சனி, 27 பிப்ரவரி, 2016

" எனது அரசின்" ஐந்தாண்டு சாதனைகள்?

இதுதாங்க ஐந்து ஆண்டு கால ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசின் சாதனை என்று ஒரு லிஸ்ட் வாட்ஸ் அப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதைப் பார்த்து அதிமுகவினர் பெரும் பீதி அடைந்துள்ளனர். காரணம், அப்படியாப்பட்ட டென்ஷன் லிஸ்ட் அது! சிலர் வாட்ஸ் அப்பில் அதிமுகவின் சாதனை (வேதனை)களை பட்டியலிட்டுள்ளனர். அந்த பட்டியலை நீங்களும் படியுங்கள்.
*.வெற்றி பெற்ற முதல் நாள் உங்கள் அரசு என்ற வார்த்தை மறுநாள் நான், எனது அரசு என்றானதே ..
*.சமச்சீர்கல்வியில் நீதிமன்றம் உங்கள் மூக்கை உடைத்தது.
*.பாட புத்தகங்களை அச்சடித்து 450 கோடியை வீணடித்தது.
*.அண்ணா நூலகத்தை நாசபடுத்தியது .
*.பஸ் கட்டணம் உயர்தியது.
*.பால் விலையை உயர்த்தியது.
*.மின்சார கட்டணத்தை உயர்த்தியது.
*.கடுமையான மின் தட்டுபாடை ஏற்படுத்தியது.
*.ஒரு மின்உற்பத்தி நிலையம் கூட அமைக்காது.
*.தொழில் வளர்ச்சியை முடக்கியது .
*.தொழில் நிறுவணங்கள் தமிழகத்தை விட்டே ஒடியது.
*.சட்டசபையை " பெஞ்ச் தட்டும் சபையாக " மாற்றியது.
*.கரும்பு விவசாயிகளை கதற விட்டது .
*.நெல் விவசாயிகளை நெம்பியெடுத்தது.
*.கிராம, தாலுகா அலுவலங்களில் இலவசமாக வழங்கபட்ட சான்றிதழ்களை பணம் கட்டி பெற வைத்தது.
*.சாலைகளே இல்லா தமிழகத்தை உருவாக்கியது.
*.உலகமே வியக்கும் ஓட்டை உடைசல் பேருந்து '
*.அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றம் மண்டையில் கொட்டியது.
*.தானே புயலில் கடலூரை தவிக்க விட்டது.
*.கொடநாட்டில் வாசம்.
*.பெண் புகாரில் சிக்கியவர்களை இடைத்தேர்தலில் நிறுத்தியது.
*.கச்சதீவு மீட்பை கனவாக்கியது.
*.மாற்றுதிறனாளிகளுக்கு மரண பயம் காட்டியது.
*.இலக்கு வைத்து மது விற்றது.
*.தமிழ்நாட்டு போலீஸை டாஸ்மாக் போலீஸாக்கியது.
*.ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு போனது.
*.நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்தது.
*.மந்திரிகள் மண் சோறு தின்றது.
*.தாது மணலை கொள்ளையடித்தது
*.ஆவின் ஊழல் .
*.கமல்ஹாசனை கலங்கடித்தது.
*.விஜய்யை வியர்க்க வைத்தது .
*.சகாயத்தை சுடுகாட்டில் படுக்க வைத்தது.
*.கனிமவளத்தை களவாடியது.
*.அப்துல் கலாமை அவமதித்தது.
*.ஊழல் ஐ.ஏ. எஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியானது.
*.25 விதமான ஊழல் பட்டியல் வெளியானது.
*.முட்டை, பருப்பு ஊழல்.
*.மின்சாரத்தில் கமிஷன், மணல் கொள்ளை.
*.லோக் ஆயுத்தாவை அமல்படுத்தாதது .
*.பத்திர பதிவு கட்டணத்தை உயர்த்தியது.
*.நிலங்களின் வழிகாட்டு மதிப்பை தாறுமாறாக உயர்த்தியது .
*.ஜல்லிகட்டை ஜடமாக்கியது.
*.தர்மபுரியில் குழந்தைகள் இறந்தது.
*.திருப்பதியில் தமிழர்கள் மீதான போலி என்கவுன்டர் .
*.பார்வையற்றவர்களை பரிதவிக்க வைத்தது.
*.செவிலியரை சொல்லியடித்தது.
*.உயர் நீதிமன்ற பாதுகாப்பு மத்திய படையிடம் .
*.ஹெலிகாப்டரை கும்பிட வைத்தது.
*.ஆர். கே. நகரில் இமாலய கள்ள ஓட்டு.
*.செம்பர பாக்கத்தம்மா என விருது வாங்கியது.
*.வெள்ள நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது.
*.கோவனை கைது செய்தது.
*.பேனர் கிழிப்பில் விஜயகாந்திடம் ஜகா வாங்கியது.
*.மிடாஸில் மிதக்கும் தமிழகம்.
*.ஈயம் பூசுபவர்களை முதலீட்டாளர் என்றது.
*.விஷன் 2023 போயஸ் தோட்டத்திலேயே முடங்கி வெளியே வராமலே போனது .....
*.மன்னார்குடி வகையறாக்கள் 1000 கோடிகளில் வாங்கி குவிக்கும் மால்கள்,தியேட்டர்கள்.
=========================================================================================
இன்று,
பிப்ரவரி-27.
எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு தினம் 
சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா அவர்கள். அவரின் நினைவு தினம் இன்று..

* ஶ்ரி ரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் பிறந்தது சென்னையில்
1935 மே 3.
 தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த "சுஜாதா" ரங்கராஜனின் மனைவி.

* முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. 
அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 
'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் [அவருக்கு இரு மகன்கள் மட்டும்தான் ]திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். 
அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. 
முதல் நாவல் நைலான் கயிறு!

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!
* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றிஇருக்கிறார். 
கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை.

* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகை களில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. 
எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார்.
 பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை.

* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

=========================================================================================
விவசாயத்தை முற்றிலும் கார்ப்பரேட் தொழிலாக மாற்ற 

மோடி அரசின்  முன்மொழிவு வெளியீடு !

இந்திய விவசாயத்தில் உணவு தானியத்திற்கான விவசாயம் பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் அதற்கு மாற்றாக மரபணு மாற்றுப்பயிர்கள் குறித்த பரிசோதனைகளை 6 மாதங்களுக்குள் முடித்துநாடு முழுவதும் விரிவாக அமல்படுத்தப்படும் எனவும் மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளாக பெரும்பான்மையான இந்திய விவசாயத்தில் உணவுக்கான உற்பத்தியே நடந்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மட்டும் பணப்பயிர்களும் ஆடம்பரப்பயிர்களும் நமது விவசாயத்தில் திணிக்கப்பட்டன. 
இதன் விளைவாக கடுமையான நட்டமும், பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டதால் பல மாநிலங்களில் இவ்விவசாயம் பரவலாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 
அதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாரம்பரிய விவசாய முறைகளான ஏர்பூட்டி உழுதல்,பாரம்பரிய விதைகள், உரங்கள் ஆகியவை நீக்கப்பட்டு டிராக்டர்கள் மூலம் உற்பத்தியை அதிகரிக்க, இராசயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் புதிய ரக விதைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. 
இது விவசாயத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. 
விவசாய நிலங்கள் இராசயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் நஞ்சாகிப் போகின. 
இதன்பின்னர் உலகமயமாக்கல் மற்றும்புதிய தாராளமயக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டபின்னர் மரபணு தொழில்நுட்ப புரட்சி என்ற பெயரில் மரபணுரீதியாக மாற்றி அமைக்கப்பட்ட விதைகள் அறிமுகப் படுத்தப்பட்டன.
இவை உலகளவிலான உணவு கார்ப்பரேட்டுகளால் உற்பத்தி செய்யப்பட்டவையாகும். 
இவை மறுஉற்பத்தி செய்யாத மலட்டு விதைகள் மட்டுமின்றி அந்தவிதைகளில் சேர்க்கப்படும் பூச்சி கொல்லிகளால் நிலம் மற்றும் மற்ற தாவரங்களும் நஞ்சாகி விடுகின்றன. 
இந்த அடிப்படையில் பி.டி. பருத்தி, தக்காளி, கத்திரிக்காய் மற்றும்சோயா பீன்ஸ் ஆகியவற்றினால் விவசாயிகள் கடும் நட்டத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. 
இந்த வரிசையில் சமீபத்தில் மரபணு கடுகு விதைகளை களப்பரிசோதனையின்றி அறிமுகப்படுத்த மோடி அரசு முயற்சி செய்தது கடுமையான எதிர்ப்புக்குள்ளானதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மோடி அரசினால் நாடாளுமன்றத்தில் வெள்ளியன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையில், அப்படியே தலைகீழாக பசுமைப்புரட்சி பற்றிவிமர்சனம் செய்யப்பட்டுள்ளது. 
இதுவரை நடந்துள்ள விவசாயத்தின் வெற்றிதான் அதன் பாதிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அதுமட்டுமின்றி, இந்திய விவசாயம் உணவு தானிய விவசாயமாக இருந்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விவசாயம் குறித்த கலப்படமில்லாத பொய்களை கூறியுள்ள ஆய்வறிக்கை, உணவுதானிய விவசாயத்தைக் கைவிட்டு மாற்றாக விவசாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
அந்த மாற்றம் என்பது மரபணு மாற்றுப் பயிர்களை 6 மாதத்திற்குள் அறிமுகப்படுத்துவதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளது.மிகக் குறைவான இடுபொருள்கள், குறைவான நீர்த்தேவை உடைய தானிய உற்பத்தி எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி நடக்க வேண்டும்; 
அப்போதே உணவுக்கான பற்றாக்குறை தீர்க்கப்படும். அதற்கு ஒரே வழி இன்றை உணவுக்கான விவசாய முறைகளை பெருமளவில் மாற்றி மரபணு விவசாய முறைகளை, அதற்கான அச்சங்களை போக்கி, 6 மாதங்களுக்குள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
மரபணு மாற்று முறை பயிர்களே அதிகலாபம்அளிக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளதாகக் கூறியுள்ள ஆய்வறிக்கை, இம்முறையால் மட்டுமே விவசாயத்திற்கான சந்தை விரிவடையும், ஏற்றுமதியும் அதிகரிக்கும்; 
எனவே மரபணு மாற்று பயிர்களுக்கான பரிசோதனைகளை விரைவு படுத்தப்பட வேண்டும். தற்போதைய மரபணு மாற்று பயிர்களுக்கான மதிப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பிலும் ‘சீர்திருத்தங்கள்’ மேற்கொள்ளப்பட்டு இது தொடர்பான அச்சங்கள் போக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மோடி அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் விவசாயம் குறித்த பார்வை மிகவும்அச்சத்தை தருவதாக உள்ளது. 
அது விவசாயத்தை அழித்து பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான மரபணு மாற்று பயிர்களை நாடு முழுவதும் திணிக்க முயற்சிப்பதாக உள்ளது. 
கிராமங்கள் மட்டுமின்றி நகரங்களிலும் வீட்டு மாடி, வீட்டின் பின்புறத்தில் தோட்டம் அமைத்து காய்கறிச்செடிகள் வளர்ப்பது அதிகரித்துள்ளது. காய்கறிச்செடிகளுக்கு கடைகளில் உரங்களை வாங்கிப் பயன்படுத்தாமல், வீட்டிலேயே எளிய முறையில் உரத்தை தயாரித்து இடலாம்.

நாம் தினமும் பயன்படுத்தும் காய்கறிகளின் தோல் கழிவுகளை சிறந்த உரமாகப் பயன்படுத்தலாம். வெங்காயம், உருளைக்கிழங்கு தோல், பயன்படுத்த முடியாத தக்காளி, இலைக்கழிவுகள் போன்றவற்றை வீணாக்காமல் வீட்டின் பின்புறம் குழி தோண்டி அதில் கொட்டி சிறிது மண்ணைத் தூவினால் உரக்குழி தயாராகி விடும். இதே போல பயன்படுத்தப்பட்ட டீத்தூள், முட்டை ஓடுகள், ஆடு, மாடுகளின் சாணம் சிறந்த இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுகின்றன. மாடி வீட்டில் வசிப்போர் உடைந்த மண் சட்டி அல்லது பக்கெட்டில் மண்ணை இட்டு இந்த இயற்கை உரத்தை தயாரிக்கலாம். இக்கழிவு நன்கு வெயிலில் படும்படி இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் கழிவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் ஒன்றாகி மக்கி உரமாகும். இதை தோட்டத்துச் செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்தும் போது அவை நன்கு வளரும். சுவையான காய்கனிகள் கிடைக்கும்.

நிலக்கடலைப் புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, எலும்பு எரு, மாட்டுச்சாணம் ஆகியவற்றை தலா ஒரு கிலோ சேகரித்து ஒரு பெரிய கலனில் இட்டு தண்ணீர், கோமியம் சேர்த்துக் கலந்து வாய்ப்பகுதியை நன்கு மூடி வைக்க வேண்டும். இக்கலவை நொதிக்க 4, 5 நாட்கள் ஆகும். 5 நாட்களுக்குப் பின், ஒரு கோப்பைக் கலவையுடன் 10 கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து நேரடியாக செடிகளின் வேர்ப்பகுதியில் இருந்து ஒரு அடி தள்ளி ஊற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

சூடோமோனாஸ் என்னும் பாக்டீரியம் பவுடர் வடிவில் கடைகளில் கிடைக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவு கலந்து செடிகளின் மேல் தெளிக்கலாம். இதை நான்கு நாற்றுப் பைகளுக்குப் பயன்படுத்தலாம். சூடோமோனாஸ் கலந்து பயன்படுத்தினால் வளரும் செடிகளை பூச்சிகள் அண்டாது.
===============================================================================================
                                               அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா!