மனிதன்X இயந்திர மனிதன்
இன்னும் 30 ஆண்டுகளில் ரோபோக்கள் காரணமாக மனிதர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் தற்போது இயந்திரமயமாகி கொண்டுவருகிறது.
ஜப்பானியர்களே நவீன ரோபோக்களை உருவாக்கினர்.
முதல் ரோபோவை, 1954ம் ஆண்டு ஜார்ஜ் தேவோல் என்பவர் வடிவமைத்தார்.
அதை முதலில் "யுனிமேட்' என அழைத்தனர். இது 1960ம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.
இது வெப்பமான உலோக துண்டுகளை கையாள பயன்படுத்தப்பட்டது.
அதன் பின்னர் யுனிமேட் க்கு ரோபோ என்ற பெயரை சூட்டினார்கள்.
ரோபோ என்பதற்கு, மனிதன் இடும் கட்டளைகளை, நிறைவேற்றும் இயந்திர மனிதன், என பொதுவாக கூறலாம்.
ரோபோ எனும் சொல்லை முதன்முதலில் செக் குடியரசு எழுத்தாளர் காரெல் கேபெக் என்பவர் 1920ம் ஆண்டு தான் எழுதிய நாவலில் பயன்படுத்தினார்.
அவரது ஆர்.யு.ஆர்., எனும் நாடகத்தில் ரோபோ கதாபாத்திரத்தை அறிமுகம் செய்தார்.
மனிதர்கள் போல் தோற்றம் கொண்ட இயந்திரங்கள், தொழிற்சாலையில் வேலை செய்வது போல், காட்சி அமைத்திருந்தார்.
ரோபோ என்பதற்கு செக் மற்றும் ஸ்லாவிக் மொழிகளில் கடும் தொழில், கடும் உழைப்பு என பொருள்.
வீட்டு வேலைகள் செய்ய முதலில் உருவாக்கப்பட்ட ரோபோக்கள் தற்போது பெரிய தொழிற்சாலைகளில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் அவர்கள் பணியைச் செய்ய உருவாக்கப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் தொழிற்சாலைகளில் ரோபோக்கள் பயன் பாடு அதிகரிக்கிறது.
மனிதர்களைப்போல் அதற்கு மாதாமாதம் ஊதியம் வழங்கப்பட வேண்டியதில்லை.
அவ்வப்போது பராமரிப்பு செய்தால் போதும்.
மேலும் தற்போதைய ரோபோக்கள் திறமையை அதிகரித்து வருகின்றனர்.மனித அறிவுடன் போட்டியிடும் அளவு தயாரிக்கப்படுகின்றன.
இன்னும் 3 ஆண்டுகளில் சுயமாக சிந்தித்து, பேசும் ரோபோக்களை பார்க்கப் போகிறோம்.
இவை மனிதனிடம், உரையாடவும், விவாதங்களில் பங்கேற்கவும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா. நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கான ஆய்வை ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் பல்கலை துவக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி சாத்தியமானால், உலகமே வியப்படையும். இந்த புத்தசாலித்தனமான தொழில்நுட்பம், மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும். இது பற்றி அபெர்டீன் பல்கலை தலைமை ஆராய்ச்சியாளர், டாக்டர் வாம்பெர்டோ கூறுகையில், "இதற்கான சாப்ட்வேர் இன்னும் 3 ஆண்டுகளில் கிடைக்கும்,' என நம்பிக்கையுடன் கூறுகிறார். மனிதனின் வழிகாட்டுதல் இல்லாமல், தானாகவே சிந்தித்து, இவை இயங்கக் கூடியவை.
இவை மனிதனிடம், உரையாடவும், விவாதங்களில் பங்கேற்கவும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா. நம்பித்தான் ஆக வேண்டும். அதற்கான ஆய்வை ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீன் பல்கலை துவக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சி சாத்தியமானால், உலகமே வியப்படையும். இந்த புத்தசாலித்தனமான தொழில்நுட்பம், மனிதனின் வாழ்க்கை முறையையே மாற்றிவிடும். இது பற்றி அபெர்டீன் பல்கலை தலைமை ஆராய்ச்சியாளர், டாக்டர் வாம்பெர்டோ கூறுகையில், "இதற்கான சாப்ட்வேர் இன்னும் 3 ஆண்டுகளில் கிடைக்கும்,' என நம்பிக்கையுடன் கூறுகிறார். மனிதனின் வழிகாட்டுதல் இல்லாமல், தானாகவே சிந்தித்து, இவை இயங்கக் கூடியவை.
சுயமாக சிந்திக்கும் ரோபோக்கள் ஆய்வில் உள்ளன.
இதனால் விரைவில் மனிதர்களின் வேலைகள் அனைத்தையும் ரோபோக்கள் கைப்பற்றிவிடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்னும் 30 ஆண்டுகளில் ரோபோக்களால் 50 சதவித மக்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று ரைஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மோஷி வார்தி என்பவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிவியல் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது, அனைத்து வேலைகளையும் மனிதர்களை விட சிறப்பாக இயந்திரங்கள் செய்யும் காலக்கட்டத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கோம்.
அதேவேளையில் எல்லா வேலைகளையும் இயந்திரங்கள் செய்தால், மனிதர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வியை முன்நிறுத்த சமூகத்திடம் நான் வேண்டுகிறேன்.
வரும் 2050ஆம் ஆண்டுக்குள் மனிதர்களின் அனைத்து வேலைகளையும் இயந்திரங்கள் கைப்பற்றிவிடும்.
இதனால் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினர் வேலை இல்லாமல் திண்டாடும் நிலைக்கு தள்ளப்படுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் அத்தகைய சூழ்நிலையை நாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும்.வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதே கூற்றை புகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீபன் ஹோக்கிங்கும் "மனித இனம் சுஅ அழிவை எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது"என்று தெரிவித்துள்ளார் .
மனிதன் உண்டாக்கிய ரோபோக்கள் அவனையே அழிக்கும் நிலை விரைவில்.இதுவரை திரைப்படங்களில் கண்டு கைதட்டிய நாம் சுய சிந்தனையுடனான ரோபோக்கள் வரவை அப்படி வரவேற்க முடியாது.கூடாது.
மனிதனின் கண்டு பிடிப்புகள் அவனையே சு அழிவுக்கு கொண்டு செல்கிறது.
கடவுள் உட்பட்ட தனது கண்டு பிடிப்புகளைக் கண்டு மனிதனே பயப்படும் நிலை உண்டாகிவிட்டது.
ரோபோக்களால் மட்டுமே இயங்கும் மின்னணு தொழிற்சாலை.
=======================================================================================.
"கடவுள் இல்லைன்னு எங்கே சொன்னேன்.இருந்தா நல்லாயிருக்குமேனுதான் சொன்னேன்"
என்ற கமல்ஹாசனின் மற்றொரு கடவுள் பற்றிய கருத்து.
நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறதா இல்லையா?’
என்பதுதான் பலரது முக்கிய கேள்வி ?
இருக்கலாம், இருந்து விட்டுப் போகட்டும்.
ஆனால் நான் அதை பூஜை செய்து கொண்டிருக்க முடியாது. மின்சாரமும் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய சக்திதான்.
அதற்காக நாம் மின் விளக்கு கம்பத்தை எல்லாம் கும்பிடுக் கொண்டாயிருக்கிறோம்?.’"
========================================================================================
இன்று,
பிப்ரவரி-15.
கிமு 399 – மெய்யியலாளர் சாக்கிரட்டீஸ்க்கு மரணதண்டனை நிறைவேற்றம்.
1898 – ஐக்கிய அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் USS Maine கியூபாவில் அவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 260 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வையடுத்து அமெரிக்கா ஸ்பெயின் மீது போரை அறிவித்தது.
1909 – மெக்ஸிகோவிலுள்ள திரையரங்கொன்று தீப்பற்றியதால் சுமார் 250 பேர் பலி.
1942 – இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் ஜப்பானிடம் வீழ்ந்தது. கிட்டத்தட்ட 80,000 இந்திய, ஐக்கிய இராச்சியம், மற்றும் ஆஸ்திரேலியாப் படையினர் போர்க் கைதிகளாகப் பிடிபட்டனர்.
1946 – ENIAC என்ற முதல் தலைமுறைக் கணினி அறிமுகமானது.
1950 – சோவியத் ஒன்றியம், மக்கள் சீனக் குடியரசு ஆகியன பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1989 – ஒன்பது ஆண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து அனைத்து சோவியத் படைகளும் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது.
1994 – ரஷ்யா தார்த்தஸ்தானை ஒரு உட்குடியரசாக இணைத்துக் கொண்டது. தார்த்தஸ்தானின் விடுதலைக்கான போர் ஆரம்பமானது.
1996 – சீனாவின் இண்டெல்சாட் செய்மதி ஒன்று ஏவியவுடனேயே கிராமம் ஒன்றில் வீழ்ந்ததில் பலர் கொல்லப்பட்டனர்.
2003 – ஈராக் யுத்தத்திற்கு எதிராக சுமார் 600 நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. 80 லட்சம் முதல் 3 கோடி பேர்வரை இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியிருப்பர் என மதிப்பிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக இது விளங்குகிறது.
2005 – வீடியோவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, மற்றவர்களின் வீடியோக்களையும் பார்க்க வாய்ப்பளிக்கும் யூ டியூப் ஆரம்பிக்கப்பட்டது.
1564 – கலீலியோ கலிலி, இத்தாலிய வானியலாளர், இயற்பியலாளர் (பிறப்பு 1642)
தத்துவ ஞானி சாக்ரடீஸுக்கு மரண தண்டனை
கி.மு. 470ம் ஆண்டு பிறந்தவர் சாக்ரடீஸ். கிரீஸ் நாட்டின் அப்போதைய தலைநகர் ஏதென்ஸைச் சேர்ந்த இவர் மேற்கத்திய தத்துவ கருத்துக்களின் முன்னோடி அல்லது தந்தை என்று அறியப்படுகிறார்.
அனைத்தையும் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்துப் பார்த்து அதற்கான இயல்பு மற்றும் காரணத்தை காண்பது சாக்ரடீஸின் வழக்கமாக இருந்தது.
பிரச்சனை ஏற்படுத்தும் மக்களிடம் பேசி அவர்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்கள் எதற்காக பிரச்சனை செய்கின்றனர் என்பதன் அர்தத்தை அதன் மூலமே நிரூபிக்கும் ஆற்றல் படைத்தவராக சாக்ரடீஸ் விளங்கினார்.
இவரது கொள்கைகள் மற்றும் செயல்களால் இளைஞர்கள் பலர் கவரப்பட்டாலும், ஒரு கூட்டம் இவரை எதிரியாகவும் தொல்லையாகவுமே பார்த்து வந்தது. மதங்கள் தொடங்கப்பட்ட அந்த காலத்தில், ’கடவுள் யார்…?’ என்று மக்களிடம் கேட்டார்.
அதோடு வானத்தையும், மண்ணையும் ஆராய்சி செய்ய முற்பட்டார். கிரீஸில் அக்காலத்தில் இவை இரண்டுமே கிரேக்கர்களின் கடவுள்களாக திகழ்ந்தன. இதனால் வழக்கு போடப்பட்டு, கி.மு. 339ஆம் ஆண்டு இதே தினத்தன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
நீதிபதி சாக்ரடீஸ் தன் குற்றங்களுக்காக மன்னிப்பு கேட்பார் என்று எதிர்பார்த்த போது, அவர் தான் செய்தது தவறுகள் அல்ல என்று வாதாடினார். இது அங்கு கூடியிருந்த மக்களையும், நீதிபதியையும் எரிச்சலூட்டியது.
இதனால், இவருக்கு மன்னிப்பு வழங்குவதா அல்லது மரண தண்டனை வழங்குவதா என்று ஒரு வாக்கு பதிவு நடந்தது.
இந்த வாக்குப் பதிவின் இறுதியில் இவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
ஹெம்லாக் மரத்து விஷம் குடித்து சாக வேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டது.
.சிறையில் இசைக்கருவி வல்லுநர் ஒருவரிடம் இசை கற்றுக்கொண்டார் அவர் .சாகிற பொழுத எதற்கு இது ?என கேட்டதற்கு ,”சாவதற்கு முன் புதிதாக எதையாவது கற்க வேண்டும் !”என்றார் .
விஷம் கொடுக்கப்பட்டதும் ,வாங்கி சிரித்துக்கொண்டே அதை பதிவாக எழுத சொன்னார் .”அருந்திவிட்டேன் ;கால்கள் மரத்து போகிறது .இதயம் படபடக்கிறது .மயக்கமாக இருக்கிறது ;போர்வையை போர்த்தி படுத்துக்கொள்கிறேன் “என தன் மரணத்தை பதிவு செய்த முதல் ஆள் சாக்ரடீஸ் தான் .
சாவதற்கு முன்மனைவியிடம் கூறிய கடைசி வார்த்தைகள் ,” எதிர்வீட்டுகாரனுக்கு கோழிக்குஞ்சு கடன் ,மறக்காமல் கொடுத்து விடு !”
என்பதுதானாம்.
=========================================================================================