பொதுத்துறை பங்கு விற்பனையால்

யாருக்கு லாபம்?

பட்ஜெட் பற்றாக்குறையை சரிக் கட்ட பொதுத்துறைகளின் பங்குகளை மேலும் விற்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதாம்.
 பங்குகளில் முதலீடு செய்யும் மக்களின் சேமிப்பிற்கு, கூடுதல் வருவாய் தேடிக் கொடுக்க இந்த பங்குகள் விற்பனை உதவிடும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறக்கூடும்.
அதிக ஈவுகளை கொடுக்கும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்கும், உலக அளவில் இயங்கும் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்ய வருவதால் பொருளாதார சக்கரம் சுழல அவசியமான டாலர் (தாள் மற்றும் டிஜிட்டல் வடிவில்) வரத்து அதிகமாகும் என்று சந்தை பொருளாதார நிபுணர்கள் வரவேற்கலாம். 

அரசு வரவு-செலவில் பற்றாக்குறையை உலக வங்கியின் கட்டளை வரையறைக்குள் வைக்க இது உதவுவதால் அந்நிய செலாவணி கடன் கிடைப்பது எளிதாகி விட்டது என்று வீட்டிற்குள் டாய்லெட் கட்டக் கூட டாலரில் கடன் வாங்க துடிக்கும் பெரு முதலாளிகள் மற்றும் அரசியலை சொத்துக் குவிக்கும் தொழிலாக மாற்றி வரும் அரசியல் பெரும் புள்ளிகளின் வாரிசுகள் மகிழ்ச்சி அடையலாம்.

ஆனால் இந்திய பொதுத்துறை என்பது தொழில் நுட்ப அறிவைக் கொண்டு தொழில் துவங்க துடிக்கும் படித்த இளைய சமூகத்திற்கும் மற்றும் உண்மையான முதலீடுகளைக் கொண்டு தொழில் செய்வோருக்கும் விவசாயத்திற்கும், இரும்பு முதல் எரிசக்தி வரை மற்றும் நிதி முதல் போக்குவரத்து சேவை வரை உதவி வருகிற துறைகளாக இருக்கின்றன.

அதாவது பொதுத்துறையை அரசு நிர்வகித்தாலும், அதன் லாபத்தை கார்ப்பரேட் நிதி நிறுவனங்கள் மூலம் பெரு முதலாளிகள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்யும் அரசியல் புள்ளிகள் அனுபவிப்பர். அதாவது மக்களுக்கு சேவை செய்ய பிறந்த பொதுத்துறை பெருமுதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசுத் துறையாக மாற்றப்படுகிறது. பங்கு விற்பனை மூலம் சொத்து குவிக்க இன்னொரு வழியை திறக்கிறார்கள் என்பது வெளிப்படை.

இந்தியாவில் பங்கு வர்த்தகம் என்பது நெடு நாட்களாக லேவாதேவி குடும்பங்கள் கையிலேயே இருந்தது. 
இன்றைய சிறு சேமிப்பாளர்களும் பங்கு வர்த்தகத்தில்ஈடுபட விதை போட்டவர் திருபாய் அம்பானி ஆவார். 1978ம் ஆண்டில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தை அகமதாபாத்தில் பங்கு நிறுவனமாக துவக்கினார். 50 ஆயிரம் நடுத்தர வர்க்க மக்களை பங்குகளை வாங்க வைத்தார். 

பங்குகளுக்கு அரசு வட்டியை விட அதிக ஈவு கொடுத்து நம்பிக்கை ஊட்டினார். 

மக்களுக்கும் பங்கு நிறுவனங்களிலே முதலீடு செய்யும் பழக்கம் வளர்ந்தது. பல பெரிய நிறுவனங்களும் பங்குகளை விற்க முன் வந்தன. உலக நாடுகளின் நிதி நிறுவனங்கள் பங்கு பெற மன்மோகன் சிங் இந்திய பங்குச்சந்தையை உலகமயமாக்கினார். 

டாலர் சம்பாதிக்க குறுக்கு வழியென அப்பொழுது விளக்கமும் கொடுத்தார்.1992ம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான மக்களின் சேமிப்புக்களையும் கடன் கொடுத்த வங்கிகளையும் பங்கு சூதாட்டத்தில் திவாலாக்கி புத்தி புகட்டிய பெருமை பங்கு புரோக்கர் இந்தியாவின் ஜான்லா என்று பெயரெடுத்த மறைந்த கில்லாடி ஹர்சத்மேத்தாவை சாரும். 

உலகமயமான பங்கு வர்த்தகம் ஒரு வகை சூதாட்டம் என்பதை அந்த சரிவு உணர்த்தியது. இந்த சூதாட்டத்திற்கு ஒரு நெடிய வரலாறு உண்டு. 

1716ல் ஜான்லா என்ற ஸ்காட்லாந்து நாட்டு (இன்று பிரிட்டன்) சூதாட்ட கில்லாடி பிரான்சு நாட்டுக்கு ஓடி அரசரின் அனுமதியோடு பங்கு நிறுவனத்தை துவக்கினார்.

தான் கொடுக்கும் பங்கு பத்திரத்தாளை வாங்கினால் கூடுதல் பணம் தங்க நாணயமாக வரும் என்று ஆசை வார்த்தை காட்டினார். இவர் சொன்னதை நம்பி மக்கள் பங்குகளை முண்டியடித்து வாங்கப் போகவே பங்குகளின் விலை உச்சியை தொட்டது. 

நாலாவது வருடத்தில் இவரது பங்குத்தாளை வாங்க நாதியில்லாமல் போனது அதிக விலை கொடுத்து வாங்கியவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க ஜான்லாவால் இயலவில்லை. 

மக்கள் ஏமாளிகளாக ஆனார்கள். ஆனால் அவர் உருவாக்கிய பங்குகளை வாங்கிவிற்கும் மோகம் மக்களை தொற்றி ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வளர்ந்தது.

1841ல் அதே ஸ்காட்லாந்தில் பிறந்த சார்லஸ் மாக்கே என்ற பத்திரிகை நிருபர் “மக்கள் திரளிலே நிலவும் பிரம்மைகளும், பைத்தியகாரத்தனமும்” என்ற தலைப்பில் பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் திடீர் பணக்காரர்களாக ஆகிடலாம் என்று கனவு காணும் ஏமாளிகளின் அனுபவத்தை புத்தகமாக வெளியிட்டார். 

ஆனாலும் இந்த பித்து குறையவில்லை.20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வதந்திகளால் இயங்கும் பங்குச்சந்தை ஆரூடம் அறிவியல் வடிவெடுத்தது. 

பங்கு விற்பனை சுறுசுறுப்படைந்து உச்சிக்குப் போய் சரிந்தது. 

1929ல் துவங்கி 1932 வரை நீடித்த மிகப்பெரிய பங்குச் சந்தை சரிவை ஐரோப்பிய, அமெரிக்க மக்கள் சந்தித்தனர்.
இருந்தாலும் திடீர் பணக்காரர்களாக ஆக்கும் மாயா சக்தி பங்குச்சந்தைக்கு உண்டு என்ற மூடநம்பிக்கை முன்னை விட வேகமாக பரவியது. 

இந்த மூட நம்பிக்கையை அம்பலப்படுத்தி 1971ல் அமெரிக்க ஆய்வாளர் நசீம் தாலெப் “பங்குச்சந்தையின் சீரற்ற தன்மை முட்டாளாக்கிவிடும்” என்ற தலைப்பில் ஆய்வு நூலை வெளியிட்டார். இதனை மறுத்து புத்திசாலித்தனமாக சிறு சேமிப்பாளர்கள் பங்குகளில் முதலீடு செய்தால் பணக்காரனாகலாம் என்று இரண்டு அமெரிக்க பொருளாதார நிபுணர்கள் (மைரோன்ஸ்கோல்ஸ், ராபர்ட்மெர்ட்டன்) கணக்கு போட்டு காட்டினர். 

இந்த கணக்கியல் கண்டுபிடிப்பிற்காக 1997ல் நோபல் நினைவுப் பரிசையும் பெற்றனர். அதோடு அவர்கள் தங்களது கண்டுபிடிப்பை நிலைநாட்ட ஒரு நிதி நிறுவனத்தையும் துவக்கி உலகளவில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.

துவக்கத்தில் லாபம் திரண்டது. ஆனால் அடுத்த சில ஆண்டிலேயே புத்திசாலித்தனமான கணக்கியல் கோட்பாடு உருவாக்கியவர்களின் முதலீடுகளே பங்குச்சந்தை நுரையாகி காணாமல் போனதோடு, அவர்களது கணக்கியல் ஆரூடம் அவர்களுக்கே பலிக்காமல் போனது. 
இவர்களது பங்குச்சந்தை முதலீடுகளால் 1997ல் ஆசியப் புலிகள் என அழைக்கப்பட்ட மலேசியா, தென்கொரியா , இந்தோனேஷியா, தாய்லாந்து நாடுகளில் பங்குச்சந்தைகள் நொறுங்கின. அந்நிய முதலீட்டால் புலிகளாக ஆன கிழக்காசிய நாடுகள் ஏற்றுமதியால் சேமித்த டாலரை இழந்து கடனாளிகளாக மாறின. 
இந்த அனுபவங்கள் இருந்தும் இந்திய அரசு பங்குச்சந்தை சூதாட்டத்திற்கு பொதுத்துறையை காவு கொடுப்பது ஏன்? 

மார்க்ஸ், லாபம் சம்பாதிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முதலீட்டை ஒரு கற்பனை மூலதனம் (பிக்சியஸ் கேப்பிட்டல்) என்கிறார்.
இதற்கு மதிப்பை உருவாக்கும் ஆற்றல் கிடையாது. 

சிறு சேமிப்புகளாக கிடக்கும் சொத்தை குவிய வைக்க இந்த கற்பனை மூலதனம் உதவுகிறது என்கிறார். (கேப்பிட்டல் வால்யூம் 3, 29 வது பகுதி) 

சொத்து குவிப்பு பித்துப் பிடித்த சிதம்பரம் முதல் ஜெட்லி வரை பொதுத்துறை பங்குகளை விற்க துடிப்பதன் மர்மம் புரிகிறதா?
                                                                                                                                                                                     -   வே.மீனாட்சிசுந்தரம்,
==============================================================================================
இன்று,
பிப்ரவரி-26.
  • குவைத் விடுதலை தினம்(1991)
  • 2வது பிரெஞ்ச் குடியரசு அறிவிக்கப்பட்டது(1848)
  • டிம் பெர்னேர்ஸ், லீ நெக்சஸ் என்ற உலகின் முதல் இணை உலாவியை அறிமுகப்படுத்தினார்(1991)
  • பெய்ரூட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின(1984)

உதயநிதிஸ்டாலின் ,
 தனது udhay@udhaystalin 
டுவிட்டர் பக்கத்தில் 
வெளியிட்டுள்ள கவிதை:


● இடிந்து விழுந்தாலும், அணை உடைந்தாலும், இம்மியளவும் துயர்கொள்ளாத இரும்பு இதயமே வாழ்க!
● மக்கள் குடி அழிந்தாலும், நலம் இழந்தாலும்,
நெஞ்சம் நடுங்காத நித்திரை சிற்பமே வாழ்க!
● வந்தாரை வரவேற்பது தமிழர் தம் பண்பாடு
மறந்தாரை மறவாமல் வாழ்த்துகிறோம் அன்போடு!
● உன்னருமை பெருமைகளோ, நுாறு நுாறு
உனக்கு இங்கே ஈடு இணை வேறு யாரு?
● வேதனையில் மக்கள் மனம் வாடுகின்ற போதும்;
வேலையின்றி இளைஞர் எல்லாம் வெந்துருகும் போதும்;
வெள்ளத்தில் மக்கள் இங்கே தத்தளிக்கும் போதும்;
கவலையின்றி நீ சிரிப்பாய், உன் வீரம் யாருக்கு வரும்!
● தமிழ்நாடு கடன் சுமையால் தள்ளாடும் போதும்,
தற்பெருமை பேச்சுக்கள் வேறு எவர்க்கும் வருமா?
பன்னாட்டு நிறுவனங்கள் நமக்கெதற்கு தாயே
கொடநாடு இருக்கிறதே ஓய்வெடுப்பாய் நீயே!
● மக்கள் படும் துன்பத்திலும் திசையெங்கும்
தன் முகத்தை, 'ஸ்டிக்கர்' ஒட்டி, காட்டச் செய்த
மா கருணை உனதல்லவா...
● மந்திரிமார் அனைவரையும் மண்டியிட செய்து விட்டு, உன் சுய மரியாதையை துாக்கி நிறுத்திய, சீரிய கொள்கை தலைவி நீயல்லவா...
பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடுக நீயே...
● நாளையொரு நல்லாட்சி வருகிறது தாயே
துளியளவும் பயம் வேண்டாம் அமைதி கொள்வாயே
நல்லாட்சி குடையின் கீழ், நலம் காண்பாய் நீயே!
==============================================================================================

ஜான்சன் அண்ட் ஜான்சன்

பேபி பவுடர்  பேராபத்து!


ஜாக்குலின் ஃபாக்ஸ், அமெரிக்காவின் மிசௌரியைச் சார்ந்த 62 வயது பெண்மணி. இவர் கடந்த 35 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான பவுடரையும், ஷவர் டூ ஷவர் பவுடரையும் பயன்படுத்தி வந்துள்ளார். 
இந்நிலையில் இவருக்கு கர்ப்பப்பை ஒவேரியன் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. 
இவர் கடந்த அக்டோபர் மாதம் உயிரிழந்தார். 
இந்நிறுவனத்தின் பொருட்களைப் பயன்படுத்தியதாலேயே இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி,  இவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்நிறுவனம் அதனுடைய உற்பத்தி பொருளான பவுடரில் புற்று நோயை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பொருட்கள் இருப்பதை தெரிவிக்க தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்தனர். 
மேலும், பாதிக்கப்பட்ட ஜாக்குலின் குடும்பத்தினருக்கு 72 மில்லியன் அமெரிக்க டாலர்  ( இந்திய பணம் 493.50 கோடி ரூபாய் ) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளது. 
இந்நிறுவனம் தொடர்பாக சுமார் 1000 வழக்குகள் மிசௌரி மாநில நீதிமன்றத்திலும், 200 வழக்குகள் நியூ ஜெர்ஸி நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.
 ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் பவுடரில் கான்சர் செல்லை தூண்டும் ஒரு ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இது தெரிய வந்ததும் மற்ற நிறுவனங்கள் இந்த ரசாயனப் பொருளை உபயோகிப்பதை நிறுத்திவிட்டது. ஆனாலும், உலகமெங்கும் ஆக்டோபசாக மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் ஜான்ஸன் & ஜான்ஸன் நிறுவனம் இதைத் தொடர்ந்து உபயோகித்து வந்துள்ளது. 
இதனால், மக்கள் குறிப்பாக பெண்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

கோடிகளில் லாபத்தை குவித்தாலும் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை அதிகம் பயன் படுத்துவது ஜான்சன் அன் ஜான்சனின் கொள்ளை லாப பேராசைதான்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, மதுபானம் முதல் குழந்தைகள்ம் மேகி னூடூல்ஸ்,  அருந்தும் பால் வரை கலப்படம்தான். 
எவ்வளவு பெரிய புகழ் பெற்ற நிறுவனமானாலும் அவை அந்நிய நிறுவனம் என்றால் எதையும் நம்பி வாங்கி பயன்படுத்த முடியாத அளவு அவைகளின் கொள்ளை லாப் வேட்கை உள்ளது.இவைகளைத்தான் நம் மத்திய அரசு ம் ,மூடியும் சிகப்பு கம்பளம் அமைத்து வரவெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?