நமது பாவங்களுக்கான வரி!
பட்ஜெட் 2016 தாக்கலாகப்போகிறது. உலக நாடுகளெல்லாம் பொருளாதார ஆட்டம் கண்டு கொண்டிருக்கின்றன. நாம் நம் உள் நாட்டுப் பிரச்னையைத் தவிர, இந்த நாடுகளின் பிரச்னைகளையும் உள் வாங்கி, பாதிப்படைந்து கொண்டிருக்கிறோம்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் பட்ஜெட், பொதுநல பட்ஜெட்டாக இருக்குமா, இல்லை இருக்காதா என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் குழப்பங்களுக்கு நடுவே.... இந்த பட்ஜெட்டில் வரக்கூடிய ஒரு புதிய வரியான சின் டாக்ஸ் (SIN TAX ) பற்றி பார்ப்போம்.
இந்தக் குழப்பங்களுக்கு நடுவே.... இந்த பட்ஜெட்டில் வரக்கூடிய ஒரு புதிய வரியான சின் டாக்ஸ் (SIN TAX ) பற்றி பார்ப்போம்.
வரி, வட்டி, கிஸ்தி…… இந்தப்பட்டியலில் இது குஸ்தி. ஆமாம் பாவங்களுக்கு எதிரான குஸ்தி. இந்த வரி வருமா வராதா தெரியாது. ஆனால் வருமென்றே தோன்றுகிறது. சரி முதலில் இது என்ன வரி என்று பார்த்துவிட்டு, ஏன் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்றும் பார்க்கலாம்.
'சின் டாக்ஸ்' என்பது ஒரு மறைமுக வரி. மத்திய கலால் வரி (Central Excise Duty ) யில் ஒரு வகை. பண்டங்கள் மேல் விதிக்கப்படும். எந்தப் பண்டங்கள் என்று பார்த்தால் பீடி ,சிகரெட், மதுபானங்கள் , குளிர் பானங்கள் , உயர் ரக கார் இப்படி சமூகத்துக்கு தீமை விளைவிக்கும் அல்லது உபயோகத்தைக் குறைக்கவேண்டும் என்று அரசாங்கமே எண்ணுகின்ற பொருட்களின் மேல் போடப்படும் அதிகப்படியான வரிதான். இது ஒரு மறைமுக வரியாதலால் உற்பத்தியாளர்களுக்கு கவலை இல்லை. நுகர்வோர் தலையில் ஏற்றிவிடலாம். இந்த வரி எதற்காகப்போடப்படுகிறது?
இரண்டு காரணங்கள். ஒன்று, உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களின் விலை ஏற்றப்பட்டால் அதை உபயோகிப்போர் விகிதம் குறையும். இரண்டு, நாட்டுக்கு அதிக வரி வசூல் ஏற்பட்டு நிதி பற்றாக்குறை நிலையில் மாற்றம் வரும்.
முதலாவது காரணமாக சொல்லப்பட்ட நம்பிக்கையின் அடித்தளம் பீடி, சிகரெட், மது குடிப்பவர்களுக்கு அடி மனதில் ஒர் குற்ற உணர்ச்சி இருக்கும். அப்போது விலையும் ஏற்றப்பட்டால் குடிப்பதை நிறுத்திவிடுவர் யோசித்துப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.
எங்கோ இருக்கும் அரசாங்கம் தனி மனிதனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி நினைத்தால் இப்படிப்பட்ட பண்டங்கள் நாட்டிலேயே இல்லாமல் செய்யலாமே!
தவிர தனி மனிதனுக்கு தனக்கு என்ன வேண்டும் , வேண்டாம் என்று பாகுபடுத்தி உணரத்தெரியாதா?

எதற்கு இந்த போலித்தனம் ?
ஆக விஷயத்துக்கு வந்துவிட்டோம்.அரசாங்கம் தன் கையிருப்புத்தொகையை அதிகரிக்க எடுக்கும் முயற்சிதான் இது, நாட்டு மக்களின் நன்மைக்கு என்ற போர்வையில். ஆனால் இந்த நம்பிக்கை, அதாவது பழக்கம் குறையும் என்பது ஓரளவு நடக்க வாய்ப்பும் இருக்கிறது. இப்பழக்கங்களை புதிதாகத் தொடங்கியவர்கள், விலை ஏற்றப்படும்போது பழக்கத்தை நிறுத்திவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பழக்கத்திற்கு நீண்டநாட்கள் அடிமையானவர்கள் மாற மாட்டார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மை.
முதன் முதலில் ஃப்ரென்ஞ்ச் நாட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய உப்பு வரியாக அறிமுகம் ஆகி , அமெரிக்க காலனிகளில் தேனீர் வரியாக கூறப்பட்டு, பாஸ்டன் டீ பாட்டி என்று கூறப்படும் நிகழ்ச்சியும் நடந்தது. இதுவே பின் அமெரிக்கப் புரட்சியாக மாறியது. அதேபோல் ஜார்ஜ் வாஷிங்டன் அறிமுகப்படுத்திய விஸ்கி மீதான வரி (Whiskey Insurrection) மாணவர்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சியைத் தூண்டியது. இங்கிலாந்து தற்போது உடல் பருமனைக்கட்டுப்படுத்த சாப்பாடு மற்றும் பானங்களில் அதிக சர்க்கரை அளவு கொண்டிருந்தால், அதன் மேல் கூடுதல் வரி விதிக்க எண்ணியுள்ளது.
நம் நாட்டுக்கு வருவோம்....
GST கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்த போது புகையிலை, மதுபானங்கள் மீது இந்த பாவ வரி வசூலிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. லாட்டரி டிக்கெட், சூதாட்டம், பான் மசாலா, குளிர் பானங்கள், உயர் ரக கார், இவைகளும் இந்த வரி வலைக்குள் கொண்டு வரப்படலாம்.
இன்றும் GST அமல்படுத்தப்படாததால் எதன் மேல் எவ்வளவு வரி என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதே போல் 2012 ல் திட்டக்குழு 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் சுகாதாரத் திட்டங்களுக்கான நிதி தேவைகளுக்காக ,புகையிலை, மது மீது இந்த பாவ வரி விதிக்கப்படலாம் என்று பரிந்துரைத்தது.
இப்படி ஏதாவது ஒரு துறையின் நலனுக்காக கூடுதல் வரி போடப்படுவது புதுமையானது அல்ல. ஸ்வச் பாரத் வரி, படிப்பு வரி போன்றவை இவ்வகையான கூடுதல் வரிகளே. தற்போது சுகாதாரத் துறையிலிருந்து இந்தப் பாவ வரி விதிக்கப்பட வேண்டும் என்றும், அந்த வரிப்பணம் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்கு செலவிடப்படவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலே கூறியதை வைத்துப்பார்க்கும்போது இந்த வரி, வரும் பட்ஜெட்டில் கொண்டு வரப்படும் என்றே தோன்றுகிறது.
-லதா ரகுநாதன்
நன்றி:விகடன்.========================================================================================
இன்று,
பிப்ரவரி-28.
- இந்திய தேசிய அறிவியல் தினம்
- இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)
- முதல் வளைகுடா போர் முடிவு பெற்றது(1991)
- வொலஸ் கரோதேர்ஸ் என்பவரால் நைலான் கண்டுபிடிக்கப்பட்டது(1935)
- எகிப்தின் விடுதலையை யூ.கே., அங்கீகரித்தது(1922)
========================================================================================
நவீன உலகின் பெரும் பாலான கூறுகள் அறி வியலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் மாறாத அடிப்படைகளை விளக்குவது அறிவியலின் முக்கிய பணி.
இவ்விளக்கங்களை அளிப்பவர்கள் விஞ்ஞானிகள். ஒவ்வொரு தேசமும் பல திறமையான விஞ்ஞானிகளை இவ்வுலகிற்கு அளித்திருக்கிறது.
இதில், இந்தியா உலகிற்கு அளித்த விஞ்ஞானிகளில் முதன்மையானவர் சர். சி.வி.ராமன்.
1888, நவம்பர் 7 ஆம் தேதி சி.வி.ராமன் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார்.
அவரது தந்தைக்கு அறிவியல், கணிதம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு இருந்தது.
இளவயதிலேயே ராமன் அறிவுக்கூர்மை உள்ளவராக விளங்கினார்.
1904இல் தனது பதினாறாம் வயதிலேயே சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
அந்த ஆண்டு அவருக்கு மட்டுமே இளங்கலை படிப்பில் முதல்நிலைத் தேர்ச்சியும் தங்கப்பதக்கமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
அதே கல்லூரியில் பல சாதனைகளை முறியடித்து இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.தனது பதினெட்டாவது வயதில் அவர் தனது முதல் ஆய்வு அறிக்கையைத் தயார் செய்தார். அந்த அறிக்கை லண்டனில் உள்ள அறிவியல் சஞ்சிகையில் வெளியானது.
அறிவியல் உலகம் ராமனை கவனிக்கத் தொடங்கியது. ஒலி, ஒளி, காந்த சக்தி ஆகியவற்றில் ராமன் தனது ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டார்.
நல்ல சம்பளத்தில் அரசாங்க வேலையில் இருந்த ராமன், சிறிது காலத்திலேயே அந்தப் பணியை விட்டுவிட்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியேற்றார்.
1914ல் கல்கத்தாவில் புதிதாக அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. ராமன், அக்கல்லூரிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். 1921ல் ராமன் முனைவர் பட்டம் பெற்றார். 1924ல் லண்டனில் உள்ள ராயல் கழகம் ராமனுக்கு கவுரவ உறுப்பினர் தகுதியை வழங்கியது.
1929ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் ராமனுக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தது.
ராமன் விளைவு
சூரிய ஒளி தண்ணீரிலும், ஐஸ்கட்டியிலும், மற்ற பொருட்களிலும் எவ்வாறு பயணிக்கிறது என்று ராமன் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்தார்.
ஒளி மற்றும் ஒளியின் பயணம் குறித்து அந்தக் காலக்கட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தன.`ஒளி என்பது அலைகளினால் ஆனது’ என்று தாமஸ் யங் என்ற விஞ்ஞானி 1801ல் கூறினார். `ஒளி என்பது துகள்களால் ஆனது’ என்ற சர் ஐசக் நியூட்டனின் கூற்றை யங் எப்படி மாற்றிக் கூறலாம் என்று நியூட்டனின் ஆதரவாளர்கள் குரலெழுப்பினர்.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளார்க் மாக்ஸ்வெல் என்ற விஞ்ஞானி ஒளி, வெப்பம் போன்ற எல்லாமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவைதான் என்றும், அவை அலைகளாகப் பயணம் செய்கின்றன என்றும் கூறினார்.இரண்டு வெவ்வேறு அலைகளின் நீளத்தைக் கணக்கிடுவதை அலைநீளம் (றயஎநடநபேவா) என்று கூறுகிறோம். வயலட் நிறத்தின் அலைநீளம் மிகச்சிறியது.
சிவப்பு நிறத்தின் அலைநீளம் மிக நீண்டது. பெரிய அலைநீளம் கொண்ட நிறங்கள் தொலைதூரம் பயணம் செய்யக்கூடியவை. சாலைகளில் சிவப்பு விளக்கு சிக்னல் தொலை தூரத்திலிருந்தே நமக்குத் தெரிவது இதனால்தான். எலும்புகளின் புகைப்படத்தை எக்ஸ்ரே எடுப்பதற்கும் தொலைக்காட்சியில் ஒலி, ஒளி தெரிவதற்கும் காரணமான அலைகள் எல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை.
ஒளி அலைகள் வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர் பயணம் செய்கிறது. ஒளியியல் தொடர்பான விஷயத்தில் அலைகளின் கோட்பாடு முக்கியமாகக் கருதப்பட்டாலும் ஒளியின் அத்தனை கூறுகளையும் அலைகளின் கோட்பாட்டால் விளக்க முடியவில்லை. `வெப்பமும் ஒளியும் ஒரு பைக்குள் அடைக்கப்பட்ட சக்திகள். இவ்வாறு பைக்குள் அடைக்கப்பட்ட `ஒளி’ சக்தியின் பெயர் போட்டான்ஸ்’ என்று மாக்ஸ் ப்ளாங்க்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கூறினார்.ஒளி போட்டான்களால் ஆனதா, அலைகளால் ஆனதா என்ற விவாதம் கிளம்பியது.
“இரண்டிலிருந்தும்தான்“ என்று சிலர் கூறினர்.
தண்ணீர் மழைத்துளியின் மூலமாகவும் வருகிறது. பெரிய அலைபோல் நதிகளிலும் பாய்கிறது. இதேபோல்தான் ஒளியும் என்று வாதம் செய்யப்பட்டது. இந்நிலையில்தான் சர். சி. வி. ராமன் ஒளியியல் கோட்பாட்டில் முக்கியமானதொரு விஷயத்தை கண்டுபிடித்தார். “
ஒளி என்பது திரவம், வாயு மற்றும் திடப் பொருட்களினூடே செல்லும்போது, அதன் தன்மை மாறுகிறது” என்று ராமன் கூறினார்.
“கேரம்போர்டில் ஸ்டிரைக்கரை சுண்டியதும், போர்டில் உள்ள பல்வேறு காய்கள் சிதறி வெவ்வேறு திசை நோக்கி நகர்வதைப் போல ஒளியின் பயணம் மாறுபடுகிறது” என்று கூறினார்.
இதையே நாம் `ராமன் விளைவு’ என்று அழைக்கிறோம்.
சி.வி.ராமனின் இந்த கண்டுபிடிப்பிற்காக 1930ல் அவருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
தேசிய அறிவியல் தினம்`ராமன் விளைவு’ கண்டுபிடிக்கப்பட்ட தினத்தை (பிப்ரவரி 28) ஒவ்வொரு வருடமும் தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.
நாட்டில் உள்ள பல்வேறு அறிவியல் இயக்கங்களும், அமைப்புகளும் பிப்ரவரி மாதம் முழுவதையும் அறிவியல் மாதமாகக் கொண்டாடி வருகின்றனர்.
.நன்றி : துளிர் மாத இதழ்.
=======================================================================================================================================
● வேலை வாய்ப்பு இல்லாத,94 லட்சம் பேர்கள்.
தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து விட்டு, காத்திருப்போரின் எண்ணிக்கை, 94 லட்சமாக உயர்ந்துள்ளது' என, தமிழக வேலைவாய்ப்பு துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு டிசம்பர், 31ன் படி, பல்வேறு வகை படிப்புகள் முடித்து, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர், 31ன் படி, பல்வேறு வகை படிப்புகள் முடித்து, தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ளது.
● வேலை வாய்ப்பு இல்லாத,94 லட்சம்பேர்கள் புள்ளி விவரம்:
● வேலை வாய்ப்பு இல்லாத,94 லட்சம் பேரில்,
43 லட்சம் பேர் பெண்கள். 11 லட்சம் பேர் சிறப்பு தகுதி பெற்ற மாற்று திறனாளிகள், அகதிகள், கலப்பு திருமணம் செய்தோர்
● பட்டப்படிப்பு முடித்தோர், 60 லட்சம் பேர்
● பிளஸ் 2 முடித்தவர்கள், 35 லட்சம் பேர்
● இடைநிலை ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், 2.28 லட்சம் பேர்
● பி.இ., - பி.டெக் முடித்தவர்கள், 2.28 லட்சம் பேர்
● எம்.இ., முடித்தவர்கள், 2.21 லட்சம் பேர்
● பி.எஸ்சி., போன்ற இளநிலை அறிவியல்
முடித்தவர்கள், ௬ லட்சம் பேர்
● பி.ஏ., முடித்தவர்கள், 4.48 லட்சம் பேர்
● வணிகவியல் பட்டம் பெற்றவர்கள்,
3.37 லட்சம் பேர்
● எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், 3,883 பேர்
● கால்நடை மருத்துவம் படித்தவர்கள், 1,160 பேர்
● சட்டம் முடித்தவர்கள், 748 பேர்.
முதுநிலை படிப்பு
● ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், 2.67 லட்சம் பேர்
● டாக்டர்கள், 734 பேர்
● சட்டம் படித்தவர்கள், 242 பேர்
● மற்ற பாடப்பிரிவுகளில் முதுகலை படிப்பு முடித்தவர்கள், 2.22 லட்சம் பேர்
● வேளாண் படிப்பில் பட்டம் பெற்றவர்கள், 4,000 பேர்; முதுகலை பட்டம் முடித்தவர்கள், 633 பேர்.
கடந்த ஆண்டு, 85 லட்சம் பேர் மட்டுமே வேலைக்காக காத்திருந்த நிலையில், தற்போது, வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில், ஒன்பது லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.