நீதியரசர் மகேந்திர பூபதி .


பி.ஆர்.பி., உட்பட, மூன்று பேரை விடுதலை செய்து, மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி, மார்ச், 29ல் பிறப்பித்த உத்தரவு:கிரானைட் முறைகேடு மேல்முறையீட்டு வழக்குகளில், உயர்நீதிமன்ற கிளையின், இரு தனி நீதிபதிகளின் உத்தரவுகள் வேறுபட்டதாக இருந்தது.மூன்று வழக்குகளில், ஒரு விதமாகவும், 40 வழக்குகளில் ஒரு விதமாகவும், இந்நீதிமன்றம் வழக்குகளை விசாரணைக்கு எடுக்காத நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் வேறுபாட்டினை ஆராய இயலாது.கீழமை நீதிமன்றம் தன் முன்னுள்ள ஆவணங்கள் அடிப்படையில் செயல்பட முடியும். அச்செயலானது, 'சட்டம் அறிந்தவர் துாங்குவது போல் நடிப்பவராக உள்ளார்' என்று காட்டும் நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதி சி.டி.செல்வத்தின் தீர்ப்பை மறைத்து, இந்நீதிமன்றத்திற்கு அரசு தரப்பு களங்கம் ஏற்படுத்தியுள்ளது.எதிரிகள் மீதான குற்றச்சாட்டிற்கு, கலெக்டர் அபராதம் மட்டும் விதிக்கலாம். மனுவை மதுரை கலெக்டர் தாக்கல் செய்வதற்கு பதில், 'நான் தான் கலெக்டர்' என, அன்சுல் மிஸ்ரா தாக்கல் செய்துள்ளார்.இதனால் எதிரிகளை வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன். பொய்யான ஆதாரங்களை சமர்ப்பித்த குற்றத்திற்காக அன்சுல் மிஸ்ரா, உடந்தையாக இருந்த அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா மீது குற்ற வழக்கு தாக்கல் செய்ய அரசிடம் முன் அனுமதி பெற உத்தரவிடுகிறேன் இவ்வாறு, அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
மகேந்திர பூபதி, 45, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடுவைச் சேர்ந்தவர். மதுரை சட்ட கல்லுாரியில், பி.எல்., முடித்தார். ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்தார். சிவில் நீதிபதி பணிக்கான தேர்வில்வெற்றி பெற்று, ஒன்பதுஆண்டுகளுக்கு முன், மாஜிஸ்திரேட் பொறுப்பை ஏற்றார். கன்னியாகுமரி, தக்கலை, சிவகங்கை, இளையான்குடியில் பணிபுரிந்துள்ளார். 2013 மே மாதம், மேலுாரில் பொறுப்பேற்றார். மகேந்திர பூபதி குறித்து, தொடர்ந்து உயர் நீதிமன்றத்திற்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தன. இவரது மனைவி ஆசிரியை. மகேந்திர பூபதியின் சகோதரரும் மாஜிஸ்திரேட்டாக உள்ளார். கிரானைட் வழக்குகளில், துவக்கத்தில் இருந்தே குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக இவர் செயல்பட்டதாகவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னும், விசா-ர-ணைக்கு எடுக்காமல், காலம் தாழ்த்தி வந்ததாகவும், சர்ச்சைகள் எழுந்தன.
பி.ஆர்.பி., நிறுவனம் உட்பட, பல நிறுவனங்கள் மீது தொடரப்பட்ட கிரானைட் முறைகேடு வழக்குகளில், மூன்று வழக்குகள் தொடர்பான குற்றப் பத்திரிகைகளில், கிரானைட்உரிமையாளர்கள் மீது, திருட்டு குற்றச்சாட்டை மட்டும் விசாரணைக்கு ஏற்று, கனிமவளச் சட்டம், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டம், வன்கொடுமைச் சட்டம் உட்பட, பல பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு ஏற்க, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி மறுத்தார்.இதையடுத்து, போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை, 'குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுக்களை, விசாரணைக்கு ஏற்க வேண்டும்' என, உத்தரவிட்டது. 'இந்த உத்தரவை மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி நிறைவேற்றவில்லை' என்றும், உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான மனுவை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ், 'துாங்குபவர்களை எழுப்பலாம்; துாங்குவது போல் பாவனை செய்வோரை எழுப்ப முடியாது. மேலுார் மாஜிஸ்திரேட், இரண்-டா-வது வகையைச் சேர்ந்தவர். குற்றப்பத்திரிகையில் உள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும், விசாரணைக்கு எடுக்க வேண்டும். மாஜிஸ்திரேட் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன்' என, உத்தரவிட்டார்.
இரண்டு வழக்குகளில், பி.ஆர்.பி., நிறுவன அதிபர், பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார், திருப்புத்துார் சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்து, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, மார்ச், 29ல் உத்தரவிட்டார். இது, பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியிடம், மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பஷீர்அகமது, தலைமை குற்றவியல் நடுவர் சரவணன் நேரில் விசாரணை நடத்தினர். இரண்டு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அதன்பின், உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்பினர்.

அதைத்தொடர்ந்து, மகேந்திர பூபதியை, சஸ்பெண்ட் செய்து, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கலையரசன், உத்தரவு பிறப்பித்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு, மேலுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி, வழக்கம் போல நீதிமன்ற பணிகளை துவக்கினார். காலை, 11:15 மணிக்கு, மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பஷீர் அகமது, தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன், விரைவு நீதிமன்ற நீதிபதி பாரதிராஜா, மேலுார் நீதிமன்றம் சென்றனர். சஸ்பெண்ட் உத்தரவை மகேந்திர பூபதியிடம் அளித்தனர். மேலுார் நடுவராக, கூடுதல் பொறுப்பை பாரதிராஜா ஏற்றார்.
======================================================================================
இன்று,
ஏப்ரல் -02.
  • உலக ஆட்டிசம் தினம்
  • உலக சிறுவர் நூல் தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)
  • அமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது(1902)
  • போக்லாந்து தீவுகளை அர்ஜெண்டீனா முற்றுகையிட்டது(1982)

=======================================================================================








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?