கட்டளை குரல்
ஆண்ட்ராய்ட் போன்களில் உள்ள முக்கியமான வசதி நம்முடைய குரல் மூலமாக போனுக்கு கட்டளையிட்டு இயக்கும் “கூகுள் நவ்” செயல்பாடாகும்.
இது போன்ற வசதி ஐபோன் சாதனங்களில் “சிறி” என்றும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் போன்களில் “கோர்டனா” என்றும் வழங்கப்படுகிறது.ஆண்ட்ராய்ட் போன் உங்களிடம் இருந்தால் அதில் “கூகுள் நவ்” செயலியும் இணைந்தே இருக்கும்.
இச்செயலியை பயன்படுத்த முதலில் உங்கள் குரலை கூகுள் நவ் செயலியில் முதலில் பதிந்து வைக்கவேண்டும்.இதனை செயல்படுத்த உங்கள் போனில் இணைய இணைப்பு அவசியமாகும். இணைய இணைப்பை ஏற்படுத்திய பின்னர் கூகுள்செயலியை திறந்து Settings > Voice > பகுதிக்கு செல்லவும்.
இச்செயலியை பயன்படுத்த முதலில் உங்கள் குரலை கூகுள் நவ் செயலியில் முதலில் பதிந்து வைக்கவேண்டும்.இதனை செயல்படுத்த உங்கள் போனில் இணைய இணைப்பு அவசியமாகும். இணைய இணைப்பை ஏற்படுத்திய பின்னர் கூகுள்செயலியை திறந்து Settings > Voice > பகுதிக்கு செல்லவும்.
அங்கு “Ok Google” detectionனநவநஉவiடிn என்றிருப்பதை தேர்வு செய்யவும்.புதிய திரை தோற்றமளிக்கும். அதில் From any screen என்பதை செயல்படுத்தவும்.
அடுத்ததாக “டீம ழுடிடிபடந” என்பதை உங்கள் குரலுக்குஏற்ப அமைத்துக் கொள்ளும் வசதி கிடைக்கும்.அப்போது OK Google
என்பதை மூன்று முறை கூறவேண்டும். உங்கள் குரல் பதிவு செய்யப்பட்டதற்கான தகவல் வந்தவுடன், குரல் வழிக் கட்டளை வசதி செயல்பாட்டிற்கு வந்துவிடும்.
இனி நீங்கள் திரையில் காட்டப்படும் மைக் ஐகானை கிளிக் செய்து “Ok Google” என்று கூறினால் உங்கள்கட்டளையை ஏற்று செயல்பட இச்செயலி தயாராகி விடும்.
இதில் நாம் குரல் கட்டளைகளை இடும் போது ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளையே பயன்படுத்தமுடியும்.
ஆங்கிலத்தை தேர்வு செய்யும்போது நாட்டுக்கு நாடு உச்சரிப்பு மாறுபடுவதால் இந்திய ஆங்கிலத்திற்கு ஏற்ப செட்டிங் அமைத்துக் கொள்ளும் வசதி இச்செயலியில் தரப்பட்டுள்ளது.
கூகுள் நவ் செயலியை திறந்து Settings > Voice > Languages > என்றபகுதிக்கு சென்று நம் நாட்டிற்கு பொருத்தமான ஆங்கில உச்சரிப்பு முறையான English (India) என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
இனி கூகுள் நவ் செயலியை இயக்கி கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கலாம்.நம் தேவைக்கேற்ற பொதுவான கட்டளைககளை கூகுள்பட்டியலிட்டுள்ளது.
இனி கூகுள் நவ் செயலியை இயக்கி கட்டளைகளை பிறப்பிக்கத் தொடங்கலாம்.நம் தேவைக்கேற்ற பொதுவான கட்டளைககளை கூகுள்பட்டியலிட்டுள்ளது.
அக்கட்டளைகளை சரியாக உச்சரிப்பதன் மூலம் எளிதாக செயற்பாட்டைப் மேற்கொள்ள முடியும்.உதாரணமாக, ஏதேனும் ஒன்றை குறிப்பிட்ட நேரத்தில் ஞாபகப்படுத்த Remind meஎன்று குறிப்பிட்ட பிறகு விபரத்தையும் பிறகு நேரத்தையும் குறிப்பிட வேண்டும்.
பிரகாஷ் என்பவரை மாலை 5.30 மணிக்கு சந்திக்க வேண்டுமென்றால் அதனை முன்கூட்டியே நினைகூட்ட கீழ்க்கண்டவாறு கட்டளையிடவேண்டும்.““Remind me to meet prakash at 5:30 PM”
இதேபோல குறிப்பிட்ட நேரத்தில் அலாரம் இயங்கும்படி செட் செய்ய Wake me up என்ற வார்த்தைகளுடன் நேரத்தைக் குறிப்பிடவேண்டும்.
உதாரணத்திற்கு, 6 மணிக்கு அலாரம் அமைக்க Wake me up 6 இதுபோல எண்ணற்ற கட்டளைகள் உள்ளன.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பெட்ரோல் விலை மீண்டும் ஒருமுறை
பெட்ரோலியப் பொருட்களின் விலை மீண்டும் ஒருமுறை உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.19 பைசாவும் டீசல் லிட்டருக்கு ஒருரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 17ஆம்தேதிதான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலான பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக சரிவை சந்தித்தபோதும் அதன் பலன் மக்களுக்கு கிடைக்காமல் செய்வதற்காக கலால் வரியை அவ்வப்போது உயர்த்தி விலை குறையாமல் பார்த்துக் கொண்டது மோடி அரசு.
இப்போது சர்வதேசச் சந்தையில் விலை உயர்ந்துவிட்டதாக கூறி அதன் முழுச் சுமையையும் நுகர்வோர்கள் மீது கட்டுவது அப்பட்டமான மோ(ச)டி வேலையாகும்.
இப்போது சர்வதேசச் சந்தையில் விலை உயர்ந்துவிட்டதாக கூறி அதன் முழுச் சுமையையும் நுகர்வோர்கள் மீது கட்டுவது அப்பட்டமான மோ(ச)டி வேலையாகும்.
அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில்தான் பெட்ரோலியப் பொருட்களுக்கான வரி மிக அதிகமாக உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல்ஆகியவற்றின் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது.
பெட்ரோல்,டீசலுக்கு அரசு விலை தீர்மானிக்கும் முறை இருந்துவந்தது.
முந்தைய மன்மோகன்சிங் ஆட்சிக்காலத்தில் பெட்ரோலுக்கு அரசு விலை தீர்மானிக்கும் முறை விலக்கிக்கொள்ளப்பட்டு இனி சர்வதேசச் சந்தை நிலவரத்திற்கேற்ப மாதத்திற்கு இருமுறை விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக இந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் டீசலுக்கும் அரசு விலை தீர்மானிக்கும் முறை ரத்து செய்யப்பட்டு சந்தை நிலவரத்திற்கேற்ப விலை தீர்மானிக்கப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தபோதெல்லாம் ஒப்புக்கு ஓரளவு மட்டுமே விலை குறைக்கப்பட்டது.
ஆனால் கலால் வரியை தொடர்ந்து அறிவித்து பெட்ரோலியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க வகை செய்யப்பட்டது. இந்தநிலையில் சர்வதேசச் சந்தையை காரணம் காட்டி விலை உயர்வு என்பது மிகக் கடுமையாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனம் வைத்திருப்போர் மட்டுமின்றி லாரி, பேருந்து, விசைபடகுகளுக்கான எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது.
இதனால் அத்தியாவசியப் பொருட்களின்விலை ஒருசுற்று உயர்கிறது.
சில்லரை வர்த்தக அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், பெட்ரோல்,டீசல் விலை உயர்வும் பணவீக்கத்திற்கும், விலை உயர்வுக்கும் காரணமாக அமைகிறது.
வரியை ஓரளவு குறைத்தாலே பெருமளவு பெட்ரோல்,டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
ஆனால் அதற்கு மோடி அரசு தயாராக இல்லை.
மறுபுறத்தில் சமையல் எரிவாயு மானியத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மோடி அரசு ஒழித்துக்கட்டி வருகிறது.
வருமானத்தை காரணம் காட்டி ஒட்டுமொத்தமாக எரிவாயு மானியத்திற்கு முடிவு கட்ட முயல்கின்றனர். இந்தாண்டு பட்ஜெட்டிலேயே இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
மொத்தத்தில் அம்பானி,அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு தாராளம் காட்டுவதும் அதை சரிக்கட்ட .மக்களுக்கு அடுத்தடுத்து வரி,சேமிப்புக்கு வட் டி குறைப்பு என்பதுதான் மோடி அரசின் நோக்கமாக உள்ளது.
=====================================================================================
இன்று,ஏப்ரல்-06.
- செலுலாயிட் கண்டுபிடிக்கப்பட்டது(1869)
- 1500 ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் முதன் முறையாக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் ஆரம்பமாயின(1896)
- ஆரம்பகால சூரிய கிரகணம் கிரேக்கர்களால் பதியப்பட்டது(கிமு 648)
பீகார் மதுவிலக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இதன்படி சூரிய உதயத்துக்கு முன் பதநீர் குடிக்க அனுமதிக்கப்படும். ஆனால் சூரிய உதயத்துக்குப் பின் கள் குடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள மதுபான உற்பத்தி நிறுவனங்கள் எல்லாம் தொடர்ந்து மதுபானங்களை தயாரித்து, வெளிமாநிலங்களில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பீகார் அரசின் மதுபான விற்பத்தி நிறுவனத்தில் கைவசம் உள்ள 36 ஆயிரம் லிட்டம் மதுபானங்களை அப்பறப்படுத்துவது பற்றி பீகார் அரசு ஆலோசித்து வருகிறது. ராணுவ கன்டோன்மென்ட் பகுதியில் மதுபான உபயோகம் விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதால் அங்கு தடை கிடையாது.
=======================================================================================
திருவனந்தபுரம் சட்டசபை தொகுதிக்கான அ.தி.மு.க. வேட்பாளராக கேரள மது பார் உரிமையாளர் சங்க தலைவர் பிஜூ ரமேஷ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இவர் கேரளாவில் மது பார்கள் மூடப்பட்ட போது கேரள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக லஞ்ச புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர்.
மது பார்களுக்கு மீண்டும் லைசென்ஸ் வழங்க கோரி மாநில நிதி அமைச்சர் மாணிக்கு பல கோடி பணம் கொடுத்ததாகவும், இது போன்று மாநில அமைச்சர்கள் சிலருக்கும் பணம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இவரது புகார் காரணமாகவே மாநில நிதி அமைச்சர் மாணி பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.
பிஜூ ரமேசுக்கு கேரளாவில் 14 நட்சத்திர ஓட்டல்களும், ஏராளமான கல்வி நிறுனங்களும்,மது பார்களும் உள்ளன.
அவருக்கு அ.தி.மு.க. வேட்பாளர் அந்தஸ்து கிடைத்திருப்பது பொருத்தமானதுதான் என்பதுதான் தற்போது சேட்டன்கள் பேச்சு..
======================================================================================================