முகம் பிரகாசமாகும்.
இளநீரில் உள்ள வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து, மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால், மாசு மருவின்றி, முகம் மிளிரும். 
கரும் புள்ளிகள் இருந்தால் கூட, அவை காணாமல் போய்விடும்.

 முகத்தில் சிலருக்கு, ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல, திட்டுகள் தோன்றும். இதற்கு பாசிப்பருப்பு, சிறந்த பிளீச் போல செயல்படுகிறது. 
பாசிப் பருப்பு, கசகசா, பாதாம், பிஸ்தா, துளசி, ரோஜா மொட்டு இவற்றை, நன்றாக காயவைத்து, பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். 
இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும், பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவினால், முகத்தின் கருந்திட்டுக்கள் காணமல் போகும்.

: ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும், சம அளவு எடுத்து, கலக்கி பஞ்சில் முக்கி, முகத்தில் பூசவேண்டும். 
இதனால், முகம் நல்ல பிரகாசமாகவும், குளுமையாகவும் இருக்கும். கொட்டை நீக்கிய, பேரீச்சம்பழத்துடன், உலர்ந்த திராட்சை பழங்கள் சில சேர்த்து, ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். 
பிறகு அரைத்து, இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து, கொள்ளவும். இதை முகத்திற்கு, பேஸ் பேக் போல போட்டு, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவேண்டும்.
வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், இந்த பேஷியல் மாற்றி விடும்.

 முகத்தில் அதிக எண்ணெய் பசை இருந்தாலே, முகம் கருமை அடையும். 
தலையில் பிசுபிசுப்பை நீக்க ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை, வெந்நீரில் கலந்து, தலைக்கு தேய்த்து அலசினால், முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும். 
ஆப்பிள் இலைகளை காயவைத்து, அதனை பொடியாக்கி, ஷாம்பு அல்லது சீயக்காய்த் தூளுடன் கலந்து, தலைக்கு தேய்த்து குளித்தால், கூந்தல் மென்மையாகும்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-17.
  • இந்தோனேஷிய விடுதலை தினம்(1945)
  • காபோன் விடுதலை தினம்(1960)
  • இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)
  • முதல் சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்? 
"விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் மாவீரன்  பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றும் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரில் கொல்லப்படவில்லை என்றும் சிங்கள ராணுவத்திடமிருந்து பிரபாகரன் தப்பிச் சென்றார் என்றும் இலங்கையில் வெளியான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது, சிங்கள ராணுவத்தினர், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை எதிர்த்துக்  கடுமையாகப் போரிட்டனர்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக தனிநாடு கேட்டு போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கம் இதனால் வீழ்த்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் இயக்க தலைவரான பிரபாகரன் இந்த போரின்போது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அது தொடர்பான புகைப் படங்களையும் அந்நாட்டு அரசு வெளியிட்டது.ஆனால் ஆறு ஆண்டுகளாக அவரின் மரணம் குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 

இந்தப்  போரின்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்  சேர்ந்தவர்களும், அப்பாவி தமிழர்களும் பல்லாயிரக்கணக்கில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் இலங்கை தமிழர்கள் பலர் அகதிகளாக வெளியேறினர். அவர்களுடன் விடுதலைப் புலிகளும் தப்பிச் சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்த கொடுமையான நிகழ்வுகளுக்கு ஐ.நா.சபை உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தன.

பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்ததை தமிழீழ ஆர்வலர்கள் பலர் இன்னமும் ஏற்றுக் கொள்ளாமலேயே இருக்கிறார்கள். பிரபாகரன் சாகவில்லை என்றும், நிச்சயம் ஒருநாள் அவர் திரும்பி வருவார். அவரது தலைமையில் தமிழீழம் மலரும் என்றும் அவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவே தமிழ் ஆர்வலர்களால்  நம்பப்படுகிறது.

இதனை உறுதிபடுத்தும் விதத்தில் பிரபாகரன் இலங்கையில் இருந்து போரின்போது தப்பிச் சென்று விட்டார் என்று புதிய தகவல் தற்போது  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இலங்கையில் புத்தகம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. இதனை சிங்கள பத்திரிகை ஒன்று பரபரப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த நூலில் இலங்கையில் இருந்து தப்பிச்சென்ற பின்னர் அவர் டெல்லியில் திரிலோனபூர் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் ஒரு வருடம் தங்கி இருந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபாகரன் போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபரைத்தான் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது என்றும், அவரின் போட்டோக்களைத்தான் பிரபாகரன் போட்டோ என்று இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இந்த புத்தகத்தின் பெயர் என்ன? 

அதனை எழுதியது யார்? 
என்பது பற்றிய விவரங்கள் எதுவும் அந்தப் பத்திரிக்கை வெளியிடவில்லை.

இதற்கிடையே, பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று எழுதப்பட்டுள்ள புத்தகமும், இதுதொடர்பாக வெளியாகி இருக்கும் செய்திகளும், இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்நாட்டு அரசியல் பிரமுகர்களும், ராணுவத்தினரும் கலக்கம் அடைந்துள்ளதகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை ராணுவத்தின் புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பிரபாகரன் தப்பிச் சென்றதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும், அது வெறும் கட்டுக்கதை’’ என்றும் தெரிவித்துள்ளார்.


========================================================================

90 பில்லியன் தடவைக்கு மேல் ,

தற்போது, கணினிகளின் சில்லுகளில் இருக்கும் மின்னணு சர்க்யூட்டுகள், எலக்ட்ரான்களை முடுக்குவதன் மூலம், தகவல்களை பரிமாறுகின்றன. ஒரு வினாடிக்கு, பில்லியன் (௧00 கோடி) தடவைகளுக்கு மேல் எலக்ட்ரான்கள் அணையவும் எரியவும் செய்கின்றன.
ஆனால், கணினிகளில் தகவல்களை அலசவும், பரிமாறிக் கொள்ளவும், எலக்ட்ரான்களுக்கு பதிலாக போட்டான்களை பயன்படுத்தினால், தகவல்கள் செல்லும் வேகம் பலமடங்கு அதிகரிக்கும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதற்கு லேசர்களை பயன்படுத்தலாம் என்றாலும், அவை அதிக மின் சக்தியை உறிஞ்சக்கூடியவை. எனவே அமெரிக்காவிலுள்ள, ட்யூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், இதற்கு மாற்று வழிகளை ஆராய்ந்தனர்.
தங்கம் மற்றும் வெள்ளி தகடுகளையும் லேசர் ஒளியையும் வைத்து செய்த பரிசோதனையில், பிளாஸ்மான்கள் என்ற ஒளி ஆற்றல் உருவாவதை, தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த முடியும் என, சமீபத்தில், ட்யூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றனர். 
இதன் மூலம், வினாடிக்கு, 90 பில்லியன் தடவைகளுக்கு மேல், வேகமாக தகவல்களை பரிமாற முடியும்.
========================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?