50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி
பிஎஸ்என்எல் நிறுவனம் 50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி டேட்டா வழங்க உள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஸ்மார்ட் போன்களில் அதிவேக இணைய சேவையை வழங்கும் வகையில் 3ஜியை அடுத்து 4ஜி சேவையையும் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் திடீரென தனது 3ஜி சேவையை 20 ஜிபி 50 ரூபாய்க்கு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் இணைய சேவை வழங்குவதை இலக்காக கொண்டு மத்திய அரசு மானியத்துடன் சலுகை விலையில் இந்த 3ஜி சேவை வழங்க உள்ளதாகவும், இதை ஒருவரே பயன்படுத்தலாம் அல்லது நாடு முழுவதும்நண்பர்கள் 4 பேர்கள் வரை இதை பகிர்ந்து கொள்ளும் வகையில் வழங்கலாம் எனவும் பிஎஸ் என் எல்,திட்டமிட்டுள்ளதாம்.
ஊரக பகுதிகளில் உள்ளவர்களில் குடும்பத்தில் ஒருவர் இந்த பேக்கேஜ் பெற்று, அதை 4 பேருக்கு பகிர்ந்து உபயோகிக்கலாம்.
இச்சலுகை பெற இவர்கள் பிஎஸ்என்எல் செல்ப்கேர் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் .
பிஎஸ்என்எல் அதிகாரிகள் இதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
காரணம் இதற்கு டிராய் விதிகள்படி அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
தற்போது ஏர்டெல் ,ஏர்செல் ,ஐடியா,வோடோபோன் போன்ற 3ஜி வழங்கும் நிறுவனங்கள் ஒரு ஜிபி 3ஜி டேட்டாவுக்கு ரூ.160 முதல் ரூ.250 வசூலித்துவருகின்றன.
ஆனால் அதைவிட 4ல் ஒரு பங்கு குறைவான கட்டணத்தில் 20 மடங்கு கூடுதல் டேட்டா வழங்குவது பிஎஸ்என்எல்லுக்கு வாடிக்கையாளர்களை அதிகமாக இழுக்க உதவும் .ஆனால் டிராய் மூலம் மற்ற நிறுவனங்கள் இதற்கு முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று,
ஏப்ரல்-22.
- லெனின் பிறந்த தினம்(1870)
- சர்வதேச புவி நாள்
- பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது(2006)
- ஐரோப்பிய போர்ச்சுகீசியரான பேதுரோ கப்ரால் முதன் முறையாக பிரேசிலை கண்டார்(1500)
=====================================================================================