நேதாஜியின் தங்கப்பல்.




இன்றைய இந்தியாவில் தலையாய பிரச்னையே நேதாஜி மரணமாகத்தான் உள்ளது போல் காட்டப்படுகிறது.

நேதாஜிக்கு ஆதரவளித்த ஜப்பான் முதல்,இந்தியாவை அடிமையாக்கிய பிரிட்டன் வரை விமான விபத்தி அவர் இறந்தார் என்று சொல்லியும் உயிரோடிருக்கிறார் என்று பலர் வதந்திகளை பரப்பி வந்தனர்.
தற்போது இறுதிகட்ட விமான பயணத்தில் உடன் வந்த நேதாஜியின் தேசியப்படைஉறுப்பினரம்,நண்பருமானவர் 'தன்  கண் முன்னே உடலில் நெருப்புடன் நேதாஜி உயிருக்குப்போராடி இரு நாட்களில் இறந்ததை கூரிய பின்னரும்  சாம்பலுக்கு மரபணு சோதனை கேட்கிறார்கள்.
இவர்கள் வாதப்படியே ஆசிரமத்திலோ ,வேறு எங்கோ நேதாஜி தலைமறைவாக இருக்க காரணம் என்ன?அவர் விடுதலைக்காகத்தான் ஆயுதமேந்தி போராடினார்.அந்த விடுதலை இந்தியாவுக்கு கிடைத்தப் பின்னரும் அவர் தனது தளி மறைவு வாழ்வை எதற்காக தொடர்வார்?
அப்படியே இருந்தாலும் கூட இன்று அவருக்கு வயது 119 ஆகியிருக்கும்.இந்த வயதில் இன்னமும் உயிரோடிருக்க அவர் என்ன சித்தரா?இருந்தாலும் எப்படியும் சுய நினைவுகள் பெரும்பாலும் மறதியால் அடிக்கப்பட்டு போயிருக்குமே?தான் யார் என்பதே நினைவில் இருந்து அழிந்திருக்கும்.
கண் முன்னே நடந்ததை கூறியவர் நேதாஜியின் மீது அளப்பரிய பற்று கொண்ட தொண்டர்.அவர் பொய் கூற வெண்டிய அவசியம் எதுவும் இல்லை.மேலும் அவரும் உயிருடன் இல்லை.சிலகாலங்களில் இறந்து விட்டார்.
தற்போது நேதாஜி மரணம்,சாம்பல் பற்றிய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க  இங்கிலாந்து இணையதளத்தில் யோசனை ஒன்று கூறப்பட்டுள்ளது.

  ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் சாம்பலில், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் தங்கப்பல் உள்ளது என்றும், அதில் மரபணு சோதனை மேற்கொண்டால், நேதாஜி மரணம் குறித்த சர்ச்சை முடிவுக்கு வரும் என்றும் இங்கிலாந்து இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி இங்கிலாந்தில் ‘போஸ்பைல்ஸ்.இன்போ’ எனும் இணையதளத்தை உருவாக்கி நேதாஜியின் இறுதி நாட்கள் பற்றிய பல ஆவணங்களை வெளியிட்டு வரும் ஆஷிஷ் ரே என்பவர் தற்போது நேதாஜியின் தங்கப்பல் பற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.  

நேதாஜியின் இறுதிக்காலம் வரை மிகவும் நெருக்கமாக உடனிருந்து கடந்த 1978ம் ஆண்டு மறைந்த ராணுவ அதிகாரி ஹபிபுர் ரஹ்மான் இறப்பதற்கு முன், தனது மகன் நயிமுர் ரஹ்மானிடம் தெரிவித்த பல தகவல்கள் ரேயின் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 

நயிமுரை கடந்த 1990ல் சந்தித்து இத்தகவல்களை திரட்டியதாக  ரே கூறியுள்ளார். இதுபற்றி இணையதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:கடந்த 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 18ல் தைவானில் விமான விபத்து நிகழ்ந்தபோது, ஹபிபுர் ரஹ்மான் உடனிருந்துள்ளார். 
நேதாஜியின் உடல் தகன மேடையில் எரியூட்டுவதற்கு முன், அங்கிருந்த ஊழியர்கள் நேதாஜியின் தங்கப் பல்லை கழற்றி ரஹ்மானிடம் ஒப்படைத்துள்ளனர். 
அதன் பின்னர், நேதாஜியின் சாம்பல் அடங்கிய கலயம் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்த சாம்பலில், நேதாஜியின் தங்கப் பல்லை சேர்த்துவைத்து தைவானில் இருந்து ஜப்பான் சென்றுள்ளார். 

டோக்கியோ நகரில் உள்ள ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜி சாம்பல் அடங்கிய கலயத்தில் தங்கப்பல் உள்ளது. 
இந்தத் தகவலை ரஹ்மான் வெளியிட்டபோது இந்தியாவில் யாரும் நம்பத் தயாராக இல்லை என்று தனது தந்தை கூறியதாக நயிமுர் கூறியுள்ளார். 
இதனால், ரென்கோஜி கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் அஸ்தியில் உள்ள தங்கப்பல் மீது மரபணு சோதனை நடத்தினால், உண்மை கண்டறிய முடியும்.
இவ்வாறு இணையதளத்தில் ரே கூறியுள்ளார்.
============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?