உலகமயம் : உலகம் செழித்ததா? சீரழிந்ததா?

உலகமயம் அனைவருக்கும் நலம் அளிக்கும் சர்வரோக நிவாரணி எனவும், உலகப் பொருளா தாரத்தினை மேம்படுத்த உதவும் ஒரு துணிச்சலான நடவடிக்கை எனவும் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டது. 

ஆனால், இது முற்றிலும் தவறான கணிப்புஎன்பதனை இடதுசாரி பொருளியல் அறிஞர்கள் மட்டுமின்றி, பால் சாமுவேல்சன் போன்ற "பெரு நீரோட்ட" அறிஞர்கள் சிலரும் கூட அறுதியிட்டுக் கூறினர். 

அப்படி அவர்கள் கூறியதற்கான காரணம் மிகவும் எளிது.உலகப் பொருளாதார ஒழுங்குமுறை, சீன மற்றும் இந்தியப் பண்டங்கள்அமெரிக்காவிற்குள் தாராளமாக இறக்கு மதியினை அனுமதிக்குமானால், இயல்பாகவே, அதிக ஊதியம் பெற்றுவரும் அமெரிக்கத் தொழிலாளர்கள், மலிவான ஊதியம் பெறும் சீன மற்றும் இந்தியத்தொழிலாளர்களுடன் கடும் போட்டியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுவார்கள். 
அதன் விளைவாக அவர்களது ஊதியம் கடுமையாக வீழ்ச்சி அடை யும். 

அமெரிக்கா மட்டும் அல்லாது, வளர்ச்சி அடைந்த பல நாடுகளின் தொழிலாளர்களுக்கும் இதே நிலைமை ஏற்படும். மறுபுறத்தில், குறைவான ஊதியங்கள் இருந்து வரும் சீனா, இந்தியா உள்ளிட்ட மூன்றாவது உலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் ஊதியங்கள் உயரும் என்ற பொதுவான நம்பிக்கையும் தவறானது. 

உலகமயம் உருவாக்கும் வேறுபல விளைவுகள் இதைத் தடுத்து விடும்என்பதை உணராததால் ஏற்பட்ட தவ றான நம்பிக்கையே இது.

மார்க்சியப் பொருளாதார அடிப்படையில் கூறுவதானால், பின்வருமாறு கூறலாம்: மூன்றாம் உலகநாடுகளில் நிலவும் குறைந்த ஊதி யங்களின் காரணமாக, பொருளாதார நடவடிக்கைகளை வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் போது, மூன்றாம் உலக நாடுகளில் வேலையற்றோர் ரிசர்வ் படையின் அளவுசற்று குறையும். 

மறுபுறத்தில் வளர்ச்சி யடைந்த நாடுகளின் ரிசர்வ் படை அதே அளவில் கூடும். பொருளாதாரத்தின் பிறஅம்சங்களில் மாற்றம் எதும் இல்லாதபட்சத்தில், மூன்றாம் உலக நாடு களில் ஊதியங்கள் சற்று உயரும். மறுபுறத்தில், வளர்ச்சியடைந்த நாடுகளின்ஊதியங்கள் குறையும். 

எனவே, உலகமயம், அனைத்து நாடுகளின் தொழிலாளி களுக்கும் ஒட்டு மொத்தமாக உதவாது எனினும், வளர்ச்சியடைந்த மற்றும் மூன்றாவது உலகநாடுகளில் நிலவும் ஊதிய இடைவெளிகளை ஓரளவு குறைக்கும். இப்படிக் கூறும் போது, உலகமயம் இரண்டு வகை நாடுகளின் தொழிலாளர்களின் வாழ்நிலையினைச் சமப்படுத்தும் என்பது போலத் தோன்றும். 
மாறாக, உலகமயத்தின் பிறஅம்சங்கள் அத்துடன் இணையும் போது,அது சீரழிவிற்கே இட்டுச் செல்லும். நமது கசப்பான அனுபவமும் இதுவே.
முதலாளித்துவப் பொருளாதார வளர்ச்சிக்கும், சுபிட்சமான வாழ்க்கைக்கும் உச்சபட்ச எடுத்துக்காட்டாகக் கருதப்படுவது அமெரிக்க நாடு. 
ஆனால், இன்று அந்த நாட்டுத் தொழிலாளர்களின் நிலைமை என்ன? 
நோபல் பரிசு பெற்றவரும், உலகவங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார அறிஞருமான)ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் அது பற்றி என்ன கூறு கிறார் 
" அமெரிக்காவில் 90 சதவீத மக்கள், அதாவது, ஏறக்குறைய அனைவரின் உண்மை வருமானங்களும் 30 ஆண்டுகளுக்கு முன்புஎவ்வளவு இருந்ததோ, அப்படியே இருக்கின்றன. 
அமெரிக்கத் தொழி லாளர்களின் குறைந்த பட்ச ஊதியம், அதன் உண்மை மதிப்பில் - 60 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு இருந்ததோ, அப்படியே உள்ளது இடைப்பட்ட முந்தைய ஆண்டுகளில்அது சற்று உயர்ந்து இருந்திருக்கிறது. 
எனினும், இன்று குறைந்திருக்கிறது என்றால், மிகவும் அண்மைக் காலங்களில் அது பெரும் வீழ்ச்சியினைச் சந்தித்திருக்கிறது என்று தானே பொருள்?

அமெரிக்க மக்களின் வாழ்நிலை வீழ்ச்சியின் மிகத் தெளிவான எடுத்துக்காட்டு இதோ! வெள்ளை அமெரிக்க ஆண்களின் சராசரி ஆயுட்காலம் சரிந்திருக்கிறது. 
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஷ்யாவிலும் இது நடந்திருக்கிறது. 
பல உயிர்களை வாரிச் சுருட்டும் கொள்ளை நோய்கள் எதுவும் இல்லாத நிலையில், வாழ்நிலை மீதான தாக்குதல் தவிர, ஆயுட்காலச் சரிவிற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? 
1990களின் திடீர் வளர்ச்சி, டாட்காம் குமிழி, சப்-பிரைம் குமிழி போன்றவைகள் மூலம் மேலே சென்று 2008 நெருக்கடிக்குப் பின்னர் அமெரிக்கா மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க உழைக்கும் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். பிரிட்டனிலும் அண்மைக் காலங்களில் தொழிலாளர்களின் உண்மை ஊதியங்கள் பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன.
 வளர்ச்சி அடைந்த நாடுகளிலுள்ள தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. 
அங்குள்ள இடதுசாரி சக்திகள் அதனைச் சரியாக அங்கீகரித்து நடவடிக்கைகளில் ஈடுபடாததால், அந்தச் சூழ்நிலையினை வலதுசாரிச் சக்திகள் பயன்படுத்துகின்றன. 
அண்மையில், ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன்வெளியேறுவதற்கு (Brexit) ஆதர வாகக் கிடைத்த வாக்குகள், அமெரிக்காவில் குடியரசுக் கட்சியின்ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது போன்ற நிகழ்வுகளை இந்தப் புரித லோடு தான் பார்க்க வேண்டும்.

வளர்ச்சி அடைந்த நாடுகளின் வேலைகள் மூன்றாம் உலகிற்கு திருப்பி விடப்பட்டு, அந்நாடுகளில் பழைய நிலையிலிருந்து மீண்டு, ஊதியங்கள் சற்று உயர்ந்திருக்கும் நிலையில், அந்நாடுகளின் தொழிலாளிகளின் வாழ்க்கை சற்று மேம்பட்டிருக்க வேண்டும் அல்லவா? 
ஆனால், அது நடைபெறவில்லை. மாறாக, அவர்களது வாழ்க்கையும் சீர ழிக்கப்பட்டிருக்கிறது. 
இது ஏன் என்று விளக்குவதற்கு முன்னர், முதலில் சீரழிவு குறித்து பார்ப்போம்.
மக்கள் உணவு நுகர்வுப் புள்ளி விவரங்கள் அதனை எளிதில் விளக்கிவிடும். 1993-94க்கும் 2009-10க்கும்இடைப்பட்ட ஆண்டுகளை எடுத்துக்கொள்ளலாம். 
ஒரு பரந்த அடிப்படை யில், இந்த ஆண்டுகளை இந்தியாவில் உலக மயம் அமலாக்கப்பட்ட ஆண்டுகள் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த ஆண்டுகளில் தான் எதிர்பாராத வகையில், ஜி.டி.பி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) வளர்ச்சி பெருமளவு உயர்ந்தது. 

கிராமப்புறத்தில், குறைந்த பட்சம் 2,200 கலோரிக்குக் கீழ் உணவு உண்பவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1993-94ல் அத்தகையோர் 58.5 சதவீதமாக இருந்தனர். 2009-10ல் அந்த சதவீதம் 76 ஆக உயர்ந்தது. 

குறைந்த பட்சம் 2100 கலோரி என்று நிர்ண யிக்கப்பட்டிருக்கும் நிலையில், நகர்ப்புறமக்களின் சதவீதம் இதே காலத்தில் 57ல் இருந்து 73 ஆக உயர்ந்தது. 
2009-10 அறுவடை மோசமாக இருந்த ஆண்டு என்று கூறி, செழிப்பான ஆண்டான 2011-12ம் ஆண்டிற்கான புதிய சர்வே ஒன்றிற்கு அரசு உத்தரவிட்டது. 

அதிலும் பெரிய முன்னேற்றம் எதுவும் வெளிப்படவில்லை. கிராமப்புறத்தில் 1993-94ல் 58.5ரூ ஆக இருந்தது 2011-12ல் 68ரூ ஆக உயர்ந்தது. 
நகர்ப்புறத்தில் அது 57ரூலிருந்து 65ரூமாகஉயர்ந்தது. 
இப்படி எந்த ஆண்டுடன் ஒப்பிட்டாலும் வறுமை அதிகரித்தது, அதிகரித்தது தான்.

மக்களின் உணவு நுகர்விலேற்பட்ட வீழ்ச்சியினை விளக்க பல சொத்தையான வாதங்கள் முன்வைக்கப்படு கின்றன. இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை மக்கள் உண்கிறார்கள் என்பது ஒரு வாதம்.
அப்படியானால், ஆடு, கோழி, மாடு, பன்றி முதலிய வற்றின் தீவனத்தின் அளவுதானிய நுகர்வின் மொத்தக் கணக்கில் வந்திருக்க வேண்டும் அல்லவா? 
பதப்படுத்தப்படும் உணவு தானிய உணவு என்றாலும், அது மொத்தக் கணக்கில்வந்திருக்க வேண்டும் அல்லவா? 
ஒன்று மக்களின் நேரடி உணவு நுகர்வு.மற்றொன்று மறைமுக நுகர்வு. இரண்டும் சேர்ந்தது தானே மொத்தக் கணக்கு? 
எங்கெல்லாம் உண்மை வருமானம் உயர்கிறதோ அங்கெல்லாம் கலோரிநுகர்வு அதிகரித்துள்ளது. இது உலகளாவிய உண்மை. அது குறைந்தால்உண்மை வருமானம் குறைந்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 
இதை எந்த விளக்கத்தினாலும் மூடி மறைக்கமுடியாது.

கல்வியும் மருத்துவ சேவையும் தனியார்மயம் ஆக்கப்பட்ட நிலையில்,அவற்றிற்காக மக்கள் கடந்த காலங்களை விட அதிகம் செலவழிக்கவேண்டியுள்ளது. 

இந்திய விவசாயி களின் தற்கொலைக்கான காரணங்களில் 27 சதவீதம் மருத்துவச் செலவுகளினால் ஏற்பட்ட கடன் சுமை என்பது குறிப்பிடத்தக்கது .
பணவீக்கமும், இத்தகைய செலவினங்களும் சேர்ந்து மக்களின் உண்மை வருமானத்தினை வெகுவாக அரித்து வருகின்றன. 
உண்மை வருமானம் குறையும் போது கலோரிநுகர்வும் குறைகிறது. இது வளர்ச்சி அடைந்த நாடுகள், மூன்றாவது உலக நாடுகள் என உலகம் முழுவதும் நடை பெறுகிறது. நம் நாட்டிலும் நடக்கிறது

உலகமயத்தில் உற்பத்தி வளர்ச்சி அடைந்த நாடுகளிலிருந்து மூன்றாம் உலகப் பொருளாதாரங்களுக்கு இட மாற்றம் செய்யப்படும், அதனால் அந்நாடுகளில் புதிய வேலை வாய்ப்புக்களும், ஊதிய உயர்வும் கிட்டும்என வாதிடு பவர்கள் முக்கியமான ஒன்றை மறைத்து விடுகின்றனர். 
உலகமயம் சிறு உற்பத்தியாளர்களை நசுக்கிவிடும், அந்த இடத்தைகார்ப்பரேட் உற்பத்தி ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதே அந்தப்பயங்கரமான உண்மை. இதன் காரண மாக தங்கள் பாரம்பரியத் தொழில்களை விட்டு வெளியேற்றப்படுபவர்கள் வேலை தேடி நகரங்களுக்கு புலம் பெயர்கின்றனர்.

இன்றைய தொழில்நுட்பம் வேலைவாய்ப்புக்களின் வளர்ச்சிக்கு பெருமளவு தடைக்கல்லாய் நிற்கிறது. இதன் விளைவாக நகரங்களில் வேலை இல்லாப் பட்டாளத்தின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. (இந்தி யாவில் புதிதாக வேலை தேடுவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11.3 கோடி பேர்வேலை தேடி வருகின்றனர்). 
இவ்வாறு உழைப்பிற்கானகிராக்கியை விட, தொழி லாளர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ள நிலையில், இயல்பாக சராசரி உண்மை ஊதியங்கள் வீழ்ச்சி அடைகின்றன. 
உயர்ந்து வரும் செல வினங்களையும் சேர்த்துக் கணக்கிடும் போது அவர்களுடைய உண்மை வருமானமும் வீழ்ச்சி அடைகிறது.
பேரா.பிரபாத் பட்நாயக்
தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் உயர்வும், சராசரி உண்மை ஊதி யங்களின் வீழ்ச்சியும் மறு புறத்தில் உபரி(முதலாளிகளின் லாபம்) யினை உயர்த்துகிறது. 
தொழிலாளர்களின் கூலிஉயர்ந்தால், அது உள்நாட்டுப் பண்டங்களின் உற்பத்திக்கான கிராக்கியை ஏற்படுத்தும். அதனால், உள்நாட்டில் வேலை வாய்ப்புக்கள் பெருகும் வாய்ப்புக்கள் உண்டு. 
முதலாளிகளின் லாபமாக மாறும் பணம் அத்தகைய உள்நாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெருக்குமா எனக் கூறமுடியாது. (இறக்குமதிப் பண்டநுகர்விற்கு அந்தப் பணம் செலவழிக்கப்ப ட்டால், அது உள் நாட்டு வேலை வாய்ப்புக்களை எப்படி அதிகரிக்கும்?) இவ்வாறு ஊதியங்கள் குறைந்து லாபம் அதிகரிப்பது மேலும் வேலை வாய்ப்பு களைச் சுருக்கவே உதவும். 
வறுமை பெருகும். நெருக்கடிகள் அதிகரிக்கும் போது இந்த விஷச் சக்கரம் வேகமாகச் சுழலும்.

இந்தியாவின் மொத்த உழைப்பாளர்களின் எண்ணிக்கையில் வெள்ளைச்சட்டை ஊழியர்களின் சதவீதம் குறைவானதே எனினும், அவர்களின் எண்ணிக்கை கணிசமானது. 
இவர்களது வாழ்க்கைத் தரத்தின் உயர்வு, (அதன் பயனாக அவர்கள் உருவாக்கும் கிராக்கி) சில சேவைத்துறைகளின் வளர்ச்சிக்கு உதவுவதாக உள்ளது. எனவே இயல்பாகவே, இவர்கள் உலகமயத்தின் ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். 
ஊடகங்களிலும், கருத்து உருவாக்கு வதிலும் இவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். உலகமயத்தில் இணைக்கப்பட்டிருக்கும் கார்ப்பரேட் - நிதி சாம்ராஜ்யத்திற்கும், அதனுடைய பிரச்சாரத்திற்கும் இவர்கள் கருவிகளாகப் பயன்படுகின்றனர்.
                                                                                                                                                                                - பேரா.பிரபாத் பட்நாயக்
                                                                                                                                  
தொகுப்பு : இ.எம்.ஜோசப்..
=================================================================================================================================

தேசிய அரசுடமை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் மக்கள் விரோத செயல்...
SBI மாணவர்களுக்கு வழங்கிய கல்வி கடன் மொத்தம் ரூ 850 கோடி. 
இதை 55% கழிவு கொடுத்து ரிலயன்ஸ்க்கு விற்று விட்டது SBI. அதாவது 850 கோடியை ரிலயன்ஸ் வசூலித்து கொண்டு,வங்கிக்கு சுமார் 400 கோடி கட்டினால் போதும். 
இதனை கூட 15 ஆண்டுகள் தவணையில் கட்டினால் போதும். 
இந்த 15 ஆண்டுகள் தவணையை SBI ஏன் மாணவர்களுக்கு வழங்க வில்லை. 
ரிலயன்ஸ் க்கு கொடுத்த 55% கழிவை ஏன் மாணவர்களுக்கு வழங்கவில்லை???
                                                                                                                                - Samuel Raaj
=================================================================================================
இன்று,
ஜூலை-19.

  மங்கள் பாண்டே, பிறந்த தினம்  (1827)
  • பிரான்ஸ்,புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)
  • இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)
மங்கள் பாண்டே
  • நிக்கரகுவா தேசிய விடுதலை தினம்(1979)

  • மங்கள் பாண்டே
  • முதல் இந்திய சுதந்திரப் போர் என, வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும், சிப்பாய் கலகத்தை முன்னின்று நடத்தியவர், மங்கள் பாண்டே!

  • உத்தரப் பிரதேசத்தில் உள்ள, நாக்வா என்ற ஊரில் பிறந்தார். தன், 22வது வயதில், ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பனியில் சேர்ந்து, அதன், 34வது படை பிரிவில் பணிபுரிந்தார்.

  • ஆங்கிலேய அதிகாரிகள், கொடுக்கும் துப்பாக்கியின் கொக்கியை வாயால் இழுத்து, தோட்டாக்களை உள்ளே செலுத்த வேண்டும். அப்போது, தோட்டாக்களில் தடவிய பன்றி, பசுக் கொழுப்பு அவர்களின் வாயில் படும். இந்த தோட்டாக்களை பயன்படுத்த இந்திய சிப்பாய்கள் மறுத்தனர். 

  • கடந்த, 1857 மார்ச் 29ம் தேதி, சிப்பாய்களிடம் கிளர்ச்சியைத் துாண்டினார் மங்கள் பாண்டே; மேஜர் ஹ்யூசனை, சுட்டுக் கொன்றார். தொடர்ந்து, இந்திய சிப்பாய்கள், ஆங்கிலேய அதிகாரிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். 
  • பாண்டே கைது செய்யப்பட்டு, 1857 ஏப்., 8ம் தேதி துாக்கிலிடப்பட்டார்.
  • =================================================================================================

இப்போது வட இந்தியாவில் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்?திட்டமிட்டு திருவள்ளுவரை அவமானப்படுத்துகிறார்கள்.ஆர்.எஸ்.எஸ்.அனுதாபிகள்.தமிழ் நாட்டில் பள்ளிப்புத்தகங்களில் திருவள்ளுவர் படத்தை கிழித்து,மறைத்து அசிங்கம் செய்தவர்கள் வகையறாக்கள்தானே?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?