"கேள்விக்குறி"யான ? வைகோ

மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைகோ பேசுபவை, கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்துகிறது.எனவே ஒருங்கிணப்பாளர் பதவியை வைகோவிடம் இருந்து பிடுங்கப்படலாம். வைகோவின் கலைஞர் பற்றிய அசிங்கமான சாதிப்பேச்சு எதிரொலியாக  கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளெ தோழர்கள் மத்தியில்   ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து, வைகோவுக்கு இந்த எச்சரிக்கை இடதுசாரிகளால் விடப்பட்டுள்ளது.
'தே.மு.தி.க.,வை கூட் டணிக்கு இழுக்க, 500 கோடி ரூபாய் பணம் கொடுக்க தி.மு.க., முயற்சி; பத்திரிகையாளர்கள் பணம் வாங்கிக் கொண்டு செயல்படுகின்றனர்.

கோவில்பட்டியில் நடந்த ரயில் மறியலின் போது கொரில்லா தாக்குதல் நடத்தினால் என்ன செய்வீர்கள்; தி.மு.க., தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., சந்திரகுமார் ஆகியோர் வேறு தொழில் செய்யலாம்; கருணாநிதி ஜாதி பெயரைச் சொல்லி திட்டியது' என, வைகோவின் பேச்சும் செயலும், நாளுக்கு நாள் எல்லை கடந்து சென்றது.
இதனால், மக்கள் நலக்கூட்டணிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,இதுவரை  மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த கொஞ்ச நஞ்ச செல்வாக்கும் குறையத் துவங்கியுள்ளதாக, கூட்டணிக்கு உள்ளேயே பெரும் புகைச்சல் ஏற்பட்டு உள்ளது. 

அதுமட்டுமின்றி இதுவரை  இடது சாரிகளுக்காக வெளிப்படையாக ஆதரித்து வந்த நடு நிலையாளர்கள்,எழுத்தாளர்கள்,அறிவுஜீவிகள் எனப்படுவோர் வைகோ வின் பேச்சால் தங்கள் ஆதரவை கைவிட்டு விட்டு இடது சாரி தலைவர்களை வைகோ மூலம் உங்களுக்கு கிடைக்கும் கொஞ்சம் வாக்குகளும் பறி போய் விடும்,வெற்றிப்பெற அல்ல ,காப்புத்தொகையை பெறுவதற்குத்தான் ம.ந.கூ ட்டணி உழைக்க வேண்டும் "என்று கிண்டல் செய்ததாகவும் தெரிகிறது.
குறிப்பாக, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, ஜாதி பெயரைச் சொல்லி திட்டியது, 
அனைத்து தரப்பினர்,பொதுமக்கள்  மத்தியிலும் வைகோ மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அதிருப்தி, கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளேயும் எதிரொலித்தது. 

இரண்டாம் கட்ட  கம்யூனிஸ்ட் தலைவர்கள், "நீங்கள் வைகோ கருணாநிதியை அசிங்கமாக திட்டும் போது அருகில் சிரிப்புடன் அமைதியாக இருந்ததும்,அதை உடனே அங்கேயே கண்டிக்காமல் விட்டதும் உலகம் முழுக்க ஒளிப்பரப்பாகி கம்யுனிஸ்டுகள் மீதான விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.
இதுவரை கட்டிக்காத்து வந்த சாதிய ஒழிப்பு கொள்கைக்கு அவப்பெயரை உண்டாக்கி கம்யூனிஸ்டுகள் சராசரிகளை விட தாழ்ந்து வைகோவுடன் சேர்ந்து  சாதி அரசியல் செய்யத்துவக்கி விட்டனர் என்ற எண்ணத்தை மக்கள் மனதில் உண்டாக்கி விட்டது.
 வைகோவை கண்டிக்க வேண்டும்; இல்லையேல், மக்கள் நலக் கூட்டணியின் பிரசாரம் திசை மாறிச் சென்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். 'இத்தனையாண்டு காலம், கம்யூனிஸ்ட்கள் பின்பற்றி வந்த அரசியல் நாகரிகம் காற்றில் பறக்கும். கம்யூனிஸ்ட்களுக்கு மக்கள் மத்தியில் நிலவும் இமேஜும் மாறிவிடும்' என, ஜி,ராமகிருஷ்ணன் ,முத்தரசு ஆகியோர்களிடம்  காட்டமாக பேசியுள்ளனர்.
கட்சியில் எழுந்த எதிர்ப்பை கண்டு வேறு வழியில்லாமல் ஜி.ராமகிருஷ்ணன்,முத்தரசு ஆகியோர்  வைகோவிடம்  'உங்களின் தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு அரசியலை, கூட்டணிக்குள் கொண்டு வராதீர்கள். அது, கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்னையை உண்டாக்குகிறது. மக்கள் நலக்கூட்டணி துவங்கிய போது திட்டமிட்ட குறைந்தபட்ச செயல் திட்டப்படி, தேர்தல் பிரசாரத்தையும், கொள்கை விளக்கங்களையும் செய்யுங்கள்' என கூறியுள்ளனர். 
மேலும், 'உங்களின் வெறுப்பு அரசியல் போக்கு தொடருமானால், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களின் எதிர்ப்பை சமாளிக்க  கூட்டணி தொடர்வது பற்றி ,அல்லது உங்கள் கட்சியை கூட்டணியில் இருந்து விளக்குவது பற்றியும் பரிசீலனை செய்ய நேரிடும்' எனவும், வைகோ விடம் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர். 

இதையும் மீறி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தனிப்பட்ட வெறுப்பு அரசியலைத் தொடர்ந்தால், மக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேற,கம்யூனிஸ்டுகள் தயாராகி வருவதாக தெரிகிறது .
 வைகோவின் பேச்சு குறித்து, 
கம்யூனிஸ்டுகள் போலவே விடுதலை சிறுத்தைகளும் 
"தேர்தல் களத்தில் பேசுவதற்கு, ஆயிரம் பிரச்னைகள் உள்ள போது, ஜாதி அரசியல் செய்வதை ஏற்க முடியாது' என, வைகோவிடம் கூறியுள்ளனர்.
இதன் மூலம் கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இணைந்து வைகோ நிதானமிழந்து பேசுவதற்கு தடை போட்டுள்ளனர்.
 ஆனால், இந்த தடை வைகோவை எத்தனை  நாளுக்கு கட்டுப்படுத்தும்  என தெரியவில்லை.திமுக ,ஸ்டாலின் என்றாலே வைகோ முகத்தில் வெறுப்பும்,உடலில் பதட்டமும்  வந்து விட வெறிபிடித்தவர் போலாகி விடுகிறார்.என்று  கட்சி உறுப்பினர்களிடம் சொல்லியிருக்கிறார் ஒரு கம்யூனிஸ்ட் தலைவர்.
மக்கள் நலக் கூட்டணி - தே.மு.தி.க., அணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைகோ பேசுவதுதான்  கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் கட்டுப்படுத்துகிறது. 
72 வயதான அவர், தன் வயதுக்கேற்ப பேச மறுக்கிறார். கலைஞர்,ராம்தாஸ் போன்றவர்கள் போல் நாகரீகமாக  பேசுங்கள் என அவரிடம் சொல்ல கூட்டணி கட்சித் தலைவர்கள் தயங்குகின்றனர்.காரணம் முன்பு தேமுதிக வுக்கு திமுக 500 கூடி பேரம் ,சிறுதாவூர் கண்டய்னர் பணம் பற்றி வைகோ பேசியதற்கு பிரேமலதா,தா.பாண்டியன் பதில் கொடுத்தற்கு வைகோவின் மறு பிரதிபலிப்பு அழகைதானாம் . 
இது போன்று மிகவும் உணர்ச்சிப்பட்டு நிதானமிழந்து பேசும் ஒருவரை வைத்துக்கொண்டு தேர்தலை சந்திப்பது சரியாக இராது. 
இப்படி அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டுத்தான் "தேர்தலுக்குப்பின்னர் முதல்வர் தேர்வு என்ற முடிவை விஜய் காந்த் வந்தவுடன் விஜயகாந்த் தான் முதல்வர் என்று தன்னிச்சையாக அறிவித்தார்.அதிகப்படியான் இடங்களில் போட்டியிடும் விஜயகாந்துதான் முதல்வராக முடியு என்று மக்கள் தெரியாமலா இருக்கிறார்கள்.பின் மக்கள் நலக் கூட்டணி என்பதை அவராக மாற்றி கேப்டன் விஜயகாந்த் அணி என்றார் .இதுவும் கூட்டணிக்குள் சலசலப்பை உண்டாக்கியது.கூட்டணி வரையறைத்துக்கொண்ட குறைந்த பட்ச செயல் திட்டத்தை வைகோ கண்டு கொள்வதே இல்லை.மதிப்பதும் இல்லை.உணர்ச்சி வேகத்தில் வைகோ சொல்லுவதையும்,செய்வதையும் சப்பைக்கட்டு கட்டுவதே கூட்டணிக்கு பெரிய வேலையாக உள்ளது.பின் எப்படி தேர்தல் வேலைகளை கவனிப்பது.?
எனவே ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து அவரை மாற்றிவிட்டு, வேறு ஒருவரை நியமிக்கலாம் என்ற கருத்து  மக்கள் நலக் கூட்டணிக்கு வந்து விட்டதாம் . 
கூட்டணியில் பெரிய கட்சி என்ற முறையில், ஒருங்கிணைப் பாளர் பொறுப்புக்கு, தே.மு.தி.க., மகளிர் அணித் தலைவர் பிரேமலதாவை நியமிக்கலாம் என்றும் கூறுகின்றனர். 
தேர்தல் பிரச்சாரத்தில் பிரேமலதாவே அனைத்துப்பகுதிக்கும் நட்சத்திர பேச்சாளராக இருப்பதால் அவர் அப்பதவியை தவிர்த்தால்   திருமாவளவனை நியமிக்கவும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
=======================================================================================


======================================================================================
இன்று,
ஏப்ரல் -08.
  • முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆர்மபமானது(1867)
  • லியாகத்-நேரு ஒப்பந்ததத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன(1950)
  • எகிப்தில் சூயஸ் கால்வாய், மீளத்திறக்கப்பட்டது(1957)


======================================================================================

இரண்டு கோடி வழக்குகள் காத்திருப்பு.

நாடு முழுவதும், மாவட்ட நீதிமன்றங்களில், 2.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
இந்த விஷயத்தில், உ.பி., மகாராஷ்டிரா போன்று அல்லாமல், தமிழகத்தின் நிலை சற்று பரவாயில்லை. இங்கு உள்ள மாவட்ட நீதிமன்றங்களில், 8.68 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவற்றில், 4.20 லட்சம் வழக்குகள், 2 ஆண்டுகளுக்கும் குறைவாக தான் நிலுவையில் உள்ளன. மீதமுள்ளவற்றில், 1.46 லட்சம் வழக்குகள் 5-10 ஆண்டுகளாக நிலுவையிலும், 40 ஆயிரம் வழக்குகள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலும் உள்ளன.
மாவட்ட நீதிமன்றங்களில், 731 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. 
இதன்படி, ஒரு நீதிபதிக்கு சராசரியாக, 1,188 வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகத்தில், சராரியாக, ஆண்டுக்கு, 220 நாட்கள் தான் கோர்ட்கள் இயங்குகின்றன. 
அதன்படி, ஒவ்வொரு நீதிபதியும், தினமும் சராசரியாக, 5.40 நிலுவை வழக்குகளை முடித்து வைத்தால் தான் ஓராண்டுக்குள் நிலுவை வழக்குகளை தீர்க்க முடியும். இதுதவிர, அவர்கள், புதிய வழக்குகளையும் பார்க்க வேண்டும். இது, சாத்தியமில்லாத காரியம்.
தமிழகத்தில் நீதி நிர்வாகத்திற்கு செலவிடப்படுவது, முன்னிருக்கும் பணிகளை ஒப்பிடும் போது, சொற்பமான தொகை தான். 
மொத்த பட்ஜெட் தொகை, 1.74 லட்சம் கோடி ரூபாயில் (2015-16), நீதி நிர்வாகத்திற்கு வெறும், 814 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. 
இதுவே, அதே ஆண்டில், இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிக்கு 1,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 2 வழக்குகளை ஒவ்வொரு நீதிபதியும் முடித்து வைக்கிறார். 
அதனால், கூடுதல் கோர்ட்டுகளை உருவாக்கி, புதிய நீதிபதிகளை நியமனம் செய்வது ஒரு வழி. கூடுதல் நீதிபதிகள் மூலம் நிலுவை சுமையை குறைக்க, தற்போதைய எண்ணிக்கையை விட, 2.5 மடங்கு கூடுதல் நீதிபதிகள் தேவை.திருப்பூர், காஞ்சிபுரம், பெரம்பலுார், திண்டுக்கல், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் நிலுவை சுமை கடுமையாக உள்ளது. உதாரணத்திற்கு, திருப்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு நீதிபதிக்குமான நிலுவை சுமை 2,049 வழக்குகள். இந்த மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
இதில் ஜெயலலிதாவை தாக்கிப்பேசியவர்கள் ,எழுதியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளே ஆயிரத்தை தாண்டுமாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?