'செல்பி' -மனநோய் அபாயம்?
இன்றைய தலைமுறையினர் 'பேஸ்புக்', 'டிவிட்டர்' போன்ற இணையதள மோகத்தில் சிக்கி பொழுதை போக்கிவருகின்றனர்.
போதாக் குறைக்கு,இந்த 'செல்பி' மோகம் வேறு.
உயரமான கட்டடத்தின் மீதேறி, பார்ப்போர் நடுங்கும் வகையில், தன்னுயிரை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மறுகையில், 'செல்பி' எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிடுவது;
ஓடும் ரயில் அருகில் நின்று, தங்களை தாங்களே படமெடுத்து பதிவேற்றம் செய்வது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. அதையும் பார்த்து பலரும் 'லைக்' போடுகின்றனர்.
ஓடும் ரயில் அருகில் நின்று, தங்களை தாங்களே படமெடுத்து பதிவேற்றம் செய்வது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளன. அதையும் பார்த்து பலரும் 'லைக்' போடுகின்றனர்.
தான் இட்ட பதிவுகளுக்கு எதிர்பார்த்த அளவில் 'லைக்' விழாவிடில், 'லைப்'பே முடிந்து போனதாக கருதி, அன்றைய பொழுதை கவலையில் கழிப்போரும் உள்ளனர்.கம்ப்யூட்டர், மொபைல்போன்களுக்கு அடிமையாகி திரியும் நபர்களுக்கு, இணைய அடிமையாதல் நோய் (Internet Addiction Syndrome) என்ற மனநோய் பாதிப்பு ஏற்படுவதாக அதிர்ச்சி தருகின்றனர் மனநல டாக்டர்கள்.
இன்று நாம் அனைவரும் அறிந்த வார்த்தை 'செல்பி'. துாங்கி எழுவது முதல், இரவு துாங்கும் வரை, நாம் எடுக்கும் 'செல்பி' புகைப்படங்களை, 'பேஸ்புக்', 'ட்விட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் பகிர்வது, தினசரி பல் துலக்குவது போலாகி விட்டது.
இதில், பல முகபாவங்களுடன் படம் எடுத்து கொள்வது ஆரம்பநிலையாக கூறப்படுகிறது.அடுத்தடுத்து உடல் அங்கம் தெரியும்படி எடுப்பது, உடலை துன்பப்படுத்தி கோரமாக எடுப்பது, உள்ளாடையோடு 'ஆபாச போஸ்' கொடுத்து எடுப்பது என, பட்டியல் நீள்கிறது.
இதற்கு அடுத்த கட்டமாக, 'ரிவன்ஜ் பார்ன்' எனப்படும், ஆபாச பழிவாங்கல் படலமும் வளர துவங்கியுள்ளது.
இதற்கு அடுத்த கட்டமாக, 'ரிவன்ஜ் பார்ன்' எனப்படும், ஆபாச பழிவாங்கல் படலமும் வளர துவங்கியுள்ளது.
காதலர்கள் தங்கள் அந்தரங்க தருணத்தில் எடுத்த புகைப்படங்களை, பின்னர் பிரச்னை ஏற்படும்போது பரப்பி,பழிவாங்குவது தான் 'ரிவன்ஜ் பார்ன்'.
இது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.'செல்பி' படங்களை பொழுதுபோக்குக்காக எடுத்தால் தவறில்லை.
அந்த படங்களுக்கு, 'லைக்', 'கமென்ட்ஸ்' வர வேண்டும் என்ற நோக்கில் செய்தால், அந்த பழக்கத்தை உடனே கைவிட வேண்டும்;
இல்லையென்றால் காலப்போக்கில் மனநோயாளியாக மாறுவது உறுதி என்கின்றனர், மனநல டாக்டர்கள்.
'திருமணமான பெண்கள், 24 மணி நேரமும், மொபைல் போனும் கையுமாக இருப்பதால், குடும்பச் சிதைவு ஏற்படுகிறது.
பெண்கள் அதிகளவில், 'வாட்ஸ்ஆப்', 'செல்பி', இணையதளங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர். இந்த மனநோய்க்கும் தனியாக சிகிச்சை மையங்கள் துவக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,''.
'செல்பி' எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதை சிலர், 'முழுநேர பணி'யாக செய்கின்றனர். இதுவும் புதுவகையான மனநோய்தான். தினமும் குறைந்தது மூன்று முறை, 'செல்பி' படம் எடுப்பது, அதை சமூக வலைதளங்களில் போடுவது ஆரம்ப மனநிலை.
கணக்கின்றி நினைத்த போதெல்லாம் படம் எடுத்து, அதை சமூக வலைதளங்களில் தவறாமல் பதிவேற்றம் செய்வது இரண்டாம் நிலை. எப்போதும் எதை பார்த்தாலும், 'செல்பி' படம் எடுத்து உடனுக்குடன், சமூக வலைதளங்களில் போடும் செயல் மூன்றாம் நிலை. இதுதான் 'செல்பி' மோகம் முற்றி, மனநோயாளியாக மாறும் நிலை.'
செல்பி' மோகத்துக்கு அடிமையானவர்கள் உணர்ச்சிவசப்படுவர்களாக இருப்பார்கள். தன்னை காட்சி பொருள் போன்று பார்க்கும் நடவடிக்கைகள், அதிக பிரச்னைகளை உண்டாக்கும். 'செல்பி' மோகம் முற்றி, மனநோயாளியாக மாற்றும் நிலை உருவாகும்.
மற்றவர்கள் தன்னை பெருமையாக பேச வேண்டும் என, தம்பட்டம் அடிப்பவர்களின் வெளிப்பாடு தான் 'செல்பி'. இதற்கு உடல் தோற்ற விருப்ப ஆளுமை கோளாறு (Narcissistic Personality Disorder) என பெயர்.
இணைய தள மோகத்தால் நேரிட்ட மனநோய் பாதிப்பிலிருந்து மீட்க, அமெரிக்கா போன்ற நாடுகளில் மறுவாழ்வு மையம் துவக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு, 'ரீ--ஸ்டார்ட்' என்று பெயர். கம்ப்யூட்டரால் 'ஹேங்க்' ஆகி போனவர்களுக்கு அளிக்கப்படும், 'ரீ--ஸ்டார்ட்' சிகிச்சை, 45 நாட்கள் அளிக்கப்படுகிறது.
இன்டர்நெட், வீடியோ, கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் இருந்து, 45 நாட்கள் பிரித்து வைத்து, யோகா, உடற்பயிற்சி, மசாஜ், நடைப்பயிற்சி, கலந்தாய்வு என, 'ரீசார்ஜ்' சிகிச்சை பல கட்டங்களாக அளிக்கப்படுவதாக, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
'செல்பி' படங்களால் அந்தரங்கத்துக்கு ஆபத்து.
தினமும், ஆபாச எஸ்.எம்.எஸ்., புகைப்படங்கள் குறித்த புகார்கள் காவல்துறைக்கு வருகின்றன.
இந்த செல்பி மோகத்தால் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
'செல்பி' எடுப்பதாக சொல்லி, அந்தரங்கங்களை வெளியிட்டு அவர்களே சிக்கலில் வலிய சிக்கி கொள்கின்றனர்.
அவரவர் பாதுகாப்பை அவர்கள்தான், உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
==============================================================================================
ஆணுக்கும்,பெண்ணுக்கும்
தனித்தனி மூளை அமைப்பு!
ஆண், பெண்களின் மூளை அமைப்பு, பிணைக்கப்பட்டிருக்கும் விதத்தில் மாறுபடுகின்றன என தற்போதைய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆண்களுக்கு மேலிருந்து கீழாகவும்,பெண்களுக்கு வலமிருந்து இடமாகவும் பிணைப்புகள் உள்ளன. இதனால் மூளை வேலை செய்யும் விதம் மாறுபடுகிறது.
மூளை குறைபாடுகள், நரம்பியல் கோளாறுகள் ஏற்படும்அபாயமும், ஆணுக்குப் பெண் வேறுபடுகிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சிமாணவர்களால், 949 வளர் இளம் பருவ மற்றும் இளம்வயதினரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
8 முதல் 22 வயதுள்ள 521 பெண்களும், 428 ஆண்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். பெண்களின் மூளை அமைப்பு காரணமாக இயல்பாகவே அவர்களுக்கு கூர்மையான அறிவாற்றல், கவனம், ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். இதனால் நுணுக்கமான பணிகளை பொறுமையாக செய்யும் ஆற்றல் பெண்களுக்கு உண்டு. ஆண்களின் மூளை அமைப்பின்படி, உணர்திறன், கையாளும் விதம், இயந்திர அறிவு ஆகியவை இயல்பாகவே அமைகின்றன.
இதன் காரணமாக ஆண்கள் கடினமான வேலைகளையும், புதிய விளையாட்டையும் எளிதில் கற்றுக் கொள்வர்.
ஆட்டிஸம் போன்ற மூளை, நரம்பியல் கோளாறுகள்ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
பாலின மூளை அமைப்பு வித்தியாசம் காரணமாக,ஆண், பெண்களுக்கு ஏற்படும் நரம்பியல் கோளாறுகளுக்கு, அளிக்கப்படும் சிகிச்சையும்மாற்றப்பட வேண்டும் என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
=========================================================================================இன்று,
நவம்பர்-11.
- போலந்து விடுதலை தினம்(1918)
- மாலத்தீவு குடியரசு தினம்(1968)
- வாஷிங்டன், அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்(1930)
- =========================================================================================