'ஹாட்’ யோகா ,வியாபாரி.

‘ஹாட்’ யோகா குரு விக்ரம் சவுத்ரி என்ற 69 வயதாகும்  போலி குரு இந்திய வேதக் கலாச்சாரத்தை உலக அறியச் செய்யும் பொருட்டு பாலியல் வழக்கில் அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்.

விக்ரம் சவுத்ரி
2013-ல் இவரது யோகா மையத்தில் பயிற்சிக்கு வந்த ஆறு மாணவிகள் தாங்கள் சவுத்ரியால் தொடர்ச்சியான பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
இது தொடர்பான வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய குழு ‘ஹாட்’ யோகா குரு குற்றவாளி என தீர்ப்பளித்து 6.25 கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.
இனி விக்ரம் சவுத்ரியின் பின்னணியைப் பார்ப்போம். 
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அரை டவுசரான அரவிந்த நீலகண்டன் போன்றவர்கள் கூட பெந்தகொஸ்தே கிறித்தவர்கள் ஜெபிப்பதே வேதக் கலாச்சாரம் வழங்கிய யோக முறைகளில் ஒன்றுதான் என்று பீராய்ந்திருக்கிற பொழுது சவுத்ரி ஹாட் யோகாவைக் கண்டுபிடித்திருப்பது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல.
இப்படி செய்து தான் 1971-ல் அமெரிக்காவில் செட்டிலாகிற விக்ரம் சவுத்ரி உலகம் முழுவதும் பிரபலமான யோகா மாஸ்டர் ஆனார்! 
சுவாமியின் யோகக் கலைக்கு மடோனா, பில் கிளிண்டன், டேவிட் பெக்காம், ஆண்டி முர்ரே, லூக் பெர்ரி போன்ற விதேசிகள் கூட்டமே அடிமை. 
இந்தியாவில் வாழும் தேசத் துரோகிகள் தான் யோகாவின் அருமை தெரியாமல் இருந்துவிட்டார்கள்!
சாமியார் சவுத்ரி தன்னுடைய யோகா பிரண்டை வைத்து மாதம் ஒன்றிற்கு 7 மில்லியன் பவுண்டுகளை கல்லா கட்டியிருக்கிறார். அமெரிக்காவிலும் மனநெருக்கடி, மனஅழுத்தம், மெண்டல் ஹீலிங், கேன்சரை குணமாக்குவது என்று வேத பாரம்பரியம் அவ்வளவு கைகொடுத்திருக்கிறது.
இந்தியாவில் பிரம்ம முஹுர்தத்த்தில் அதாவது தேவர்கள் கலவி கொள்ளும் அதிகாலை நேரத்தில் சுத்தமான ஓசோன் கிடைக்கிறது, சுவாசப் பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்று என்னதான் கரடியாய் கத்தினாலும் அமெரிக்க அளவிற்கு கல்லா கட்ட முடிவதில்லை.
பீளமேடு கஞ்சா கேசு, மனைவியை கொன்ற வழக்கு நில ஆக்ரமிப்பு என எத்துணை வழக்குகளையும் சந்திக்கும் ஜக்கி போன்ற சாமியர்களே வாழும் கலை என்று பெயர் வைத்து, அதிர்வுக்கு இன்னர் இன்ஜினிரியங், காஸ்மிக் அலைகள் என்று சொன்னாலும் ஹெலிகாப்டர் வாங்கும் அளவிற்குத்தான் காணிக்கை சேர்க்க முடிகிறது. 
ஆனால் பாருங்கள் சவுத்ரியின் பங்களாவில் மட்டும் 40 ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் இருக்கின்றனவாம்! மாதம் ஒன்றிற்கு 67.4 கோடி ரூபாய் என்றால் சும்மாவா? 
பார்ப்பன ரிசிகளும் முனிகளும் கடல் கடந்து போவது தோசம் என்று தெரிந்தாலும் அமெரிக்காவை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரிகிறதா?
சரி விசயத்திற்கு வருவோம். மன்மதக் கலையின்றி ஆயகலையும் கற்றுத் தேரமுடியாது என்று சங்கராச்சாரி, நித்தியானந்தா, அயோத்தி சாமியார்கள் என்று வரிசைக்கிரமமாக எடுத்துக்காட்டுகள் இருக்கும் பொழுது சாமியார் சவுத்ரி மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா?
குற்றப்பத்திரிக்கையில் சாமியார் ஆண் உறுப்பைப் பிடித்துக்கொண்டு நான் பெங்கால் டைகர் என்று கூறுகிறார்; பாலிவுட் படம் பார்த்துக்கொண்டே மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார் என சாமியாரின் லீலைகளை பல பெண்கள் அடுக்கியிருக்கிறார்கள்.
நித்யானந்தா காமக்கலையில் ஆராய்ச்சி செய்கிறேன் என்று அருளாசி வழங்கியதைப் போன்று கனடா மாணவியிடம் சாமியார் 
“நான் செத்துக் கொண்டிருக்கிறேன்; என்னக் காப்பாற்றுவதற்கு உனது உதவி எனக்கு தேவைப்படுகிறது; செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லையென்றால் நான் இறந்துவிடுவேன்; நீ எனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாய்; நீ எனக்கு உதவிக் கொண்டிருக்கிறாய்” 
என வசனம் பேசி மாணவியைச் சீரழித்திருக்கிறார். 
அந்தக் கனடா மாணவியிடமிருந்து ஒன்பது வார யோகா வகுப்புகளுக்கு அவரது கல்லூரி படிப்புக்காக வைத்திருந்த $10,000-ஐ  (சுமார் ரூ 6.5 லட்சம்) கட்டணமாக பறித்திருக்கிறார் சாமியார்.
விக்ரம் சவுத்ரி
அடுக்கடுக்கான பாலியல் குற்றங்களுக்கு சவுத்ரி பதில் சொல்லிய விதம் இப்படி இருக்கிறது “என்னிடம் யோகா கற்ற பெண்கள் அப்பாவிகள். அவர்கைள யாரோ தூண்டி விடுகின்றனர். 
நான் யாரையும் பலாத்காரம் செய்யவில்லை. 
அவர்களாக விரும்பி கேட்டுக் கொண்டதால், உறவு வைத்துக் கொண்டேன்” 
என்று சொல்லி தண்டனையை பணமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.
சவுத்ரி சாமியின் இந்த நுணுக்கமான பதில் மனுசாஸ்திரத்தில் சட்டமாகவே இருக்கிறது. 
இந்துப் பார்ப்பனியத்தில் உயர் சாதி ஆண் தாழ்த்தப்பட்ட பெண்ணை வன்புணர்விற்கு உள்ளாக்கினாலும் அதற்கு தண்டனை கிடையாது. டாலரில் கட்டிய கப்பத்தை தீக்சையாக கொடுத்துவிடலாம். 
''நான் எந்தப் பெண்ணையும் கற்பழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. என்னை பெண்கள் ஏராளமானோர் காதலிக்கின்றனர்; என்னுடன் இருக்க விரும்புகின்றனர். நான் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதற்காக பலர் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளனர். என் மீது கூறப்படும் புகார்கள் பொய்யானவை,
என் அழகில் மயங்கி, ஏராளமான பெண்கள், என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். என்னை பெண்கள் விரும்புகின்றனர். அவர்களுடன் பழகக் கூட எனக்கு நேரம் இல்லாமல், 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். நான் கிடைக்கவில்லை என்பதற்காக பல பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 
நிலைமை இவ்வாறு இருக்க, நான் போய், இந்தப் பெண்களை வலுக்கட்டாயமாக கற்பழித்தேன் என கூறப்படுவதில் உண்மையில்லை. அந்தப் பெண்களின் வழக்கறிஞர்கள் கூறுவதைக் கேட்டு, நிறைய பணம் கறந்து விடலாம் என்பதற்காக, அந்தப் பெண்கள் இவ்வாறு புகார் அளித்துள்ளனர். 
என் மீது வழக்கு தொடரப்பட்டதுமே நான் உடைந்து போய் விட்டேன். என் மனைவி, என்னை இனி ஏறெடுத்துப் பார்க்க மாட்டாள். எங்களுக்கு திருமணமாகி, 39 ஆண்டுகள் ஆகிறது. 
இதுவரை எந்த புகாரிலும் சிக்கியதில்லை. வேண்டுமென்றே என் மீது கூறப்படும் புகார்கள், பொய் என்பது உறுதியாகும், ''என்கிறார் இந்த காம யோகா குரு .

 இவர் வித்தியாசமான ஆபாச முறையில்  யோகக்கலையை . 104 டிகிரி சென்டிகிரேடுக்கு வெப்பம் ஏற்றப்பட்ட அறைகளில், நூற்றுக்கணக்கான பெண்கள், தங்கள் உடல்களை வில்லாக வளைத்து யோகப் பயிற்சி செய்வர். 
அவர்கள் முன், வெறும் ஜட்டியுடன் நிற்கும் விக்ரம், மைக்கில் பேசியபடி, ஒவ்வொருவரிடமும் சென்று, தொட்டு, தழுவி, கட்டிப்பிடித்து, பயிற்சிகளை சொல்லிக் கொடுப்பார். 
சில நேரங்களில், அந்தப் பெண்கள் மீது ஏறி நின்று கொள்வது, படுத்துக் கொள்வது என, வித்தியாசமான முறையில், யோகாசனத்தை சொல்லிக் கொடுப்பார். 
இவரின் பயிற்சி மையத்திற்கு, 99 சதவீதம் பெண்கள் தான் வருகின்றனர். 
69 வயதான போதிலும் கட்டுமஸ்தான உடலமைப்பை கொண்டவர். 
பயிற்சியின் போது, 'டைட்'டான ஜட்டி மட்டும் அணியும் இவர், வெளியே வரும்போது, கல்லூரி மாணவன் போல, 'டிப்டாப்'பாக உடையணிவார்.

 இந்த மனுஸ்மிருதியால் தான் இந்தியாவில் பார்ப்பனியம் கெட்டிபடுத்தப்பட்டு இன்றளவிற்கும் தேவநாதன், சங்கராச்சாரி என்று பல ஞானிகளைப் பார்த்துவிட்டோம்.

 அதனால் தான் ஜெகத்குரு மீது எழுத்தாளர் கொடுத்த பாலியல் வழக்கு புஸ்வானமாகி பாதிக்கப்பட்ட பெண்ணே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று புகாரை முடித்தார்கள். இந்த லோகத்துக்கே பார்ப்பனர்கள் குரு என்கிற பொழுது வேதக் கலாச்சாரம் கனடா பெண்ணுக்கு பொருந்தாதா என்ன?
ஞானியர்களின் நடவடிக்கை இந்த இலட்சணத்தில் இருக்கிற பொழுது, இந்திய நாட்டின் உழைக்கும் மக்களை பார்ப்பனியம் எப்படி நடத்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
மிகச் சமீபத்தில் திணமணியின் வைத்தியநாத ஐயர் சபரி மலைக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதற்கு கீழ்க்காணும் விளக்கம் ஒன்றைத் தந்திருந்தார்.
“ஐயப்ப பக்தர்கள் 48 நாள்கள் விரதம் இருந்து சபரிமைலக்கு வருகிறார்கள். அனைவரும் முற்றிலும் புலனடக்கிய முனிவர்கள் அல்லர். லட்சக்கணக்கான ஆண்கள் கூடுமிடத்தில், அதிலும் கானகத்தில் பெண்களும் வருவது என்பது இயல்பாகேவ அசம்பாவிதத்திற்கு வழிகோலக்கூடும். அதைத் தடுப்பேதா, கண்காணிப்பேதா பாதுகாப்புத் தருவேதா இயலாத ஒன்று. “தவறு நேர்ந்தால்’ என்கிற கேள்விக்கு யார் பதிலளிப்பது?” என்று கேட்டிருக்கிறார்.
ஐயப்ப பக்தர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் அவர்கள் புலனடக்கிய முனிவர்கள் அல்லர் என்று வைத்தி அடித்துக் கூறுகிறார். 
சனாதன இந்துமதமே உழைக்கும் மக்களை திருடனாகவும் கற்பழிப்பவனாகவும் பார்ப்பதற்கு இது ஒரு தெளிவான சான்று.
ஆனால் இங்கு வைத்தி கூறுகிற புலனடக்கிய முனிவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாங்கள் காட்டிவிட்டோம். 
உழைக்கும் மக்களின் பக்தியையும் ஒழுக்கத்தையும் கொச்சைப்படுத்துகிற பார்ப்பனியத்தை என்ன செய்யலாம்  என்பதை நீங்கள் சொல்லுங்கள்.
                                                                                                                                              -இளங்கோ,
.நன்றி:வினவு.
=========================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?