வீட்டுக்கு, வீடு
மின் தயாரிப்பு,,,,
* ஒவ்வொரு வீட்டிலும் சூரியசக்தி மின்சாரம்
* பயன்படுத்தியதுபோக விற்பனை செய்யலாம்
* ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் தப்பும்
* அரசுக்கு பல ஆயிரம் கோடி செலவும் மிச்சம்.
அதானி தான் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க முடியுமா?
வீட்டுக்கு வீடு மக்களே சோலார் தகடுகளை பயன்படுத்தி தாங்களும் மின்சாரம் பயன்படுத்தி, மீதமுள்ளதை அரசுக்கே திருப்பி தர முடியாதா?
ஹெய்தி போன்ற குட்டி ஆப்ரிக்க நாடுகளால், அதன் மக்களால் சாதிக்க முடிந்தது, இந்தியா போன்ற வல்லரசு நாடு ஆசையில் உள்ள ஒரு நாட்டு மக்களால் முடியாதா?
முடியும்...முடியும்...ஆனால்... அரசுக்கு தான் மனது வேண்டும்;
மக்களால் முடியும் என்று முனைப்பு காட்டி, வீட்டுக்கு வீடு சோலார் தகடுகளை பொருத்திக்கொள்ள, மானியமும் வாங்கித்தந்து, அதானியை விட அதிகமாக மின்சாரத்தை தயாரித்து தர முடியும்.
அப்படி தந்தால், அதானிக்காக ஒதுக்கி தர, விவசாயிகளிடம் இருந்து பறிக்க வேண்டிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் மிச்சம் தானே; பல ஆண்டுகளாக அதானிக்கு தர வேண்டிய பல ஆயிரம் கோடிகளும், கஜானாவிலேயே பத்திரமாக இருக்கும் இல்லையா?
அரசால் முடியும்...முடியும்...ஆனால், குடிநீரை கூட பாட்டிலில் அடைத்து மக்களுக்கு விற்கும் அரசுக்கு மனது வேண்டும்; மக்களுக்காக, மக்களால், மக்களுடைய அரசு என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும் போது, மக்களின் உரிமையாகிய பாதுகாக்கப்பட்ட தண்ணீரும், மின்சாரமும் விற்பனைக்கு உரிய பொருள் என்று நினைக்காமல் இருந்தால்...முடியும்...முடியும்...அரசால்! அதானியிடம் ஒப்படைக்கப்பட்ட சோலார் மின்சாரம் தயாரிப்பு, எப்படி பல கோடி மக்களால் முடியும்?
அதானி ஒப்பந்தம் பற்றி
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ரூ.4 ஆயிரத்து 536 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட ஒப்பந்தம்; ஐந்து சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையங்களிலிருந்து மொத்தம் 648 மெகாவாட் சூரிய மின்சாரம் தயாரிக்க முடியும்; அதை வாங்குவதற்கு தான் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கும் அதானி குழும நிறுவனத்திற்கும் இடையே கடந்த ஜூலை 4ம் தேதி தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
சோலார் மின்சாரம் யூனிட் தற்போது இந்தியா முழக்க 5.50 ரூபாய்க்கு விற்கும் நிலையில்,
ரூ.7.01 என தமிழ் நாடு அதிமுக அரசு வாங்க ஒப்புக்கொண்டது மக்கள் வரிப்பணத்தை தாரை வார்ப்பது மட்டுமின்றி உள்நோக்கம் ஏதும் ஜெயலலிதா அரசுக்கு இல்லை என்றால் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டும் ?
அதானி மின்சாரம் தயாரித்து தர அரசு 4,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி தர வேண்டும்; அதில் அவர்கள் சோலார் தகடுகளை வைத்து மின்சாரம் தயாரிப்பார்களாம்; சோலார் மின்சாரம் தயாரிப்பு இல்லாத நாட்களில் சூரிய தகடுகளை மூடித்தான் வைக்க வேண்டும். அதற்கு வேறு பல கோடி செலவு. அதை சரிவர பராமரிக்காவிட்டால் கோடிக்கணக்கில் பணம் வீண்.
முடிந்தது பிளாஷ்பேக். இனி, மக்கள் சோலார் மின்சாரம் தயாரித்து, மக்களே அதை பயன்படுத்தி விட்டு, மீதமுள்ள மின்சாரத்தை அரசுக்ேக விற்கப் போகின்றனர். மக்கள் ஒட்டுமொத்தமாக இப்படி சோலார் மின்சாரம் உற்பத்தி செய்து விட்டால், அதன் பின் ஆயிரம் அதானிக்கள் வந்தாலும், மக்கள் தரும் மின்சாரத்துக்கு ஈடாகாது என்பதை நிரூபித்து காட்ட முடியும்.
வீட்டுக்கு வீடு:
தண்ணீரும் மின்சாரமும் ஒன்று தான்; அதுபோல இரண்டுமே மக்களுக்கு உரிமை படைத்தவை. அதனால் தான் ஏரி, குளங்கள், ஆறுகள் எல்லாம் நாட்டின் சொத்து என்கின்றனர்.
ஆனால், நாம் சொத்துக்களை எல்லாம் சூறையாடுவதில் தான் தீவிரமாக உள்ளோம்.
இன்று மேற்சொன்ன ஆறு, ஏரி, குளங்கள் எல்லாம் காணவில்லை என்று தான் போலீஸ் நிலையத்தில் ஊருக்கு ஊர் மக்கள் புகார் தர வேண்டும்.
தண்ணீரை விற்க ஆரம்பித்து விட்டது அரசு;
அதுபோல, மின்சாரத்தையும் விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. வீட்டுக்குவீடு சோலார் மின்சாரத்தை தயாரிக்க ஆரம்பித்து விட்டால், அப்புறம் தமிழ்நாட்டில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது. உபரியாகவே மின்சாரம் கிடைக்கும்.
மக்களுக்கு மின்சார கட்டணமும் குறையும். உபரி மின்சாரத்தை அரசுக்கு தருவதால் அதற்கு டிவிடெண்ட்டும் கிடைக்கும்.
மானியம் அவசியம்:
சோலார் மின்சாரம் காஸ்ட்லி என்று பலரும் பேசி வருவதிலும் நியாயம் உள்ளது. இப்போது நடைமுறையில் உள்ள சோலார் தகடுகள், இன்வெர்ட்டர், பேட்டரி என்று எல்லாம் வாங்கினால் கூட ஒரு லட்சம் ரூபாய் ஆகி விடும். அதனால், நடுத்தர வர்க்க மக்களுக்கு இது கூடுதல் செலவாகும்.
அரசு தான் மானியம் தர வேண்டும். மானியம் தந்தால் தான் மக்களால் முழு ஊக்கத்துடன் சோலார் மின்சாரம் தயாரித்து தர முடியும்.
இப்போது மத்திய அரசு தான் சோலார் மின்சாரம் மானியத்துக்காக பல ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.
ஆனால், மாநில அரசு இன்னும் மானியம் தரவில்லை; இன்னும் சொல்லப்போனால், அதானி விஷயத்தில் காட்டிய அக்கறை கூட ஓட்டு போட்ட மக்கள் மூலம் சோலார் மின்சாரம் தயாரிக்கவும், பயன்படுத்தவும் முடியும் என்று கூட யோசிக்காதது வேதனை தான்.
அதானிக்கு 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தருவதை விட, மக்களுக்கு இப்படி மத்திய அரசு மானியத்துடன் சேர்த்து மாநில அரசும் மானியம் தந்தால் மீதமுள்ளதற்கு வங்கி கடன் பெற்று தரலாம். அப்படி தந்தால் மக்களில் யாரும் ஒரு காசு கூட தன் பணத்தில் செலவழிக்க வேண்டாம்.
சோலார் மின்சாரம் பராமரிப்பு எளிது என்பதால் யாருக்கும் பிரச்னையில்லை.
கட்டாயம் ஆக்க வேண்டும்:
சோலார் மின்சாரம் தயாரிப்பது கட்டாயம் என்று மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அறிவிக்க வேண்டும்; அறிவிப்போடு நிற்காமல் மானியம் தருவதை எளிமையாக்க வேண்டும்.
இப்போதுள்ள சூழ்நிலையில், சொந்த வீட்டுக்கு மின் இணைப்பு வாங்கவே எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது? எவ்வளவு கட்டணத்துடன், மேஜைக்கு அடியில் கமிஷனாக தர வேண்டியிருக்கிறது என்பதெல்லாம் எல்லாருக்கு தெரிந்த ரகசியம் தான்.
ஒவ்வொரு ஏஇக்களில் ஆரம்பித்து மேலேயும், கீழேயும் எவ்வளவு கறக்கின்றனர் என்பதும் கண்கூடு. அதுபோல, மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் இருந்தால் தான் வீட்டுக்கு அங்கீகாரம் கிடைக்கும்; சொத்து வரி கட்ட முடியும் என்பது உங்களுக்கு தெரிந்த விஷயம் தான்.
அதே சமயம், மழைநீர் சேகரிப்பு கட்டுமானம் எந்த கதியில் இருக்கிறது?
அதனால் என்ன பலன்? என்பதும் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி நாலடி பள்ளம் தோண்டி, ஜல்லியை பரப்பி, மேல்மாடி குழாயை இணைத்து விட்டால், அது தான் மழைநீர் சேகரிப்பு கட்டுமானம்;
அதன் பக்கத்தில் உரிமையாளர் போட்டோ எடுத்து, அனுப்பி விட்டால் உடனே வீட்டு குடிநீர் இணைப்பு வரை எல்லாம் சாங்ஷன். இந்த கதி, சோலார் மின்சாரம் தயாரிப்பிலும் கடைபிடிப்போம் என்றால் கண்டிப்பாக அதுவும் வீண் தான் என்பதை இப்போதே சொல்லலாம்.
கட்டாயம் ஆக்குவதுடன், அதை செயல்படுத்த மக்கள் தயாராக இருப்பர்; அரசும் கூட தயாராக இருக்கும். ஆனால், அதிகாரிகள் முதல் கவுன்சிலர் வரை கையை நீட்டி நாசப்படுத்தி விடக்கூடாது. அதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்.
மக்கள் சோலார் மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்து விட்டால், அப்புறம் மின்சார வாரியத்துக்கு வேலை கூட மிச்சம் தான்.
மைக்ரோ கிரிட்:
2013ல் தமிழகத்தில் மாதத்திற்கு 50 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோர் 89.45 லட்சம் வீடுகளாகும். வாடகை வீட்டில் பொது மின் இணைப்பில் இருப்போரை கணக்கில் எடுத்தால் இது இன்னமும் கூடும். இந்த மின் இணைப்பில் உள்ளோர் பகுதியில் சூரிய தகடுகளை அமைத்து அவர்களுக்கு மின்சாரம் வழங்கலாம்.
அவர்கள் வாரிய பொது கட்டமைப்பில் இணைக்கப்பட வேண்டியதில்லை. இதற்கு ஸ்டேன்ட் எலோன் (stand alone) என்று பெயர்.
சிறிய கிராமமாக இருந்தால் அந்த கிராமத்திற்கே தனியாக மின்கட்டமைப்பை ஏற்படுத்தலாம்.
இது மைக்ரோ கிரிட் (micro grid) எனப்படும். சூரிய தகடுகளை வீட்டின் கூரையில்கூட அமைக்க முடியும்.
நிலத்தின் பயன்பாடும் குறையும்.
மாநிலத்தின் கட்டமைப்பில் இருந்து விடுபட்டுவிடுவதால் மின் உற்பத்தியின் ஏற்ற இறக்கங்கள் மாநில கட்டமைப்புக்கு வராது.
சிறிய அளவிலான உற்பத்திக்கு சேமிப்பு மின்கலங்கள் சாத்தியமாகும். இதில் ஏற்படும் மின் இழப்பு குறித்து கேள்வி எழுப்பப்படலாம். இந்த இழப்பும் பொது கட்டமைப்பில் இருந்து மின்சாரம் கொண்டு வரப்படும் இழப்பும் ஒன்றாகவே இருக்கும்.
எனவே புதிய இழப்பு என்று சொல்வதற்கு ஏதுமில்லை. அத்துடன் எளிய மக்களுக்கு 24X7 மின்சாரம் வழங்க முடியும். சூரியசக்தி மின்சாரத்தில் இருக்கும் வசதியே சிறு, குறு மின்உற்பத்தி செய்ய முடிவதுதான். இந்த வசதியை பயன்படுத்தியே திட்டமிடப்பட வேண்டும்.
முதலாளிகளுக்கு லாபம் சம்பாதிக்கும் சந்தை வாய்ப்பாக இது மாற்றப்பட்டதுதான் இத்தனை துயரத்திற்கும் காரணமாகிறது.
அரசுக்கு லாபம் வருமா:?
பொருளாதார அடிப்படையிலும் அரசுக்கு லாபமானது. 89.45 லட்சம் வீடுகளுக்கான மின் கட்டணம் யூனிட் ரூ.1.20 ஆகும். தற்போது இவர்கள் முனையில் வாரிய மின்சாரத்தின் விலை ரூ.6.20 ஆகிறது. அரசு மானியம் மற்றும் தொழில் வணிக கட்டணங்களிலிருந்து ஒரு பகுதி என யூனிட்க்கு ரூ.5 மானியம் வழங்கப்படுகிறது.
89.45 லட்சம் வீடுகள் ஆண்டுக்கு பயன்படுத்தும் மின்சாரம் 5,330 மில்லியன் யூனிட் (533 கோடி) ஆகும். மானிய செலவில் ஆண்டுக்கு சுமார் 2,667 கோடி மிச்சமாகும்.
இந்த தொகையில் ஆண்டுக்கு 388 மெ.வா. சூரிய நிலையம் அமைக்க முடியும். 5,330 மில்லியன் யூனிட்டுக்கு செலவிடப்படும் மூலதனம் மானியச் சிக்கனத்தின் மூலமே 10 ஆண்டுகளில் ஈடுகட்டப்பட்டு விடும் (2,667/7=388 மெ.வா. 5,330/1.5 = 3553 மெ.வாட்) ஆண்டு மின் கட்டணமான 640 கோடி வருமானமும் குறையாமல் கிடைத்துக் கொண்டிருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக 25 ஆண்டுகளுக்கு இவர்களுக்கு கட்டண உயர்வும் இருக்காது.
சமூகத்தின் எளிய மக்களுக்கு தொழில்நுட்பம் இவ்வாறுதான் பயன்பட வேண்டும்.
விவசாய இணைப்பு:
இதுபோன்றே ஆண்டுக்கு 12,000 மில்லியன் யூனிட் செலவாகும் 20 லட்சம் விவசாய இணைப்புகளையும் தனித்தனி 5 கிலோவாட் மின் உற்பத்தி நிலையமாக்கிவிட முடியும். மத்திய அரசு மானியத்தில் சிறிய அளவில் நடைமுறையிலும் இத்திட்டம் உள்ளது.
இதுவரை எப்படி வேண்டுமானாலும் பலரும் நினைத்திருக்கலாம்.
சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பு கையை சுடும் என்றும் எண்ணியிருக்கலாம். ஆனால், இதுவரை படித்து முடித்தவர்கள், அட, இப்படி கூட சாத்தியமா? அரசு தான் நம்மை எல்லாவகையிலும் முட்டாளாக்கி வருகிறதா என்ற முடிவுக்கு வரலாம்.
ஒரு உண்மையை இங்கே குறிப்பிட வேண்டும், அரசு கொள்கை, சட்டங்கள், திட்டங்கள் எல்லாம் எப்போதுமே சூப்பர் தான். மழைநீர் சேகரிப்பு கால்வாய் திட்டம் முதல் சோலார் மின்சார மானியம் வரை எல்லாமே, மக்களால், மக்களுக்காக, மக்களே செயல்படுத்தக்கூடியவை.
ஆனால், அரசு அதிகாரிகள் முதல் நம் ஏரியாவின் கவுன்சிலர் வரை மனது வைக்க வேண்டும். ஆம், இந்த சோலார் திட்டத்துக்கு அரசு மட்டுமல்ல...
* சோலார் திட்டத்தில் உள்ள துறைகள் முனைப்பு காட்ட வேண்டும்.
* அதன் அதிகாரிகள் முழுமனதுடன் செயல்படுத்த வேண்டும்.
* கவுன்சிலர்கள் கைநீட்டும் போக்கே இருக்க கூடாது. அப்படியானால், சோலார் மின்சாரம் கண்டிப்பாக சாத்தியம் தான்!
மின்சாரத்தை பயன்படுத்தும் ஆலைகள், தொழில் நிறுவனங்கள், அதில் 10 சதவீதத்தை மரபுசாரா மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்த வேண்டும் என்ற அரசு விதி உள்ளது. ஆனால், எப்படி ஒவ்வொரு வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு கால்வாய் திட்டம் வெறும் போலித்தனமானது, லஞ்சத்தை ஊக்கப்படுத்தக்கூடியதாக உள்ளதோ, அதுபோல, யாரும் மரபுசாரா மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இல்லை; பயன்படுத்துவதும் இல்லை.
இருந்தால்தானே அதை கடைபிடிக்க. ஆலைகளில் சோதனை செய்யும் அதிகாரிகள், மரபுசாரா மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தியதாக வெறும் போலி கணக்கு எழுதுவது தான் இன்னமும் வேடிக்கை.
அமெரிக்காவில் ஹாட்பிளேட் தான் நம்மூர் காஸ் அடுப்பு; நாமாவது சிலிண்டர் வாங்க வேண்டும். அவர்கள் ஹாட்பிளேட் பயன்படுத்தும் போது சூரியஒளி மூலம் எனர்ஜி கிடைக்கிறது. நம்மூரில் இந்த வசதி எப்போது வரும் என்று நீங்கள் நினைக்கலாம்.
அது வரும் போது காஸ் மானியம் கூட வேண்டாம் என்று சொல்லி விடலாம். பிரதமர் மோடி சொல்வது போல, ‘0’ பட்டனை எல்லாருமே ஒட்டுமொத்தமாக அழுத்தி விடுவர்.
நன்றி:தினகரன்.
========================================================================
இன்று ,
ஆகஸ்ட்-07.

- 1925 - எம். எஸ். சுவாமிநாதன், இந்திய அறிவியலாளர்பிறப்பு.
- 1966 - ஜிம்மி வேல்ஸ், விக்கிப்பீடியாவை ஆரம்பித்தவர்பிறப்பு.
- கோட் டி ஐவரி - விடுதலை (1960)
- கிமு 322 - மகா அலெக்சாண்டர் இறந்ததைத் தொடர்ந்து ஏதென்சுக்கும் மக்கெடோனியர்களுக்கும் இடையில் "கிரான்னன்" என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.
- 1461 - மிங் வம்ச சீன தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
- 1906 - கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
- 1927 - ஒன்டாரியோவுக்கும் நியூயோர்க்கிற்கும் இடையில் அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது.
- 1933 - ஈராக்கில் சுமைல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1945 - இரண்டாம் உலகப் போர் : ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டதை அமெரிக்க அதிபர் ஹரி ட்ரூமன் அறிவித்தார்.
- 1976 - வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.
- 1998 - தான்சானியாவிலும் கென்யாவிலும் அமெரிக்க தூதரகங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 224 பேர் கொல்லப்பட்டு 4,500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வரலாறு கண்ட அயோக்கியர்களை விஞ்சிவிட்டார் தினமணி வைத்தி. கொன்றவனுக்கு தீபாராதனைக் காட்டிவிட்டு செத்தவர் மீதே கத்தியைச் செருகும் ஆளைப் பார்த்ததுண்டா? பார்க்காதவர்கள் ( 03-08-15 ) தினமணி தலையங்கத்தில் பார்க்கலாம். ” தன்னை காந்தியவாதி என்று கூறிக்கொள்ளும் ஒருவர் செல்லிடைப்பேசி கோபுரத்தில் ஏறி அதன் உச்சிக்கு சென்று அமர்ந்ததும் , தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்தியதும் எப்படி சரி? சசிபெருமாள்… நடத்திய போராட்டம் அறப்போராட்டமும் அல்ல, காந்திய வழிமுறையும் அல்ல.. சசிபெருமாள் வன்முறையாளராக மாறிவிட்டது மிகப்பெரிய சோகம்..” குன்ஹாவின் தீர்ப்புக்குப் பிறகு ‘அகிம்சை வழியில்’ போராடிய அம்மாவின் வழிமுறையில் அமைந்த அரசு விளம்பரங்களை வாங்கிக்கொள்ளும் அப்பாடக்கர் ‘காந்தியவாதி’ வைத்தியின் வேத வாக்கியம் இது.
‘வாழும் காந்தி ‘ அம்மா இருக்கட்டும், வைத்தி வறண்டும் காந்தியே கூட அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக “இரட்டை வாக்குரிமை ” கோரிக்கையை முன்னெடுத்த போது எரவாடா சிறையில் ‘சாகும் வரை உண்ணாவிரத’மிருக்க சம்மணம் போட்டவர்தானே ! இப்படி பல ‘சாகும் வரைகளால்… ‘ பிரிட்டிஷ் அரசை வாழவைத்தவர் காந்தி. சசிபெருமாள் கையாண்ட நடைமுறை தன்னை வருத்திக்கொள்வது.
என்ன ! காந்தி உச்சியில் ஏற பிர்லாவின் உதவி கிடைத்தது, பரிதாபம்! சசிபெருமாளுக்கு ஒரே ஒரு செல்லிடப்பேசி கோபுரம்தான் கிடைத்தது. காந்தி தற்கொலைப் பாதைக்கு மிரட்டினால் அகிம்சை ! சசிபெருமாள் உயிரை பணயம் வைத்து தன்னை வருத்திக் கொண்டால் வன்முறையா? தள்ளாடும் தமிழகத்தை தூக்கி நிறுத்த தன்னுயிர்பாராது களம் புகுந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை தாக்கிச் சிதைக்கும் போலீசின் அத்துமீறலை அனைத்து பத்திரிகைகளும் படத்தோடு போட்டு முகத்திரையை கிழிக்கையில் ‘வன்முறை எதிர்ப்பாளர்’ வைத்தி மட்டும் செய்தியை வேண்டா வெறுப்பாய் ‘உள்’ குத்து விட்டு, காக்கிகள் செய்த கொடுமையையும் தனது அகிம்சை அடிக்கட்டில் அமுக்கி விட்டார்.
சசிபெருமாள் கோபுரத்தில் ஏறியதையே சகிக்க முடியாத வன்முறையாக வரையறுக்கும் இந்த வாய்ப்பாட்டுக்காரர், போராடும் மாணவக் கழுத்தில் ஏறும் போலீசின் பூட்சை மட்டும் கண்டு கொள்ளாமல் ஒன்பது துவாரங்களிலும் ஊமையாகிக் கிடக்கிறார்.
தமிழகத்தை சாகடிக்கும் மதுவை ஒழிக்கும் கருவியாக சசிபெருமாளின் உடலைப் பயன்படுத்தும் போராட்டக்காரர்களை பார்த்து மட்டும் கச்சம் வரிந்து கட்டி கருவுகிறார், “உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள், இப்படி ஒவ்வொரு பிரச்சனைக்கும் போராட்டம் என்ற பெயரில் தற்கொலை, தீக்குளிப்பது என்று எல்லோரும் தொடங்கி விட்டால் சட்டம்- ஒழுங்கு என்னவாகும்? நிர்வாகம் எப்படி நடைபெறும் ? ” ( தினமணி- தலையங்கம் ) வைத்தியின் வயித்தெரிச்சல் இது ! உலகமே குடிகார அரசுக்கு எதிராக காறித் துப்பும் வேளையில், அரசின் கருத்துக்கு ஒளியூட்ட ஜெயா டி. வி. க்கு தேடினாலும் கிடைக்காத ஒரே கொள்ளிக்கட்டை இந்தத் தலையங்கம்.
கைது செய்யப்பட்ட மாணவர்களின் சட்டையைக் கிழிப்பதும், கட்டையில் அடிப்பதும்தான் சட்டம்-ஒழுங்கா? வைத்தி அளந்து கொட்டும் சட்டப்படியே, கைது செய்ய பிடித்தவர்களை அடிப்பதும், ஆபாசமாய் பேசுவதும் , கல்லால் அடிப்பதும், கழுத்தை நெறிப்பதும் அகிம்சையின் அடையாளங்களா? மயக்கமடைந்த ஒரு மாணவிக்கு உதவி செய்யும் மாணவிகளையும் தடுத்து, அடித்து இழுப்பதுதான் நிர்வாக நடைமுறையா? இந்த பயங்கரவாத நிர்வாகத்துக்காகத்தான் வைத்தியின் வன்மனம் துடிக்கிறதே ஒழியே, தன்னை விட யோக்கியமாய், சமுகப் பொறுப்பாய் செயல்பட்ட மாணவர்கள் வதைபட்டற்காக ஒரு வருத்தமும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது போலீசின் கைகளில் இருந்த முழுக்கல் ‘அகிம்சாமூர்த்தி ‘ வைத்தியின் மூளை!
மதுவை ஒழிக்க பாடுபடுவர்களிடம் வந்து ஒரு ‘நூல்’ பிசகாமல் “நீ அகிம்சாவாதியா? ” என்று அளவு பார்க்கும் இந்த யோக்கியர் ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி, ” அசோகர் போரை வெறுத்தது தவறு, அர்ச்சுனனுக்கு போர் உபதேசம் செய்த கிருஷ்ணனை போல வாய்ப்பில்லாமல் போயிற்று, அணுகுண்டு வேண்டும்! என்று வல்லரசு வன்முறைக்கு மனதை பிசையும் கட்டுரையை கட்டம் கட்டி பிரசுரிப்பது ஏன்? அமித்ஷாவுக்கும், மோடிக்கும் இந்த பூணூல் அளவு பொருந்துமா? அடிபட்டவனிடம் வந்து அகிம்சை உபதேசம்! அடிப்பவனிடம் போய் கீதா உபதேசம்! இதுதான் அவாளின் ‘தர்மம்’! மாக்யவல்லி, காந்தி , ராஜாஜி என்று சுற்றி வளைப்பதை விட பேசாமல் டாஸ்மாக் கடைக்கு போலீசோடு போய் காவலுக்கு உட்காரலாம் வைத்தி. பின்னே! நிர்வாகத்தை எப்படி நடத்துவது?!
போராடும் மக்களிடம் வந்து வன்முறை கூடாது என்று நிபந்தனை விதிக்கும் இந்த நியாயவான், சமூக வன்முறையான மதுவை இறக்கிவிடும் அரசுக்கு மட்டும் எந்த நிபந்தனையும் இல்லாமல் வழங்கும் ஆலோசனை என்ன தெரியுமா? ” இலவசத்துக்கு விடுதலை தரவேண்டும், கல்லூரி, பள்ளி, வழிபாட்டுத்தலங்கள் அருகிலிருக்கும் மதுக்கடைகளை அகற்றி மெல்ல, மெல்ல ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறத்துக்கு கடைகளை கொண்டு செல்ல வேண்டும்…”.
ஊருக்கு உள்ளே, வெளியே எங்குமே மதுக்கடைகள் வேண்டாம் என்று தமிழகம் வீறு கொண்டு போராடும் தருணத்தில், நத்தம் விசுவநாதன் பதவிக்கே ஆபத்து வரும் வகையில் அம்மாவுக்கு உடனடி ஆலோசனை வழங்குகிறார் வைத்தி.
” ஊருக்கு வெளியே.. ஒதுக்குபுறத்தில்” முன்பு தாழ்த்தப்பட்டவர்களை வைத்த வர்ண கொடூரம் இப்போது பாட்டிலை மட்டும் வைத்தால் போதும் என்கிறது. “செத்தாலும் விட மாட்டான் புரோகிதன்” என்று பெரியார் எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார். சசிபெருமாள் மரணத்தின் அரசியலை எல்லோரும் மக்களுக்காக விரிவுபடுத்தும் வேளையில், இந்தச் சந்தர்ப்பத்திலும் ‘ ஊருக்கு வெளியே.. ஒதுக்குப்புறத்தில்’ என்பது மீண்டும் உழைக்கும் மக்கள் , தாழ்த்தப்பட்டவர்கள் தலையில் போதையை ஏற்றுவதைத் தவிர வேறென்ன?
உங்களுக்கு மயிலாப்பூர் ஊர் என்றால், எங்களுக்கு மாங்கொல்லை குடிசைகள்தான் ஊர், உங்களுக்கு திருவல்லிக்கேணி ஊர் என்றால், அயோத்திகுப்பம்தான் எங்கள் ஊர்… உங்களுக்கு புரசைவாக்கம் ஊர் என்றால், எங்களுக்கு புளியந்தோப்பு ஊர்.. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒதுக்குப்புறத்தில், ஊருக்கு வெளியே உழைக்கும் மக்களின் வசிப்பிடங்கள்.. இதில் எந்த ஊருக்கு வெளியே வைப்பது?
கடை கூடவே கூடாது என்று மக்கள் களம் காணும் இந்தநேரத்தில் .. இப்போதைக்கு இப்படி ‘கடையை வைத்துக்கொள்ளலாம்’ என்று அம்மாவுக்கே யோசனை வழங்குவதை விட ஒரு கொடிய வன்முறை இருக்க முடியுமா? கொள்கைகள் வேறாக இருக்கலாம், ஒரு குடிகாரனின் காலைத்தொட்டு குடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்ட அறுபது வயது சசிபொருமாளையே வன்முறையாளர் என்று வாய்கூசாமல் கூறும் வைத்தியை விட ஒரு வன்முறையாளன் உலகில் உண்டா?
-துரை.சண்முகம்
நன்றி:வினவு.
உலக அளவில் பல்வேறு நாடுகளில்,மதுவிலக்குக் கொள்கை தள்ளாடி தள்ளாடித் தான் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஏன் என்றால் மதுவிலக்குக் கொள்கை அல்லவா?
இதே மதுவிலக்குப் பிரச்சினையிலும் மாறி மாறி முடிவு எடுக்கப்பட்டதற்கு சில உதாரணம் கூறுகிறேன்.
அமெரிக்க நாட்டிலே 1919ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 16ஆம் நாள் அரசியல் சட்டத் தையே திருத்தி,
மதுவிலக்குச் சட்டத்தை அமலுக் குக் கொண்டு வந்தார்கள். ஆனால் 1938ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள்
20ஆம் தேதியன்று மதுவிலக்குச் சட்டம் அங்கே ரத்து செய்யப்பட்டது.பின்லாந்து நாட்டில் 1907ஆம் ஆண்டு மது விலக்குச் சட்டம் கொண்டு வரப்பட்டது; 1932இல் அந்த நாட்டில் மதுவிலக்குச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. நார்வே நாட்டில் 1919ஆம் ஆண்டு மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது; அது 1927இல் ரத்து செய்யப்பட்டு விட்டது. நியூபவுண்ட்லாண்ட் நாட்டில் 1915இல் மதுவிலக்கை அமல் செய்தார்கள்; 1924இல் அதை ரத்து செய்து விட்டார்கள். துருக்கியில் 1920இல் மதுவிலக்கை அமல்படுத்தினார்கள்; 1924இல் அதை ரத்து செய்து விட்டார்கள்.

1971இல் தி.மு.கழகம் மதுவிலக்குக் கொள்கையை ஒத்தி வைப்பதற்கு முன்பு தமிழ்நாட்டில் மது விற்பனை
செய்யப்படவில்லையா? என்றால், விற்பனை செய்யப்பட்டுத்தான் வந்தது.
பெரிய பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள், ஏன் நடுத்தர மக்கள் கூட மது அருந்துவதற்கான "பர்மிட்"களை வாங்கிக் கொண்டு,
மதுக்களை விற்பனை செய்யும் கடைகளிலிருந்து மது வகையறாக்களை வாங்கி அருந்திக் கொண்டு தான்இருந்தார்கள்.

வசதி குறைந்தோர், கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பவர்களிடம் வாங்கிக் குடித்தார்கள்.
எனவே முன்பு எந்தக் காலத்திலும் மது இல்லாமல் இருந்ததில்லை. ஏன் சுதந்திரம் பெறு வதற்கு முன்பே கூட,மது விற்பனை நடந்து கொண்டிருந்ததால்தான், அண்ணல் காந்தி அடிகளே கள்ளுக் கடை மறியல் என்றபெயரால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினார்.

தந்தை பெரியார் அவர்களே கள்ளுக்கடை மறியல்செய்ததோடு, தனக்குச் சொந்தமான தோப்பில்கள் இறக்குவதற்கான 500 தென்னை மரங்களை யெல்லாம்வெட்டிச் சாய்த்தார்.இதெல்லாம்தான் வரலாறு.
ஆனால் தினமனி,தினமலர் போன்ற ஜெயலலிதா ஆதரவு ஊடகங்கள் மது விலக்கு கொண்டுவந்து திமுக பெயர் ,பலன் அடைன்து விடக் கூடாது என்று வரிந்து கட்டிக் கொண்டு சேற்றை வாறி வீசுகின்றன.
-கலைஞர்.
=================================================================================