ஜெயலலிதா மிக திறமைசாலி,நிர்வாகத்திறமை மிக்கவர்
மத்திய தணிக்கைத்துறை தமிழ் நாடு அரசின் வரவு செலவுகளை ஆய்வு செய்ததில் பல்வேறு குளறுபடிகளை கண்டு பிடித்து வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.
ஜெயலலிதா மிக திறமைசாலி,நிர்வாகத்திறமை மிக்கவர் என்று சிலர் சொல்லிக்கொண்டு திரிவதை உண்மை நிலை என்ன அன்பதை காட்டியுள்ளது தணிக்கைத் துறை அறிக்கை.
இது 2012-2013 மார்ச் வரையிலான கணக்கு மட்டுமே .
முந்தைய குளறுபடிகள் தனி.
இது அரசு செலவின முறைகேடுகள் மட்டும்தான்.
மற்றபடியிலான துறைவாரியான லஞ்ச -ஊழல்கள்தனி. அவை இவைகளை விட அதிகம் .
குடிசை மாற்று வாரியம் செய்த வீண் செலவு ரூ.19.17 கோடி :
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட உக்கடம் பகுதியில், 55.35 கோடி ரூபாயில், 2,232 அடுக்குமாடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது.
மத்திய அரசு உதவியுடன் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.கட்டுமானப் பணிகள் முடியும் நிலையில் இருந்தபோது, நான்காவது பிரிவு கட்டடம் பூமிக்குள் இறங்கியது. இதையடுத்து, அங்கு கட்டப்பட்டு இருந்த பல பிரிவு குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.
கட்டியது மற்றும் அவற்றை இடித்தது ஆகிய வகையில், குடிசை மாற்று வாரியத்துக்கு, 19.17 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குறைபாடுள்ள வடிவமைப்புகளை பின்பற்றியதே இந்த வீண் செலவுக்கு காரணம்.
குறைத்து மதிப்பிட்ட பதிவுத்துறை ரூ.7.59 கோடி :
கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்து, தமிழகத்தில் மட்டும் செயல்படும் கூட்டுறவு சங்கங்களுக்கு, அவை விற்பனை செய்யும் மனைகளுக்கு முத்திரைத் தீர்வை செலுத்துவதில் சலுகை வழங்கப்படும்.
பன்மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கங்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது. ஆனால், சென்னை மண்டலத்தில், மாதவரம், வில்லிவாக்கம் உள்ளிட்ட, எட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில், 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல், 2013ம் ஆண்டு மார்ச் வரை, பன்மாநில சட்டத்தின் கீழ் பதிவான, நான்கு கூட்டுறவு சங்கங்களின் மனை விற்பனைக்கு, முத்திரைத் தீர்வை செலுத்துவதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், 7.59 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதேபோல், ஒன்பது சார் பதிவாளர் அலுவலகங்களில், 29 விற்பனை ஆவணங்களுக்கு, உட்பட்ட சொத்துகள் குறைவாக மதிப்பிடப்பட்டதால், ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னையில், கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில், ஆவணங்கள் தவறாக வகைபடுத்தப்பட்டதால், ஆறு லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தாமதத்தால் மின் வாரியம் செய்த செலவு ரூ.109 கோடி:
மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான பணிகளை, 'டான்ஜெட்கோ' செய்கிறது. நீண்ட கால மற்றும் நடுத்தர கால மின் கொள்முதல் ஒப்பந்தங்களை இறுதி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் மின் கொள்முதல் அளவு குறைபாட்டை சமாளிக்க, 'டான்ஜெட்கோ' குறுகிய கால மின் கொள்முதலை மேற்கொண்டது.
ஆனால், குறுகியகால மின் கொள்முதலில் பல குறைபாடுகள் இருந்தன. ஒரே காலகட்டத்துக்கு, பல ஒப்பந்த புள்ளிகள் வெவ்வேறு விலைகளில் இறுதி செய்யப்பட்டுள்ளன.
தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் ஒப்பந்த புள்ளிகளை ஆய்வு செய்ய வலுவான அளவுகோல், 'டான்ஜெட்கோ'விடம் இல்லை. இதனால், 109.60 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கிறது.
மேலும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கவும் இது வழி வகுத்துள்ளது. தேவைக்கு ஏற்ப கடன் உத்தரவாத கடிதம் வழங்க, 'டான்ஜெட்கோ' தவறியதால், 25.64 கோடி ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து, மின்சாரம் வாங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.
'டான்சி' விலைகள் அதிகம்.
ரூ.1.44 கோடி : கடந்த, 2011ம் ஆண்டு மே மாதம், டான்சி நிறுவனம், 11 ஆயிரத்து, 393 கனஅடி அளவுள்ள தேக்கு மரக் கட்டைகளை, கேரள வனத்துறையிடம் இருந்து, 3.4 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
அவை, 5,000 பெரிய கட்டில்கள் தயாரிப்பதற்காக வாங்கப்பட்டது. ஆனால், அரசுத்துறைகள் கொடுத்த வழக்கமான,' ஆர்டரின்' பேரில், அறைகலன்கள் செய்வதற்காக அவை பயன்படுத்தப்பட்டன. அதில், 709 கனஅடி கட்டைகளை, 2014 ஆகஸ்ட் வரை பயன்படுத்தவில்லை.மேலும், தமிழக வனத்துறை, 1 கன மீட்டர் தேக்கு மரக் கட்டையை, 58 ஆயிரத்து, 474 ரூபாய்க்கு விற்ற நிலையில், கேரள அரசிடம் இருந்து, 86 ஆயிரத்து, 691 ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கின்றனர்.
இதன் மூலம், 1.44 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
'நபார்டு' திட்டத்தில் செயல்படும், 687 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பெஞ்ச், மேஜை ஆகியவை வாங்க, 'டான்சி' மற்றும் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தில், 'டெண்டர்' கோரப்பட்டது.
கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனம் குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்த போதும், 'டான்சி' நிறுவனத்துக்கே, 33.34 கோடி ரூபாய்க்கு, 90 சதவீத கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. கதர் வாரியத்துக்கு, 3.75 கோடி ரூபாய்க்கு, 10 சதவீத கொள்முதல் ஆணை மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல் தொடர்பாக, தமிழக அரசுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் தரப்பில், பல முறை விளக்கம் அளித்த பிறகும், அதிக விலை குறிப்பிட்டிருந்த,'டான்சிக்கு' அதிக கொள்முதல் ஆணை வழங்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இதனால், 3.88 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
தவறான முடிவெடுத்த வாணிப கழக நஷ்டம் ரூ.3.85 கோடி:

நுகர்பொருள் வாணிபக் கழகம், பொது வினியோகம் மற்றும் அரசின் பிற திட்டங்களுக்கு வழங்க அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை ஆகியவை கொள்முதல் செய்கிறது.
இதில், பருப்பு வகைகள், திறந்த ஒப்பந்தபுள்ளி மூலம் வாங்கப்படுகிறது.
கடந்த, 2012 - 13ல், பருப்பு வகைகள் ஒப்பந்த புள்ளியிலேயே குறைந்த விலையில் கிடைத்தபோதும், தவறான முடிவு எடுத்ததால், நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு, 3.85 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கட்டாய கல்வி சட்டத்தில் குளறுபடி:
கட்டாய கல்வி சட்டத்தில் குளறுபடி:
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த, பஞ்சாயத்து, மாநகராட்சி போன்ற அமைப்புகள் மூலம், உள்ளூர் அதிகார அமைப்பு உருவாக்கி கண்காணிக்க வேண்டும்.
ஆனால், தமிழக அரசு இதை செய்யவில்லை.கட்டாயக் கல்வி சட்டத்தின் நடைமுறைகளை உள்ளூர் அதிகார அமைப்பு மூலம் மேற்கொண்டு, மத்திய அரசிடம் நிதி பெற, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிக்கை அளிக்க வேண்டும்.
ஆனால், பள்ளிக் கல்வி இயக்குனரிடம், மெட்ரிக் பள்ளி இயக்குனர் ஆலோசனை அறிக்கை கேட்டும் அவர் அறிக்கை தரவில்லை.
நான்கு மாவட்டங்களில், 1,004 நர்சரி பள்ளிகளில் ஆய்வு செய்ததில், 467 பள்ளிகள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தவில்லை. மேலும், 537 பள்ளிகளில் பல குறைகள் இருக்கின்றன.
தமிழகம் முழுவதும், 862 மெட்ரிக் பள்ளிகளில் ஆய்வு நடத்தியதில், 334 பள்ளிகள் சட்டத்தை அமல்படுத்தவில்லை.
மேலும், 801 பள்ளிகளில் ஏழை மாணவர் ஒருவருக்குக் கூட, கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் இடம் வழங்கவில்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பள்ளிகளிலும் பல குளறுபடிகள் இருக்கின்றன. தகுதியை உறுதி செய்யாமல், நலிந்த பிரிவினர் மட்டுமின்றி,மற்றவர்களுக்கும் இடம் தரப்பட்டுள்ளது. கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் சேர்ந்தவர்களிடம் கூட, கட்டணம் வசூலித்து இருக்கின்றனர்.
இலவச சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்கவில்லை. சட்டத்தை அமல்படுத்திய பள்ளிகளுக்கு முறையாக நிதி அளிக்கவில்லை.
மீன்வளத்துறையில் பணம் முடக்கம் ரூ.7.50 கோடி:
மீன்வளத்துறையில் பணம் முடக்கம் ரூ.7.50 கோடி:
சென்னை அருகேயுள்ள பழவேற்காடு ஏரியில், இரண்டு மீன் இறங்கு தளங்கள் கட்டும் பணிக்காக, 8.85 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டு, 2011ல் பணிகள் துவங்கின. இதற்கு முறையான அனுமதி பெறாததால், வனத்துறை ஆட்சேபம் தெரிவித்ததது.
இதனால், 2012ல், அந்தப் பணிகள் முடங்கின. இதுவரை, அதற்காக, இரண்டு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. பணிகள் துவங்குவதற்கு முன், வனத்துறை அறிவுறுத்தல்படி, மீன் வளத்துறை முறையான அனுமதி பெறாததால், இரண்டு கோடி ரூபாய் முடங்கிக் கிடக்கிறது.மீனவர்களின் படகுகளில், வயர்லெஸ் கருவிகள் பொருத்த, 5.50 கோடி ரூபாய்க்கு, 'எல்காட்' நிறுவனத்துக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.
கடந்த, 2008ல், 3,100 வயர்லெஸ் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. மீனவர்களிடம் இருந்து, 2,158 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,928 விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டன.
இதில், 94 படகுகளுக்கு மட்டுமே இயங்கும் உரிமங்கள் தரப்பட்டன.
மற்ற கருவிகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில், 5.50 கோடி ரூபாய் முடங்கியுள்ளது.
இந்த, இரு திட்டங்களால் மட்டும், 7.50 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
ஆவணங்கள் தராததால் அதிக இழப்பு ரூ.1,088 கோடி:
ஆவணங்கள் தராததால் அதிக இழப்பு ரூ.1,088 கோடி:
வணிக வரி, மாநில ஆயத்தீர்வை, வாகன வரி, முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணங்கள், மின்சார வரி மற்றும் சுங்க வரி ஆகியவை மூலம், தமிழக அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
இதன்படி, 2013 - 14ம் ஆண்டுக்கான மொத்த வருவாய், 1.08 லட்சம் கோடி.
இவற்றில் வரி வருவாய், 73,718 கோடி ரூபாய். இதில், 3,230 ஆவணங்களில், குறைவான மதிப்பீடு, குறைவான வரி விதிப்பு என, 1,088 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இறக்குமதி சார்ந்த வகைகளில், 2011 - 12ல், 257 கோடி ரூபாய்; 2012 - 13ல், 368 கோடி ரூபாய், வரி அபராதம் விதிக்கப்படவில்லை.
'தணிக்கைக்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்' என, ஒரு மாதத்திற்கு முன், வணிக வரித்துறைக்கு தகவல் தெரிவித்தும், 183 அலுவலகங்களில், 26 ஆயிரத்து, 700 விற்பனை வரி மதிப்பீட்டு ஆவணங்களை தரவில்லை.
இந்த காலதாமதம், தணிக்கை செய்வதை முறியடிக்க முயற்சி செய்வது போல் உள்ளது என, தணிக்கைத்துறை சுட்டிக் காட்டியுள்ளது.
தாலிக்கு தங்கம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ.3.22 கோடி :
தாலிக்கு தங்கம் வாங்கியதில் கூடுதல் செலவு ரூ.3.22 கோடி :
தமிழக அரசின், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு தேவையான தங்க நாணயம், 2011 - 12 மற்றும் 2012 - 13 ஆகிய நிதியாண்டுகளில், வங்கிகளிடம் இருந்து, சமூக நலத்துறை கொள்முதல் செய்தது. வங்கிகள், தங்கம் இறக்குமதி செய்ய, 2013ல், ரிசர்வ் வங்கி சில கட்டுப்பாடுகளை விதித்தது.
இதனால், 2013 - 14ல், 'தங்க நாணயம் வழங்க முடியாது' என, வங்கிகள் மறுத்து விட்டன. இதையடுத்து, 'டெண்டர்' மூலம், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, தங்க நாணயம் வாங்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, நான்கு கிராம் எடை கொண்ட, ஒரு லட்சம் தங்க நாணயம் கொள்முதல் செய்ய, சமூகநலத் துறை டெண்டர் ெவளியிட்டது.
கடந்த, 2013ல், டெண்டர் திறக்கப்பட்டபோது, சர்வதேச தங்கத்தின் மதிப்புக்கு நிகராக, இந்திய ரூபாய் மதிப்பை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
இதனால், தமிழக அரசுக்கு 3.22 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அரசு குறைத்து காட்டியது ரூ.2,370 கோடி:
அரசு குறைத்து காட்டியது ரூ.2,370 கோடி:
தமிழகத்தில், 2012 - 13ல், வருவாய் வகையில் மிகுதி காணப்பட்டதால், வருவாய் பற்றாக்குறை இல்லை. ஆனால், நிதி பற்றாக்குறை, 16 ஆயிரத்து, 519 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2013 - 14ல், வருவாய் பற்றாக்குறை, 1,788 கோடி ரூபாயாகவும், நிதிபற்றாக்குறை, 20 ஆயிரத்து, 583 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது.
வருவாய் பற்றாக்குறையுடன், மூலதன செலவு உயர்வு, கடன்கள், முன் பணத்தை திரும்பப் பெற்றதில் குறைவு போன்ற காரணங்களால், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக, மத்திய தணிக்கைத்துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், வருவாய் பற்றாக்குறை, 2,170 கோடி ரூபாய், நிதி பற்றாக்குறை, 200 கோடி ரூபாய் என, 2,370 கோடி ரூபாயை, பற்றாக்குறையில், அரசு குறைத்து காட்டியுள்ளது எனவும் தணிக்கைத்துறை கண்டுபிடித்துள்ளது.
2,500 பேருக்கு திருமண உதவி மறுப்பு :
2,500 பேருக்கு திருமண உதவி மறுப்பு :
தமிழக்தில், திருமண உதவி கோரி, 2011 மே 17க்கு முன், 2,538 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான, கூடுதல் நிதியை, சமூக நலத்துறை கமிஷனர் கோரியும், நிலுவை விண்ணப்பங்களுக்கு அரசு நிதி ஒதுக்கவில்லை.
பயனாளிகளுக்கு உதவிகள் மறுக்கப்பட்டுள்ளன.
மேலும், தாலிக்கு தங்கம் என்ற புதிய திட்டத்தின் கீழ், 2012 மார்ச் முதல் டிசம்பர் வரை, கோவை மாநகராட்சியால் பெறப்பட்ட, 58 விண்ணப்பங்கள், மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், இதுவரை உதவித்தொகை வழங்கவில்லை என, மத்திய தணிக்கைத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
சிமென்ட் நிறுவன இழப்பு ரூ.1.78 கோடி: -
சிமென்ட் நிறுவன இழப்பு ரூ.1.78 கோடி: -
பொதுத்துறை ஊழியர்களுக்கான பணிக் கொடை, இந்திய பணிக் கொடை சட்டம் மற்றும் அவ்வப்போது கொண்டு வரப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, நிர்ணயிக்கப்பட வேண்டும்.
2010 மே மாதம், பணிக்கொடை உச்சவரம்பை, 3.50 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக, மத்திய அரசு உயர்த்தியது.
ஆனால், அதற்கேற்ப அரசு ஆணையை மாநில அரசு வெளியிடவில்லை.
2007 ஜனவரி முதல், 2010 ஏப்ரல் வரை, பணிஓய்வு பெற்ற நிர்வாகப் பிரிவு ஊழியர்கள், 91 பேருக்கு தலா, 10 லட்சம் ரூபாயை பணிக் கொடையாக சிமென்ட் நிறுவனம் வழங்கிவிட்டது.
அப்போது நடைமுறையில் இருந்த உச்சவரம்பான, 3.5 லட்சம் ரூபாயை விட, கூடுதலாக வழங்கப்பட்ட தொகை, 1.78 கோடி ரூபாய் ஆகும்.
வசூலான ரூ.10 கோடி அரசுக்கு வரவில்லை:
வசூலான ரூ.10 கோடி அரசுக்கு வரவில்லை:
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 206 படுக்கைகள் கொண்ட, கட்டண சிகிச்சைப் பிரிவு உள்ளது. 2008 முதல், 2013 வரை, நோயாளிகளிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து சேவைக் கழகம், 10.13 கோடி ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளது.
இந்த தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், கருவூலத்தில் செலுத்தவில்லை.
அந்தப் பணத்தில், 4.85 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.
இது, அரசியல் அமைப்புச் சட்ட வழிமுறைகள் மற்றும் தமிழ்நாடு கருவூல விதிகளை மீறிய செயல்.
=========================================================================================
இன்று,
அக்டோபர்-01.
இந்தியாவில் மட்டும், 10 கோடி பேர், 60 வயதை கடந்தவர்களாக உள்ளனர். 7
0 வயதை தாண்டியவர்கள், நான்கு கோடி பேரும், 80 வயதை கடந்தவர்கள், 90 லட்சம் பேரும் இருக்கின்றனர். முதியவர்களில் 40 சதவீதம் பேர், வாரிசுகளால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.
இதுவே, தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் அமைந்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
முதியோரை கண்ணியமாகவும், கவுரவமாகவும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அக்., 1ல், சர்வதேச முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முதன் முதலாக, 1991ல், சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கடை பிடிக்கப்பட்டது.கடந்த, 2002ல், சர்வதேச அளவில், முதியோருக்கான செயல்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை, உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கங்கள்.
ஐ.நா., கணக்கீட்டின்படி, உலகில் ஒவ்வொரு, 10 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.
2050ம் ஆண்டில், ஐந்துக்கு ஒன்று என்ற அடிப்படையிலும், 2150ல், மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
=========================================================================================
மன் கீ பாத்
=========================================================================================
இன்று,
அக்டோபர்-01.
- உலக முதியோர் தினம்
- உலக சைவ உணவாளர்கள் தினம்
- தென்கொரியா ராணுவ தினம்
- சிங்கப்பூர் குழந்தைகள் தினம்
- இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது(1854)
இந்தியாவில் மட்டும், 10 கோடி பேர், 60 வயதை கடந்தவர்களாக உள்ளனர். 7
0 வயதை தாண்டியவர்கள், நான்கு கோடி பேரும், 80 வயதை கடந்தவர்கள், 90 லட்சம் பேரும் இருக்கின்றனர். முதியவர்களில் 40 சதவீதம் பேர், வாரிசுகளால் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.
இதுவே, தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் அமைந்திருப்பதற்கு காரணமாக இருக்கிறது.
முதியோரை கண்ணியமாகவும், கவுரவமாகவும் மதிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அக்., 1ல், சர்வதேச முதியோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முதன் முதலாக, 1991ல், சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கடை பிடிக்கப்பட்டது.கடந்த, 2002ல், சர்வதேச அளவில், முதியோருக்கான செயல்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை, உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கங்கள்.
ஐ.நா., கணக்கீட்டின்படி, உலகில் ஒவ்வொரு, 10 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.
2050ம் ஆண்டில், ஐந்துக்கு ஒன்று என்ற அடிப்படையிலும், 2150ல், மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
=========================================================================================
மன் கீ பாத்
‘மன் கீ பாத்’ நாடகத்தைப் பார்க்க அரண்மனை அரங்கில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
அறிவிப்பாளர்: மகாஜனங்களே! சற்று அமைதியாக இருங்கள். நாடகம் தொடங்க இன்னும் சில நிமிடங்களே இருக்கின்றன. அமைதி.. அமைதி!
(திரைச் சீலை உயர்கிறது. அம்சவர்த்தன புஜபலபராக்கிரம குபேந்திர மோடி மகாராஜா சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். பல தூரதேசங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பட்டாடைகள், ஆபரணங்கள், தங்கக் கவசங்கள் அவரது உடலை அலங்கரிக்கின்றன. பக்கத்தில் மகாராணியார் சிம்மாசனம் காலியாக இருக்கிறது. மன்னர் அந்தப் பக்கம் பார்ப்பதே கிடையாது).
மன்னர்: அமைச்சரே.. சபை கலையலாம்.. சாரி... கூடலாம்.
அமைச்சர்: கூடி விட்டது மன்னா!
மன்னர்: அமைச்சரே! நம் நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதா?
அமைச்சர்: சே! இந்தக் கேள்வியைக் கேட்டுக்கேட்டு அலுத்துவிட்டது மன்னா! மழை பொழிவதைக் கூட என்னிடம் கேட்டுத்தானா தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்? அரண்மனையை விட்டு சற்று வெளியே வந்து நாட்டைச் சுற்றிப் பார்த்தாலே மழை பொழிந்திருக்கிறதா இல்லையா என்பது தெரிந்துவிடுமே மன்னா?
மன்னர்: மன்னருக்கே ஆலோசனை சொல்லத் தொடங்கிவிட்டீரா? உம்மை மாற்றிவிட வேண்டியதுதான். அடுத்த ஆள் யாரென்று குருஜியிடம் கேட்டுவிட்டு உம்மைக் கடாசிவிடுகிறேன்.
அமைச்சர்: ஐயோ, ஐயோ.. வேண்டாம் மன்னா, வாய் தவறி உளறிவிட்டேன் .. என் பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடாதீர்கள், மன்னா ! நீங்கள் இனி அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து உறியடித் திருவிழா வரும்போதுதான் மக்களைச் சந்திக்கக் கிளம்புவீர்கள் என்பது எனக்குத் தெரியாதா மகாராஜா?
மன்னர் : நம் நாட்டு மக்களைவிட வேற்று நாட்டு மக்களைச் சந்திப்பதையே நான் விரும்புகிறேன். அவர்கள் நான் என்ன பேசுகிறேனோ அதைக் கேட்கிறார்கள். என்னைக் கேள்வி கேட்பதில்லை. அடடா! என்ன உற்சாகமாக வரவேற்கிறார்கள்.. கைதட்டுகிறார்கள்! காதுக்கு எவ்வளவு ரம்மியமாக இருக்கும் தெரியுமா? அந்தக் கைதட்டல்களைக் கேட்டு மூன்று நாட்களாகி விட்டன. அண்டை நாடு ஏதும் அழைப்பு அனுப்பியிருக்கிறதா, அமைச்சரே?
அமைச்சர்:
அழைப்பு அனுப்ப வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம் மன்னா! எந்த நாட்டுக்குப் போக வேண்டும் சொல்லுங்கள். இதோ வருகிறேன் என்று ஓலை அனுப்பிவிடுகிறேன்.
காவலன்: அரண்மனைக்கு வெளியே மக்கள் கூட்டம் மன்னா! உங்களைப் பார்க்க வேண்டுமாம்.. ஏதோ கோரிக்கை இருக்கிறதாம். வரச் சொல்லவா மன்னா?
மன்னர் : இவங்க தொந்தரவு தாங்க முடியலியே? அந்த சனியன்களை உள்ளே விடவேண்டாம் காவலா.. மன்னர் உப்பரிகைக்கு வந்து தரிசனம் கொடுப்பார் என்று சொல்லித் தொலை!
(தரிசனத்திற்கு ஏற்பாடாகிறது.. குடிமக்களிடமிருந்து கூக்குரல்கள்...)
மன்னர் (கடுகடுப்புடன்) : என்ன வேண்டும் மகாஜனங்களே.. எதற்காக என்னைப் பார்க்க வேண்டும்?விவசாயிகள்: நாங்கள் உழுது பயிரிடும் எங்கள் உயிரான நிலத்தை வேற்று நாட்டான் எவனாவது வந்து அபகரித்தால் தங்களிடம் முறையிடலாம். தாங்களே அபகரித்தால் யாரிடம் போய் முறையிடுவது மன்னா?முஸ்லிம்கள் : எங்கள் தலையில் நாங்கள் தொப்பி வைக்கக் கூடாதாம்.. தொப்பி வைத்தவனெல்லாம் அரேபியாவுக்கு ஓடுங்கள் என்று அரண்மனை அதிகாரி மிரட்டுகிறார் மன்னா!
பெண்கள் : மாலை 6 மணிக்கு மேல் நாங்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்று இன்னொரு அதிகாரி உத்தரவு போடுகிறார் மன்னா!
இளைஞர்கள்: எங்களுக்கு கல்வி வேண்டும்! வேலை வேண்டும்! கௌரவமான வாழ்க்கை வேண்டும்!வறியவர்கள் : நாங்கள் பட்டினி கிடக்கிறோம் மன்னா, பட்டினி கிடக்கிறோம். ஏனென்று கேட்க நாதியில்லை. எங்களுக்கு சோறு வேண்டும்!
மன்னர் : எனக்கு முந்தைய மன்னர் காலத்தில் நீங்களெல்லாம் என்ன செய்தீர்கள்? இதையெல்லாம் பொறுத்துக் கொண்டுதானே இருந்தீர்கள்? இப்ப மட்டும் ஏன் ஒப்பாரி வைக்கிறீர்கள்? அயல்நாடுகளுக்குப் போய் பல சீமான்களை வருந்தி வருந்தி உங்களுக்காகத்தான் நம் நாட்டுக்கு அழைக்கிறேன். அவர்கள் வந்து உங்கள் குறைகளைக் கேட்பார்கள். என்னை விடுங்கள்.
குடிமக்கள் : நாங்கள் பார்க்காத சீமான்களா மன்னா? இப்படி உப்பரிகையிலே நின்றுகூட எங்களுக்கு அவர்கள் தரிசனம் தரமாட்டார்கள். மன்னர்தான் எங்கள் குறைகளைப் போக்க வேண்டும். சென்ற ஆண்டு நகர்வலம் வரும்போது தாங்கள் பேசியதையெல்லாம் மறந்துவிட்டீர்களா மன்னா? நாங்கள் சொல்வதை சற்று காது கொடுத்துத்தான் கேளுங்களேன்!
மன்னர் (அமைச்சரிடம்): இவங்களோட பஞ்சப் பாட்டையெல்லாம் கேட்க நான் தயாராக இல்லை. நான் பேசுவதைக் கைதட்டிக் கேட்கும் கூட்டம் மட்டுமே எனக்கு வேண்டும். காவலர்களைக் கூப்பிட்டு இவர்களை விரட்டியடியுங்கள்!
காவலன் : மோகன் பாகவதரும் சிரவண் பகாடியாவும் தங்களைக் காண வந்திருக்கிறார்கள் மன்னா.. கீழே காத்திருக்கிறார்கள்.
(மன்னர் கிளம்புகிறார்).
மன்னர் (வந்து கொண்டே) : மன்னிக்க வேண்டும் சுவாஜி! அந்த சனியன்களை அனுப்பிவிட்டு வர சற்று தாமதமாகிவிட்டது. மன்னிக்க வேண்டும்!
மோகன் பாகவதர் : சம்ஸ்கிருதத்திற்கு ஒரு வாரக் கொண்டாட்டம் எப்படிப் போதும்? இந்த வருடம் முழுதும் கொண்டாட ஏற்பாடு என்ன? அதைக் கேட்கத்தான் வந்தேன்.
பகாடியா : முஸ்லிம்களைக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள எப்படி அனுமதிக்கிறீர்கள் என்றே தெரியவில்லை. ஆசிரமத்தில் படித்தது எதுவுமே உம் நினைவில் இல்லையா?
மன்னர் : எல்லாம் நினைவில் இருக்கிறது குருஜி! நாம் நினைத்தபடியெல்லாம் செய்யமுடியாமல் தவிக்கிறேன். இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து பழகிவிட்டார்கள். அதை மாற்றுவது அவ்வளவு எளிதாக இல்லை. ஏதோ, ஜனநாயகமாம்! மக்கள் உரிமையாம்! கேட்கவே நாராசமாக இருக்கிறது. கொஞ்ச கால அவகாசம் கொடுங்கள். எல்லாவற்றையும் செய்து முடிக்கிறேன்.
பாகவதர் : மறந்துவிடாதீர்கள்! பள்ளி, கல்லூரிகளில் இனிமேல் அறிவியல் வகுப்புகளே வேண்டாம்! ராமாயணம், மகாபாரதம், பகவத்கீதையைப் படித்தால் போதும்! யாராவது கேட்டால் அதில் இல்லாத அறிவியலா என்று மடக்குங்கள்!
மன்னர் : ஆகட்டும் குருஜி! பாரசீகத்திற்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன். விமானம் தயாராக இருக்கிறது.
என்னுடன் வாருங்கள். உங்களை நாகபுரியில் இறக்கிவிட்டுப் போகிறேன்.
கற்பனை : ராஜகுரு
================================================================================================================================
முகனூல்.............,!
அனைத்துலக நாடுகளும் சேர்ந்து ஒரு சர்வதேச விசாரணையைகூட இன்று இலங்கையில் கொண்டுவர முடியவில்லை...
ஆனா....பாருங்க நம்மூர் ஐயாச்சாமிகள் மட்டும் கலைஞர் நினைத்திருந்தால் அன்று போரை நிறுத்தியிருக்கலாம்னு நீட்டிமுழக்குவானுங்க...
ஆனா....பாருங்க நம்மூர் ஐயாச்சாமிகள் மட்டும் கலைஞர் நினைத்திருந்தால் அன்று போரை நிறுத்தியிருக்கலாம்னு நீட்டிமுழக்குவானுங்க...