திறக்கப்படும் கன்டெய்னர் பண மர்மங்கள்!
திருப்பூரில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் கன்ட்டெய்னர் பணம் குறித்து தனது ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கிவிட்டது சி.பி.ஐ.'
அதன் முதல் கேள்வியே சட்டரீதியிலானவாங்கிப் பணம் என்றால், இவ்வளவு மர்மங்கள்,குழப்பங்கள் ஆந்திராவுக்குக் கொண்டு செல்ல தேவையா ?'
போதிய பாதுகாப்பு இல்லாமலும்,அசல் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன?
அதுவும் தேர்தல் நேரத்தில் ?
மூன்று கன்டெய்னர்களும் மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணில் போலியாக மோசடி செய்தது ஏன்?
என கேள்வி எழுப்புகின்றனர் சி.பி.ஐ அதிகாரிகள்.
2016 சட்டமன்றத் தேர்தல் சமயம், மே 13-ம் தேதி அன்று திருப்பூர் அருகில் மூன்று கன்ட்டெய்னர் லாரிகளை பறிமுதல் செய்தது தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை.அந்த கன்ட்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பணம் இருந்ததாகத் தகவல் வெளியானது.
தமிழகம் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த லாரிகள் பறிமுதல் சம்பவத்தின் பின்னணியில்,உள்ள உண்மைகளை வெளியில் கொண்டு வருவதற்காக, சி.பி.ஐ விசாரணை கோரியிருந்தார் தி.மு.க எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன்.
அவர் தன்னுடைய மனுவில், 'மூன்று கன்ட்டெய்னர்களிலும் ரூ.570 கோடி பணம் இருந்துள்ளது. இதைக் கொண்டு செல்ல, ரிசர்வ் வங்கி எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் இந்தப் பணத்திற்குக் காலதாமதமாக உரிமை கொண்டாடியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, 'இந்த வழக்கை விசாரிப்பதற்கு முகாந்திரம் இருக்கிறதா என சி.பி.ஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். அதைத் தொடர்ந்து கன்ட்டெய்னர் விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ அதிகாரிகள், தற்போது சில தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
அவர்கள் கூறும்போது, "கோவை, ரயில் நிலையம் அருகில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு கன்ட்டெய்னரில் பணம் கொண்டு செல்லப்பட்டது. சட்டரீதியாகக் கொண்டு செல்லப்பட்ட பணம் என வங்கி அதிகாரிகள் சொல்கின்றனர். ஆனால், பிடிபட்ட கன்ட்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள் போலியானவை. விசாகப்பட்டினம் முகவரியில் உள்ள அந்த லாரிகளில் போலியான நம்பர் பிளேட்டுகள் (AP 13 X 5204, 8650, 5203) பொருத்தப்பட்டுள்ளன.
இதுதான் எங்களது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.
பணம் பிடிபட்டதில் இருந்து 24 மணி நேரம் வரையில், அந்தப் பணத்திற்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, ஒரு வங்கியில் இருந்து இன்னொரு மாநில வங்கிக்கு பணப் பரிமாற்றம் நடக்கும்போது, மாவட்ட காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாநில எல்லையைக் கடப்பது வரையில், அவர்களது பாதுகாப்பில் பணம் இருக்கும்.
அதன்பிறகு, பணம் சென்று சேரும் மாநிலத்தின் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பை வழங்குவார்கள். இவை எதுவுமே திருப்பூரில் பிடிபட்ட கன்ட்டெய்னர் விவகாரத்தில் கடைபிடிக்கப்படவில்லை.
சட்டரீதியான பணத்தைக் கொண்டு செல்ல, சட்டத்தை மீறி வங்கி அதிகாரிகள் நடந்து கொண்டது ஏன்?
பணம் பிடிபட்ட நேரத்தில் யார் யாருக்கு போன் மூலம் பேசினார்கள்?
வங்கி அதிகாரிகள் வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது ஏன்?
570 கோடி மட்டும்தான் கன்ட்டெய்னரில் இருந்ததா என்பதைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
விரைவில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வோம்" என்கின்றனர்.
"கோவை மாவட்டத்தில் நீண்டகாலமாக கோலோச்சி வந்த மாவட்டத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் அவர், கோவை திரும்புவதற்கு முன்னதாகவே புதிய அதிகாரி ஒருவரை அந்தப் பதவியில் நியமித்துவிட்டார். கன்ட்டெய்னர் பணம் பிடிபட்ட நேரத்தில், முந்தைய அதிகாரி சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருக்கிறது. வேறு எந்த மாவட்டங்களின் முக்கிய அதிகாரியும் மாற்றப்படாமல், கோவைக்கு மட்டும் புதிய அதிகாரியைக் கொண்டு வந்ததே, கன்ட்டெய்னர் ரகசியங்களைக் காப்பதற்குத்தான். அரசுக்கு மிகுந்த விசுவாசமாக இருக்கும், அந்த அதிகாரிக்கு மட்டும் இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படுவது ஏன்?" என கேள்வி எழுப்புகிறார்கள் கோவை வருவாய்த்துறை அதிகாரிகள்.
"கோவை மாவட்டத்தில் நீண்டகாலமாக கோலோச்சி வந்த மாவட்டத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் சில நாட்களுக்கு முன்பு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டார். வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் அவர், கோவை திரும்புவதற்கு முன்னதாகவே புதிய அதிகாரி ஒருவரை அந்தப் பதவியில் நியமித்துவிட்டார். கன்ட்டெய்னர் பணம் பிடிபட்ட நேரத்தில், முந்தைய அதிகாரி சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அவர் மீது இருக்கிறது. வேறு எந்த மாவட்டங்களின் முக்கிய அதிகாரியும் மாற்றப்படாமல், கோவைக்கு மட்டும் புதிய அதிகாரியைக் கொண்டு வந்ததே, கன்ட்டெய்னர் ரகசியங்களைக் காப்பதற்குத்தான். அரசுக்கு மிகுந்த விசுவாசமாக இருக்கும், அந்த அதிகாரிக்கு மட்டும் இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படுவது ஏன்?" என கேள்வி எழுப்புகிறார்கள் கோவை வருவாய்த்துறை அதிகாரிகள்.
அருகில் இருக்கும் கோவை ஸ்டேட் வாங்கி வாயை திறக்காமல் இருக்கையில் டெல்லியில் மத்திய அமைசராக இருக்கும் அருண் ஜெட்லீ "அது ஸ்டேட் வாங்கிப் பணம் ."என்று ஆளுக்கு முந்தி அவசரமாக அறிக்கை விட்டது ஏன்?அதற்கும் 12 மணி நேரத்துக்குப்பின்னர்தான் ஸ்டேட் வாங்கி தனது பணம் என்றது.அதற்கு மறு நாள்தான் ரிசர்வ் வங்கியும் தலையை ஆட்டியது.
இதனால் அருண் ஜெட்லீ ஒரு அரசியல்வாதியை காப்பாற்றத்தான் இப்படி சமாளிப்பு பணிகளை செய்கிறார் என்பது வெலிசமாகிறது.
இதைப்போல்தான் பிரதமர் மோடியும் தமிழ் நாடு சட்டமன்றத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவங்கியதுமே ஜெயலலிதா முதல்வராவதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.அதன் பின்னர்தான் முதல் முடிவே வெளியாகிறது.
போலி வாக்காளர் சேர்க்கை அதிகம் என்று திமுக உட்பட்ட எதிர்க்கட் சிகள் அவர்களை நீக்க வேண்டும் என்ற போது அப்படி ஒன்றும் இல்லை.இருந்த போலிகளை நீக்கியாயிற்று என்று கூறிய தேர்தல் ஆணையம் தற்போது தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 20000போலி வாக்காளர்கள் உள்ளனர்.அதை தற்போது மென்பொருள் மூலம் கண்டறிந்துள்ளோம் என்கிறது.
தேர்தலுக்கு முன்னர் செய்ய வேண்டிய பணியை ஜெயலலிதாவை முதல்வராக்கி விட்டு சாவகாசமாக செய்கின்றனர்.
அப்படி 20000 போலி வாக்காளர்களுடன் நடந்த தேர்தல் செல்லுமா?வெற்றி பெற்ற அதிமுகவினரின் அதிகபட்ச வாக்கு வித்தியாசமே 10000க்குள்தான் அதிகம் பேர் உள்ளனர்.
மத்திய அரசு ,தேர்தல் ஆணையமும் கண்டெய்னர் பிடிபட்டபோது நடந்து கொண்ட முறை இன்னமும் உறுத்தலாகத்தான் உள்ளது.
சிபிஐ இதே வேகத்தில் போனால் மத்திய ,மாநில அரசியல்வாதிகள்.வங்கி அதிகாரிகள்,அரசு அலுவலர்கள்(தேர்தல் ஆணைய ம் உடன்பட )என பல்வேறு தரப்பிலும் இருந்து முக்கிய பெருமக்கள் மாட்டுவார்கள்.
அதை நடக்க விடுவார்களா அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள்? சந்தேகம்தான்!
'