ஞாயிறு, 15 நவம்பர், 2015

10 வகை வலிகளும், தீர்வுகளும்!


உடலில் ஏற்படும் சிலவகை வலிகளுக்கு சரியான முறையில் இயற்கை மருந்துகளை எடுத்துக்கொள்ளாத காரணத்தால் அதன் பலனைமுழுமையாக அடைய முடிவதில்லை.

என்னதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் இயற்கை முறையில் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் உடலுக்கு நன்மை பயக்கும்.
தற்போது உடலில் ஏற்படும் வலிகளுக்கு சில இயற்கை நிவாரணிகள்,
தேன்: தொண்டை வலி
தேன் தொண்டையில் ஏற்படும் வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். எனவே தொண்டையில் புண் அல்லது அதனால் ஏற்படும் வலியை போக்குவதற்கு, தேனை தினமும் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
காபி: ஒற்றை தலைவலி
காப்ஃபைனை தினமும் அளவுக்கு அதிகமாக பருகினால் தான், உடலுக்கு ஆபத்தே தவிர, அளவாக பருகினால், ஒற்றை தலைவலியில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
பூண்டு எண்ணெய்: காது வலி
காதுகளில் வலி ஏற்பட்டால், அப்போது பூண்டுகளை தட்டி, கடுகு எண்ணெயில் போட்டு வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனை காதுகளில் ஊற்றினால், உடனே வலி நீங்கிவிடும்.
கிராம்பு: பல் வலி
சொத்தை காரணமாக பற்களில் வலி ஏற்பட்டால், அப்போது கிராம்புகளை, அந்த பற்களின் மேல் வைத்து கடித்துக் கொண்டால், பல் வலி போய்விடும்.
வெதுவெதுப்பான நீர் குளியல்: தசைப் பிடிப்பு
உடலில் ஆங்காங்கு தசைப் பிடிப்புகள் ஏற்பட்டால், அப்போது வெதுவெதுப்பான நீரில் குளியல் எடுத்தால், பிடிப்புகள் நீங்குவதோடு, உடலுக்கு மசாஜ் செய்தது போன்றும் இருக்கும்.
தயிர்: மாதவிடாய் பிடிப்புகள்
தயிரில் கால்சியம் மற்றும் மக்னீசியம் இருப்பதால், அது மாதவிடாயின் போது ஏற்படும் தசைப்பிடிப்புக்களை சரிசெய்யும். அதிலும் அந்த நேரத்தில் தினமும் 2 கப் தயிர் சாப்பிட வேண்டும்.
உப்பு: பாத வலி
நிறைய மக்களுக்கு இரவில் படுக்கும் போது பாத வலியால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக கர்ப்பிணிகள் பாத வீக்கத்தால் பாதிக்கப்படுவார்கள். அப்போது வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து, அந்த நீரில் கால்களை சிறிது நேரம் ஊற வைத்தால், வலி நீங்குவதோடு, வீக்கமும் குறையும்.
திராட்சை: முதுகு வலி
முதுகு வலியின் போது திராட்சை சாப்பிட்டால், உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருந்து, முதுகு வலி வராமல் தடுக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே நாள்பட்ட முதுகு வலியைக் கொண்டவர்கள், தினமும் திராட்சை சாப்பிட்டால், முதுகு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
மஞ்சள்: வீக்கத்தை குறைக்கும்
மஞ்சளில் எண்ணற்ற ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், அது பல்வேறு வலிகள் மற்றும் வீக்கங்களை சரிசெய்யும். அதிலும் வீக்கம் அதிகம் உள்ள இடத்தில், மஞ்சளை தண்ணீரில் கலந்து, அந்த பேஸ்ட்டை தடவினால், வீக்கமானது தணியும்.
செர்ரிப் பழங்கள்: மூட்டு வலி
மூட்டு வலி உள்ளவர்கள் செர்ரிப் பழத்தை அதிகம் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசையனின்கள் மூட்டு வலியை குணமாக்கும்.
========================================================================================
பிரான்ஸ் தாக்குதல்:பின்னணி.
பிரான்சில் நடைபெற்ற கோரச் சம்பவத்திற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புப் பொறுப்புக் கோரியுள்ளது. இஸ்லாமிய அரசை அமைப்பதாகக் கூறும் ஐ.எஸ்.ஐ.எஸ் இன் ஆழ அகலகங்களை மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். இதன் பின்னணியில் பிரஞ்சு அப்பாவி மக்களின் படுகொலைகளின் பின்னணி ஆராயப்பட வேண்டும்.
ஐ.எஸ்.ஐ.ஏஸ்
1. அல் கையிதா என்ற இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பிலிருந்து உதித்ததே ஐ.எஸ்.ஐ.எஸ்.
2. அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி, சவூதி அரேபியா, கட்டார், இஸ்ரேல் போன்ற நாடுகள் ஐ.எஸ்.ஐ.ஏஸ் மற்றும் அல் கையிதா போன்ற அமைப்புக்களை உருவாக்கி வளர்த்தன.
3. அல் கையிதாவின் இணை அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கு தொடர்ச்சியாக ஆயுதங்களையும் வளங்களையும் பிரான்ஸ் உட்பட அமெரிக்காவின் நேச அணிகள் வழங்கி வருகின்றன.
5. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பித்த சிரிய யுத்தத்தை ஆரம்பிப்பதற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கான ஆட்சேர்ப்பிலும் பயிற்சியிலும் நேட்டோ நாடுகளும் துருக்கியும் ஈடுபட்டன.
6. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களைப் பயிற்றுவித்து ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்க நேட்டோ நாடுகளின் உதவியுடன் துருக்கி செய்ற்பட்டதாக இஸ்ரேல் உளவுத்துறை தனது ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
7. பிரான்ஸ், அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் உளவுத் துறையினர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் செயற்படுகின்றனர்.
8. 2013 ஆம் ஆண்டிலிருந்து பிரான்ஸ் ஐ.எஸ்.ஐ.எஸ் இற்கு ஆயுத உதவிகளை வழங்க ஆரம்பித்ததாகவும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அது மிதமானதாகவே இருப்பதாகவும் பிரஞ்சுப் பத்திரிகையான லூ மொந் தெரிவித்திருந்தது.
9. தாக்குதலின் பின்னர் பிரான்ஸ் போலிஸ் அரசு ஒன்றை நிறுவுவதற்கான திட்டங்களை முன்வைத்துள்ளது.
10. அகதிகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் குறிப்பாக அப்பாவி இஸ்லாமியர்களுக்கும் எதிரான அரச பயங்கரவாத் தாக்குதல்களைத் துரிதப்படுத்த பிரான்ஸ் அதிகாரவர்க்கம் அனுமதியைப் பெற்றுள்ளது.
சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக இணையதளத்தில் வெளியான பல்வேறு விதமான கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
==================================================================================================
இந்தியாவின் 

நல்ல மன்னர்களும் ,

கெட்ட மன்னர்களும்..

                                                                                                                                                                                            -ஆகார் படேல்
இரண்டு வாரங்களுக்கு முன்பு பெங்களூரு வந்த பாகிஸ்தான் ஹை கமிஷனர் அப்துல் பாசித்தை சந்தித்தேன். அப்போது, தென் இந்தியாவில் உங்கள் பயண திட்டம் என்ன என்று கேட்டேன். 
அதற்கு, பெங்களூருவில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை பார்வையிடுவேன். 
அடுத்து மைசூர் சென்று ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள திப்பு சுல்தான் மாளிகையை சுற்றிப் பார்ப்பேன் என்று கூறினார்.
திப்புவை இந்தியர்கள் எல்லோரும் பெருமையாக நினைப்பார்கள் என்று பாசித் நினைத்தது தவறு என்பது சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. கர்நாடகாவில் திப்புவின் பிறந்த நாள் விழாவை அரசு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் சில விஷயங்களை போல இந்து - முஸ்லிம் உறவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.
நம்மை பொறுத்த வரையில் மன்னர்களை நல்லவர்கள் (அசோகர், அக்பர்..) கெட்டவர் களாக (அவுரங்கசீப், திப்பு சுல்தான்) பார்க்கும் நிலை உள்ளது. 
இதுதான் நம் நாட்டின், சமூகத்தின் பண்பாக உள்ளது. வரலாற்றை உண்மை, காரண காரியத்தின் அடிப்படையில் அணுகாமல், உணர்ச்சி வயப்பட்டு அணுகும் மனநிலை. பெரும்பாலும் படிக்காதர்கள், அரைகுறையாக படித்தவர்களின் மனப்பாங்கு.
இந்துக்களுக்கு எதிராக ஜிகாத் நடத்தியவர் திப்பு என்பதை மட்டும் நம்புகின்றனர். ஆனால், திப்புவை பற்றி புத்தகங்களில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை படித்துப் பார்ப்பது இல்லை. இதில் என்ன பிரச்சினை என்றால், திப்புவை பற்றி இந்தியாவில் சில புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன.
நம் நாட்டில் நாட்குறிப்புகளை வைத்திருப்பதோ அல்லது நினைவுகளை பதிவு செய்து வைப்பதோ வழக்கம் இல்லை. கடந்த கால வரலாற்றை ஆவணப் படுத்துவதிலும் நமக்கு ஆர்வம் இல்லை. எனவே, திப்புவை பற்றி இந்தியர்கள் யாரும் புத்தகம் எழுதுவதில்லை. 
அதனால்,19-ம் நூற்றாண்டில் லூயிஸ் போரிங் எழுதிய, ‘ஹைதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் தெற்கில் ஆட்சி அதிகாரத்துக்காக முசல்மான் களின் போராட்டம்’ என்ற புத்தகத்தை ஒருவர் கட்டாயம் படிக்க வேண்டும். அதில் இரண்டு மூன்று விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
முதலாவது, திப்புவை வெற்றி கொள்வது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்துள்ளது. மராட்டியர்களை விட திப்பு மிகப் பெரிய போர் வீரராக இருந்துள்ளார். இதை வரலாற் றாசிரியர் சர் ஜாதுநாத் சர்க்காரின் புத்தகங்களை படிக்கும் போது தெரிந்து கொள்ள முடியும்.
பானிபட் போரின்போது மராட்டியர்களை ஆப்கன் மன்னர் அகமது அப்தாலி வென்று ஆட்சியைப் பிடித்தார். கடந்த 1761-ம் ஆண்டில் இருந்து திப்பு கொல்லப்பட்ட 1799-ம் ஆண்டு வரையிலான 40 ஆண்டு காலம் அவரை எதிர்க்க பிரிட்டிஷார் படாத பாடுபட்டுள்ளனர். 
இந்த கால கட்டத்தில் பஞ்சாபை தவிர மற்ற எல்லா இடங்களையும் வென்றுவிட்டனர். சில ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் கூட மன்னர் ரஞ்சித் சிங் மரணத்துக்குப் பின் பிரிட்டிஷார் வசம் சென்றது.
ஆனால், திப்புவிடம் இருந்து மட்டும் உண்மையான பலமான எதிர்ப்பை பிரிட்டிஷார் சந்தித்தனர். மிகவும் திறமைவாய்ந்த படைத் தளபதியாக விளங்கியவர் திப்பு. அரசியல் சூட்சுமம் தெரிந்தவர். அதனால், பிரிட்டிஷாரை விரட்ட பிரான்ஸுடன் நட்புறவு வைத்தவர். 
மேலும், போரில் நவீனத்தை புகுத்தியவர்.
இரண்டாவது, போரில் ஏவுகணையை பயன்படுத்திய முதல் படை திப்புவுடையதுதான் என்பது எல்லோருக்கும் தெரியும். ராக்கெட்டுகளில் பிளேடுகளை பொருத்தி எதிரி படைகள் மீது திப்புவின் வீரர்கள் வீசியுள்ளனர். எனினும், ஆர்தர் வெல்லெஸ்லி திப்புவை வெற்றி கொள்கிறார்.
திப்புவின் ராணுவ பலம், வீரம், தேசப் பற்று, அவருடைய வளர்ச்சி பணிகள் போன்ற எல்லாவற்றையும் எளிதாக கவனிக்க தவறிவிடுகின்றனர். ஆனால், உண்மையோ பொய்யோ இந்துக்களை மதம் மாற்றினார் அல்லது இந்துக்களை படுகொலை செய்தார் என்ற ஒன்றை மட்டும் நம்புகின்றனர்.
கலிங்க படைகளை அசோகர் வெற்றி கொண்ட போது, எந்த வெளிநாட்டினரையும் முஸ்லிம் களையும் அவர் படுகொலை செய்யவில்லை. ஆனால், ஆயிரக்கணக்கான ஒரியா மொழி பேசிய இந்துக்களை கொலை செய்தார் என்று நமக்கு கதைகள் மூலம் சொல்லப்பட்டுள்ளது. 
இந்துக்களை படுகொலை செய்தாலும் சிறந்த சக்கரவர்த்தி என்று அசோகரை கூறுகிறோம். அவருடைய சிங்க சின்னம், இந்திய அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருக்கிறது. இந்திய தேசிய கொடியில் நடுவில் உள்ள சக்கரம், ‘அசோக சக்கரம்’ என்றழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்த சக்கரமும் அசோகருடைய சின்னம்தான்.
இரண்டு பேரும் ஒரே குற்றம் புரிந்தனர் என்று கூறும் போது, நாம் ஏன் அசோகரை மதிக்கிறோம்; திப்புவை மதிக்கவில்லை? நமக்கு விடை தெரியும். இந்தியாவில் இந்துக்கள் செய்வதை முஸ்லிம் மன்னன் செய்துவிட்டு தப்ப முடியாது.
பாட்டியாலாவை ஆட்சி செய்தவர் மகாராஜா அலா சிங். இவர் எந்த ராணுவ சாதனை யையும் படைக்கவில்லை. ஆனால், செல்வாக்கு மிக்கவ ராக உயர்ந்தார். 
ஏனெனில், மராட்டியர்களுக்கும் ஆப்கானிஸ் தான் மன்னர் அகமது ஷா அப்தாலிக்கும் நடந்த போரில், அப்தாலிக்கு உதவியாக இருந்தார் அலா சிங். அதனால் அலா சிங்குக்கு ஆப்கன் அரசு பரிசுகள் வழங்கியது. இந்த நிலையில், அலா சிங்கையோ அவரது மூதாதையர்களையோ யாராவது தேச துரோகிகளாக பார்க்கின்றனரா? 
தவிர பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங்கை தொடர்ந்து பாட்டியாலா மன்னர்கள் எதிர்த்து வந்தனர். 
ஆனால், அவர்களை யாரும் தேசத்துக்கு எதிரானவர்களாக கருதவில்லை. முஸ்லிம் மன்னர் என்றால் மட்டும் சில வரைமுறைகள் வகுக்கப்படுகின்றன.
முஸ்லிம் மன்னர்களை பற்றி படிக்கவோ, எழுதவோ நாம் விரும்புவதில்லை. ஆனால், அவர்களை பற்றிய மோசமான அல்லது தவறான விஷயங்களை மட்டும் எப்போதும் நம்புகிறோம். நமக்கு அரைகுறையாக தெரிந்த விஷயங்களை வைத்து கொண்டு அவர்களை எப்போதும் எதிர்ப்பதற்கு தயாராக இருக்கிறோம்.
                                                                                                                                 நன்றி:தமிழ் இந்து,                                                                                                                 

==================================================================================================================================================