மோடி -அதானி கம்பெனிக்கு 2,00,000 கோடிகள் லாபம்.
பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும் கார்ப்பரேட் முதலாளியுமான அதானியும் சிங்கப்பூர் வில்மர் கம்பெனியும் இணைந்து 100 லட்சம் டன் பருப்பு மூட்டைகளை பதுக்கி 1,90,000 கோடி ரூபாய் சுருட்டியதன் விளைவே பருப்பு விலை கடுமையாக ஏறியதற்கு காரணம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் செய்தி வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.
நரேந்திர மோடி 2014 பதவி ஏற்றதி லிருந்தே அவருக்கும் பதவியை அண்டி வளரும் முதலாளிகளுக்கும் உள்ள உறவு வெட்ட வெளிச்சமானது. அதுவும் மோடிக்கும் ,அதானிக்கும் இருக்கும் பாசப்பிணைப்பு அளவுக்கு அதிகமானது.
கடந்த தேர்தலின்போது மோடி பறந்து பறந்து பிரச்சாரம் செய்ய அவருக்கு தனியாக ஒரு விமானத்தையே அதானி வழங்கினார். மேலும் அதானியும் அம்பானியும் மோடிக்கும் பாஜகவிற்கும் கணக்கில் காட்டாத அளவில் பல ஆயிரம் கோடிகளை தேர்தல் செலவுகளுக்கு வழங்கினர்.
அந்த நன்றிக்கடனைத்தான் மோடிஅரசு தற்போது மேற்கொண்டு வருகிறது
குஜராத்தில் மோடி யின் நெருங்கிய நண்பர் அதானியின் குழுமத்திற்கு மிகவும் மலிவான விலையில் பல ஆயிரம் ஏக்கரளவில் கடற்கரை நிலங்கள்தாரை வார்க்கப்பட்டன.
அதேபோல் அம்பானிகளுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டன.
இவர்களுக்கு பல ஆயிரம்கோடிகள் வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டன.
இன்னொரு நண்பர் கார்ப்பரேட் சாமியார் ராம்தேவுக்கு சாதகமாக சந்தை விதிகள் வளைக்கப்பட்டு அவரது பதஞ்சலி கம்பெனியின் நூடுல்ஸ் உள்பட ஏராளமான இயற்கை உணவுப்பொருட்கள் நாடு முழுவதும் உள்ள சந்தைகளை ஆக்கிரமிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளன.
இன்னொரு பக்கம் சுற்றுச்சூழல் சட்டங்கள் மிகவும் தளர்த்தப்பட்டன. சுற்றுச்சூழல் அமைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன என்று அந்த அமைப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு அவர்கள் பெற்றுக்கொண்டிருந்த வெளிநாட்டு நிதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டன.
உலகளாவிய கார்ப்ப ரேட்டுகளும் நாட்டின் கார்ப்பரேட்டுகளும் தொழில் தொடங்க ஏதுவாக நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு எதிரான சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு அது கடுமையான எதிர்ப்பினால் மாநில அரசுகள் அதை நிறைவேற்றுமாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
கார்ப்பரேட்டுகள் எந்தவித தடையுமின்றி தொழில் தொடங்கவே மோடி அரசினால் இந்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அரசு சாதாரண மக்களின் நலன்களை பலி கொடுத்து விட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவே அனைத்து கொள்கைகளையும் கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
மோடி அரசின் இந்த மோசடிகளின் தொடர்ச்சியாக தற்போது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் நாடு முழுவதும் உள்ள சந்தைகளின் ஒருங்கிணைப்பு அமைப்புகளிலிருந்து வெளியாகியுள்ளன.
சாதாரண மக்களின் அன்றாடம் பயன்பாட்டிலுள்ள பருப்பின் குறிப்பாக துவரம் மற்றும் உளுந்தம் பருப்புகள் 150 ரூபாய் அளவில்தான் இதுவரை விற்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த மாதத்தில் இது வரை இல்லாத அளவில் ஒரு கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நாட்டில் அவ்வப்போது வறட்சிகள் ஏற்பட்டாலும் எப்போதுமே பருப்புகளின் விலை 100 ரூபாயை தாண்டியதில்லை.
அதனால் இந்த விலை ஏற்றம் அனைத்து பொருளாதார நிபுணர்களையும் வியாபாரிகளையும் மக்களையும் திகைக்க வைத்தது.
தற்போது இதன் பின்னணியில் கார்ப்பரேட்டுகள் மற்றும் மத்திய அரசின் கூட்டு உள்ளது.
அதில் மோடியும் சம்பந்தப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
இதை விசாரணை செய்யும் போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
கடந்த 2014ல் அதானியும் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மர் என்ற கார்ப்பரேட் கம்பெனியும் ஒரு கூட்டுத் தொழில் தொடங்கினர்.
அவர்களின் ஒப்பந்தம் உணவுப் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து இந்தியச் சந்தையில் விற்பதாகும்.
இதன்படி நாட்டில் உள்ள பருப்பு மற்றும்தானியங்கள் உற்பத்தியாகும் பெரிய மாநிலங்களிலிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இந்தியச் சந்தைகளில் விற்பதை தொடங்கினர். ஆனால் நாட்டின் சட்ட விதி களின்படி பருப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் மற்றும் கிட்
டங்கிகளில் வைப்பதற்கு ஒரு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
அதானி மோடி அரசிடம் உள்ள தனது நெருக்கத்தை பயன்படுத்தி தனக்கு சாதகமான முறையில் இந்த வரம்பை நீக்கிக் கொண்டார். இதன் மூலம் 3 வகையான தானியங்களை மொத்தமாக கொள்முதல் செய்து தனது கிட்டங்கிகளில் பதுக்கிக் கொண்டார்.
அப்போதைய கால கட்டத்தில் நாட்டில் 3 மாநிலங்களில் விளைந்த மொத்த தானியங்களையும் அதானி தனதுகட்டுப்பாட்டிலும் இருப்பிலும் கொண்டு வந்தார்.
அப்போது அதானியின் கிட்டங்கி களிலிருந்து மொத்த தானியங்களின் இருப்பு 100 லட்சம் டன்கள் ஆகும்.
இதனால் மொத்த தானியங்களின் விலையையும் நிர்ணயிப்பது அதானிக்கு சாத்தியமாயிற்று. கிலோ 100 ரூபாய்க்கும் 120க்கும் விற்றுக்கொண்டிருந்ததுவரம் மற்றும் உளுந்தம் பருப்பின் விலையை கிலோ 220க்கும் 260க்கும் அதானியும் சிங்கப்பூர் வில்மர் கம்பெனியும் நாடு முழுவதும் விற்பனை செய்யத் தொடங் கினர்.
இதன் மூலம் அதானி மற்றும் வில்மர் கூட்டாளிகளுக்கு இதுவரை ரூ.1,90,000 கோடிகள் லாபம் மட்டும் கிடைத்துள்ளது. இது அவர்கள் கணக்கில் காட்டாத வருவாய் எனத் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கௌதம் அதானி என்ற தொழிலதிபர் மோடியிடம் கொண்டிருந்த மிகுந்த நெருக்கம் அதானி மிகப்பெரிய தொழில் குழுமமாக வளர்ச்சி பெற வழி வகுத்தது. அதானியும் மோடியும் இணைந்தே வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர் என்று பல ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்த செல்வாக்கின் மூலம் அதானி இன்று ஆஸ்திரேலியாவில் கால்பதித்து பெரிய சுரங்க கம்பெனி தொடங்கியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி 100 கோடி ரூபாய் அதானிக்கு கடனையும் அளித்துள்ளது.
. மோடி அரசு அதானிக்கு இன்னொரு மிகப்பெரிய சலுகையை வழங்கியுள்ளது.
முந்தைய காங்கிரஸ் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் அதானி குழுமம் குஜராத்திலுள்ள முந்திராவில் ஒரு தொழில் திட்டம் தொடங்கிய போது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் நாசத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதித்திருந்தது. நாட்டிலேயே இது போன்று மிகப்பெரிய அபராதத் தொகை எந்த கார்ப்பரேட் மீதும் விதிக்கப்படவில்லை.
இந்த அபராதம் விதிக்கப்பட்டதுடன் முந்தைய காங்கிரஸ் அரசு மேலும் அதானி குழுமத்திற்கு பல கடுமையான விதிகளை விதித்தது.
ஆனால் மோடி அரசு இந்த அபராதத்தை தள்ளுபடி செய்ததோடு அனைத்து விதிகளையும் ரத்து செய்து விட்டது.மேலும் இந்திய மக்களை சுரண்டி கோடிகளை குவிக்க இந்தியாவின் சட்டதிட்டங்களை,விதிகளை அம்பானி,அதானிகளுக்கு ஆத ரவாக மாற்றி விட்டது.
இந்திய பொருளாதரத்தை படுகுழிக்கு தள்ளி விட்டு அதானிகளின் பொருளாதாதரத்தை விய்க்கவைக்கும் அளவுக்கு உயர்த்தி வருகிறது.
அம்பானி,அதானிகளுக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கி முடிவுகளை எடுக்க மறுத்து உண்மையிலெயே இந்திய மக்கள்,பொருளாதரம் உயர்வுக்கு திட்டங்கலைக்கொண்டுவந்த ரகுராம் ராஜனை சுப்பிரமணியசாமி மூலம் அசிங்கப்படுத்தி அவரை பதவி நீடிப்பே வேண்டாம் ,கல்விப்பணிக்குப் போறேன் என்று கிளம்ப வைத்து விட்டார் மோடி.
சுப்பிரணியசாமி குரல் மோடியின் மனஒசைதான்.சுப்பிரமனிய சாமி அடுத்து அரவிந் சுப்பிரமணியனைத்தாக்கி டுவிட்ட அதை மட்டும் உடனே தட்டிக்கேட்ட மோடியின் ராஜ தந்திரம் அனைவருக்குமே தெரிந்த விடயம்.
ராஜ தந்திரத்தில் வைகோவை விட மோடி திறன் மிக்கவர்.திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் வைகோவின் தந்திரம் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது.
மோடியின் தந்திரம் வாக்குஎண்ணிக்கைக்கு ஆரம்பத்திலேயே 10.30 மணிக்கு ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சி வர வாழ்த்து தெரிவித்ததன் மூலம் யார் ஆட்சிக்கு வரவேண்டும்
.
என்பதை தேர்தல் ஆனையத்துக்கு தெரிவித்து ஜெயலலிதாவை ஆட்சியில் உட்காரவே வைத்து விட்டார்.
மோடி,வைகோ இருவரும் தங்கள் வேலைகளை ராஜ தந்திரம் என்று நினைத்துக்கொண்டு அலைந்தாலும் அது குள்ளநரித்தந்திரம் வகையைத்தான் சேரும் .
1500 கோடிகளை வாங்கிக்கொண்டு ம்,அதானியிடம் ஓசியில் விமானம் வாங்கிக்கொண்டும்,பல கோடிகளை தேர்தல் நிதியாக வாங்கிக்கொண்டு தற்போது இந்தியாவின் பட்டாவை அவர்களுக்கு பாத்தியதையாக்குவதும் ராஜத்ந்திரமா என்ன?
கூலிக்கு மாரடிப்பதுதானே?
வைகோவின் தந்திரத்தால் விஜய்காந்தும்,வாசனும்தான் டெபாசிட் இழந்தார்கள் ஆனால் கோடிகளில் உடையணியும் மோடியின் வேலை ?
இந்திய நாட்டின் மக்கள் அனைவரையும் கோவணான்டிகளாக்கி விடும்.
===================================================================================================================================
இன்று,ஜூலை-04.
- பிலிப்பைன்ஸ் குடியரசு தினம்
- அமெரிக்க விடுதலை தினம்(1776)
- சுவாமி விவேகானந்தர் இறந்த தினம்(1902)
- நியூ பிரான்சில் ட்ரோய்-ரிவியேரெஸ் நகரம் உருவாக்கப்பட்டது(1634)