போலிகளை காலி செய்ய முடியும் ?
போலி வாக்காளர்கள் தொடர்பான புகாருக்கான ஆதாரத்தை திமுக அளித்தது. ராஜேஷ் லக்கானியிடம் திமுக சட்டத்துறை செயலர் கிரிராஜன் ஆவணங்களை அளித்தார்.
இதில் இரட்டைப் பதிவு, இறந்தவர் பெயர் இடம் பெற்றது தொடர்பான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது. 
மாவட்டங்களில் இருந்து இன்னும் பெறப்படும் ஆவணங்களும் ஆணையத்திடம் சமர்பிப்போம் இரட்டைப் பதிவு, இறந்தவர் பெயர் இடம் பெற்றது தொடர்பான ஆவணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களில் இருந்து இன்னும் பெறப்படும் ஆவணங்களும் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் உள்ள 45 லட்சம் போலி வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திமுக தலைவர் கலைஞரின் புகாருக்கு தீர்வுக்காண வேண்டும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்படும் என்றும் கூறினார்.
இன்றைக்கு 2016 தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளும் கட்சிகள் அனைத்துக்கும் ஜெயலலிதா மக்கள் ஆதரவுடன் மீன்டும் வருவார் என்றோ தனது கட்சிக்கு மக்கள் அதரவு தருவார்களா என்ற பயம் இல்லை.

அவர்கள் பயம் எல்லாம் தமிழ் நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள,அல்லது சேர்க்கப்பட்டுள்ள  40 லட்சம் போலி வாக்காலர்களைக் கண்டுதான்.
அனைத்தும் ஆளுங்கட்சி,தேர்தல் ஆணையம்,அரசு அதிகாரிகள் கடும் உழைப்பினால் சேர்க்கப்பட்டவர்கள்.

அதானால்தான் திமுக உடப்பட்ட எதிர்கட்சிகள் எவ்வளவுதான் குற்றச்சாட்டை கூறி நடவடிக்கை எடுக்க கூறினாலும்.அதை கண்டு கொள்ளாமல் வாக்காளர் பட்டியலை  மட்டும் வெளியிட்டுக் கொண்டிருக்கினர்.

தில்லி தலைமை ஆணையத்தில் முறையிட்டும் பெரிய அளவு பயன் உண்டானதாக தெரியவில்லை.
இப்போதுள்ள நிலையில் இந்த வாக்காளர் பட்டியலுடன் தேர்தலை சந்தித்தால் நிலைமை சென்ற மக்களவைத் தேர்தலைப் போல்தான் அதிமுகவுக்கு 100/100 .

அதிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தால் அதிமுக வெற்றி இடங்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பிருக்கிறது.
இரண்டு கட்டம் என்றால் 100 சதவிகிதம் வெற்றிதான்.

சேர்க்கப்பட்ட வாக்காளர் ஒரே நேரம் பல தொகுதிகளில் வாக்களிப்பது சற்று சிரமம் என்பதால்தான் இடங்கள் எண்ணிக்கை மாறுதல்.

இதனால் பல கட்டத்தேர்தலை நடத்திட ஜெயலலிதா விரும்புகிறார்.அவர் விருப்பப்படி நடத்த தேர்தல் ஆணையம் தயார்.காரணம் காட்ட சமீபத்திய மழை,வெள்ள சேதம் அகப்பட்டுள்ளதே?

திமுக உட்பட்ட எதிர் கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த ஆணையத்தை வலியுறுத்த வேண்டும்.
வெள்ள சேதம் காரணம் என்றால் அவசரமில்லை அப்பகுதிகளுக்கு என்று தேர்தலோ அன்றே எல்லாத் தொகுதிகளுக்கும் சேர்த்து வைத்துக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையத்துடன் ஒத்துப்போனால் சில இடங்கள் அதிகம் கிடைக்க எதிர்கட்சிகளுக்கு வாய்ப்புண்டு.

இந்த கள்ள வாக்குகளை ஒழிக்கவும்,ஆண்டாண்டு புதிய வாக்காளர் சேர்ப்பு என்ற தேவையற்ற கடும்பணியை தேர்தல் ஆணையம் கை விடவும் மிகச்சிறந்த வழி உள்ளது.

அதை நடைமுறை படுத்தினால் கள்ள வாக்கு என்பதே இல்லாமல் போய்  விடும்.

பிழைப்புதேடி வந்த ராஸ்தான்,உ.பி,அசாம் போன்ற வட மாநில தொழிலாளர்களுக்கு ரகசியமாக குடும்ப அட்டைஅடித்து அதன் மூலம் அவர்களை வேறு ,வேறு பெயர்களில்  போலி வாக்காளர்களாக ஒருவரையே பல இடங்களில் சேர்த்து வாக்குகளாக மாற்றும் பணச்செலவு அவர்களுக்கான கூலி செலவுகள் அதிமுகவினருக்கு குறையவும் செய்யும்.

மனசாட்சிக்கு விரோதமாக வாக்காளர் பட்டியல் வெளியிடும் சுமையும் அரசு அலுவலர்களுக்கு குறையும்.

சுலப வழி. 
இப்போது ஆதார் அட்டை இல்லாதவர்களே இல்லை.மேலும் ஆதார் எண்களை வாக்காளர் பட்டியலில் அனைவரும் சேர்த்தும் விட்டனர். 
வாக்குப்பதிவு அன்று வாக்காளர்கள் ஆதார் அட்டையுடன் மட்டும் வாக்குப்பதிவுக்கு வந்தால் போதும்.வாக்குப்பதிவு எந்திரத்தில் ஆதார் அட்டை  பார் கோடை ஏ.டி .எம்.மில்  தேய்த்து எடுப்பது போல் எடுத்தால் அவரின் விபரங்கள் படத்துடன் கணினியில் விரியும் அதை வாக்குப்பதிவு  அதிகாரி படத்தில் உள்ளவர் அவர்தானா  சரி பார்க்க வேண்டும். 
பின் வாக்காளர் தன கைவிரல் ரேகையை வாக்களிக்கும் எந்திரத்தில் பதிய வாக்களிக்கும் எந்திரம் அவரின் வாக்கை பெற தயாராகக் காத்திருக்கும். 
அவர் தனக்கு வேண்டிய சின்னத்தில் பட்டனை அழுத்த வாக்கு பதிவாகி அவருக்கான தொடர்பு அணைய அடுத்தவர் வாக்குக்காக எந்திரம் காத்திருக்கும்.
எப்படி?
இதற்காக தற்போதைய வாக்குப்பதிவு மின்னணு எந்திரத்தில் மென்பொருளை சிறிது மாற்றம் செய்தாலே போதும்.பலன் போலிகள் ஆட்டம் செல்லாது.

இதன் மூலம் யார் வாக்கையும்,யாரும் அளிக்க முடியாது.

ஒரே ஆள் பல இடங்களில் வாக்காளர் என்ற பெயரில் இருக்கவும் முடியாது.
ஆனால் இதை செய்ய நம் அரசியல்வாதிகள் ஒத்துக்கொள்வார்களா?

அவர்கள் அடிமடியிலேயே கையை வைக்கும் இதை அவர்கள் எப்படி ஒத்துக்கொள்வார்கள்.
சில ஆண்டுக்கு முன்னர் வாக்குப்பதிவு எந்திரம் மோசடி என்று சொன்னவரே சென்ற சில தேர்தலில் அதற்கு ஆயுத பூசை கொண்டாடும் அளவு மாறி விட்டாரே?

தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலத்தில் போலி வாக்காளர்களை ஒழிக்க கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு திரு,திரு என்று முழிக்கலாமா?

வேண்டுமானால் இந்த முறையிலான வாக்குப்பதிவுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆரம்பித்து வைக்கலாம்.

ஆனால் நிரந்தர முதல்வர் கனவு காணமட்டும் முடியும்.


சென்னையில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 717 பேர் இறந்தவர்கள் என்றும் இவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், இதனை களைய தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 தமிழ்நாட்டில்  வாக்காளர்  பட்டியலில்  போலி வாக்காளர்களை எந்த அளவுக்குச் சேர்த்திருக்கிறார்கள் என்பது பற்றிக் கடந்த சில மாதங்களாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விபரங்களோடு எடுத்துச் சொல்லி வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இது பற்றிய பல புகார் மனுக்கள் தேர்தல் ஆணையரிடம் தரப்பட்டுள்ளன. கடந்த 24.1.2016 அன்று நான் விடுத்த விளக்கமான அறிக்கையிலும், எந்த அளவுக்குத் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைப் பெருவாரியாகச் சேர்த்து மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டி, இந்தியத் தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
தகுதியில்லாத  வாக்காளர்களைப் பெருமளவில் சேர்த்த  மோசடிகள் பற்றி நாளேடுகளில் வந்த செய்திகளையும் எடுத்துக்காட்டியிருந்தேன். குறிப்பாக ஒரு நாளேடு 21.1.2016 தேதியன்று "2016ல்  தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிக வாக்காளர்கள்” என்ற தலைப்பிலே வெளியிட்ட செய்தியில், “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77 கோடியில், தற்போது 20.1.2016 அன்று வெளியிடப்பட்டுள்ள  இறுதி வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர்களின் எண்ணிக்கை 5.79 கோடி - அதாவது மொத்த மக்கள் தொகையில் 75.56 சதவிகிதம் பேர். மிகையான இந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக் கூடியதாக இல்லை. மக்கள் தொகையில் 70.40 சதவிகிதத்தினரே வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் 75.56 சதவிகிதம் பேர் அதாவது 5.16 சதவிகிதம் பேர் மிகை வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும், பெருத்த மோசடியாகவும் உள்ளது. சுமார் 40 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்” என்றே புள்ளி விவரத்தோடு அந்த ஏடு எழுதியிருந்தது.

நான் விடுத்த அறிக்கையின் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும்  கழகத் தோழர்கள் வாக்காளர் பட்டியலை நேரடியாகப் பரிசீலித்து கள விசாரணைகளைத் தொடங்கினர். மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் கனிமொழியும் டெல்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார். அதனையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு சில இடங்களில் நேரில் சோதனையிட்டு, வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி தி.மு.கழகத்தின் சார்பில் எடுத்துக் கூறப்பட்ட  புகார்கள் உண்மையே  என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 717 பேர்,  இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர்  பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளார்கள். நாம் தந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு தற்போது போலி வாக்காளர்கள்தான் என்று கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் என்றால், இன்னமும் நீக்கப்படாமல் உள்ள போலி வாக்காளர்கள் எவ்வளவு பேர் என்பதைத்  தீவிரமாக கண்டுபிடித்து உண்மையான ஜனநாயக அடிப்படையில் தேர்தலை நடத்த நூறு சதவிகிதம் உறுதி செய்யப்பட  வேண்டாமா?

இதைப் போலவே மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலின் காரணமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக சென்னையிலே எடுத்துக் கொண்டால் மைலாப்பூர் தொகுதியில் மட்டும் 16,798 வாக்குகள்- விருகம்பாக்கத்தில் 17,831 வாக்குகள் -  அண்ணா நகரில் 14,830 வாக்குகள் - தியாகராயநகரில் 13,823 வாக்குகள்- பெரம்பூரில்  13,323 வாக்குகள் என்ற அளவுக்கு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என்பதைக் காணத் திகைப்பாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தாலேயே நாம் தந்த புகார்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அந்த வாக்குகளை நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இதே போல தமிழகத்திலே உள்ள மற்ற தொகுதிகளிலும்  உள்ள போலி வாக்காளர்களும் முழுமையான சரி பார்த்தலின் மூலம்  கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வாக்காளர்களை  நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில்  உடனடியாக களையப்பட வேண்டும்.

தேர்தல் வருவதற்கு இன்னும்  இரண்டு மாதங்களே  உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம்  இந்தப் பிரச்சினையிலே முறையாக உரிய  கவனம் செலுத்தி, போலி வாக்காளர்கள் நீக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபட  வேண்டும் .
                                                          -என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்..
============================================================================================
இன்று,
பிரவரி-09.
  • வில்லியம் மார்கன், வாலிபாலை கண்டுபிடித்தார்(1895)
  • டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது(1900)
  • அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் அறிமுகப்படுத்தப்பட்டது(1942)
  • பொதுநலவாய அமைப்பினுள் ஜமைக்கா விடுதலை பெற்றது(1962)
============================================================================================இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு