சனி, 23 ஏப்ரல், 2016

ஜெயலலிதா பிரச்சாரம் நேரலை.

மக்களை வெளியே சுட்டெரிக்கும் வெயிலில் வராதீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆனால் 8 பேர்கள் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்து உயிரை வெயிலுக்கு கொடுத்தப்பின்னரும் கொளுத்தும் வெயிலில் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தனது நண்பகல் பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டு  இருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டங்கள் நடப்பதை பற்றி ஒரு நேரலை.


காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து காஞ்சிபுரம் அருகே உள்ள வாரணவாசியில் கடந்த 18-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா பிரசாரம். மாலை 3 மணிக்கு பிரசாரக் கூட்டம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 
ஆனால், விருத்தாசலம்,சேலம்  பிரசாரக் கூட்டத்தில் வெயில் காரணமாக சிலர்  உயிரிழந்ததைத் தொடர்ந்து மாற்றுக்கட்சியினர் மற்றுமின்றி பொது மக்களிடமும்  கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஜெயலலிதா கூட்டத்துக்கு ஆள்பிடிப்பதில் சிரமம் உண்டானதால் காஞ்சிபுரம் கூட்டத்தை மாலை 5 மணிக்கு என மாற்றிவிட்டனர்.

ஆனாலும் 2 மணி உச்சிவெயிலில் வாரணவாசிக்கு மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பஸ், லாரி,வேன்களில் ஏற்றிவரப்பட்ட பெண்கள் மேடைக்கு ஒரு கி.மீ தொலைவில்  இறக்கிவிடப்பட்டனர். சுட்டெரிக்கும் வெயிலில் நிழலைத் தேடி பெண்கள் வேகமாக ஓடினர். கைக்குழந்தைகளோடு வந்தவர்களின் நிலைதான் பரிதாபம். ஆங்காங்கே இருந்த சிறிய மரங்களில் இளைப்பாறியவர்களை, ‘சீக்கிரம் கிளம்புங்க…’ என்று விரட்டி  அ.தி.மு.க வினர் இழுத்துச்சென்றனர்.

ஜெயலலிதா படம் போட்ட பச்சைத்தொப்பி, குளிர்பானம், தண்ணீர் பாக்கெட், பிஸ்கட் பாக்கெட் அடங்கிய ‘கிட்’ அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. முன்பக்கத்தில் வயதானவர்களே அதிகம் இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெரிதும் அவதிப்பட்டனர். 3 மணிக்கு முதல்வருக்கான இருக்கை மேடைக்கு வந்தது.
மக்கள் வெயிலில் காத்திருந்து உயிர்களை கொடுக்க
 ஜெயா ஹெலிகாப்டரில் இருந்து காருக்கு இறங்க
படிக்கட்டுக்கு முக்காடு.

. மேடைக்கு முன்புறம் இடது பக்கத்தில் உள்ள காலி இடங்களில் ஆண்கள் அமர்ந்திருந்தார்கள். இது பெண்களுக்கான இடம் என ஆண்களை வெளியேற்ற, காவல் துறைக்கு மைக்கில் அறிவிப்புசெய்யப்பட . காவல்துறையினர்  பெண்கள் கூட்டத்தை அங்கே திணித்தனர். 
உள்ளே போனவர்கள் வெளியே போகாதவாறு ஆங்காங்கே தடுப்புகளில் காவல் துறையினர் நிறுத்தப்பட்டனர். முன்பக்கம் அமர வைக்கப்பட்ட பெண்கள், எளிதில் வெளியே செல்லாத முடியாதபடி ஐந்தடி உயரத்தில் இரும்பு வேலியை அமைத்தனர். 
இதுவரை இல்லாத அளவுக்கு தடுப்புகளில் பெரிய பெரிய இரும்பு பைப்புகள் பயன்படுத்தப்பட்டன.
அதிமுகவினரை விட  காவல் துறையின் கெடுபிடிகளில் கொண்டுவரப்பட்டவர்கள்  அலைக்கழிக்கப்பட்டு, ஒருவழியாக இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.

அ.தி.மு.க தலைமையில் இருந்து வந்தவர் ஒருவர்  ஒவ்வொரு வேட்பாளரிடமும் ஒரு கவர் கொடுத்து அனுப்பினார்கள். மேடைக்கு முன்பு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேட்பாளர்கள் அந்த கவருடன் அமர்ந்திருந்தனர். முதல்வர் வரும்போது எப்படி நடக்க வேண்டும் என்று வேட்பாளர்களிடமும் விரிவாக சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு முறை ரிகர்சலும் நடந்தது.

ஹெலிபேடை சுற்றி இரண்டு தடுப்புகள் அமைத்திருந்தார்கள். மாலை 4.00 மணிவரை ஹெலிபேடு அருகே யாருக்கும் அனுமதி இல்லை. 4.30 மணியிலிருந்து உள்ளே தொண்டர்கள் அனுமதிக்கப் பட்டனர். 5.25 மணிக்கு இரண்டு  ஹெலிகாப்டர்கள் வந்தன. 
ஹெலிகாப்டரில் வந்த ஜெயலலிதாவும் , சசிகலாவும் கீழிறங்கினார்.
உதவியாளர் பூங்குன்றன் ஜெயலலிதா மேடைக்கு செல்லும் காரில் அவருக்கு தேவையான சில  பொருட்களை காரில் ஏற்றினார். பணிப்பெண்கள் பின் இருக்கையில் அமர, மேடையை நோக்கி கார் புறப்பட்டது. அடுத்த 10-வது நிமிடத்தில் ஹெலிகாப்டரும் புறப்பட்டுச் சென்றது.ஒரு ஹெலிகாப்படர் ஜெயலலிதா வர மற்றொன்று ஸ்டெப்னியாம்.

பின்பக்கம் வழியாக மேடைக்கு வந்த ஜெயலலிதா, அவருக்கான அறையில் தங்கினார். முதல்வருக்கு மட்டுமே மேடை. வழக்கம்போல மேடைக்கு முன்பக்கத்தில் ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் தொண்டர்களை நோக்கி வேட்பாளர்கள் அமர்ந்தனர். 
இரண்டடுக்கு மேடையில் மேல்தளம் ஜெயலலிதா நாற்காலியில் அமர்ந்து பேச .அவருக்கு வலது பக்கம் 2ஸ்பிளிட் ஏசி.4 இரண்டு டன் ஏசி .இதே போல் இடப்புறமும்.மேடையில் வீசிய குளிர்காற்று கீழ் மேடையில் இருந்த வேட்பாளர்களை தாக்கி விட்டு மீதி ஊடகர்கள் பகுதி வரை வந்து குளிர்வித்தது.
 முதல் வரிசையில் நாற்காலியில் மேடைக்குப் பக்கவாட்டில் இருந்து வந்த சசிகலா, அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் வி.ஐ.பி-க்கள் அமரும் இருக்கையில் அமர்ந்தார். ஹெலிகாப்டர் பயணத்தால் ஏற்பட்ட அசதி போக தனி அறையில் ஓய்வெடுத்த ஜெயலலிதா 6 மணிக்கு மேடைக்கு வந்து தொண்டர்களை நோக்கிக் கையசைத்தார். 
பின்பு, தனது இருக்கையில் உட்கார்ந்து பிரசார உரையை வாசிக்கத் தொடங்கினார். ஜெயலலிதா  பேச ஆரம்பித்த 15-வது நிமிடத்தில் இருந்தே கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது. 
பிரியாணி,500 ரூபாய், கொடுத்ததுடன் ஆண் குடி மகன்களுக்கு சரக்கு, சைடிஷ் என ஒரு மினி பாரையே மைதானத்தில் உருவாக்கி இருந்தார்கள்.
முதல் மூன்று பிரச்சாரக் கூட்டத்துக்கு வர கூலியாக பிரியாணியும் 200 ரூபாய்மட்டும்தரப்பட்ட நிலையில் உயிர் பலி உண்டானதால் ஆட்கள் திரட்ட சிரமம் உண்டானதால் கூலி 500 ஆனதாக அதிமுக நிர்வாகி கூறினார்.
 ஜெயலலிதா மதுவிலக்குப் பற்றிப் பேசியபோது, நிதானமாகக் குடித்துக் கொண்டே எல்.இ.டி திரையில் பார்த்துக் கொண்டிருந்தனர். 
போதை தலைக்கு ஏறிய நிலையில் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதை காவல் துறையினர் கண்டுகொள்ளவே இல்லை.  

ஜெயலலிதா பேச ஆரம்பித்த 20 நிமிடங்களில் பாதி கூட்டம் காணமல் போக  காலி சேர்களை ஒன்றன்மீது ஒன்றாக உயரமாக அடுக்கி அதன் மீது ஏறி தொண்டர்கள் உற்சாகப்பானம் காவல்துறையினர் பாதுகாப்பிலேயே அருந்த துவங்கினர்.சுற்றி,சுற்றி வந்த ஜெயா தொலைக்காட்சி காமிராவை கண்டு கொள்ளவில்லை.ஜெயா தொலைக்காட்சி காமிராவும் இது போன்ற காட்சிகளை நல்ல முறையில் "எடிட்"செய்து ஒளிபரப்பினர். 
பின்பக்கத்திலிருந்து தொண்டர்கள் வெளியேறியதை காவல் துறையினராலும், கட்சியினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. 
ஒரு மணி நேரம் கழித்தும் முதல்வர் பேசிக்கொண்டே இருந்தார். இந்த ஒரு மணிநேர பேச்சை யாருமே கேட்டதாக தெரியவில்லை.
ஜெயலலிதா பேசி முடிக்கும் முன்பே 75 சதவிகித தொண்டர்கள் வெளியேறி விட்டார்கள்.
 ஜெயலலிதா பிரசாரம் முடிந்ததும் அறைக்குச் சென்ற பேசிய களைப்பு தீர ஓய்வெடுத்து விட்டு 15 நிமிடங்கள் கழித்துதான் அங்கிருந்து புறப்பட்டார். 
பாதுகாப்புப் பணிக்காக 15 மாவட்டங்களில் இருந்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் வந்திருந்தனர். 
மூன்று நாட்களுக்கு முன்பே வந்த இவர்கள், இங்குள்ள கல்யாண மண்டபங்கள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர். 

பாதுகாப்புப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகள் அடிக்கடி கூட்டம் போட்டு காவலர்களை விரட்டிக்கொண்டிருந்தனர்.
மேடைக்கும் ஹெலிபேடுக்கும் 400 மீட்டர் தூரம். மேடைக்கு உள்ளே யார் வருகிறார்கள் எனக் கண்காணிக்க கேமராக்களை வைத்திருந்தார்கள்.

நெடுஞ்சாலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கம்பங்களில் கட்டப்பட்ட சிறிய அளவிலான பேனர்களை, தேர்தல் பணியாளர்கள் கழட்டிவிட்டனர். ஆனால்  அகற்றிய பேனர்களைத் திரும்பவும் அ.தி.மு.க-வினர்.அதிகாரிகள் முன்பே கட்டி வைத்தனர். 
லாரிகளில் ஆண்கள் ,பெண்கள் அடைத்து கொண்டுவரப்பட்டு இறக்கினர்.அங்கே வைத்தே பிரியாணி பொட்டலம்,குடிநீர் பாக்கெட்கள்  ,தொப்பி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த செலவுகள்,விதி மீறல்கள்,இறப்புகள்  தேர்தல்  ஆணைய கணக்கிலேயே வரவில்லை.காரணம் இந்த தாங்கள் இப்படியெல்லாம் விதி மீறல்கள் செய்தோம் என்று   ராஜேஷ் லக்கனிக்கு அதிமுகவினர் சொல்லாததுதான்.ஜெயலலிதா,விஜயகாந்து போல் ராஜேஷ் லக்கனிக்கு செய்தி இதழ்கள் படிப்பது,தொலைக்காட்சிகள் பார்ப்பது போன்ற வழக்கமும் கிடையாது போல் தெரிகிறது.
=====================================================================================
இன்று,
ஏப்ரல்-23.
  • புனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டப்பட்டது(1639)

  • சர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்'

  • ஆங்கில நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்(1616)

  • உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே இறந்த 
  • தினம்(1992)

  • எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1984)=====================================================================================
100 இல் ஒருவர்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழ், உலகில்2016ஆண்டின்  செல்வாக்கான 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்இந்தியாவை சேர்ந்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 


ஒவ்வொரு ஆண்டும்  மிகவும் புகழ்பெற்ற 100 பிரபலங்கள் பட்டியலை அமெரிக்காவின் டைம் நாளிதழல் வெளியிட்டு வருகிறது.
ரகுராம் ராஜன்
அதேபோல் இந்த ஆண்டு பிரபல பட்டியலில்  ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிறுவனர்கள் பின்னி பன்சால், சச்சின் பன்சால் ஆகிய இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். 
ரகுராம் ராஜனை 'பொருளாதார தீர்க்கதரிசி' என்று வர்ணித்துள்ள டைம் நாளிதழ், "உலக பொருளாதார பின்னடைவை முன்பே உணர்ந்து அறிவித்தவர் இவர் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இப்பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், அமெரிக்க குடியரசு கட்சி தலைவர் டொனால்டு டிரம்ப், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் சூக்கர்பர்க், ஆங்சான் சூகி, பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் சுனிதா நரைன், ஆலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
 நடிகை பிரியங்கா சோப்ரா, டைம் இதழின் ஆறு அட்டைப் படங்களின் ஒன்றில் இடம்பெற்றுள்ளார். ஆனால் உலக சுற்றுப்பயணம் புகழ்  இந்திய பிரதமர் மோடிக்கு இந்த 100 பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.சென்ற முறை பெற்ற இடத்தை தவறவிட்டு விட்டார்.இதன் மூலம் உலக அளவில் மூட்டி செல்வாக்கு குறைந்து விட்டது தெரிய வருகிறது.

                                        எரிக்கும் கோடையில் தேவை இப்படியான இடம்.