ஸ்மார்ட் போன் ஊடுருவும் ஸ்டேஜ்ஃப்ரைட் வைரஸை தடுப்பது எப்படி?

இணையத்தை கணினி மூலம் பயன்படுத்துபவர்களை விட தற்போது கையில் இருக்கும் கையடக்க ஆண்ட்ராய்ட் போன் மூலம் பயன்படுத்துபவர்களே அதிகம். 
அதுவும் ஜெட் வேகத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 
முன்பு கணினி மூலம் இணையத்தை பயன்படுத்தும் போது வைரஸால் கணினியில் உள்ள மென்பொருட்கள் பாதிக்கப்பட்டு வந்தன. 
அதற்கென இருக்கும் பிரத்யோக ஆன்டிவைரஸ்களை பயன்படுத்தி கணினிகளை பாதுகாத்து வந்தோம். அதே போல் தற்போது ஸ்மார்ட் போன்களை நாம் ஆண்ராய்ட் என்ற இயங்குதளம் மூலம் பயன்படுத்தி வருகிறோம். ஆப்பிள் போன்களை தவிர மற்ற பெரும்பகுதி போன்கள் முழுவதும் ஆண்ராய்ட் இயங்குதளத்திலேயே இயங்கி வருகின்றன.
தற்போது இந்த இயங்கு தளத்தின் வழியாக ஸ்டேஜ்ஃப்ரைட்என்ற வைரஸ் ஊடுருவி வருகிறது.
இந்த வைரஸ் போன்களை பாதிக்கும் என்பதை விட, நமது அனைத்து விஷயங்களையும் களவாடிச் செல்லும் வித்தைகளும் இதற்குள் அடங்கியிருக்கிறது. 
நாம் கைகளில் இருக்கும் மொபைல் போன்களில் எதையெல்லாம் ரகசியம் என்று வைத்திருக்கிறோமோ அதுவெல்லாம், மிக எளிதாக வெட்ட வெளிச்சமாக பரவும் ஆபத்தும் இருக்கிறது. 
அதுமட்டுமல்ல நமக்கு தெரியாமலேயே நமது போனில் உள்ள மைக்ரோ போனையும் இயக்கிடும் ஆற்றல் மிக்கது இந்த ஸ்டேஜ்ஃப்ரைட் வைரஸ். இந்த ஸ்டேஜ்ஃப்ரைட் வைரசை முதன்முதலில் ஜிம்ப்ரியும்  என்ற நிறுவனமே கண்டறிந்து வெளி உலகிற்கு சொன்னது. இந்த நிறுவனத்தின் அறிக்கைபடி ஆண்ட்ராய்ட் 2.2  இயங்குதளம் முதல் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்கு தளம் வரை ஊடுருவி இருப்பதாக தெரிவித்திருக்கிறது. 
ஆண்ட்ராய்டு இன்க் நிறுவனத்தை தற்போது கையகப்படுத்தி வைத்திருக்கும் கூகுள் நிறுவனமே, இந்த வைரஸ் ஊடுருவி இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
எப்படி ஊடுருவுகிறது ?
இந்த ஸ்டேஜ் ஃப்ரைட் வைரஸ் எம்எம்எஸ் மூலம் ஒரு வீடியோ கோப்பாக ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு வந்தடைகிறது. 
இதனை நீங்கள் திறந்து பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 
அது நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்திற்கு வந்தடைந்தாலே அது தானாக இயங்கக் துவங்கி விடும் வகையில் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்படி வைரஸ் இயங்கத் துவங்கியவுடன் உங்கள் போன் அதன் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். 
பின்னர் மொபைலில் இருக்கும் அனைத்து தகவல்கள், பாஸ்வேர்டு, புகைப்படம், வீடியோ கோப்பு உள்ளிட்ட அனைத்தையும் இந்த வைரஸை ஊடுருவ விட்டவர்களால் எடுத்துக்கொள்ள முடியும்.
உறுதிப்படுத்துவது எப்படி ?
ஸ்டேஜ் ஃப்ரைட் வைரஸ் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் ஊடுருவி இருக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கென்று ஜிம்பிரியும் நிறுவனம் ஸ்டேஜ்ஃப்ரைடர் டிடெக்டர் என்னும் செயலியை உருவாக்கியிருக்கிறது. 
இந்த செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கிறது. இதனை உங்கள் மொபைலில் தரவிறக்கம் செய்து ஸ்கேன் செய்தால் போதும், அப்போது சிவப்பு நிறத்தில் வந்து நிற்கும். 
அப்படி என்றால் உங்கள் மொபைல் போனும் ஸ்டேஜ் ஃப்ரைட் வைரசால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். அதே நேரம் பச்சை நிறத்தில் வந்து நின்றால் உங்கள் போன் வைரஸால் இதுவரை பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
தடுப்பது எப்படி ?
ஆண்ட்ராய்டு போனில் நாம் எஸ்எம்எஸ் அனுப்ப பயன்படுத்தும் போது, தானாக எம்எம்எஸ் ஆக இந்த வைரஸ் நமது ஆண்ட்ராய்டு போன்களில் உள் நுழைகிறது. 
அதனை தடுக்க முதலில் அநளளயபந திறந்து கொண்டு, அதன் பின்னர் மெனு பட்டனை அழுத்துவதன் மூலம் செட்டிங்கிற்கு செல்ல வேண்டும். 
பின்னர் எஸ்எம்எஸ் /எம்எம்எஸ் எனும் பகுதியில் எம்எம்எஸ் என்பதற்கு கீழ் தரப்பட்டிருக்கும்  என்பதில் உள்ள டிக் செய்திருக்கும் அடையாளத்தை எடுத்து விட வேண்டும். 
அதேபோல் நாம் குறுஞ்செய்திகளை பெறுவதற்கு கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும்  ஐ பயன்படுத்தும் போதும் எம்எம்எஸ் மூலம் தானாக தரவிறக்கமாகும். 
இதனை தடுப்பதற்கு முதலில் அநளளநபேநச க்கு செல்லவேண்டும். 
அதில் உள்ள செட்டிங்கிற்கு சென்று மீண்டும் அதில் உள்ள iபேக்கு செல்ல வேண்டும். அதில்  உள்ள டிக்கை நீக்க வேண்டும்.

============================================================================================================
மார்ஷ்மல்லோ,

புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் மார்ஷ்மல்லோ என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இதுவரை ஐஸ்கிரீம் சான்ட்விச் (4.0), ஜெல்லி பீன் (4.1 - 4.3), கிட்கேட் (4.4), லாலிபப் (5.0 - 5.1),  ஆகிய பதிப்புகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தன. 

இந்த நிறுவனம் இனிப்பு வகைகளாகப் பெயரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அந்த வரிசையில் அடுத்ததாக பல புதிய நவீன வசதிகளுடன் வெளிவரும் புதிய பதிப்பிற்கு மார்ஷ்மல்லோ என பெயரிட்டுள்ளது கூகுள். 
இந்த புதிய இயங்குதளத்திற்கு லஸ்ஸி, நிலவு பை, உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தன. 
இந்நிலையில் நேற்று ஆண்ட்ராய்டு பொறியியல் துறை துணைத் தலைவர் டேவ் பர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் மார்ஷ்மெல்லோ என்ற பெயரையும் புகைப்படத்தையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் 80 சதவீத ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ளது. 
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-19.

  • உலக புகைப்பட தினம்
  • சர்வதேச மனிதநேய தினம்
  • ஆப்கானிஸ்தான் விடுதலை தினம்(1919)
  • கொழும்பு தலைமை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)
  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது(1768)
========================================================================









இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?