நம் கணினியும் வின்டொஸும்.

தற்போது கணினி நம் வாழ்வில் முக்கிய இடத்தை பிடித்து விட்டது. 
மூன்றாவது கையாகிப்போன அதன் அசாத்திய செயல் திறன், நம் அனைத்து பணிகளிலும் பங்கு கொள்கிறது.
நம் பணிகளை சிறப்பாக செய்ய  கிடைக்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் என அடித்தட்டு மக்களுக்கும், விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்  தோழனாய் உள்ளது. இருந்தாலும், இந்த நண்பன்  ஓர் அச்சுறுத்தும் நண்பனாகத்தான் இருக்கிறது. 
விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்கும் பல சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள், எந்த நேரத்தில் என்ன விளைவினைத் தருமோ என்ற தயக்கத்துடன் தான் நாம் கணினிகளை இயக்க வேண்டியுள்ளது.. 
, தன் விண்டோஸ் ஆர்.டி. டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களின் இயக்க முறைமையில், மைக்ரோசாப்ட் வேறு எந்த பிற நிறுவனங்களின் சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இயக்க அனுமதிக்கவில்லை. இதனைப் பயன்படுத்துவோர் எந்த மால்வேர் கலந்த புரோகிராம்களைக் கம்ப்யூட்டரில் பதிக்க முடியாது. டெக்ஸ்க்டாப்பில், குப்பைகளாக, பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களின் ஐகான்களை அடுக்க முடியாது. 
அதனாலேயே, விண்டோஸ் ஆர்.டி. இயக்கம், வேகமாகவும், பாதுகாப்பாகவும் இயங்குவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. ஏன் இந்த நிலை என்று சற்று விரிவாகப் பார்க்கலாம்.
மால்வேர் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் பயனாளர்களில் கை தேர்ந்தவர்களை அணுகாது. அதற்கான பாதுகாப்பு அரணை அவர்கள் தங்கள் விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அமைத்துவிடுகின்றனர். ஆனால் அவ்வளவு கணினியறிவு இல்லாமல்  கம்ப்யூட்டர் பயன்படுத்தும் சாதாரணர்கள்  இந்த அபாயத்திலிருந்து தப்பிக்கமுடியாது . 
இன்றைய நிலையில், ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட துணைப்பெயர்களுடனான பைல்கள் அபாய விளைவினை ஏற்படுத்தும் குறியீடுகளைக் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. 
மேக் கம்ப்யூட்டர், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் பிறவற்றிலும், மால்வேர் புரோகிராம்கள் நுழையக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன என்று நாம் எழுதலாம், பேசலாம். ஆனால், இன்றைய நிலையில், இந்த சாதனங்களில், மால்வேர் புரோகிராம்கள் நுழைந்து பாதக விளைவினை ஏற்படுத்துகின்றன.
தன் மாறா நிலையில், மேக் கம்ப்யூட்டர்கள், தான் அறிந்து ஏற்றுக் கொண்ட நிறுவனங்களின் பைல்களை இயக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. 
அதேபோல, ஆண்ட்ராய்ட் பதியப்பட்டு இயங்கும் சாதனங்களிலும், அதன் பாதுகாப்பு வளையத்தை உடைக்கும் பயனாளர்கள் கொண்டுள்ள சாதனங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் இயங்குகின்றன. கூகுள், இதற்கென, ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனங்களுக்கென, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கியுள்ளது. 
இவை பழைய ஆண்ட்ராய்ட் 2.3 பதிப்பு முதல் கிடைக்கின்றன. 
, விண்டோஸ் சிஸ்டங்களிலேயே, மால்வேர் புரோகிராம்கள் எளிதாக இயங்க வாய்ப்புள்ளது .

விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், சில தேவையான  புரோகிராம்களை, கம்ப்யூட்டரில் பதிந்தே விற்பனை செய்கின்றன. 
இவற்றை Bloatware என அழைக்கின்றனர். 
ஒரு மேக் கம்ப்யூட்டர், குரோம் புக், ஐ பேட், ஆண்ட்ராய்ட் டேப்ளட் பி.சி., லினக்ஸ் லேப்டாப், ஏன் விண்டோஸ் ஆர்.டி. இயங்கும் சர்பேஸ் டேப்ளட் பிசியைக் கூட இயக்கத் தொடங்குங்கள். 
 விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர் எனில், தொடக்கமே ஒரு குழப்பமாய் அமைந்திருக்கும். கம்ப்யூட்டர் தயாரித்து வழங்கிய நிறுவனம் பதித்த பல தேவையற்ற புரோகிராம்களை நீங்கள் தேவையில்லை என நீக்க வேண்டியதிருக்கும். உங்களுக்கு தேவையான  புரோகிராம்களைத் தேடி பதிய வேண்டியதிருக்கும். 

 விண்டோஸ் இயக்கத்தில் செயல்படும் புரோகிராம்களில், உங்கள் தேவைக்கான புரோகிராம்களை, பிரவுசரின் தேடல் டூல் மூலம் தேடிப் பெறலாம்.
 உங்கள் தேவைக்கான புரோகிராம்கள், குறைந்தது பத்துக்கும் மேலாக இருக்கும். 
ஆனால், எது பாதுகாப்பானது என்று  சரியாக உணர முடியாது. பாதுகாப்பான புரோகிராம் என உறுதியாக முடிவு செய்து, அதனை டவுண்லோட் செய்திடச் சென்றாலும், அருகே காணப்படும் விளம்பரங்களில் காட்டப்படும் புரோகிராம்களை ஏன் பயன்படுத்தக் கூடாது என நம் மனம் எண்ணும். பல வேளைகளில் இந்தத் தூண்டுதலுக்கு அடிமையாகி, நாம் வம்பை விலைக்கு வாங்குகிறோம். ஆனால், மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களில், அந்த சிஸ்டம் ஏற்கனவே சோதனை செய்து, பாதுகாப்பானது எனச் சான்று பெற்ற புரோகிராம்களை மட்டும்  பதிந்து இயக்குங்கள் .

 சரியான, பாதுகாப்பான, சான்றளிக்கப்பட்ட புரோகிராம் என ஒன்றைத் தேர்ந்தெடுத்து, விண்டோஸ் கம்ப்யூட்டரில் பதிந்தாலும், அதனைப் பதிகையில், பல தொல்லை தரும் அப்ளிகேஷன்களும், நாம் அறியாமலேயே பதியப்படும். விளம்பரங்கள் (adware), பிரவுசருக்கான தேடல் டூல் பார்கள், நாம் ஏற்கனவே பயன்படுத்தும் சர்ச் இஞ்சினை மாற்றும் டூல்கள், பிரவுசரின் தலைப்புப் பக்கத்தை மாற்றும் டூல்கள் என இவை பலவகைப்படும். 
கம்ப்யூட்டரைத் தொடர்ந்து நாம் பயன்படுத்துகையில், இவை நம் கவனத்திற்கு வந்து, நமக்குத் தீராத தொல்லையையும், கவலையையும் கொடுக்கும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில புரோகிராம்களை நிறுவுகையில் கூட இது போல நடக்கிறது. எடுத்துக் காட்டாக, விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கான ஸ்கைப் புரோகிராமினை நிறுவுகையில், அது நம் பிரவுசர் செட்டிங்ஸ் அமைப்பை மாற்றும். 
பிங் தேடுதளத்தைப் பயன்படுத்தும் வகையில் அமைத்திடும். 
ஹோம் பேஜினை மாற்றி அமைக்கும். மைக்ரோசாப்ட் நிறுவனமே, இந்த சில்மிஷ வேலைகளில் ஈடுபடுகையில், மற்ற புரோகிராம்களைத் தரும் பிற நிறுவனங்கள், இது போன்ற மாற்றங்களை செய்வதை தடுக்க இயவில்லை.
 ஆப்பிள் நிறுவன ஐ.ஓ.எஸ். சிஸ்டம், ஆண்ட்ராய்ட், விண்டோஸ் ஆர்.டி. ஆகியவற்றில், சாப்ட்வேர் அப்டேட் என்பது, ஒரே ஒரு இடத்திலிருந்து இயக்கப்படும் செயலாக இருக்கும். 
மேக் ஓ.எஸ்.எக்ஸ் சிஸ்டத்திற்கு, மேக் ஆப் ஸ்டோரிலிருந்து (Mac App Store) மட்டுமே அப்டேட் செய்திட முடியும். 
ஆனால், விண்டோஸ் சிஸ்டத்தில் அப்படி அல்ல. 
ஒவ்வொரு புரோகிராமும், தன் விருப்பப்படியான, அப்டேட் வழியினைத் தருகிறது. ப்ளாஷ் மற்றும் அடோப் ரீடர் (Flash and Adobe Reader) போன்ற புரோகிராம்களை அவ்வப்போது அப்டேட் செய்திடவில்லை எனில், ஹேக்கர்கள் நுழையும் சாத்தியக் கூறுகள் அதிகம் .

 பிரவுசர்களுக்கான ப்ளக் இன் புரோகிராம்கள் என  புரோகிராம்கள், இணையத்தில் ஒவ்வொரு பிரவுசருக்கும் கிடைக்கின்றன. 
இவற்றை ஆபத்தில்லாதவை என  நம்ப இயலவில்லை. பெரும்பாலான ப்ளக் இன் புரோகிராம்கள், ஹேக்கர்களுக்கு எளிய வழிகளை அமைத்துக் கொடுப்பவையாகவே உள்ளன. 
மேலும், இவற்றைப் பயன்படுத்துவோர், எதனையும் மேம்படுத்துவதே இல்லை. இதனால், மால்வேர் புரோகிராம்களை அனுப்புவோர், பழைய ப்ளக் இன் புரோகிராம்கள, நிதானமாக ஆய்வு செய்து, தங்களுக்கான வழிகளை அமைத்து, அவற்றின் மூலம், கம்ப்யூட்டர்களை அடைந்து தீய வழிகளில் செயல் பட வாய்பாகிறது.

 ஆனால், ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்ட், குரோம் ஓ.எஸ்., விண்டோஸ் ஆர்.டி. மற்றும் விண்டோஸ் போன் சிஸ்டம் புரோகிராம்கள், வழக்கமான பிரவுசர் ப்ளக் இன் புரோகிராம்களை அனுமதிப்பதே இல்லை. ப்ளாஷ் போன்ற புரோகிராம்கள் தேவை எனில், தங்கள் சிஸ்டத்துடனேயே வழங்குகின்றன. 

 விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் லேப்டாப் கம்ப்யூட்டர்களின் பேட்டரியின் வாழ்நாள், மேக், ஐ.ஓ.எஸ். இயக்கும் சாதனங்கள், ஆண்ட்ராய்ட் டேப்ளட் பிசிக்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவாகவே உள்ளது. 
மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 2 கம்ப்யூட்டர்களில் இயங்கும் பேட்டரியின் வாழ்நாள் கூட குறைவாகவே உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஏறத்தாழ இதே வடிவமைப்பில் உருவான, ஆப்பிள் நிறுவனத்தின், 11 அங்குல மேக் புக் ஏர் (Mac Book Air) கம்ப்யூட்டரில் இயங்கும் பேட்டரி, இரு மடங்கு காலம் அதிகம் இயங்குவதாக அறியப்பட்டுள்ளது. 
ஆனால், மைக்ரோசாப்ட், ஹார்ட்வேர் தயாரிப்பாளர்களே இதற்குக் காரணம் எனக் கூறி வருகிறது.

விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமாகும் போது, அதற்கு மாறுவதே இல்லை. 
 காரணம், இருக்கும் சிஸ்டமே போதும் என்ற மனநிலை. மற்றும்  கட்டணம் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் . 
சில புதிய பதிப்புகள் வருகையில், ஹார்ட்வேர் சாதனங்களையும் மாற்ற வேண்டி இருப்பதால், அந்த செலவினைத் தவிர்க்கும் வகையில் புதிய விண்டோஸ் சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்ள பலர் யோசிக்கின்றனர்.
 இதுதான் கணினி முடக்குபவர்களுக்கு [ ஹேக்கர்களுக்கு] இடம் அளிக்கிறது. 
அவர்கள், ஆற அமர, பழைய விண்டோஸ் சிஸ்டத்தில் உள்ள பழுதான இடங்களைக் கண்டறிந்து, மால்வேர் புரோகிராம்களை அனுப்புகின்றனர். 
ஆனால்  ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ஓ.எஸ்.எக்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு, புதிய மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் அனைத்தும் இலவசமாகவே அப்டேட் செய்ய்யப்படுகிறது. இதனால் மேற்சொல்லப்பட்ட இன்னல்களும்,பயன்களும் இல்லாமல் போகிறது.விண்டோஸ் தரப்பில் பணத்துக்கே அணித்தையும் கொடுக்க நினைப்பதால் தவறுகள் கணினியை பாதிக்கிறது.மைக்ரோ சாப்ட் நிறுவனம் மற்ற நிறுவனங்களைப்போல் செயல்பட்டால் நல்லது நமக்கு.ஆனால் அவர்கல் அப்படி செயல்பட்டால் பில்கேட்ஸ் உலக பணமுதலைகள் வரிசையில் முன்னிலை வகிக்க முடியுமா என்பது கேள்விக்குறி.
இதுவரை சொல்லப்பட்ட கணினி  நிகழ்வுகளும் தகவல்களும் ஆசையுடன் தங்கள் கணினியை பயன் படுத்துபவர்களுக்கு உதவும் என்று எண்ணுகிறோம்.
=======================================================================================
இன்று,
பிப்ரவரி-16.
1568 – நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1796 – ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
1937 – வொலஸ் கரோத்தேர்ஸ் நைலானுக்கான காப்புரிமம் பெற்றார்.
1944 – இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் தாதாசாகெப் பால்கே மரணமடைந்தார்.

1947 – 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.

1959 – ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.

1961 – எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.
2007: 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
தாதாசாகெப் பால்கே 
இன்று  உலகம் முழுக்க மக்களின் கலாச்சாரத்தில்  சினிமா ஆதிக்கம் இருக்கிறது. இந்த அளவுக்கு மக்களின் வாழ்கையில் ஒன்றிவிட்ட சினிமாவை இந்தியாவிற்கு எடுத்து வந்த பெருமை தாதா சாகேப் பால்கே அவர்களையே சேரும்.
இந்தியாவின் நாசிக்கில் ஏப்ரல் 30, 1870 ல் பிறந்தவர் தாதா சாகேப் பால்கே. 
தாதாசாகெப் பால்கே
இவர் 1910 முதல் 1940 வரையில் திரைப்படங்கள் பலவற்றை தயாரித்தார். 
பெரும்பாலும் தான் தயாரித்த படங்களை தானே இயக்கினார் பால்கே.
இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். இதனால் இவர் இந்திய சினிமாவின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். 
இவர் ஆரம்பத்தில் திரையிட்ட படங்கள் சப்தமில்லாத, ஊமைப் படங்களாகவும், கருப்பு வெள்ளைப் படங்களாகவுமே இருந்தன.
தொடக்கத்தில் படங்களை தயாரித்து மட்டும் வெளியிட்ட இவர், ஒரு கட்டத்தில் தீவிர முயற்சியால் ஒரு முழு படத்திற்கான கதையை எழுதி இயக்கினார். இந்த படத்திற்கு தன் குடும்பத்தில் இருந்த 18 நபர்களை நடிக்க வைத்தார்.
இது தான் இந்தியாவில் இந்தியரால் உருவான முதல் சினிமாவாகக் கருதப்படுகிறது.
1944ம் ஆண்டு இதே நாளன்று தாதாசாகேப் பால்கே மறைந்தார். 
இந்திய சினிமாவின் தந்தையான  தாதாசாகெப் பால்கே வுக்கு பெருமை சேர்க்கும் விதமாக தாதாசாகெப் பால்கே விருது  இந்திய திரை உலகில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.
========================================================================================

கண்களில் இத்தனை நிறங்களா?
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.