ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

ஏப்ரல் தேவதைகளின் மாதம்..


ஏப்ரல் ஆங்கில நாட்காட்டியின்நான்காவது மாதமாகும். 30 நாள்களைக் கொண்ட நான்கு மாதங்களில்

 ஏப்ரலும் ஒன்று .


ஏப்ரல் மாதம் வடக்கு அரைக்கோளத்தில்இளவேனிற்காலத்திலும், தெற்கு 
அரைக்கோளப் பகுதிகளில்இலையுதிர்காலத்திலும் வருகிறது.

ரோமானிய நம்பிக்கைகளின் படி ஏப்ரல் மாதம் வீனசு தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது. 
கிரேக்கர்கள் வீனசை 'அஃப்ரோடைட்' என்றே அழைக்கின்றனர். 
அதன்படி வீனசு தேவதையின் மாதம் 
எனப் பொருள் தரும் "அப்லோரிஸ்" என்ற சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது .

முக்கிய தினங்கள்

1 முட்டாள்கள் தினம்.
2 சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்.
2 அறிவுத்திறன்
(ஆடிஸம்) குறைபாடு விழிப்புணர்வு தினம்.

5 இந்தியக் கடல் 
போக்குவரத்து தினம்.
7 உலக பொது சுகாதார நாள்.
10 உலக ஹோமியோபதி தினம்.
18 பாரம்பரிய தினம்.
22 பூமி தினம்.
23 உலக புத்தக தினம்.
25 மலேரியா நோய் விழிப்புணர்வு தினம்.
29 உலக நடன தினம்.

 விடுதலை தினம்  கொண்டாடும் நாடுகள்

4 - ஸெனகல்
9 - ஜியார்ஜியா
15 - இஸ்ரேல்
17 - சிரியா
18 - ஜிம்பாப்வே
24 - அயர்லாந்து
28 - ஜப்பான்
 பிரபலங்களின் பிறந்த தினங்கள்
1, 1578 வில்லியம் ஹார்வி - ரத்த ஓட்டம் பற்றி ஆராய்ந்த விஞ்ஞானி.
3, 1914 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானெக்ஷா - இந்தியாவின் முதல் ராணுவ தளபதி.
5, 1827 ஜோசப் லிஸ்டர் - ஆன்டிசெப்டிக் மருத்துவ
முறையைக் கண்டறிந்தவர்.
6, 1815 மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை - 
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் இயற்றிய தமிழ் பேரறிஞர்.
7, 1770 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் - ஆங்கிலக் கவிஞர்.
7, 1920 ரவிசங்கர் - சித்தார் இசைக் கலைஞர்.
10, 1847 ஜோசப் புலிட்சர் - இலக்கியம், இசை, நாடகம் போன்ற துறைகளில் சிறந்தோர்க்கு "புலிட்சர் விருது' வழங்கப்படுகிறது.
13, 1930 பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - திரைப்படப் பாடலாசிரியர்.
16, 1867 வில்பர் ரைட் - விமானத்தைக் கண்டுபிடித்த 
ரைட் சகோதரர்களில் ஒருவர்.
16, 1889 சார்லி சாப்ளின் - உலகப் புகழ் நகைச்சுவை நடிகர்.
22, 1870 விளாதிமிர் லெனின் - சோவியத் ரஷ்யாவின் 
முன்னாள் (மறைந்த) தலைவர்.
23, 1564 வில்லியம் ஷேக்ஸ்பியர் - புகழ்பெற்ற ஆங்கில 
நாடகாசிரியர்.
25, 1874 மார்க்கோனி - ரேடியோவைக் கண்டறிந்த 
விஞ்ஞானி.
25, 1912 பேராசிரியர் மு. வரதராசனார் - முன்னாள் பல்கலைக்கழகத் துணை வேந்தர்.
28, 1937 சதாம் ஹுசைன் - ஈராக் முன்னாள் அதிபர்.
29, 1848 ராஜா ரவிவர்மா - புகழ்பெற்ற ஓவியக் கலைஞர்.

29, 1891 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

நினைவு தினங்கள்
4, 1968 மார்டின் லூதர் கிங் - அமெரிக்கர். நீக்ரோ மக்கள் 
உரிமைக்காகப் பாடுபட்டவர்.
5, 2007 லீலா மஜூம்தார் - வங்காள எழுத்தாளர்.
8, 1857 மங்கள் பாண்டே - சுதந்திரப் போராட்ட வீரர்.
8, 1973 பிக்காசோ - ஓவியர்.
10, 1995 மொரார்ஜி தேசாய் - முன்னாள் பாரதப் பிரதமர்.
12, 1817 சார்லஸ் மெஸ்ஸியர் - வால் நட்சத்திர ஆராய்ச்சி 
விஞ்ஞானி.
18, 1955 ஐன்ஸ்டீன் - பிரபஞ்ச ஆராய்ச்சியாளர், விஞ்ஞானி.
14, 1962 எம். விஸ்வேஸ்வரய்யா - கிருஷ்ணராஜசாகர் அணை கட்டிய பொறியாளர்.
15, 1990 எஸ். பாலசந்தர் - வீணை வித்வான், தமிழ்ப்பட 
இயக்குநர்.
19, 1882 சார்லஸ் டார்வின் - விஞ்ஞானி.
21, 1978 டி.ஆர். மகாலிங்கம் - தமிழ்த் திரைப்பட நடிகர், 
பாடகர்.
21, 2013 சகுந்தலா தேவி - கணித மேதை.
21, 1964 பாரதிதாசன் - புரட்சிக் கவிஞர்.
22, 2013 லால்குடி ஜெயராமன் - வயலின் மேதை.

23, 1994 ரிச்சர்ட் நிக்ஸன் - அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி.
23, 1992 சத்யஜித்ரே - வங்காளத் திரைப்படத் தயாரிப்பாளர்.
26, 1920 ஸ்ரீனிவாச ராமானுஜன் - கணித மேதை.
28, 1942 உ.வே. சாமிநாத அய்யர் (உ.வே.சா.) ஓலைச் 
சுவடிகளிலிருந்த நூல்களைச் சேகரித்து அச்சிட 
உதவிய மேதை.
29, 1980 ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் - ஆங்கிலப்பட இயக்குநர்.
ஏப்ரல் மாத முக்கிய நிகழ்வுகள்
1935 - இந்தியாவில் ரிசர்வ் வங்கி துவக்கப்பட்டது.
1912 - இந்தியத் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டது. முன்னர் கொல்கத்தா
தலைநகராக இருந்தது.
1936 - பீகாரிலிருந்து ஒடிசா பிரிக்கப்பட்டது.
1985 - பயிர் பாதுகாப்பு (இன்சூரன்சு) அமலாக்கப்பட்டது.
2012 - வங்கிக் காசோலைகள், கேட்பு வரைவோலைகள் 6 மாத காலத்திலிருந்து 3 மாத காலமே செல்லுபடி
யாகும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு செய்தது.
2, 1970 அசாம் மாநிலத்திலிருந்து பிரிந்து மேகலாயா
உருவானது.
4, 1973 ரஷ்யா - சல்யூட் - 2 விண்கலத்தை விண்ணில்
செலுத்தியது.
4, 1991 சென்னை - லண்டன் நேரடி விமான சர்வீஸ்
துவங்கியது.
6, 1805 இந்திய கோஹினூர் வைரம் இங்கிலாந்து சென்றது.
6, 1896 முதல் ஒலிம்பிக் போட்டி ஏதென்ஸ் நகரில் நடந்தது. 13 நாடுகள் பங்கேற்றன.
6, 1942 இந்தியப் பகுதி மீது ஜப்பான் விமானம் குண்டு வீசியது.

7, 2005 இந்தியா - பாகிஸ்தான் - "ஸ்ரீநகர் டூ முஸôபர்பாத்' பேருந்து போக்குவரத்து ஆரம்பம்.
10, 1790 கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு  காப்புரிமையை அறிமுகம் .
11, 1953 சென்னை நகரில் "ட்ராம் சர்வீஸ்' நிறுத்தப்பட்டது.
11, 1961 முதன்முதலாக விண்வெளியில் வாஸ்டாக் விண்கலத்தில் ரஷ்யாவின் யூரி ககாரின் பயணம் செய்தார்.
12, 2007 இந்தியாவில் அக்னி-3 - 3000 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை
செய்யப்பட்டது.
13, 1919 அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலாபாக் படுகொலை டயர் என்பவரால் நடத்தப்பட்டது.
13, 1948 ஒடிசாவின் தலைநகராக புவனேஷ்வர் அறிவிக்கப்
பட்டது. முன்னர் "கட்டாக்' தலைநகராக இருந்தது.
14, 1912 டைட்டானிக் கப்பல் 1052 பயணிகளுடன் இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவில்
பனிப்பாறையில் மோதி உடைந்தது.
15, 1980 ஆறு வங்கிகள் தேச உடைமையாக்கப்பட்டன. முன்னர் 14 + 6ம் ஆக 20 வங்கிகளும், ஸ்டேட்பேங்க் - 7-ம் ஆக 27 வங்கிகள் தேச உடைமையாக உள்ளன.
17, 1952 இந்தியாவில் முதல் மக்களவை அமையப் பெற்றது.
19, 1971 ரஷ்யா சல்யூட்-1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது.
19, 1975 இந்தியாவில் இஸ்ரோ - ஆர்யபட்டா செயற்கைக் கோளுடன் தனது விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது.
19, 2012 இந்தியா - அக்னி-5 கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் வெற்றி.
20, 1770 கேப்டன் ஜேம்ஸ் குக் - ஆஸ்திரேலியா பகுதியில் நியூ சௌத்வேல்ஸ் பகுதியைக் கண்டுபிடித்தார்.
20, 1902 மேடம் கியூரி தம்பதியினர் ரேடியத்தைக் கண்டுபிடித்தனர்.
20, 1960 ஏர் இண்டியா ஜெட் விமானம் முதன்முதலாக லண்டன் சென்றது.
21, 1995 இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை, தரையிலிருந்து குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும் சோதனையில் வெற்றியடைந்தது.
26, 1962 அமெரிக்காவின் - ரேஞ்சர் 4 நிலவில் இறங்கியது.
27, 1918 இந்தியாவில் முதன்முதலாக சென்னையில், திரு.வி.க.வும், வாடியாவும் "தொழிலாளர் சங்கம்' அமைப்பை நிறுவினர்.