இனி இதோடுதானா வாழ்நாள் ??



சில வியாதிகள், நம்மோடு இருந்து கொண்டே இருக்கும். 
நம் இறுதி நாட்கள் வரை நம்முடனே இருக்கும்.

 சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு. இந்த இரண்டும் வந்தால், இதோடு தான் வாழ்நாள் முழுவதும் கழிக்க வேண்டும். 

ஒவ்வொரு வியாதி இப்படி தான் இருக்கும்; இப்படி தான் முடியும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதை கணக்கிட்டுதான் மருத்துவ சிகிசைகளும் அளிக்கப்படுகிறது.

ஆனால் சில வியாதிகளை கண்டறிந்து சிகிசைகள் வழங்கும் முன் அந்நோய்  பல விளைவுகளை, சிக்கல்களை உண்டாக்கி, பல தொல்லைகளை, தொந்தரவுகளை கொடுத்து, சில நேரங்களில் உயிரையே எடுத்து விடும்.

சர்க்கரை வியாதி இன்று, இந்தியாவில் 40 கோடி மக்களுக்கு உள்ளது. இதை சரியாக கண்டறிந்து வைத்தியம் செய்யாவிட்டால், இதனால் வரும் சிக்கல்கள் பல. ஒவ்வொரு வீட்டிலும், ஒருவராவது சர்க்கரை நோயால் தாக்கப்படுகின்றனர். 

ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி விடுவது, நாம் சாப்பிடும் உணவு, இரைப்பையில் செரிக்கும் போது, இன்கிரிட்டின் சுரந்து பீட்டா செல்லினை தூண்டி, இன்சுலினை சுரக்க வைத்து, ரத்தத்திலுள்ள குளூக்கோசை கட்டுப்படுத்துகிறது; ஆல்பா செல்லில் குளூகோகான் (Glucogon) சுரக்கிறது. இந்த குளூகோகான், ரத்தத்தில் குளூக்கோஸ் குறையும் போது, கல்லீரலில் இருந்து குளூக்கோசை சுரக்க செய்கிறது. 

இந்த இரண்டும் தராசு தட்டு போல், சரிசமமாக சுரந்து, சர்க்கரையின் அளவை கட்டுப்படுகிறது. இன்சுலின், சர்க்கரையை கரைத்து, உடலிலுள்ள செல்களுக்கு சக்தியை கொடுக்கிறது. சோர்வடைந்த சர்க்கரை நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்ட பின் அல்லது மாத்திரை சாப்பிட்டவுடன் புத்துணர்வு பெறுகின்றனர். 

சர்க்கரையின் அளவு, வெறும் வயிற்றில் 40 முதல் 110 சதவீதம் வரை இருக்கும். சாப்பிட்டவுடன், ஒன்றரை மணி நேரம் கழித்து, 40 சதவீதத்திற்குள் இருக்கும். இது காலை நேரத்தில் தான் பார்க்க முடியும். ஆனால், சர்க்கரையின் அளவு ஒரு நோயாளிக்கு, நாள் ஒன்றுக்கு எட்டு தடவை ஏறி இறங்குகிறது. 

ஆகையால், இன்று உலக ஆய்வாளர்கள் ரத்தத்தின் சிவப்பு அணுவிலுள்ள ஹீமோகுளோபினில் இருக்கும்HBA1c என்ற அளவு துல்லியமானது என கண்டறிந்துள்ளனர்.
 இது மூன்று மாதம் வரை மாறாது. இது 6 முதல் 6.5 சதவீதத்திற்குள் இருந்தால், சர்க்கரை நோய் இல்லை என்று பொருள். அதிகமாக இருந்தால், சர்க்கரை நோய் உள்ளது என்று பொருள். சர்க்கரை நோய், தலையில் உள்ள முடி முதல், பாத நகம் வரை தாக்கும். 

இந்நோயின் குணம், ரத்த குழாயின் உட்சுவர், நடுச்சுவரை தாக்கி, டயபடிக் ஆஞ்சியோபதி என்ற வியாதியை உண்டாக்கும். இந்த டயபடிக் ஆஞ்சியோபதி, கண்ணுக்கு தெரிந்த பெரிய ரத்தக்குழாய் முதல், கண்ணுக்கு தெரியாத மைக்ரோ ஆஞ்சியோபதி என்ற வியாதியை உண்டாக்கிவிடும். 
இதனால், மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதிப்படைந்து, வாதம், பக்கவாதம் வரும். 
இதயத்திற்கு ரத்தத்தை கொடுக்கும் கரோனரி ரத்தக்குழாயை அடைத்து, மார்பு வலி, மாரடைப்பு ஏற்படுத்தும். இதனால், சிறுநீரகம் பாதிப்படையலாம். 
அறியாமை, ஏழ்மை நிறைந்த நம்நாட்டில், தனக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதே, 30 சதவீதம் மக்களுக்கு தெரியாது. 

அப்படி கூறினாலும், பெரும்பாலோர் இதை நம்ப மறுத்து, சிகிச்சை இல்லாமல் வாழ்ந்து, விளைவுகளை கண்டதும் ஓடி ஒளிகின்றனர். அந்நேரத்தில் தகுந்த, சிறப்பு மருத்துவரை சந்தித்திருந்தால், நோய் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். 

ரத்த அழுத்த நோய் இன்று, நாகரிக உலகத்தின் வியாதியாகி விட்டது. 20 ஆண்டுகளுக்கு முன், 45, 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தான் இந்த வியாதி வரும். இன்று, 20 முதல் 30 வயது இளைஞர்கள், பெண்களுக்கு வருவதை பார்க்கிறோம். 
மனிதனுக்கு ரத்த அழுத்தம், சாதாரணமாக, 120 சிஸ்டாலிக், 80 டயஸ்டாலிக் இருக்கும். இது முக்கியமாக, உடலில் உள்ள உறுப்புகளுக்கு ரத்தம் கிடைக்க உதவுகிறது. 

இது குறைந்தாலோ அல்லது உயர்ந்தாலோ, உடல் திசுக்களுக்கு ரத்தம் கிடைக்காது. 
இதனால், பல குறைகள் தெரியும். கருவுற்ற தாயின் ரத்தக்குழாய் சிறுத்து, குழந்தைக்கு ரத்தம் குறைந்து, இளைத்து ஆபத்தாகலாம். மூட்டுகள் தேய்மானம், வயது ஆக ஆக இரண்டு முட்டி எலும்புகளுக்கும் இடையே ஜவ்வு தேய்ந்து, அசைவு ஏற்படும் போது, இரண்டு எலும்பும் மோதி, கடுமையான வலி வரலாம். 
கண்ணில், "கேட்டரேக்ட்' என்ற புரை ஏற்பட்டு பார்வை குறையலாம். "புராஸ்டிரேட்' என்ற மூத்திரக்காய் தடித்து, சிறுநீரக அடைப்பு ஏற்படலாம். 

இவை அனைத்தும், மனித இனத்திற்கு வரும் வியாதிகள். 
இந்த வியாதிகள் வராமல் தடுக்க, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நல்ல உணவு வகைகள், யோகா ஆகியவற்றின் மூலம், வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். 

யோக பயிற்சி, தியானம், இவற்றைக் குறைக்கும். ரத்த அழுத்தம் அதிகமாவதால், ரத்த குழாய் தடித்து, விட்டம் சுருங்கி விடுகிறது. "ஆர்ட்டிரியோ குளோரிஸ்' என்ற வியாதி ஏற்பட்டு, மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய் பாதித்து, "ஸ்ட்ரோக்' வருகிறது. 

கண்ணின் ரெட்டினா பகுதியில் ரத்தக்குழாய் தடித்து, ரெட்டினோபதி வரலாம்.

சிறுநீரக ரத்தக்குழாய் தடித்து, சிறுநீரக கோளாறு ஏற்படலாம். மகாதமனி தடித்து, பெருத்து, "அனோரிசம்' ஏற்படலாம். ஆண் <உறுப்பு ரத்தக்குழாய் சுருங்கி, ஆண்மை விரைப்பு தன்மை குறையலாம். கால் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு கால்வலி வரலாம். 

சர்க்கரை நோயைக் கண்டறிந்து, நோயின் தன்மை, எவ்வளவு மாதம், வருடம் என்று தெரிந்து, வியாதியின் விளைவுகளை கண்டறிந்து, சிகிச்சைப் பெற்று நலமுடன் வாழலாம். தினமும் மாத்திரை, மருந்து, உணவுக் கட்டுப்பாடு இவைகளால், நோயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து, நலமுடன் வாழலாம்.

 பெண்கள் தாங்கள் அன்றாடம் செய்து வரும் அதிகப்படியான வேலை மற்றும் பொறுப்புகளால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். 

வலி, படபடப்பு, மூச்சு இரைப்பு என்று பல தொந்தரவுகளுக்கு ஆட்பட்டு, சிறிய குறைகளை கூட பெரிதாக்கி, நோயாளியாகி விடுகின்றனர். இப்படி குடும்ப பெண்கள் ஒருபுறம் இருக்க, வேலைக்கு செல்லும் பெண்கள், இதற்கு மேலாக கஷ்டப்பட்டு, "நியூரோசிஸ்' ஏற்பட்டு, நெஞ்சு வலி வந்தால், "கார்டியாக் நிரோசிஸ்' என்ற நோயையும் பெறுகின்றனர். 

ஆண்களும் இதில் அடங்குவர். 

10 சதவீதம் ஆண்கள், வீடு, ஆபீஸ் முதலிய இடங்களில் ஏற்படும் ஒவ்வாத சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டு, நோயோடு வாழ்கின்றனர்.
=====================================================================================
இன்று,
ஜூலை-03.

  • 1944 பெலரஸ் விடுதலை தினம்.

  • 1928 J.L.பெயர்டு என்பவரால் தொலைக்கட்சியில் வண்ண ஒளிபரப்பு செய்யப்பட்டது.

  • 1997 நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பாபா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது.

  • 1997 16 வயதில் விம்பிள்டன் பட்டம் வென்ற முதல் பெண்மணி என்னும் பெருமையை மார்ட்டினா ஹிங்கிஸ் பெற்றார்.

    • க்யூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)

=====================================================================================

பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த பின்னர் ரூ. 75 கோடிக்கு ஆடைகள் வாங்கியிருக்கிறார்.
 டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அளித்துள்ள பேட்டியில், ’
’ பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் செலவில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உடை வாங்குகிறார். ஒரு முறை அணிந்த உடையைத் திரும்ப அணிவதில்லை. நான் ஒரு கணக்குச்  சொல்கிறேன். மோடியின் ஒரு ஆடையின் செலவு ரூ. 2 லட்சம். ஒரு நாளைக்கு 5 முறை உடைகளை மாற்றுகிறார். அப்படி ஒரு நாளைக்கு 10 லட்ச ரூபாய்க்கு ஆடை அணிகிறார். 

அப்படிப் பார்த்தால் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 75 கோடி அவர் உடைகளுக்காகச்  செலவிட்டுள்ளார். என்னிடம் ஒரு மிகப் பெரிய ஆதாரம் உள்ளது. கூகுள் போய் பாருங்கள். மோடி என்று டைப் செய்து, புகைப்படங்களைச்  சோதித்து பார்த்தால், மோடி ஒரு முறை அணிந்த ஆடையை மறுமுறை அணிந்தது போல புகைப்படங்களை பார்க்க முடியாது.
இதுவரை 700 நாட்கள் பதவியில் இருந்திருக்கிறார். 
அந்த வகையில் 70 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். 
இது தவிர மேலும் 5 கோடி ரூபாய் தனியாகச்  செலவிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி 566 கோடிக்கு விளம்பரம் செய்துள்ளதாக கூறுவது முற்றிலும் தவறான  தகவல். நாங்கள் வெறும் ரூ. 76 கோடிக்கு மட்டுமே விளம்பரம் செய்தோம். அப்படிப் பார்த்தால், பிரதமர் கடந்த 2 ஆண்டுகளில் 75 கோடி ரூபாய்க்கு உடைகளை எடுத்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் வைத்திருக்கிறார்?’ என கேட்டுள்ளார். 
==================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?