இலவச வை பை தரும் ஆபத்து!
மத்திய அரசு முதல்,மாநில அரசுகள் வரை தற்போது மக்களுக்கு இலவசமாக வை பை கொடுப்பதாகவும்,அதை மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் தருவதாகவு சொல்லுகின்றன.
சில ரெயில் நிலையங்களில் வை பை இணைப்பை கொடுக்கவும் செய்துள்ளனர்.
தொழில், வர்த்தக நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அடிக்கடி வெளியூர் பிரயாணம் மேற்கொள்கின்றனர். இன்றைய நிலையில் அலுவல் தொடர்பான எல்லா விஷயங்களுமே கம்ப்யூட்டர், இன்டர்நெட் உதவியுடனேயே நடக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள், அலுவலகம், வீடு தவிர மற்ற பொது இடங்களில் இன்டர்நெட் இணைப்புக்கு வைபை தொடர்பை பயன்படுத்துகின்றனர்.
விமான நிலையம், தங்கும் ஹோட்டல்கள், ஓய்வு எடுக்கும் இடங்கள் போன்ற இடங்களில் வைபை இணைப்பு வழியாக இன்டர்நெட்டை பயன்படுத்தி அலுவல்களை நடத்துகின்றனர்.
முக்கிய தகவல்களை மற்ற இடங்களுக்கு பரிமாறிக் கொள்கின்றனர்.
பணத்தையும் அனுப்புகின்றனர்.
இவ்வாறு பொது இடங்களில் உள்ள வை பை க்களை பயன்படுத்தும் மூத்த நிர்வாகிகள், அவர்கள் நிறுவனங்கள் சார்ந்த முக்கிய தகவல்களையும், தனிப்பட்ட, குடும்ப விஷயங்களையும், இணையவெளி திருடர்களிடம் பறிகொடுக்கின்றனர் என்று காஸ்பர்ஸ்கை நிறுவனம் எச்சரித்துள்ளது.
ரஷியாவைச் சேர்ந்த காஸ்பர்ஸ்கை நிறுவனம் கம்ப்யூட்டர் தொடர்பான ஆன்டி வைரஸ் சாப்ட்வேர், இதர பாதுகாப்பு சாப்ட்வேரை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது.
சர்வதேச அளவில் இது போன்ற பாதுகாப்பு சாப்ட்வேர்களை வடிவமைத்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம் காஸ்பர்ஸ்கை.
சமீபத்தில் காஸ்பர்ஸ்கை நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வர்த்தகம் தொடர்பாக அடிக்கடி பிரயாணம் மேற்கொள்பவர்கள், குறிப்பாக மூத்த நிர்வாகிகள், பொது இடங்களில் உள்ள வைபை இணைப்புகளை பயன்படுத்துவதால், அலுவல் தொடர்பான பல முக்கியமான, ரகசிய தகவல்களையும், அவர்களின் சொந்த தகவல்களையும் சைபர் கிரிமினல்களிடம் பறிகொடுக்கின்றனர் என்று கூறியுள்ளது.
இவ்வாறு ஐந்தில் ஒருவர் இந்த சைபர் கிரிமினல்கள் வலையில் சிக்குகின்றனர்.
இவர்களில் 31 சதவிகிதத்தினர் மூத்த நிர்வாகிகள். “சைபர் குற்றவாளிகள் பொது இடங்களில் உள்ள வைபை யை பயன்படுத்துவோர்களுக்கும், அந்த இணைப்புக்கும் இடையில் நுழைந்து, நீங்கள் அனுப்பும் தகவல்களை இடைமறித்து கைப்பற்றுகின்றனர்.
இது போல் பொது இடங்களில் உள்ள வைபை யை பயன்படுத்தியதால், இழப்பிற்கு உள்ளானது பற்றி அடிக்கடி தகவல்கள் வெளியாகின்றன.
இந்த சைபர் கிரிமினல்கள் அடிக்கடி பொது இடங்களில் உள்ள வைபை இணைப்பை, அவர்கள் கைப்பற்றி திறமையை வெளிப்படுத்துகின்றனர்.
இன்டர்நெட் இணைப்பு, இணையதளங்களை பயன்படுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை சரியாக கடைபிடிக்காதவர்களே, இந்த சைபர் குற்றவாளிகளின் வலையில் இலகுவாக சிக்குகின்றனர். இந்த பொது இடங்களில் இலவசமாக வழங்கப்படும் வைபை இணைப்புக்கள், தகவல்களை என்கிரிப்ட் செய்வதில்லை.
அதாவது இந்த தகவல்களை மாற்று வடிவில் மாற்றுவதில்லை.
இதனாலேயே இந்த வைபை இணைப்பு பெறுவதற்கு பாஸ்வேர்ட் தேவைப்படுவதில்லை.
இதையே வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் சைபர் குற்றவாளிகள், இந்த இணைப்பு மூலமாக அனுப்பப்படும் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், இமெயில் போன்ற தகவல்களை கைப்பற்றி, தவறாக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
பொது இடங்களில் உள்ள வைபை பயன்படுத்தும் போது பாதுகாப்பாக எஸ்எஸ்எல் எனப்படும் செக்யூர் சாக்கெட் லேயர் என்கிரிப்ட் [SSL (Secure Socket Layer) encrypted websites] இணையதளங்களை பயன்படுத்துவது நல்லது.
இதை பயன்படுத்தும் போது, சைபர் குற்றவாளிகள் உங்கள் இணைப்பில் இடை மறித்து தகவல்களை திருடினாலும், உங்கள் தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்பட்டுள்ளதால், அவர்களால் இவற்றை தவறான வழியில் பயன்படுத்த இயலாது.
ஏனெனில் சைபர் குற்றவாளிகள் என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல்களை, டிகிரிப்சன் செய்ய விரும்புவதில்லை.
இதற்கு நீண்டகால அவகாசம் தேவைப்படும்.
எனவே லேப்டாப், டேபிளேட், ஸ்மார்ட் போன் ஆகியவைகளை பொது இடங்களில் உள்ள வைபை பயன்படுத்தும் முன், மேற்கண்ட பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிப்பது நல்லது மட்டுமல்ல உங்கள் பணம்,மற்றும் ரகசிய தகவல்களுக்கும் பாதுகாப்பானது.
=====================================================================================
ஜூலை-23.
மச்சு பிச்சு |
- பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார்(1911)
- பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு பாரீசில் அமைக்கப்பட்டது(1924)
- சோவியத் யூனியனில் உலகின் முதலாவது குழந்தைகளுக்கான ரயில்வே திறக்கப்பட்டது(1935)
- இந்திய அரசு தனது புதிய பொருளாதார கொள்கையை அறிவித்தது(1991)