சனி, 10 அக்டோபர், 2015

உயரத்தைக் குறைக்கிறது-ஆஸ்த்துமா மருந்து

ஆஸ்த்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா மருந்து கொடுக்கப்பட்டால், அந்த மருந்துஅவர்கள் வளர்ந்து பெரியவராகும்போது அவர்களின் உடல் உயரத்தைக் குறைக்கிறது என பூர்வாங்க ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
பின்லாந்தை சேர்ந்த 12,000குழந்தைகள் மத்தியில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஐசிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்ட பிள்ளைகள், பிற்காலத்தில் உயரம் குன்றியிருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் இந்த மருந்துகள் குழந்தைகளின் உயரத்தை ஒடுக்கும் என்று குறிப்புணர்த்தியிருந்தது.
பள்ளி செல்லும் வயதுக்கும் குறைவான சிறார்களுக்கு ஸ்டீராய்ட்டு மருந்துகள் மிகுந்த எச்சரிக்கையுடனே வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வுவலியுறுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், ஆஸ்த்துமாவை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் ஆஸ்த்துமா நோயின் அறிகுறிகளையும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்குவகிப்பதாகவும், சிறு குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் மட்டுப்படுத்துகிறது என்றும் ஆஸ்த்துமா யு கே என்ற ஆஸ்த்துமாவுக்கான அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள சிறுவர்களில் 11 பேரில் ஒருவர் ஆஸ்த்துமாவால் அவதியுறுவதாகவும்; இதுவே சிறுவர்கள் மத்தியில்உள்ள பொதுவான நாள்பட்ட சுகவீனமாக உள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் நிவாரணிகளாக உள்நுகரப்படும் மருந்துகளில் ஆஸ்த்துமாவிற்கு பயன்படுத்தப்படும் ஐசிஎஸ் என்ற மருந்தே வலுவானது என்றாலும் அந்த மருந்து சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது.இந்தக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஆஸ்த்துமாவிற்காக இந்த மருந்தை பாவிக்கும் பிள்ளைகளின் வளர்ச்சியில் குறைபாடு உள்ளதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் வருடாவருடம் அவர்களது உயரத்தையும் எடையையும் கண்காணித்து வர வேண்டும் எனமருத்துவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
தற்போதைய ஆய்வை மேற்கொண்ட மருத்துவக் குழுவுக்குத் தலைமை வகித்த கிழக்கு பின்லாந்துப் பல்கலைக் கழகத்தின்ஆராய்ச்சியாளர் மருத்துவர்அன்டி சாரி தமது ஆய்வு குறித்துக் கூறுகையில்,
குழந்தையின் எதிர்பார்க்கப்படும் உயரத்தைகணிக்க தமது குழு கடைப்பிடித்த வழிமுறைகளை விளக்கினார்.குழந்தைகளின் பெற்றோரின் உயரம் மற்றும் குழந்தைகளின் எடை மற்றும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆஸ்த்துமா மருந்து ஆகியவை குறித்த தரவுகளை வைத்து ஒரு குழந்தை வளரவேண்டிய உயரம் என்ன என்பதை தாங்கள் கணக்கிட்டதாக அவர் தெரிவித்தார்.ஒரு குழந்தை ஆஸ்த்துமாவிற்கான இந்த மருந்தை நிரந்தரமாக பாவித்து வந்தால் அது அதன் உயரத்தை பாதிப்பதாக தாங்கள் கண்டறிந்திருப்பதாக கூறும் அண்டி சாரி, சராசரியாக ஒரு குழந்தை பிற்காலத்தில் அது முழு வளர்ச்சி அடையும்போது நியாயமாக அடைந்திருக்க வேண்டிய உயரத்தில் 3 சென்டி மீட்டர் குறைவானவளர்ச்சியையே அடைந்திருக்கும் என தெரிவித்தார்.
எனவே இந்த சிறிய வயதில்இந்த குழந்தைகளுக்கு இத்தகைய ஸ்டீராய்ட் மருந்துகள் உண்மையிலேயே மிகவும் அவசியமானவைதானா என்பதை அந்த குழந்தைகளை கையாளும் மருத்துவர்கள் ஒன்றிற்கு இரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மூச்சுத்திணறலால் பாதிக்கப்படும் சிறு பிராயத்துப் பிள்ளைகளை கையாள்வதும் குணப்படுத்துவதும் மிகவும் கடினமான செயல் என்று பிரிட்டிஷ் லங் பவுண்டேஷனின் மருத்துவ ஆலோசகர் ஜோனதன் கிரிக் தெரிவித்தார்.பள்ளிக்கு செல்வதற்கு முந்தைய வயதுடைய குழந்தைகள் ஆஸ்த்துமாவால் பாதிக்கப்படும்போது யாருக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் அவசியம் தேவை, யாருக்கு அது தேவையில்லை என்பதை கணிப்பது மிகவும் கடினம் என்கிறார் அவர். 
ஏனென்றால், அனேகமான பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்கள் ஆஸ்துமாவிலிருந்து முற்றாக குணமாகிவிடுகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.ஆஸ்த்துமாவால் ஏற்படும் ஆபத்தான் மூச்சுத்திணறலை குறைப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்த கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் மிகவும் அவசியமானவை என்று வலியுறுத்தும் ஆஸ்த்துமா யுகே யின் ஆராய்ச்சி மற்றும் கொள்கைகளுக்கான இயக்குநர் மருத்துவர் சமந்தாவோல்கர்; 
இதனால் ஏற்படக்கூடிய உயரக்குறைவு என்பது ஒப்பீட்டளவில் மிகச் சிறிய பாதிப்பு மட்டுமே என்கிறார்.எனவே குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் இந்த மருந்தை குழந்தைகளுக்கு கொடுப்பதை பெற்றோர் நிறுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
===================================================================================
தலை வலியா ?
பொதுவாக அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று தான் தலைவலி.
தலைவலிக்கு அடிப்படை கோபம், டென்ஷன் மற்றும் மனச்சோர்வுதான்.
தேவையில்லாமல் கோப்படும் போது ரத்த அழுத்தம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கிவிடும்.
அவ்வாறான நேரங்களில் ரிலாக்ஸ் செய்வது அவசியம்.
* கட்டில் அல்லது தரையில் தளர்வாக படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவேண்டும். கண்களை இறுக்காமல் லேசாக மூடிக்கொள்ள வேண்டும்.
மனம் சமாதானம் அடைந்த பின்னர் யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை பெறலாம், இதன் மூலம் இதயமும் இதமாகும்.
* கல்லுப்பையும் சிறிது கிராம்பையும் எடுத்துக் கொண்டு, சிறிது பால் சேர்த்து அரைத்து உட்கொள்ள வேண்டும்.
இக்கலவையிலுள்ள உப்பு, தலையிலுள்ள ஈரத்தினை உறிஞ்சிக் கொள்வதால் தலைவலியின் தீவிரம் குறையும்.
* ஒரு டம்ளரில் வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கலந்து குடித்தால் உடனடியாகத் தலைவலியின் தீவிரம் குறைவதை உணரலாம்.
* தலைவலிக்கு மிகவும் சிறப்பான ஒரு மருத்துவம் யூகலிப்டஸ் தைலம் கொண்டு, மசாஜ் செய்தல் ஆகும். இதனைச் செய்தால் உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரமுடியும்.


================================================================================
இன்று,
அக்டோபர்-19.
  • உலக மனநல தினம்
  • சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்
  • நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)
  • இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)
  • தமிழறிஞர் மு.வரதராசன் நினைவு தினம்(1974)


வைகை புயல் வடிவேலு பிறந்தநாள்
வடிவேலு 25

* வீட்டில் பெரிய அளவில் கலைஞர், ஜெயலலிதா விடம் அவார்டு வாங்கிய படங்களை மாட்டி வைத்திருக்கிறார் வடிவேலு. 'இவங்க ரெண்டு பேருமே பெரிய தலைவர்கள். அதோட எனக்கு ரசிகர்கள்!' என்பார் பெருமிதமாக!

* தன் முதல் கார் டாடா சியாராவை இன்னும் பத்திரமாகப் பாதுகாக்கிறார். முதலில் வாங்கிய சொத்து என்பதால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த காரை அவரே துடைத்துச் சுத்தப்படுத்துவார். 'நான் என் கார்கிட்டே பேசுவேன் அண்ணே, சொன்னா நம்புங்க... சொந்தக்காரங்க நிறையப் பேரு இருந்தாலும், நான் வாங்கின முதல் சொந்த கார் இதுதான்ல!' என்பார்!

* வடிவேலுவுக்குத் தான் நடித்த படங்களில் பிடித்த படம் 'தேவர் மகன்'. 'கமல், சிவாஜி சார் காம்பினேஷன். காமெடியனான என்னை கேரக்டர் ரோல்ல நடிக்க வெச்சு, மக்களைக் கண் கலங்கவெச்ச படம்ல அது!' கமல் சாரை மறக்கவே முடியாது!என்று சிலிர்ப்பார்!
* 'ஆயுளோடு வாழணும்னா ஆயில் கூடாது' என்பது வடிவேலுவின் பஞ்ச் டயலாக். எண்ணெயில் பொறித்த உணவென்றால், கைப்புள்ள எகிறி ஓடுவார்!

* மகன் வடிவேலுவை எந்தக் காலத்திலும் பெயர் சொல்லி அழைப்பதில்லை அம்மா சரோஜினி. வாயாரப் பாசம் கொப்பளிக்க 'என்னப் பெத்த ராசா' எனத்தான் கூப்பிடுவார்!

* வடிவேலுவுக்கு 'டாம் அண்ட் ஜெர்ரி' காமெடிதான் ரொம்ப இஷ்டம். எக்கச்சக்க டி.வி.டி-க்களை தினம் தினம் பார்த்துச் சிரித்து மகிழ்வார்!

* விடுமுறை கிடைத்தால், குடும்பத்தை அள்ளிப்போட்டுக்கொண்டு குற்றாலத்துக்குப் போய்விடுவார். வெளிநாடு என்றால் பிடித்த ஊர் லண்டன்தான். 'தேம்ஸ் நதியில மிதக்கிறதுல மனுஷப் பயபுள்ளைக்கு ஒரு சொகம்ணே... அது சொர்க்கம்ணே!' என்பார்!

* ஆபீஸில் இருக்கும்போது, ரசிகர்கள் போன் செய்தால் தானே எடுத்து, 'ஆமாண்ணே! வடிவேலுதான் என்ன அதுக்கு... நல்லாப் பேசுங்க, கேட்டுக்கிறேன்' எனச் சொல்லிப் பரவசப்படுத்துவார்!

* வடிவேலு இதுவரைக்கும் 450 படங்களில் நடித்திருக்கிறார்!

* காலையில் நாலு இட்லி, தொட்டுக்கொள்ள மீன் குழம்பு. மதியம் கொஞ்சம் சாப்பாடு, இரண்டு சப்பாத்தி. இரவு இட்லி, புதினா சட்னி, மல்லிப் பொடி. விருந்துக்கு வடிவேலுவை அழைத்தால் ரொம்ப மெனக்கெட வேண்டாம் என்றுதான் இந்தத் தகவல்!

* முதன் முதலில் கேமரா முன் பேசிய வசனம்... 'அண்ணே, நீ ரொம்ப எவனையும் மதிக்கிறதில்ல' என்பதுதான். 'ராசாவின் மனசிலே'தான் படம்!

* ரசிகர்கள் ஆட்டோகிராஃப் கேட்டால் கையெழுத்துப் போட்டு, பக்கத்திலேயே வேல் படம் வரைந்து தருவார்!

* என்ன பேசினாலும், யாரிடம் பேசினாலும் அடிக்கடி 'ஆஹா' எனும் வார்த்தை வந்து விழுந்துகொண்டே இருக்கும். இன்னொரு வார்த்தை 'அதாவதுன்னா'. 'ஏன் கேட்கிறீங்க, சுட்டிங்கில் டயலாக் பேசும்போதும் இந்த வார்த்தைகள் முன்னாடி வந்து நிக்கும்' எனச் சிரிப்பார்!

* நகைச்சுவையில் நம்ம குருக்கள் என்று மூன்று பேரைச் சொல்வார். அவர்கள் சந்திரபாபு, தங்கவேலு, சுருளிராஜன்.
* டி.எம்.சௌந்தர்ராஜனின் வெறிபிடித்த ரசிகர் வடிவேலு. அவர் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களை அப்படியே ராகம் போட்டுப் பாடுவார்!

* ஜோதிடத்தில் பலத்த நம்பிக்கை உள்ளவர் வடிவேலு. வியாழக்கிழமை என்றால், மஞ்சள் சட்டை. வெள்ளிக்கிழமை அரக்கு கலர் சட்டை, சனிக்கிழமை கறுப்புதான். மற்ற தினங்களில்தான் வடிவேலுவை வெவ்வேறு வண்ணச் சட்டைகளில் பார்க்க முடியும்!

* மதுரை வீட்டுக்குப் போனால், கண்மாய் மீன்களைப் பிடித்து வரச் செய்வார். வெயிட், எந்த வகை மீன் என்று பார்த்துதான், அதைச் சமையலறைக்கு அனுப்பு வார். போன பிறவியில் கொக்காகப் பிறந்திருப்பாரோ என்னவோ?!
* அம்மா சரோஜினி, ஐயனார், மதுரை மீனாட்சி, பழநி முருகன் இவர்கள்தான் வடிவேலு தினம் வணங்கும் தெய்வங்கள். ஆபீஸ், வீடு எல்லாவற்றையும் இந்த நான்கு படங்கள்தான் அலங்கரிக்கும்!

* ஒரு தடவை சூட்டிங்கில் கால் பிசகிக்கொள்ள, ஓய்வில் இருந்தார் வடிவேலு. குணமாவது தாமதமாக, காலை விந்தி விந்தி நடிப்பதையே ஸ்டைல் ஆக்கி நடித்த படம்தான் 'வின்னர்'. இன்று வரை 'வின்னர்' காமெடிதான் அவருக்கு ஆல்டைம் பெஸ்ட்!

* ரயில் பயணம்தான் ரொம்பவும் பிடிக்கும். ஆனால், ரசிகர்களின் அன்பைத் தாங்க முடியாமல் விமானப் பயணம் அதிகம் இப்போது. 'கூவிக்கிட்டு போற ரயில் சத்தம்தான் பிடிக்குது. ஃப்ளைட்டில் கட்டிப்போட்டு உட்கார வேண்டியிருக்கு' என்பார் அந்த அனுபவத்தை!

* சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு இருந்துவிட்டால் இளம் தலைமுறை ஹீரோக்கள் அவரைத் தாங்கிக் கொண்டாடுவார்கள். சிரிப்பு வெடிகளைக் கொளுத்திப் போட்டு அதிரவைப்பார்.

* விதவிதமான வாட்ச் அணிந்துகொள்வதில் ஆர்வம் உடையவர் வடிவேலு. கையில் காசு இல்லாத சிறுவயது முதலே எங்கிருந்தாவது பிய்த்துப் பீறாய்ந்து வாட்ச் கட்டிக்கொள்வார்!

* ஃபேஷன் உடைகளை அதிகமாகப் பயன் படுத்துவார் வடிவேலு. யாருமே எதிர்பார்க்காத, விதவிதமான டிசைன் துணிகளைக் கடைகளில் இருந்து வரவழைத்துத் தேர்ந்தெடுப்பார்!

* வடிவேலுவின் மனசுக்குப் பிடித்த நடிகைசரோஜா தேவிதான். 'ஆதவன்' படப்பிடிப்பில் அவரிடமே 'நில்லடி நில்லடி சீமாட்டி' பாடலை முழுதாகப் பாடிக் காட்டி நடித்து சபாஷ் வாங்கியதைச் சந்தோஷத்தோடு குறிப்பிடுவார்!

* கமல்ஹாசன் தான் ஓரமாக வந்து போன தனக்கு தேவர் மகன் என்னையும் ஒரு நடிகனாக மக்கள் கவனிக்க வைத்தவர் என்று .
- நா.கதிர்வேலன்,
================================================================================
மோர் அருந்துவதால் ......,
வெயில் கால பானமான மோரில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
மோரில் உள்ள சத்துக்கள்:
மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.
மருத்துவ பயன்கள்:
காரசாராமான உணவுகளை உட்கொண்ட பின்னர் ஒரு டம்ளர் மோர் குடித்தால் வயிறு எரிச்சல் அடங்கும்.
வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு கொழுப்பையும் கரைக்கும்.
மோருடன் இஞ்சி, மிளகு மற்றும் சீரகம் போன்றவற்றை சேர்த்து குடித்து வந்தால், செரிமானம் நன்கு நடைபெறும். அதிலும் உங்கள் வயிறு உப்புசமாக, ஒருவித அசௌகரியமாக உணரும் போது, இதைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சிஅடைவதைத் தடுக்கலாம்.
மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல்மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.
மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.
மோரில் நிறைந்துள்ள நன்மைகளில் முக்கியமானது அசிடிட்டி பிரச்சனைக்கு நிவாரணம் தரும் என்பது தான். மோர் வயிற்றைகுளிர்ச்சி அடையச் செய்து, அமில படலத்தால் ஏற்படும் வயிற்று எரிச்சலை குறைத்து உடனடி நிவாரணத்தைத் தரும்.
சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்:
1. சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாகஉ‌ள்ளது. முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வந்தால் நல்ல பலன் தெ‌ரியு‌ம்.
2. சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த துணியால் க‌ட்டு‌ப் போட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.
3. தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
குறிப்புகள்:
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசி வரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும் போது மோர் சாப்பிடக்கூடாது. மோர்சாதமும் கூடாது.
butter_milk_001