நல்லதோர் வீணை செய்தே

'சட்டமன்றத் தேர்தல் கொடுத்த தோல்வி பாடங்களில் இருந்து இடதுசாரிகள் பாடம் கற்கவில்லை. தமிழ்நாட்டில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை இடதுசாரிகள் தேர்வு செய்திருக்கலாம்' 
- வரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப்.

இடதுசாரி சிந்தனையாளரும் இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியருமான இர்பான் ஹபீப் தான் இதை கூறியுள்ளார் . 
இர்பான் ஹபீப் பிரபலமான இடதுசாரி அறிஞர்.வரலாற்று பேராசிரியர் .

இவர் இந்தியாவில் தற்போது மேற்கு வங்கம்,தமிழ் நாடு உடன்பட ஐந்து மாநிலங்களில் நடந்த பொதுத் தேர்தல்கள் பற்றியும்,அதன் வெற்றி,தோல்வி பற்றியும் அலசி ஆராய்ந்துள்ளார்.

குறிப்பாக ஒவ்வொரு மாநிலங்களிலும் இடதுசாரிகள் தேர்தலை எதிர்கொண்ட விதம் பற்றி விரிவாக ஆய்வு நடத்தியிருக்கிறார் அவர்.

" சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக, சி.பி.எம்மின் மத்தியக் குழு எடுத்த முடிவுகள் தவறாகவே அமைந்துவிட்டன. 
கடந்த தேர்தல் தோல்வி அளித்த அனுபவங்களில் இருந்து அவர்கள் இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. 

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக தமிழ்நாடு இருக்கிறது. 

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, - காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரிகள் இடம்பெற்றிருந்தால்நன்றாக இருந்திருக்காதா? 
மேற்கு வங்கத்தில் வெற்றிக்காக காங்கிரசுடன் இடங்களை பகிர்ந்து கொண்ட இடதுசாரிகளுக்கு  தமிழகத்தில் அப்படி திமுக கூட்டணியில் சேராமல் போனது ஏன்?
கடசி வெற்றி,தோல்வியை விட அங்குள்ளத் தலைவர்களின் சொந்த விருப்பு,வெறுப்புகளே அதற்கு காரணமாகத்தெரிகிறது.மக்களிடம் வாக்குகளை வாங்கி வெல்லும் தேர்தல் முறைக்குள் வந்த பின்னர் வெற்றி பெற தேவையான கூட்டணியில் இணைவதில் தமிழக இடது சாரி  தலைவர்கள் கோட்டை விட்டு விட்டனர்.இவர்கள் கொடுத்த தமிழக களநிலவரம் பற்றிய தவறான சொந்த விருப்ப அறிக்கைகளே சி.பி.எம்மின் மத்தியக் குழு எடுத்த முடிவுகள் தவறாக அமைய காரணமாக அமைந்து விட்டன.

அதற்கேற்ப கூட்டணியை அமைத்திருக்கலாம். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதைப் போல, வெளிப்புற மக்களின் அனுதாபத்தையும் கட்சி அதிகளவில் பெற வேண்டும்" என மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவுக்கு விரிவான ஆலோசனைகளைக் கூறியிருக்கிறார் ஹபீப். 

அதற்கு பத்தி தருவதாக சி.பி.எம் தமிழ் மாநிலச் செயலாளர்ஜி.ராமகிருஷ்ணன் கூறியது:" இந்தியாவில் உள்ள வரலாற்று ஆசிரியர்களில் முதன்மையானவர் இர்பான் ஹபீப். அவரை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். 

ஆனால், தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகளை வைத்து அவர் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து அவர் முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றேதெரிகிறது."
என்று மொழிந்துள்ளார்.


தமிழ் நாட்டு அரசியல் எதார்த்தத்தை புரிந்து கொள்ளாதது ஹபீப் அல்ல.ஜி.ராமகிருஷ்ணன்தான்.

அவரின் திமுக மீதான கடுப்புதான் ஒரு கம்யூனிஸ்டை கூட அனுப்பிவைக்க முடியாத சட்டமன்றமாக 2016 அமைந்துள்ளது.

திமுக மீதான ஜி.ரா.வெறுப்பு ,வைகோவின் சகுனி வேலையால்தான் இந்நிலை.
ஒட்டு மொத்தமாக அதிமுக,திமுகவை தவிர்த்து அனைத்துக்கடசிகளையும் தமிழக மக்கள் ஒதுக்கி தள்ளியும் தமிழக கள நிலவரம் அறியாமல் ஜி.ரா, கனவுலகில் வாழ்கிறார்.


அல்லது தெரிந்தே புதைகுழிக்கு கட்சியை அனுப்பி வைக்கும் பணியில் இருக்கிறார்.

ஆனால் இதே  அதிமுக கூட்டணிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்தால்  அடுத்த நிமிடத்தில் போயஸில் கால்கடுக்க சீதாராம் எச்சூரியுடன்காத்திருப்பார். 

காரணம் இவர்களாக அதிமுக கூ ட்டனியில் இருந்து அதன் கொள்கை கோட்பாடு பிடிக்காமல் வெளி வரவில்லை.ஜெயலலிதாதான் இடதுசாரிகளை கடந்த மக்கள வைத்தேர்தலில் இருந்துகழட்டி விட்டார் . அதன் பின்னரும் இடதுசாரிகள் ஜி.ரா,தா.பாண்டியன் கடும் தாக்குதல் பட்டியலில் இருந்தது கருணாநிதிதான் .ஜெயலலிதாவை அவர்கள் மயிலிறகால்தான் வருடினார்கள் .முதல்வராக கருணாநிதி இருப்பதுபோல்தான் இடதுசாரிகள் தாக்குதல் அறிக்கைகள் அமைந்தன.
கருணாநிதி அரசை ஜெயலலிதாவை தாக்கி அறிக்கை விடுத்தால் அடுத்த கணம் வருவது அதிமுக கடசி விளக்கம் அல்ல.

இடதுசாரிகள் விடுக்கும் "திமுக ஆடசியில் இப்படி என்னென்ன தவறுகள் நடந்தது.நீர் யோக்கியமா?என்பதான அறிக்கைகள்தான்.

ஜி.ராவுக்குகலைஞர்,திமுகமீதுமட்டும்தான்வெறுப்பு.

ஜெயலலிதா இவரை கூட்டணியில்சேர்க்காததால் அதிமுகவை தள்ளி வைக்கிரார். உண்மையில் இடதுசாரிகளை தள்ளிவைத்துள்ளதுஅதிமுகதான்.

இவரின் தவறான தமிழக அரசியல் நிலை குறித்த அறிக்கையால்தான் மத்திய பொலிட் பீரோ ம.ந.கூ,அமைக்க ஆதரவு தந்தது.


இதுவரை திமுக ,அதிமுக கூட்டணியில் சில இடங்களை பெற்று கொஞ்சமாவது கம்யூனிஸ்ட் கோரிக்கைகளை சாதிக்க முடிந்தது.



இப்படி தெருவோர யாரும் சீண்டாத அனாதையாக இருந்தால் யாருக்கு,என்ன பயன்.

புத்ததேவ் பட்டாசுசார்யா,மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்டுகளுக்கு சிங்குர் ,டாடா கார்த்தொழிற்சாலைக்குவிவசாயநிலங்களை கைப்பற்றியதுபோன்ற தனதுதான்தோன்றித்தனமான முடிவுகளால் மம்தா பானர்ஜிக்குபுத்துயிர்கொடுத்து கம்யூனிஸ்டுகளுக்கு மீளமுடியாத இழப்பை உண்டாக்கினார்.


அந்தப் பணியை தமிழ் நாட்டில் ஜி.ரா செவ்வனேசெய்கிறார்.
ஹபீப் தமிழ் நாட்டில் மக்களின் ,தேர்தல் வெற்றி ,தோல்விகள்,அது தொடர்பான நிகழ்வுகள்,அறிக்கைகள் ஆகிய எல்லாவற்றையும் அலசல் செய்துதான் தனது அறிக்கையை தயார் செய்த்துள்ளார்.


திமுக தலைவர் வலிந்து அழைத்தும் கூட்டணிக்கு போகாதது கொள்கை கோட்பாடுதான் காரணம் என்பதை தமிழ் நாட்டில் அன்றாட நிகழ்வுகளை படிக்கு ஒருவரும் நம்ப மாட்டார்கள்.

மண்குதிரை வைகோவை நம்பியது ஜெயலலிதா தங்களைக் கண்டு கொள்ளாததால் உண்டான வேறுவழியில்லாமல்தான்.

தேர்தல் கூட்டணி அமையும் போதே பாலபாரதி ,சு.போ.அகத்தியலிங்கம் போன்ற சிலதோழர்கள் வெளியிட்ட கருத்துக்களை ஜி.ரா ,கண்டு கொள்ளவே இல்லை.

அதிலும் ஹபீப் இந்த அறிக்கைகளை தனது இடதுசாரி பார்வையில்தான் அலசியுள்ளார் என்பதையும் ஜி.ராமகிருஷ்ணன் மட்டுமல்ல.அவரது தவறான வழிகாட்டலில் புதைகுழியை தேடிவீர  நடை போட்டு செல்லும் அனைத்து தோழர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

"நல்லதோர் வீணை செய்தே  "பாடல் பாலபாரதிக்கு தேர்தல்கூட்டணி அமையலில் வந்தது தான் நமக்கும்,வரலாற்றுப் பேராசிரியர்  இர்பான் ஹபீப் தற்போது வந்துள்ளது.
===================================================================================================
இன்று,

ஜூலை-14.


  • ஈராக் குடியரசு தினம்
  • ஜெர்மனியில் நாஜி க் கட்சி(ஹிட்லர் கடசி) தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன(1933)
  • நாசாவின் சேர்வெயர் 4 எனும் ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது(1967)
  • பிரெஞ்சுப் புரட்சியின் 200வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது(1989)
  • ===================================================================================================
சில சந்தேகங்கள்.
ஸ்வாதியை அவங்க அப்பா வீட்டில் இருந்து வண்டியில் அழைத்து செல்கிறார் இந்த காட்சி காலை 6:35க்கு cctv கேமராவில் பதிவாகி உள்ளது.
ராம் குமார் கொலை செய்துவிட்டு வெளியே தப்பித்து ஓடி வரும்போது ஒரு வீட்டில் உள்ள cctv கேமராவில் பதிவாகி உள்ள நேரம் 6:32.
ஆக ஸ்வாதியை ரயில் நிலையத்திற்கு வரும் முன்னே ராம் குமார் கொலை செய்துவிடடார்.
6:35க்கு சுவாதி அப்பனால் ஸ்கூட்டரில் இரயில்வே ஸ்டேசனுக்கு கூட்டி
செல்லப்பட்டவளை 6:32க்கு வெட்டி விட்டு எப்படி தப்பி செல்ல முடியும்
இன்னொரு விஷ்யம் ஸ்வாதியின் வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரை 18 கேமாராவில் 5 இடத்தில் ஒருவன் பைக் பின் தொடர்கிறான் அவன் யார்?
6.51 வரைக்கும் அந்த பொன்னு அவுங்க அப்பகூட வண்டியில போய்ட்டுருக்கு ஆனா ராம்குமார் CCTV CAMARA- மாட்னது 6.32..
ஆனா அது ராம்குமாரா? என்பதே சந்தேகமானது
பிசிருக்கு நன்றி : Shadham Hussain

ராஜராஜன் இன் படம்.
ஸ்வாதியை அவங்க அப்பா வீட்டில் இருந்து வண்டியில் அழைத்து செல்கிறார் இந்த காட்சி காலை 6:35க்கு cctv கேமராவில் பதிவாகி உள்ளது.
ராம் குமார் கொலை செய்துவிட்டு வெளியே தப்பித்து ஓடி வரும்போது ஒரு வீட்டில் உள்ள cctv கேமராவில் பதிவாகி உள்ள நேரம் 6:32.
ஆக ஸ்வாதியை ரயில் நிலையத்திற்கு வரும் முன்னே ராம் குமார் கொலை செய்துவிடடார்.
6:35க்கு சுவாதி அப்பனால் ஸ்கூட்டரில் இரயில்வே ஸ்டேசனுக்கு கூட்டி
செல்லப்பட்டவளை 6:32க்கு வெட்டி விட்டு எப்படி தப்பி செல்ல முடியும்
இன்னொரு விஷ்யம் ஸ்வாதியின் வீட்டிலிருந்து ரயில் நிலையம் வரை 18 கேமாராவில் 5 இடத்தில் ஒருவன் பைக் பின் தொடர்கிறான் அவன் யார்?
6.51 வரைக்கும் அந்த பொன்னு அவுங்க அப்பகூட வண்டியில போய்ட்டுருக்கு ஆனா ராம்குமார் CCTV CAMARA- மாட்னது 6.32..
ஆனா அது ராம்குமாரா? என்பதே சந்தேகமானது
பிசிருக்கு நன்றி : Shadham Hussain

ராஜராஜன் இன் படம்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?