காமராஜரை அசிங்கப்படுத்த....?
காமராஜரை இதற்கு மேல் அசிங்கப்படுத்த முடியுமா என்ன?
காமராஜர் படத்தில் வேகமாக சென்ற லாரி மழை சகதியை அடித்ததை காமராஜரை அவமானப்படுத்தியதாக சாலை மறியல்,போராட்டம் என்று பரபரப்பாக்கிய சாதி மோதல் உருவாக்க எண்ணிய எர்ணாவூர் நாராயணன்தான் காமராஜருக்கு இந்த அவமரியாதையை செய்துள்ளார்.
காமராஜர் பிறந்த நாளை கொண்டாட அவர் வயதை குறிக்கும் வகையில் எடையில் கேக் செய்து
வெட்டி கொண்டாடுவது சரியாகும்.ஆனால் இந்த எர்ணாவூர் கும்பல் செய்தது என்ன?
காமராஜர் உருவம் என்று கேக்கில் அசிங்கமாக முண்டம் போன்ற ஒன்றை செய்தனர்.
அத்துடன் விட்டால் பரவாயில்லை அதை கத்தியால் குத்தி புகைப்படம் எடுத்து விட்டு காமராஜர் உடல் உறுப்புகளை(கேக்கைத்தான்) ஒவ்வொன்றாக வெட்டி அனைவருக்கும் கொடுத்து நின்றனர்.
இதுதான் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டமாம்.
இதற்கு மேல் பெருந்தலைவரை யாராவது அசிங்கம்,கொடுமை படுத்தமுடியுமா?
காமராஜர் சிலை சேதமானால் பொங்குகிற நாம் அவரது மற்றோரு வடிவமாக கேக்கில் செய்த காமராஜரை சின்னாபின்னமாக்குவதற்கு என்ன செய்யலாம்?
=====================================================================================
இதைவிட என்ன வேலை?
பிரதமர் மோடி இந்தியாவில் மாநாடு நடக்கிறது.
எல்லா மாநில முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள்.
ஆனால் வழக்கமாக வெளியே வராமல் 20 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கும் தமிழக முதல்வர் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
அவருக்கு பதிலாக வழமையான டம்மி முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார்.
இம்மாநாட்டில் தான் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு தேவையான திட்டங்கள் நிதி உதவி கோரிக்கைகளை மத்திய அரசிடம்வைத்து மாநில வளர்ச்சியை உருவாக்கும் .
ஆனால் இவைகளை கண்டு கொள்ளாமல் தனது பிரதிநிதியை அனுப்ப இது ஒன்றும் மாதாமாதம் நடக்கும் சட்டப்பேரவை அம்மா ஜால்ரா கூட்டம் இல்லை.
ஆனால் மக்களுக்காக தவ வாழ்வு வாழும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இக்கூட்டத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை.அவருக்கு தெரிந்ததெல்லாம் கொடநாடு ஓய்வு முக்கியத்துவம் மட்டும்தான்.
இந்த கூட்டத்துக்கு கூட போக முடியாத அளவு நடக்கும் மக்கள் பிரச்னை என்ன?
தாங்கள் வாங்கிய கபலி படத்துக்கு திரையரங்கு பிடிக்கும் அத்தியாவசிய மக்கள் பணியா?
முதல்வர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத்தால் உண்டாகும் பிரச்னைகளை முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பட்டியலிடுகிறார்.
இதோ அவர் அறிக்கை;
தமிழக அரசு மாநிலத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதி செய்திடும் நோக்கில், பல்வேறு துறைகளுக்கு போதுமான நிதியை ஒதுக்கு வதில்லை என்ற குறைபாடு பரவலாக இந்த அரசின்மீது சொல் லப்படுவதைப் போல, மத்திய அரசு ஒரு சில துறை களின் மேம்பாட்டுக்காக ஒதுக்குகின்ற நிதியையே தமிழக அரசின் சார்பில் முறையாகச் செலவழிப்ப தில்லை என்றும், திட்டங் களை வடிவமைத்து, மத்திய அரசிடம் தேவையான நிதியைக் கேட்டுப் பெறுவ தில்லை என்றும், ஒதுக் கப்பட்ட நிதியிலேயே பல கோடி ரூபாய் நெல்லுக்கிறைத்த நீரைப் போலக் கசிந்து வீணாகிப் போவதாகவும் பல குற்றச்சாட்டுகள் பூர்வாங்க ஆதாரங்களுடன் இந்த அரசின் மீது கூறப் படுவதுண்டு.
உதாரணமாக, “டைம்ஸ் ஆப் இந்தியா”, 15-7-2016 இதழில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. “TN Officials skip Centre’s Cooum Restoration Meet” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அந்தச் செய்தியில், “Tamil Nadu Officials skipped an important session recently with an expert appraisal committee of the Union Environment Ministry to obtain clearance for the 105 crore rupees Eco-Restoration of a 9-km stretch of the Cooum between the river mouth and Chetpet Railway Bridge, further delaying the initial phase. “No senior officer from the Chennai River Restoration Trust or Administrative Depart ment of the State Government was present. Neither was there any brief of the case nor a power point presentation for perusal by the Committee” the panel noted, while deferring the proposal” என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது “மத்திய சுற்றுச் சூழல் அமைச்ச கத்தின் நிபுணர் குழு அண்மையில் நடத்திய மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு அதி காரிகள் கலந்து கொள்ளாமல் தவிர்த்து விட்டனர். அதன் காரணமாக, கூவம் நதியின் முகத்துவாரத்தி லிருந்து சேத்துப்பட்டு ரெயில்வே பாலம் வரை 9 கிலோ மீட்டர் நீளத்திற்குரிய 105 கோடி ரூபாய் மதிப் பீட்டிலான பசுமை மீட்புத் திட்டத்திற்கான முதல் நிலை ஒப்புதல் பெறுவது தாமதமாகிவிட்டது.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையி லிருந்தோ அல்லது அதன் நிர்வாகத் துறையிலிருந்தோ முதுநிலை அலுவலர் யாரும் அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவில்லை. அதனால் நிபுணர் குழுவிடம் கூவம் நதித் திட்டத்தைப் பற்றிய விபரங்களையோ, விளக்கங்களையோ வழங்கிட வழியில்லாமல் போய்விட்டது. எனவே நிபுணர் குழு, கூவம் திட்டத்தைக் கைவிடுவதாகக் கூறியிருக்கிறது” என்று செய்தி வந்துள்ளது.
மேலும் அந்தச் செய்தியில், இந்தத் திட்டம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கூட்டத்திற்கு முன்போ அல்லது கூட்டத்தின் போதோ, எந்த ஆவணமும் உறுப்பினர்களின் ஆய்வுக்காக அனுப்பப்பட வில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.

குழுவின் சிறப்பு உறுப்பினர் கூறும்போது, கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டும்கூட, அந்தக் கூட்டத்திற்கு மூத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை என்றும், இளநிலை அதிகாரிகள் ஒருசிலர் வந்திருந் தும் குழுவின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சரியான பதிலளிக்க இயலவில்லை என்றும் தெரி வித்திருக்கிறார்.
மத்திய அரசின் முக்கியமான குழு ஒன்று இவ்வாறு மனம் நொந்து குறைபட்டுக் கொள்ளும் அளவுக்கு, மாநில அரசின் முன்னுரிமைத் திட்டங்களில் அக்கறை யின்றி அலட்சியமாக இருந்தவர்கள் யார் யார், அவர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத்தான் நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
அ.தி.மு.க. அரசு இவ்வாறு மாநில நலனைப் புறக் கணித்துக் கோட்டை விடுவது இந்த ஒரு திட்டத்தில் மட்டுமல்ல!
கிராமப்புறக் குடிநீர் திட்டங்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியை தமிழக அரசு பயன்படுத்தாமல் இருப்பதால், 2012-2013இல் வழங்க வேண்டிய ரூ. 138.58 கோடியை வழங்க மத்திய அரசு மறுத்தது. தேசிய கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டத்துக்காக மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழக அரசுக்கு 2012-2013ஆம் ஆண்டுக்கான முதல் கட்ட நிதியாக ரூ. 138.58 கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நிதியை ஒதுக்க மத்திய கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் மறுத்தார்.
அது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறி இருந்ததாவது:
“கிராமப்புற குடிநீர் திட்டத்துக்காக மத்திய அரசு ஏற்கெனவே வழங்கிய ரூ. 237.32 கோடி நிதியில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ரூ. 73 லட்சத்தை மட்டுமே (அதாவது 0.3 சதவிகிதம் மட்டுமே) தமிழக அரசு செலவழித்து உள்ளது. 2012ம் ஆண்டு, ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி இன்னும் ரூ. 236 கோடியே 59 லட்சத்தை செலவழிக்காமல் தமிழக அரசு அப்படியே வைத்துள்ளது.
எனவே, 2012-2013ம் ஆண்டில் ஒதுக்கப்பட வேண்டிய முதல்கட்ட நிதியான ரூ. 138 கோடியே 58 லட்சத்தை உங்கள் மாநிலத்துக்கு இப்போது ஒதுக்க முடியாது. ஏற்கனவே மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுவதையும் பயன்படுத்திவிட்டு, செலவிடப்பட்டதற் கான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தால் மட்டுமே, 2012-2013-க்கான முதல் கட்ட நிதியான ரூ. 138 கோடியே 58 லட்சத்தை தங்கள் மாநிலத்துக்கு ஒதுக்க முடியும்” என்றார்.
மத்திய அமைச்சர் மாநில அரசுக்கு இப்படித் தெரிவித்தது, காலம் காலமாக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு தொடர்பாகப் பின்பற்றிவரும் நடைமுறைகளை ஒட்டித் தான் என்பதை மறந்துவிடக் கூடாது.
இதுமாத்திரமல்ல; ஒதுக்கும் நிதியைப் பயன்படுத்தாமல், மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு புறக்கணித்து வருகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் பாசனத் திட்டங்கள், மின் உற்பத்தி, தொழில் வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதி களை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு எவ்வித திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு, தமிழக அரசு மானியத்தை வழங்குகிறது. இதன்மூலம் மலேசிய விவசாயிகள்தான் பயனடைவார்கள். பெட்ரோலுடன் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆனால், தமிழக அரசு இத்திட்டத்திற்கு எந்த ஆதரவும் அளிக்க முன்வர வில்லை. அழிந்து வரும் காங்கயம் இனப் பசுக்களை பாதுகாக்கவும், அவற்றின் இனவிருத்தியைப் பெருக்குவதற்காகவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
ஆனால் இத்தொகையை தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள முன்வரவே இல்லை. இத்தகைய காரணங்களால்தான், மத்திய அரசின் திட்டங்களுக்குத் தமிழக அரசு ஆதரவளிக்காமல் புறக்கணித்து வருகிறது” என்றார்.
மற்றொரு செய்தி! தமிழ்நாட்டில் புதிய பள்ளிகளைக் கட்டவும், ஏற்கனவே கட்டப்பட்ட பள்ளிகளை சீரமைக்கவும் வழங்கப்பட்ட ரூ.4400 கோடியை தமிழக அரசு பயன்படுத்தவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாணவியர்க்கு விடுதி கட்டுதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியையும் தமிழக அரசு பயன்படுத்தாமல் வீணடித்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

இடைநிலைக் கல்வி இயக்கத்தின்படி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படாத நிதியின் அளவு மட்டும் ரூ. 4400 கோடி ஆகும். தில்லியில் நடந்த திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டத்திற்கு தலைமையேற்ற மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இடைநிலைக் கல்வித்துறை செயலர் பிருந்தா சரூப், மாணவ, மாணவியரின் கல்வி சார்ந்த பணிகளில் தமிழக அரசு ஆர்வமின்றி மிகவும் அலட்சியமாகச் செயல்படு வதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு ஒதுக்கிய நிதியைத் தமிழக அரசு முறையாக பயன்படுத்தாததால், கடந்த 2012-13 ஆம் ஆண்டு முதல் தமிழகத்திற்குப் புதிய பள்ளிகளைக் கட்டுதல் உள்ளிட்ட எந்த திட்டத்திற்கும் நிதி உதவி வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது.
இதனால் தமிழ கத்தில் புதிய பள்ளிகளைக் கட்ட கடந்த 3 ஆண்டு களாக ஒரு காசுகூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது பள்ளிக் கல்வி முன்னேற்றத்தில் அ.தி.மு.க. அரசு கொண்டுள்ள நாட்டத்தைக் காட்டும்!
தமிழக போலீஸ் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு கொடுத்த நிதியை செலவு செய்யாமல் வைத்துள் ளனர் என்று ஒரு செய்தி. 2012-13, 2013-14, 2014-15 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,500 கோடி ரூபாய் செலவு செய்யப்படாமல் இருந்துள்ளது.

மத்திய அரசு வழங்கிய நிதி செலவு செய்யப்படாமல் இருந்தால், அந்த நிதியை திருப்பி அனுப்ப வேண்டும். அதன்படி 3 ஆண்டுகளில் செலவு செய்யப்படாமல் இருந்த 1500 கோடி ரூபாயை மத்திய அரசுக்கே திருப்பி அனுப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு, திருப்பி அனுப்பப் பட்டுள்ளது.
தமிழகத்தில் நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல முறைகேடுகள் தலைவிரித் தாடுகின்றன. “தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் முடங்கிக் கிடக்கின்றன” என்று செய்தி வரவில்லையா?
``தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்கவும் பரா மரிக்கவும் 1995-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், மேம்பாடு என்று பல்வேறு அபிவிருத் திப் பணிகளை செய்து தருகிறது.

இதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில், மாநில அரசுகள் கையெழுத்திட வேண்டும். புதிய திட்டங்களுக்கான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசு மறுக்கிறது. ஏற்கெனவே போடப்பட்ட பழைய ஒப்பந்தங்களையும் மதிக்க மறுக்கிறது.
அதனால், தமிழகத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமான திட்டப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.”
“நில ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலம் ஒப்படைத் தலில் தாமதம், ஜல்லி, மண் உள்பட பல்வேறு கனிமப் பொருள்களுக்கான அனுமதியை வழங்காமல் இழுத் தடித்தல், பொதுப்பணித் துறையினால் வழங்கப்பட்ட தடையில்லா சான்றினைத் திரும்பப்பெறுதல், தடையில்லாச் சான்றிதழ் தராமல் இழுத்தடித்தல்... என்று மத்திய அரசின் நிதி உதவியோடு நடக்கும் திட்டங் களுக்கு மாநில அரசின் ஒத்துழையாமைப் போராட்டம் நீடிக்கிறது.

தமிழக அரசிடம் பலமுறை, இந்தப் பிரச்சினைகளை எடுத்துச் சென்றோம். ஆனால், பயன் இல்லை.
மற்ற மாநிலங்களில் மாநில அரசுகளே முன்வந்து ஒப்பந்தம் செய்துகொண்டு, நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளைச் செயல்படுத்துகின்றன. ஆனால், இங்கே ஒத்துழைப்பு ஒப்பந்தமே கிடையாது. இது போன்ற திட்டங்களை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்து கொள்வது முக்கியமானது.
உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு 2,614 ஹெக்டேர் நிலம் தேவைப் படுகிறது. ஆனால், இதற்கான ஆணை இன்னும் தமிழக அரசால் பிறப்பிக்கப்படவில்லை. திண்டுக் கல் - தேனி - குமுளி சாலையை அகலப் படுத்தும் திட்டம் இன்னும் முடியவில்லை. 135 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தச் சாலைத் திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிந்திருக்க வேண்டும்.
ஆனால், 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு மட்டுமே சாலை அகலப்படுத்தப்பட் டுள்ளது. இதுதான் மாநில அரசு, ஒவ்வொரு திட்டங் களுக்கும் எங்களுக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பின் யதார்த்த நிலை'' என்று பட்டியலிட்டார் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர்.
மத்திய அரசின் அந்த அதிகாரியிடம் செய்தியாளர் “எந்தெந்த திட்டங்கள் கிடப்பில் போடப் பட்டுள்ளன?'' என்று கேட்டதற்கு, ''சென்னை-திருப்பதி சாலையை அகலப்படுத்தும் திட்டம், ஆந்திர மாநிலப் பகுதியில் பணி முழுமை பெற்று விட்டது. ஆனால், தமிழகத்தில் அதற்கான அனுமதி கிடைக்காத காரணத்தால், பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை.

தேசிய நெடுஞ் சாலை ஆணையத்துக்கும் தமிழக அரசுக்கும் இடையே நீடிக்கும் இந்த வேறுபாடான நிலை காரணமாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மற்ற திட்டங்களும்... 1,745 கிலோ மீட்டர் நீளத்துக்கான சாலைப் பணிகளும் குளறுபடியில் உள்ளன.
மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையப் பணிகளைச் செய்வதற்கு எந்த ஒப்பந்தக்காரரும் முன்வரவில்லை.
ஏற்கெனவே பெற்ற ஒப்பந்தங்களையும் வேண்டாம் என்கிறார்கள். 2013-ம் ஆண்டு அக்டோபரில் முடி வடைந்திருக்க வேண்டிய சென்னை-திருப்பதி சாலை, சென்னை-தடா சாலை, ஜூனில் முடிவடைந்திருக்க வேண்டிய எண்ணூர்-மணலி சாலை அபிவிருத்தி திட்டம்; செப்டம்பரில் முடிவடைந்திருக்க வேண்டிய சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம், மே மாதம் முடிவடைந்திருக்க வேண்டிய திருச்சி-காரைக்குடி சாலைத் திட்டம், டிசம்பரில் முடிவடைய வேண்டிய கிருஷ்ணகிரி-வாலாஜாபாத் சாலைத் திட்டம் போன்றவை கடுமையாக பாதிக் கப்பட்டிருக்கின்றன'' என்றார் மத்திய அரசின் அந்த அதிகாரி.
“சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலையின் கதி என்ன?''
“சென்னை துறைமுகம்-மதுரவாயல் உயர்மட்ட சாலையின் கதி என்ன?''
என்று செய்தியாளர் கேட்ட தற்கு,
“சென்னை துறைமுகத்துக்கு வந்து செல்லும் கண்டெய்னர் லாரிகள் போக்குவரத்துக்காக துறை முகம் - மதுரவாயல் இடையே 19 கிலோ மீட்டர் நீளத்துக்கு 1,885 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க, 2009 ஜனவரி 9-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார்.
மொத்தமுள்ள 889 தூண்களில் 120 தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் 15 தூண்களில் சாலை அமைப்பதற்கான மேற்பரப்பும் கட்டப்பட்டது. இந்த நிலையில் சேத்துப்பட்டு அருகே கூவம் ஆற்றுக்குள் ஏற்கெனவே திட்ட மிட்டபடி பணிகள் நடக்காததால், ஆற்றுநீரின் போக்கு தடைபடும் என்று கூறி, இந்தத் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசின் நீர்வள ஆதாரத் துறை உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து உயர்மட்ட எக்ஸ்பிரஸ் சாலைப் பணிகள் அப்படியே நிறுத்தப் பட்டன”
என்று பதில் சொன்னார் மத்திய அரசு அதிகாரி.
மேலும் மத்திய அரசு நடத்துகின்ற அதுவும் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரதமர் அவர்களே கூட்டுகின்ற மாநிலங்களிடை மன்றத்தின் மாநாட்டிற் குக் கூட நம்முடைய முதல் அமைச்சர் செல்லாமல், நிதியமைச்சரை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் பிரதமர் கூட்டும் முக்கியமான மாநாட்டிற்கு முதல் அமைச்சரே நேரில் சென்று நமது மாநிலத்தின் தேவை களையும், மக்கள் நலனுக்கான திட்டங்களையும் எல்லாம் எடுத்துச் சொல்வதற்கும், அமைச்சர் ஒருவர் சென்று கேட்பதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு அல்லவா?
இன்னும் சொல்லப் போனால், முதல் அமைச்சர்கள் மாநாட்டில்தான் வங்கிகளை யெல்லாம் நாட்டுடைமையாக்க வேண்டுமென்ற கருத்தை முதன் முதலாக நான் பேசி, மறுநாள் டெல்லியில் உள்ள நாளேடுகள் எல்லாம் அதனைப் பெரிதாக வெளியிட்டிருந்தன.
முதல் அமைச்சர்கள் மாநாட்டில் நான் பேசியதன் விளைவாகத்தான் இந்தியாவில் 14 தேசிய வங்கிகள் நாட்டுடைமை யாக்கப்பட்டன என்பது வரலாறு.
எனவே இப்போது முதல் அமைச்சர்கள் மாநாட்டினை தமிழக முதலமைச்சர் தவிர்த்திருப் பது, நமது மாநில நலனுக்கு உகந்ததல்ல!
-என்கிறார் கலைஞர் கருணாநிதி.
அதானே .மோடியுடன் ஜீன் கோளறுவரைக்கும் சண்டை போட்ட பீகார் முதல்வர் நிதிஷ் அவர்களே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தனது மாநில கோரிக்கைகளை குறித்து மோடியுடன் பேசி யுள்ளார்.
ஆனால் தனது வழக்கு தொடர்பாகவும்,முறைகேடாகவாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே முதல்வரானதுக்கு வாழ்த்து தெரிவித்ததற்கு பிரதம நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கவும் டெல்லி போய் வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாநில நலனுக்கான ,மக்கள் நலனுக்கான மாநில முதல்வர்கள் மாநாடு செல்ல மட்டும் இயலவில்லை.
பல படுகொலைகள் நடக்கையில் கண்டு கொள்ளாதவர் தனது கடசி கவுன்சிலர் கொலைக்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கிறார்.
அவர் கண்டனம் யாருக்கு போய் சேரும் சட்டம் ஒழுங்கை கவனிக்க வேண்டிய அரசையும்,காவல்துறையையும்தானே
அவைகளை தான்தான் கையில் வைத்துள்ளோம் என்பதை கூட உணராமல் அறிக்கை வாசிக்கிறார்.
பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோள்.
இனி மாநில முதல்வர்கள் கூட்டத்தை டெல்லியில் நடத்தாமல் கொடநாட்டிலோ,சிறுதாவூரிலோ நடத்தவும்.
அப்படி நீங்கள் செய்யும் பட்சத்தில் எங்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தவறாமல் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

====================================================================================
இன்று,ஜுலை-18.
மோடி உடையில் மண்டேலா? |
- உருகுவே அரசியலமைப்பு தினம்(1830)
- தென்னாப்பிரிக்க கறுப்பின தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)
- நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)
- வியட்நாம் ஐ.நா.,வில் இணைந்தது(1977)
- ====================================================================================