வியாழன், 21 ஏப்ரல், 2016

நகம் உணர்த்தும் அறிகுறிகள்நமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம். 
தெரியாமலும் இருக்கலாம். 
நமது   நகம்  நமக்கு உணர்த்தும் சில அறிகுறிகள்
நகங்கள் "கெரட்டின் என்று சொல்லக்கூடிய ஒருவகை கடினமான புரோட்டின் பொருளால் ஆனது. மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவே, நகமும் அமைந்திருக்கிறது. 

விரல்கள் மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுகாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல் நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன. 

நகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை. 


கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளரும். 
ஆள் காட்டி விரல் நகம், சுண்டு விரல் நகத்தை விட மிக வேகமாக வளரும். 

ஒரு மாதத்துக்கு சராசரியாக, 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும். 

கைவிரல் நகங்கள் விழுந்து, புதிதாக முழுவதும் வளர வேண்டுமென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் வரை ஆகும். 

கைவிரல் நகங்களைப் பார்த்தே, உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றும் கண்டுபிடித்து விடலாம். 

நகங்களின் குறுக்கே, அதிக பள்ளமான கோடுகள் தெரிந்தால் வயதாகி விட்டது என்று அர்த்தம். 
* நீல நிறத்தில் இருந்தால் தேவையான ஆக்சிஜன் உடம்புக்கு போதவில்லை என்பதைக் குறிக்கும். 

அந்த சமயத்தில் மூச்சு சுவாசம் சரியாக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். 

* வெள்ளையாக இருந்தால், கல்லீரலுடன் தொடர்புடைய சிக்கல்களாக இருக்கலாம். கவனம் தேவை. 

* சிலருக்கு நகம் -சதை இணைப்பு மெலிதாக  இருக்கும். அடிக்கடி சதையில் இருந்து நகம் வந்துவிடும். 

இது தைராய்டு, சொரியாசிஸ், குறைவான ரத்த ஓட்டம், மருந்துக்கு அலர்ஜி போன்றவற்றின் அறிகுறிகளாக இருக்கலாம். 

* நகத்தின் கீழே பழுப்பு நிறம் காணப்படும். அதாவது, வெளுத்து ரத்த ஓட்டமே தெரியாது. அப்படி இருந்தால், ரத்த ஓட்டம் குறைவு, ஹீமோகுளோபின் குறைவுக்கான அறிகுறிகளாகும். பொதுவாக உடம்பில் குறைந்த சத்து இருப்பதற்கான மற்றொரு அறிகுறி. 

* ஸ்பூன் வடிவ நகங்கள் இரும்புச் சத்து குறைவுக்கான அறிகுறிகளாகும். 

 * நகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் கல்லீரலுடன் சம்பந்தப்பட்ட குறைபாடாக இருக்கும். ஒருவருக்கு மஞ்சள் காமாலை இருந்தால் உடம்பில் பில்லிருபின் அதிகரித்து காணப்படும். இது உடம்பில் மஞ்சள் நிறத்தை அதிகரிக்கும். கண்கள், தோல் ஆகியவையும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். 

* நகம் நெளிந்து காணப்பட்டால் புற்று நோய்க்கான அறிகுறி. கால்களில் இதுபோன்று காணப்பட்டால் நுரையீரல் புற்று நோய்க்கான முன் அறிகுறியாகும். முதுமையின் காரணமாகவும் நகம் வளைந்து காணப்படலாம். ஆதலால் கவனமாக இருக்க வேண்டும். 

* சிலருக்கு நகம் வலுவாக இருக்கும். ஆனாலும் உடைந்துவிடும். இதற்கு வறட்சிதன்மை காரணமாக இருக்கலாம். இத்துடன் முடியும் உடைந்து காணப்படும். 

* நகத்தில் வெள்ளைக்கோடு காணப்பட்டால், புரோட்டீன் சத்து குறைவு மற்றும் கல்லீரல் நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். 

* நகம் உடைந்தது போல் வெடித்து காணப்பட்டால் தைராய்டு சுரப்பிகள் வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறி. தைராய்டு ஹார்மோன் அளவை சரி பார்க்கவும். 

* நகம் கருப்பாக  இருந்தால் தொற்று நோய் அல்லது புற்று நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். சந்தேகம் இருந்தால் டாக்டரை அணுகலாம். 


 நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி, அழுக்காக இருப்பது போல் தோன்றும். 
"பங்கஸ் என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே, நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது. 

இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று முருங்கைக்காய் போன்று இருக்கும், இதை "க்ளப்பிங் என்று கூறுவதுண்டு. 
=====================================================================================
இன்று,
ஏப்ரல்-21.


  • பிரேசீலியா, பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது(1960)

  • பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது (1944)

  • பாவேந்தர் பாரதிதாசன் இறந்த தினம்(1964)

  • ரோம் நகரம் அமைக்கப்பட்டது(கிமு 753)
=====================================================================================
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், தமிழக தேர்தல் தேதிக்கு முன்பாக, தீர்ப்பு வழங்கப்படலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, கர்நாடகா மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், கர்நாடகா அரசு தரப்பில் ஆச்சாரியா, தாவே போன்ற வழக்கறிஞர்கள் ஆஜராகி, வாதமிட்டனர். இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா தரப்பில் நாகேஷ்வர ராவ் வாதம் செய்தார்.


தற்சமயம், சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பில் வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜராகி, வாதம் செய்துவருகிறார். இவரது வாதம், ஓரிரு நாட்களில் முடிவடைய உள்ளது.

இதன்பிறகு, கர்டநாடகா அரசு மீண்டும் தனது தரப்பு வாதத்தைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கடுத்தபடியாக, இறுதி தீர்ப்பை வழங்க, உச்சநீதிமன்றம் தயாராகி வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதாவுக்கு எதிராகவே, தீர்ப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் வாக்குப் பதிவு, மே 16ம் தேதி நடைபெறுகிறது. அதற்கும் முன்பாகவே, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டால், அது ஜெயலலிதா மற்றும் அதிமுக தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமையும். ஏற்கனவே, ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய முடியாது, என மத்திய அரசு நிராகரித்துவிட்டது .

=========================================================================================