சனி, 3 அக்டோபர், 2015

தலையாய குறிப்பு.,வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி  கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை  பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால்  முடி உதிர்வது நிற்கும்.

* கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால்  வழுக்கை மறையும்.

* ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு  தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
நல்ல உணவுப் பழக்கத்திற்கும் சருமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரோக்கியமான சருமத்தை பெற சில எளிய  பழக்கவழக்கங்களை பின்பற்றலாம்.. தினமும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.

* பச்சைக்காய்கறிகள் அதிக அளவில் உண்ண வேண்டும். வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற  காய்கறிகளை சாலட் செய்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து உண்பது மிகவும் நல்லது. இது போல் மோர் குடிப்பதும் சிறந்தது.

* பழங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்களை தரும். மாதுளம் பழச்சாறுடன் தேன் சேர்த்து அருந்தினால்  இரத்த சோகை ஓடியே போகும். வாழை பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது மூளை செயல்பாட்டுக்கு சிறந்தது.  ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுகளையும் அடிக்கடி அருந்தலாம்.. தியானம், ஆழ்ந்து மூச்சு விடும் பயிற்சி, உடற்பயிற்சி  போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.
===================================================================================
வெற்றிலை கொடி வகையை சேர்ந்த தாவரமாகும். இது பிப்பர் வெட்டர் என்ற தாவரவியல் பெயர் கொண்டதாகும். ஆங்கிலத்தில் பெப்பர் வெட்டர் என்று குறிப்பிடுகிறார்கள். இதற்கு நாக வள்ளி என்ற பெயரும் உள்ளது. அரோமா தெரபி என்ற முறையில் வாசனை திரவிய மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் வாசனை தலைவலியை போக்கக் கூடியது. 

பசியை தூண்டக் கூடியது. நல்ல மனோபாவத்தை உருவாக்குகிறது. இதனால்தான் கடவுளின் வழிபாடுகளிலும், நல்ல சடங்குகளிலும் வெற்றிலையை முன்னோர்கள் பயன்படுத்தினர். வெற்றிலையின் பயன்பாட்டை புரிந்து கொண்டு பல்வேறு வழிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வயிற்றிலே இருக்கக் கூடிய வாயுவை வெளித்தள்ளக் கூடியது. செரிமானத்தை சரி செய்யும் பலமூட்டியாக உள்ளது. எச்சிலை ஊறச் செய்வது. எச்சில் அதிகம் ஊறினால்தான் செரிமானம் முறையாக நடைபெறும். 

வெற்றிலையின் மணம், நிறம், சுவை ஆகியவற்றை கொண்டு மூன்றாக பிரிப்பது வழக்கம். கம்மாடு வெற்றிலை, வெற்றிலை, கற்பூர வெற்றிலை என்று அதை குறிப்பிடுகின்றனர். 
வெற்றிலையை பயன்படுத்தி செரிமானத்தை தூண்டக் கூடிய தேநீர் ஒன்றை தயார் செய்யலாம். 
இதற்கு தேவையான பொருட்கள் வெற்றிலை இலைகள், ஓமம், உப்பு. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். 
அதனுடன் இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை காம்புகளை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி அதில் சேர்க்க வேண்டும். ஒரு கிராம் அளவுக்கு ஓமத்தை அதனுடன் சேர்க்க வேண்டும். 

பிறகு சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும். 
இந்த கலவையை நன்றாக கொதிக்க விட வேண்டும். 
இதை வடிகட்டி கொள்ள வேண்டும். 
இதை பருகுவதன் மூலம்உடலில் செரிமானத்தை தூண்டும். 
அதிகமான கொழுப்புள்ள உணவை சாப்பிடும் போது இந்த தேநீரை எடுத்துக் கொண்டால் செரிமானத்தை தூண்டுவதுடன் உடலில் தேவையில்லாத கொழுப்பு மற்றும் மாவு சத்துகள் சேராமல் வெற்றிலை தேநீர் பார்த்துக் கொள்ளும். 
வெற்றிலையை எந்த வடிவத்தில் எடுத்துக் கொண்டாலும் அது செரிமானத்தை தூண்டுவதாக அமைகிறது. மேற்பூச்சாக பயன்படுத்தும் போது தோல் நோய் தொல்லையை போக்குகிறது. 

வலியை போக்கக் கூடியது. நெஞ்சு சளியை கரைக்கக் கூடியது. இருமலை தடுக்கக் கூடியதாகவும் அமைகிறது.வெற்றிலையை பயன்படுத்தி சளி மற்றும் இருமலை கட்டுப்படுத்தும் மருந்தையும் தயாரிக்கலாம்.  இதற்கு தேவையான பொருட்கள் வெற்றிலை, ஏலக்காய், இலவங்கம், தேன். வெற்றிலை 3 அல்லது 4 எடுத்து சிறிது துண்டுகளாக வெட்டி போட வேண்டும். ஒரு ஏலக்காய், ஒரு இலவங்கம் ஆகியவற்றை தட்டி போட வேண்டும். 

இவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் இதை வடிகட்ட வேண்டும். இது இளம் சூடோடு இருக்கும் போது இவற்றுடன் தேன் சேர்த்து பருகலாம். இதன் மூலம் வெற்றிலை இருமல் மற்றும் சளிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
மேலும் வெற்றிலையை பயன்படுத்தி பூச்சிக்கடிக்கான ஒரு மேற்பூச்சு மருந்தை தயார் செய்யலாம். இதை தொண்டையில் ஏற்படும் வீக்கத்திற்கு கூட மேற்பூச்சாக பயன்படுத்தலாம். இதற்கு தேவையான பொருட்கள் வெற்றிலை. 

வெற்றிலையை நன்றாக அரைத்து பசையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பூச்சிக்கடியோ, வண்டுக்கடியோ ஏற்பட்டால் குப்பைமேனி சாற்றுடன் சுண்ணாம்பை பூசி மேற்பற்றாக போடுவதுண்டு. அதே போல வெற்றிலையையும் இதற்கு பயன்படுத்தலாம். வெற்றிலைக்கு விஷத்தை முறிக்கக் கூடிய தன்மை உள்ளது. வெற்றிலை பசையுடன் சிறிதளவு சுண்ணாம்பை கலந்து கொள்ள வேண்டும். இதை பூச்சி கடி அல்லது வண்டுகடி உள்ள இடங்களில் பூசி வருவதன் மூலம் குணம் பெறலாம்.
===================================================================================


இன்று,
அக்டோபர்-03.
  • உலக வசிப்பிட தினம்
  • ஈராக் விடுதலை தினம்(1932)
  • கொஜொசியோன் நாடு(தற்போதைய கொரியா) டங்கூன் வாங்சியோம் என்பவரால் உருவாக்கப்பட்டது(கிமு 2333)
  • செர்பியா,குரொவேசியா,சிலவேனியா இணைந்து யூகோஸ்லாவியா என பெயரிடப்பட்டது(1929)

===================================================================================
அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம்.
புதியதாக காட்டுப்பள்ளி என்ற இடத்தில் கட்டப்பட்ட தனியார் துறைமுகம் எல் அண்ட் டி நிறுவனத்திற்கு உரிமை உடையதாக இருந்தது. 
இந்தக் காட்டுப் பள்ளி துறைமுகத்தைத் தான் இந்தியப் பிரதமருக்கும், தமிழக முதலமைச்சருக்கும் மிகவும் நெருக்கமான குஜராத் அதானி குழுமம் எடுத்துக் கொள்ளப் போவதாகவும், இன்னும் ஒரு சில நாட்களில் அதற்கான மாற்றங்கள் பற்றி முடிவு தெரிய வரும் என்றும், நேற்று (27-9-2015) “இந்து” ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. 
இந்த அதானி குழுமத்திற்குத் தான் ஒரு சில மாதங்களுக்கு முன்பு ஜெயலலிதா அரசினால் அவசர அவசரமாக சூரிய மின்சக்தி தயாரிப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. அதிலும் கூட, மற்ற தனியாரிடம் குறைந்த விலையில் சூரிய மின் சக்தி கிடைக்கும்போது, அதிக அளவுக்கு விலை கொடுத்து நீண்ட காலத்திற்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது என்று பலராலும் குற்றம் சாட்டப்பட்டது.
அதானி குழுமம் ஏற்கனவே இந்தியாவில் பத்து துறைமுகங்களைக் கையாண்டு வருகிறது. 
அவற்றில் ஒன்று தான் எண்ணுர் காமராஜர் துறைமுகம். 
அந்தத் துறைமுகத்திற்கு மிக அருகிலே தான் காட்டுப்பள்ளி துறைமுகம் அமைந்திருக்கிறது.தற்போது அதே அதானி குழுமம் தான், காட்டுப்பள்ளி துறைமுகத்தையும் எடுத்துக் கொள்ளப் போவதாக “இந்து” ஆங்கில இதழில் வந்துள்ள செய்தியைப் பார்க்கும்போது, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு, முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தை நலிவடைந்திடச் செய்ததே அதானி குழுமத்திற்கு உதவிடும் உள்நோக்கத்தோடு தானா என்ற சந்தேகம் அனைவருடைய மனதிலும் எழத் தான் செய்கிறது. 
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம், 
அதானி குழுமம் ஆர்வம் காட்டும் காட்டுப்பள்ளித் துறைமுகத்தையும், தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணா பட்டணம் துறைமுகத்தையும் வளர்ப்பதற்காகத் தானா? 
தனியார் சிலருக்கு உதவுவதற்காக, பொதுத் துறை நிறுவனங்களை வீழ்த்துவது பற்றிய மர்மங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரத் தான் போகின்றன!
                                                                                                                                 -கலைஞர் கருணாநிதி.
====================================================================================================
சீர்கேடுகளையும் ஊழல்களையும்
 தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருக்கும் இந்திய தலைமை கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் (சி.ஏ.ஜி.) அறிக்கை. 
ஜெயலலிதா[தமிழக] அரசின் நிர்வாக சீர்கேடுகளையும் ஊழல்களையும் அது தோலுரித்திருக்கிறது.
சென்னையிலுள்ள மத்திய அர சின் தணிக்கைத்துறை அலுவலக அதிகாரிகளிடம் நாம் பேசிய போது, ""அ.தி.மு.க.வின் நான் காண்டு ஆட்சியில் இந்த துறை தான் என்றில்லாமல் எல்லா துறைகளிலுமே சீர்கேடுகள்தான். குறிப்பாக, தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் நடக்கும் ஊழல்களுக்கும் சீர்கேடுகளுக்கும் பஞ்சமே இல்லை. 
இதில், முதலிடத்தில் இருப்பது மின்சார வாரியமும் போக்குவரத்துத் துறையும்தான்.
மின்சாரத்தை கொள்முதல் செய்ய கடந்த 4 ஆண்டு காலத்தில் போடப்பட்ட குறுகிய கால ஒப் பந்தங்கள் மூலம் 109 கோடியே 60 லட்சம் ரூபாய் வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இவை திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டவை. அதாவது, பவர் ட்ரேடிங் கார்ப்ப ரேசன் நிறுவனத்திடமிருந்து 1000 மெகாவாட் மற்றும் 700 மெகாவாட் மின்சாரத்தை வாங்க 2 ஒப்பந்தங்கள் குறுகிய கால கொள்முதல் முறையில் போடப்பட்டன. 
முதல் ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை 4 ரூபாய் 76 காசுகளுக்கும் இரண் டாவது ஒப்பந்தத்தில் 6 ரூபாய் 75 காசுகளுக்கும் வாங்குவதாக விலையை நிர்ணயம் செய்துள்ளனர்.
முதல் ஒப்பந்தத்தின்படி 4 ரூபாய் 76 காசு களுக்கு 2 கோடியே 20 ஆயிரம் யூனிட் மின்சாரத் தை சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அதில் பாதியளவுதான் கொடுத் தது. இரண்டாவது ஒப்பந்தத்தின்படி 6.75 காசு களுக்கு 1 கோடியே 37 லட்சம் யூனிட் மின்சாரத் தை வாங்குவதற்குப் பதிலாக 2 கோடியே 80 ஆயிரம் யூனிட்டை கூடுதலாக வாங்கியிருக்கின்றனர். 
அதா வது, குறைந்த விலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை வாங்குவதை நிறுத்திவிட்டு அதிக விலையில் நிர்ணயிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவைவிட கூடுதலாக வாங்கியிருக்கிறார்கள்.
 ஒரே நிறுவனத்திடம் தேவையே இல்லாமல், இரண்டு வகையான விலையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியதால் 2014 வரை வாரியத்திற்கு 109 கோடியே 60 லட்சம் நட்டம்.
அதேபோல, ஒப்பந்தத்தின்படி மின்சாரத்தை வழங்காமல் போனால், சம்பந்தப்பட்ட நிறுவனங் களிடமிருந்து ஒரு யூனிட்டிற்கு 1 ரூபாய் என இழப் பீட்டு தொகையை வசூலிக்க வேண்டும் அரசு. அதன் படி, கடந்த 4 ஆண்டுகளில் தனியார் நிறுவனங்கள் 264 கோடியே 90 லட்சம் யூனிட்டுகள் வழங்க வில்லை. இதன் மூலம், சுமார் 280 கோடி வசூலித் திருக்க வேண்டும். 
ஆனா, ஒரு ரூபாய் கூட வசூலிக்க வில்லை. இதைவிட கொடுமை என்னன்னா, அ.தி. மு.க. ஆட்சியின் முதல் வருடத்தில் இப்படி வசூலிக் கப்பட்ட 36 கோடியை சம்பந்தப்பட்ட நிறுவனங் களிடமே திருப்பித் தந்திருக்கிறார்கள். திருப்பித் தரப்பட்டதற்கான எந்த காரணத்தையும் அரசு சொல்லவே இல்லை'' என்று சுட்டிக்காட்டினர்.
மின்சார வாரியத்தின் ஊழல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் மின்வாரிய பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் காந்தி, ""குறுகிய கால மின் கொள்முதல் மட்டுமின்றி ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் கணக்கில் எடுத்திருந்தால் நட்டமும் முறைகேடுகளும் இன்னும் கூடுதலாக இருக்கும். 
ஒப்பந்தத்தின்படி காற்றாலை மின்சாரத்தை வாங்காவிடில் யூனிட்டிற்கு 2 ரூபாய், சம்பந்தப்பட்ட நிறுவனங் களுக்கு மின்வாரியம் கொடுத்தாக வேண்டும். அதன்படி 480 கோடி ரூபாயை வாரியம் கொடுத் திருக்கிறது. 
இந்த 480 கோடியும் வாரியத்திற்கு நட்டம். இப்படிப்பட்ட நட்டத்தினாலும் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதினாலும் சிலருக்கு லாபம். அந்த வகையில் சுமார் 1,300 கோடி ரூபாய் வருடம்தோறும், போகவேண்டியவர்களுக்குப் போய்விடுகிறது'' என்கிறார் மிக அழுத்தமாக.
மத்திய அரசு ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் துரைப்பாண்டியன், ""தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் 20 நிறுவனங்கள் சுமார் 14 ஆயிரம் கோடி இழப்பை சந்தித் திருப்பதை சுட்டிகாட்டியிருக்கிறது தணிக்கைத் துறை. 
இதில், மின்சார வாரியமும் போக்குவரத்து கழகங்களும் பெரும் பங்கு வகிப்பவை. 
மின் பற்றாக்குறை அதிகரித்து வருவதை அறிந்திருந்தும் நீண்டகால கொள்முதல் திட்டங்களை வகுக்க அரசு தவறியது, மின் கொள்முதல் டெண்டர்களை முறையாக மதிப்பீடு செய்யாதது, 8 போக்கு வரத்து கழகங்களின் மோசமான நிர்வாகத் தால் 1,26.5.96 கோடி இழப்பு, மத்திய- மாநில அரசுகளுடன் இணைந்து நெடுஞ்சாலைத் துறை செயல் படாததில் 299 கோடியிலான திட்டங்கள் தாமதம், தமிழக அரசின் கிரா பைட் ஆலைகள், சர்க் கரை ஆலைகள், சிப்காட் வளா கங்களால் சுற்றுச்சூழல்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என பல விசயங்களை விவரித்திருக்கிறது சி.ஏ.ஜி.Abiraminathan GS

திராவிடக் கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி கிடையாது - பழ. நெடு
# ஆத்தீ... என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிப்புட்டீக. காலங்காலமா உங்க ஆதரவுல தான திராவிட கட்சியெல்லாம் பொழப்பு நடத்திட்டு இருக்குது. இனி என்ன பண்ண போறாங்களோ ?
==============================================================================================