காமராஜர் -114.
ஒருநாள் காமராஜ் அவர்கள், சட்டமன்றத்தக்கு செல்லும்போது மேல்தளத்துக்கு செல்ல மின்தூக்கியில் (லிப்ட்)சென்றார்.
வாங்கி சட்டைபையில் வைத்துக்கொண்டு என்ன..என்று கேட்டார்.
அதற்கு அவர்,ஐயா தொழில்துறையிலிருந்து அரசானை வந்திருக்கிறது, பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் மட்டுமே.. பணியில் இருப்பார்களாம்..., கவலையோடு சொன்னவரை ,நான் பார்க்கிறேன், என்று தட்டிகொடுத்துவிட்டு, சட்டமன்றத்திற்குள் நுழைந்தவர் கர்ஜித்தார்.
ஏழையின் வயிற்றில் அடிப்போதுபோல் அரசானை பிறப்பித்தது யார்,பொத்தானை அழுத்தினால் மேல போவதற்கும்,பொத்தானை அழுத்தினால் கீழே வருவதற்கும்,பத்தாவது வரை படிக்கனுமா, அப்படியென்றால் நான் எட்டாம்வகுப்புவரை தானேன படிச்சிருக்கேன்...எனக்கு அந்த லிப்ட துடைக்கிற வேலைகூட கிடைக்காதே...
என்று குரல் உயர்த்தியதும்
வாயடைத்து போனார்கள் அதிகாரிகள்.
====================================================================================
கமல்ஹாசன் மருத்துவமனையில்
நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு நடிகர் கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தவறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுதண்டுவடம், கால்எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் சில வாரங்கள் அவர் ஓய்வில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை முடித்து கடந்த வாரம் வீடுதிரும்பினார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற எண்ணற்ற காயங்களை தனது டூப் போடாமல் நடிப்பதன் மூலம் தனது உடலில் தாங்கி மீண்டு எழுந்த கமல் இவ்விபத்தில் இருந்தும் மிக விரைவில் மீண்டு வருவார்.
'என்ன மாயமோ?என்னவோ தெரியலை.எனக்குண்டான காயம் ஆறிடும்."
இது போன்ற எண்ணற்ற காயங்களை தனது டூப் போடாமல் நடிப்பதன் மூலம் தனது உடலில் தாங்கி மீண்டு எழுந்த கமல் இவ்விபத்தில் இருந்தும் மிக விரைவில் மீண்டு வருவார்.
'என்ன மாயமோ?என்னவோ தெரியலை.எனக்குண்டான காயம் ஆறிடும்."
===============================================================================================
இன்று,
ஜூலை-15.
- தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)
- பெருந்தலைவர் கு .காமராஜர் பிறந்த தினம்(1903)
- மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)
மறைமலை அடிகள்
நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள காடம்பாடியில் பிறந்த இவருக்கு திருக்கழுக்குன்ற இறைவனை நினைவுப்படுத்தும் வகையில் வேதாசலம் என்று பெயர் சூட்டப்பட்டது.
சுந்தரம் பிள்ளையின் மனோன்மணீயம் நூலுக்கு நயவுரை எழுதி இவர் அனுப்பியது சுந்தரம் பிள்ளையை வெகுவாக கவர்ந்தது. அதனால் இவருக்கு கேரளாவில் தமிழ் ஆசிரியர் பணி கிடைக்குமாறு செய்தார் சுந்தரம் பிள்ளை.
அப்பணியை வெகு விரைவில் துறந்து வெளியேறிய வேதாசலம் சென்னை கிறித்துவக்கல்லூரியில் பரிதிமாற் கலைஞருடன் இணைந்து தமிழ்ப்பணி ஆற்றினார்.
தமிழ் மொழியில் வடமொழி கலந்து எழுதுவது அன்றைய காலத்தில் மிக இயல்பான ஒன்றாக இருந்து வந்தது.
அதையே பெருமையாகவும் பண்டிதர்களும் கருதினர்.
”பெற்ற தாய்தனை மக மறந்தாலும் ” என்று துவங்கும் வள்ளலாரின் அருட்பா பாடலை நெக்குருக பாடிவிட்டு மகள் நீலாம்பிகையை நோக்கி ”இதில் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் ” என்று அடிகளார் பாடியுள்ளார். இதையே யாக்கை எனும் நற்றமிழ் சொல்லால் குறித்திருந்தால் இன்னமும் இனிமையாக இருந்திருக்கும்.” என்று புலம்பினார். அன்று முதல் எல்லாவற்றையும் தனித்தமிழில் பயன்படுத்துவது என்று இருவரும் முடிவு செய்தார்கள். வேதாசலம் மறைமலையடிகள் ஆனார். ‘சமரச சன்மார்க்கம்’ என்னும் தம் இல்லத்தின் பெயரை ‘பொதுநிலைக் கழகம்’ என்றும், தாம் நடத்திவந்த ‘ஞானசாகரம்’ திங்களிதழை ‘அறிவுக்கடல்’ என்றும் மாற்றினார்.
ஆரியத்தை நீக்கிய தமிழ்த்திருமணம், திருவள்ளுவர் ஆண்டுமுறை, தமிழர் மதம், தமிழரின் நான்மறை முதலியவை மறைமலையடிகள் கொண்டுவந்ததே. வேள்வி நிகழ்த்தல், ஆரியவழிபாடு முதலியவற்றையும் எதிர்த்தார். ஆரியர் எப்படி தமிழ்நாட்டை சீரழித்தனர் என்று ஆதாரங்களை அடுக்கினார் அடிகளார்.
அதோடு நில்லாமல் சைவ சித்தாந்த பதிப்பகம் உருவாவதற்கும் முக்கிய காரணமானார் .
அதோடு நில்லாமல் சைவ சித்தாந்த பதிப்பகம் உருவாவதற்கும் முக்கிய காரணமானார் .
அவரின் வாசிப்பு எல்லையில்லாதது. அவர் மாதத்துக்கு ஐம்பது ரூபாய்க்கு புத்தகம் வாங்கி வாசிக்கிற குணம் கொண்டவராக இருந்தார். அவரின் நான்காயிரம் நூல்கள் தான் மறைமலையடிகள் நூலகத்துக்கான அச்சாரம். பேச்சில்,எழுத்தில் எங்கும் தனித்தமிழை இவர் கொண்டு வந்த காலத்தில் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் ஏற்பட்டு இருந்தது.
ஆரியரின் வடமொழியை நிராகரிப்போம் என்று இவரின் வழிநின்று எண்ணற்ற இளைஞர்கள் தனித்தமிழில் செயலாற்ற ஆரம்பித்தனர்.
ஐம்பத்தி எட்டு வயதில் ராஜாஜி அரசு சென்னை மாகாணத்தில் ஹிந்தி திணிப்பை செயல்படுத்த முயன்ற பொழுது சிறை புகுந்தார் அடிகள்.
‘பொதுமொழி என்பது மக்களால் பேசப்படுகிறது. வாழும் மொழியாக இருந்தால் மட்டும் போதாது. அம்மொழி பண்டைய மொழியாக இருக்கவேண்டும். தொடர்ச்சியாக நெடுங்காலம் பேசப்பட்டு, இப்போதும் பேசும்மொழியாக இருக்கவேண்டும். அந்த மொழி உயரிய இலக்கிய வளம் நிரம்பியதாக இருக்கவேண்டும்.
அந்த மொழியைப் பேசுகின்ற மக்களின் அரசியல் கொள்கைகள், சிந்தனை சார்ந்த சமயக் கொள்கைகள், சமூக நெறிகள் போன்ற
மக்கள் மனமுவந்து ஏற்கத்தக்க பல்துறை அறிவுசார்ந்த இலக்கியங்கள் சொந்தப் படைப்பிலக்கியங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வகையில் இந்தி மொழிக்கு பழமைச் சிறப்பும் இல்லை; இலக்கிய வளமும் இல்லை.
மக்கள் மனமுவந்து ஏற்கத்தக்க பல்துறை அறிவுசார்ந்த இலக்கியங்கள் சொந்தப் படைப்பிலக்கியங்கள் கொண்டதாக இருக்கவேண்டும். அந்த வகையில் இந்தி மொழிக்கு பழமைச் சிறப்பும் இல்லை; இலக்கிய வளமும் இல்லை.
வட இந்தியாவில் இந்தி பேசப்படுவதிலேயே பலவித வேறுபாடுகள் உள்ளபோது தமிழர்களை இந்தியைக் கற்றுக் கொள் என்று வற்புறுத்துவது சக்தியையும் முழு நேரத்தையும் வீணாக்குவதாகும்’ என்று உறுதியாக பதிவு செய்தார் அடிகள்
மறைமலையடிகள் இல்லாமல் போயிருந்தால் இன்றைய தமிழ் உரைநடை தனித்தமிழாக இருந்திருக்காது. தவறிப்போன தமிழாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. மறைமலையடிகள்குறித்து கூறியவை :
தென்னாடு அடிகளால் விழிப்புற்றது என்று மண்ணும் முழங்கும்; மரமும் முழங்கும்; அடிகள் பேச்சு பல பேச்சாளரைப் படைத்தது; எழுத்து பல எழுத்தாளரை ஈன்றது; நூல் பல நூலாசிரியர்களை அளித்தது. அடிகளே தென்னாடு, தென்னாடே அடிகள்”.
-
பூ.கொ.சரவணன் ,
நன்றி:விகடன்.
===============================================================================================
`வள்ளியப்பா.. இங்கே வா...!' என்று கூப்பிட்டவர் ஏதோ சிந்தனை வயப்பட்டவராய் நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார்.
பிறகு சொன்னார் `காங்கிரஸ் கட்சிப் பணம் 10 லட்சம் ரூபாய் நம்மகிட்ட இருக்கு. இந்தப் பணம் மாவட்டக் கமிட்டிகள் வசூலிச்சி நமக்கு அனுப்பிச்சதுங்கிறது உனக்குத் தெரியும். அந்தக் கணக்கெல்லாம் உன்கிட்டதான் இருக்கு.
இந்த 10 லட்சம் ரூபாயை இனிமே நாம கையில வச்சிருக்கக் கூடாது. அதை உடனே பேங்கிலே கட்டிட்டு வந்துடு...' என்றார்.
உடனே வள்ளியப்பன், `ஐயா.. பல மாவட்டக் கமிட்டிகள்லேருந்து இன்னும் பாக்கி நெறைய வர வேண்டியிருக்கே...' என்று தயக்கத்தோடு சொன் னார்.
காமராஜர் உடனே, `அதையெல்லாம் கணக்குல இன்னும் நீ பாக்கி எழுதி வச்சிகிட்டு இருக்கியா... அந்தத் தொகையெல்லாம் வராதுப்பா...! அவனவன் கட்சிக்குப் பணம் வசூல் பண்றதுக்காக வெளிïர்களுக்குக் கார் எடுத்துகிட்டு போயிருப்பான்.
டாக்ஸி வாடகை, பெட்ரோல், சாப்பாட்டுச் செலவுன்னு ஏராளமா செலவாகியிருக்கும்...! இதையெல்லாம் கட்சிக்காரவங்க கையிலேருந்தா கொடுக்க முடியும்...? பத்தாயிரம், இருபதாயிரம்னு பாக்கியிருந்தா அதையெல்லாம் விட்டுடு...
பெரிய தொகை வரவேண்டியிருந்த
ா அதுகள மட்டும் என்கிட்டே குறிச்சிக் கொடு. அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கிட்டே கேட்டு வசூல் பண்ணிப்பிடலாம்...'' என்றார்.
அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் பாங்கியில் பணத்தை கட்டச் சொல்வார் என்று வள்ளியப்பன் நினைத்துக் கொண்டிருக்கையில
ேயே, `இன்னிக்கே கௌம்பு... இப்பவே கொண்டு போய்க் கட்டிட்டு வந்துடு...!' என்று அவசரப்படுத்தினார்.
`போறதுக்கு முன்னே அழ.வள்ளியப்பாவுக்குப் போன் போட்டு சொல்விடு...' என்றார். காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு இந்தியன் பேங்கின் ஆயிரம் விளக்கு கிளையில் தான், (கண்ணம்மை பில்டிங்) வைக்கப்பட்டிருந்தது.
அந்த கிளையின் மேனே ஜராயிருந்த `குழந்தை கவிஞர்' அழ.வள்ளியப்பா, தலைவரிடம் மிகுந்த மரியாதை உடையவர். அவரே நேரடியாக 10 லட்சம் ரூபாய் கட்டுகளை எண்ணினார். எதிர்பாராத விதமாக ஒரு புது நூறு ரூபாய்கட்டில் ஒரு தாள் குறைந்தது.
மீண்டும், மீண்டும் எண்ணிப்பார்த்து விட்டு, அவர் தொலைபேசியில் காமராஜரை தொடர்பு கொண்டார். தலைவர், `சரி... சரி... நான் அனுப்பி வைக்கட்டுமா... நீ இப்போது போட்டுக் கொள்கிறாயா?' என்று கேட்டார் வள்ளியப்பா. `நான் போட்டுவிடுகிறேன்.
தகவலுக்காகத் தான் உங்ககிட்டே சொன்னேன்யா...!' என்று சொல்லிவிட்டுச் `செலானில்' `சீல்' போட்டுக் கொடுத்து விட்டார்.பணம் கட்டிய ரசீதையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் வாங்கிப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.
மாறி, மாறி பார்த்த அந்தப் பார்வையில் தான் எவ்வளவு மகிழ்ச்சி... நிம்மதிப் பெருமூச்சு.ஊரார் தன்னை நம்பி ஒப்படைத்த அந்தப் பொது நிதியை, வங்கிக் கணக்கில் வரவு வைத்து விட்டு வர அவர் காட்டிய அவசரம் அன்று சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி வள்ளியப்பாவுக்க
ு புலப்படவில்லை. `தனக்கு முடிவு நெருங்கி விட்டது.'
என்று தலைவர் உள்ளூற உணர்ந்து விட்டாரோ என்னவோப காமராஜர் தன் கையில் பத்து லட்சம் ரூபாய்ப் பணம் வைத்திருந்தார் என்னும் பாவச் சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என்று அந்தப் புண்ணிய ஆத்மா பதறியிருக்கக் கூடும், ஆம்.
அது தான் அவர் கடைசியாக வங்கியில் கட்டிய பணம்.
கொஞ்சம் தாமதித்துக் கட்டலாம், சில நாள் போகட்டும் என்று விட்டிருந்தால் கூட, தலைவரைப் பற்றிய விமர்சனம், விஷமிகளால் வேறு விதமாக வந்திருக்கக் கூடும்.
`பொதுவாழ்வில் கற்பு' என்பதை ஒரு குடும்பப் பெண்ணைப் போலப் பாதுகாத்து வந்த அந்த உத்தமர். கடைசி நிமிடத்திலும் தனது கண்ணியத்தைக் காத்தார்.
செப்டம்பர் இறுதியில் பத்து லட்சத்தை வங்கியில் கட்டினார். அக்டோபர் 2-ஆம் தேதி அவர் மறைந்தார். அவர் படுக்கையில் இருந்த பணம் பத்து ரூபாய்.
============================================================
1958 பிரதமர் நேரு "ஐ.ஐ.டி',ஐ ஐதராபாத்தில் ஆரம்பிக்க முடிவு செய்தார்.
இதையறிந்த காமராஜர் உடனே டெல்லி சென்று பிரதமர் நேருவை பார்த்துப் பேசினார்.
ஐ.ஐ.டி, சென்னையில் ஆரமபிக்கப்பட்டது.
============================================================
தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!
மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை ராஜ விருந்து!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்!
மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!
பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்!
இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
=========================================================================================