ஓரளவிற்கு பாதிப்பு?

இந்தியாவில் தற்போது புதிதாக ஒரு உழைக்கும் வர்க்கம் உண்டாகியுள்ளது.
அதுதான் தகவல் தொழில் நுட்பத்துறை ஐ.டி.,கணினி சார்ந்த செயல்பாடுகளை கொண்டுள்ளது. 

இவர்கள் தங்கள் கூலிக்கு உழைப்பவர்கள்தாம் தங்கள் என்பதை உணராமல் கை நிறைய கிடைக்கும் சம்பளம் தந்த மயக்கத்தில் தங்கள் ஐ.டி.இனத்தை தனியே மக்களிடமிருந்து பிரித்து கொண்டு வாழ்கிறார்கள்.

டி.சி.எஸ் போன்ற  நிறுவனங்கள் இவர்களை கொத்தாக வெளியே அனுப்ப ஆரம்பித்தபோதுதான் தாங்களும் கூலிக்கு மாரடிப்பவர்கள்தான் என உணர்ந்து தொழிற்சங்கம் போன்றவை ஆரம்பித்து போராடி வழக்கு தொடுத்து வேலையை பாதுகாத்து உள்ளனர்.

இப்போதுதான் உண்மை உலகில் உழைப்பவருக்கு இருக்கும் சவால்களை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
அந்த ஐ.டி,உலகில் தற்போது பலர் வேலை இழக்கும் நிலை உருவாக்கி உள்ளது இயந்திர மனிதன் எனப்படும் ரோபோக்கள்.

ஒரே வேலையை திரும்ப,திரும்ப செய்யும் இடங்களில் இந்த ரோபோக்கள் மனிதர்களை அகற்றி விட்டு அப்பணியை தாங்களே செய்ய ஆரம்பித்து விட்டன.


இதில், 'ஹார்டுவேர்' எனப்படும், சாதனங்கள், உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றின் தயாரிப்பில், 'ரோபோ' எனப்படும், இயந்திரங்களை ஈடுபடுத்துவது அதிகரித்து வருகிறது. 

இதனால், 'அசெம்பிளிங்' போன்ற, உதிரிபாகங்களை ஒன்றிணைப்பதில், மனிதர்களின் பங்களிப்பு, குறைந்து வருகிறது. இந்நிலையில், அதிக திறன் தேவைப்படாத தொழில்களும், வேகமாக இயந்திரமயமாகி வருகிறது.

 வருகிற 2021ஆண்டில், ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., எனப்படும் பணிகளை பிறரிடம் ஒப்படைத்து பெற்றுக் கொள்ளும் தொழிலில், இயந்திரங்களின் பங்கு அதிகரித்து விடும். 

இதனால், ஐ.டி., துறையில், அடிப்படை கல்வியறிவுடன், அதிக திறன் தேவையற்ற பிரிவுகளில், 6.40 லட்சம் பேர் வேலை இழப்பர். 

சர்வதேச அளவில், ஐ.டி., துறை வேலைவாய்ப்பு, 9 சதவீதம் குறையும். 
14 லட்சம் பேரின் பணி பறிபோகும் என்று தெரிகிறது . 

இபணி இப்பணியிழப்பில்  அமெரிக்கா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் விதிவிலக்கல்ல. எல்லா நாடுகளிலும் முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களை பாதுகாப்பது ,வரும் லாபத்தை அதிகரிப்பது என்ற இரு வழிகளில் லாபத்தைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறைகளில், 37 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இதில், பி.பி.ஓ., மற்றும் அடிப்படை கட்டமைப்பு பிரிவுதான் அதிகம் பாதிக்கப்படும். 

குறைவான திறன் தேவைப்படும் பணிகளில், 30 சதவீதத்தை, இயந்திரங்கள் எடுத்துக் கொள்ளும்.

கீறல் விழுந்த பழைய ரெக்கார்டுகள் போல ஒரே வகையான செயல்பாடுகளை, திரும்பத் திரும்ப செய்யும் பணிகள், அதிக கல்வியறிவு தேவைப்படாத வேலைகள் ஆகியவை, இப்பிரிவில் அடங்கும். 
இதில், 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்' எனப்படும், செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் இயந்திரங்கள் தான், வேலையை பறிக்கக் கூடியவையாக இருக்கும். 
இது, 'கால்சென்டர்' போன்ற, அழைப்பு மையப் பணிகளில், தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதேசமயம், இதேகாலத்தில், நடுத்தரமான ஆற்றல் தேவைப்படும் பணிகளில், வேலைவாய்ப்பு, 8 சதவீதம் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.. 

இப்பணிகளில், சவால்களுக்கு தீர்வு காண்பதில், மனிதர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும். அதிக திறன் தேவைப்படும் பணிகளில், வேலைவாய்ப்பு, 56 சதவீதம் உயரும். 
இதில், கருத்துருவாக்கம், பிரச்னைக்கு தீர்வு காண்பது, ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, இயந்திரங்களை விட, மனித மூளை மிகவும் அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.


மனிதர்கள் செய்யும் தொழில்கள், இயந்திரமயமாவதும், 'ரோபோ' எனப்படும், இயந்திர மனிதர்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவர் என்பதையும், தற்போதைய சூழலில் கணிப்பது கடினம். 

தொழில்கள் இயந்திரமயமாவதால், ஓரளவிற்கு  பாதிப்பு இருக்கும். எப்படியும் 14 லட்சம் பேர்கள் வேலையிழக்கும் படி அப்பாதிப்பு இருக்கும்.
========================================================================================
இன்று,
ஜூலை-06.


  • தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)

  • டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(1785)

  • தாதாபாய் நெளரோஜி, பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்தியப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1892)

  • மலாவி விடுதலை தினம்(1964)


பரிதிமாற் கலைஞர்.

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரியில் (1870) பிறந்தார். 
இயற்பெயர் சூரியநாராயணன். 

தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். 
மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித் தொகையைப் பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார். 

தமிழ் மொழி, தத்துவத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 
தான் பயின்ற கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியர் பணியை ஏற்காமல், குறைந்த சம்பளமாக இருந்தாலும் தமிழ்த் துறைப் பணியை விரும்பி ஏற்றார்.

 செந்தமிழ் நடையில் இவர் சுவைபட விவரிக்கும் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, பிற துறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள். 
தமிழ் அறிவும் ஆர்வமும் கொண்ட மாணவர்களை தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாத்திர நூல்களைக் கற்பித்தார். 

சென்னைச் செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார். கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதினார். மதுரையில் 4-ம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயற்சி மேற்கொண்டார்.

தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்தவர். 
குழந்தைகள் 12 வயது வரை தமிழிலேயே கல்வி கற்க வேண்டும் என்று முழங்கியவர். 

தனது தனிப்பாசுரத் தொகை என்ற நூலில், சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை ‘பரிதிமாற்கலைஞர்’ என தமிழில் மாற்றிக்கொண்டார். 

பல்கலைக்கழகப் பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி சமஸ்கிருதத்தைக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. இவரது எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.

நாவல், உரைநடை நாடகம், செய்யுள் நாடகம், கவிதை நூல், ஆய்வுநூல், நாடக இலக்கண நூல் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். 
குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார். பல தமிழ் அறிஞர்களின் வரலாற்றையும் எழுதியுள்ளார். 

சபாபதி முதலியாரின் திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா, பஞ்சதந்திரம் உட்பட 67 நூல்களைப் புதுப்பித்து வெளியிட்டார்.

ஞானபோதினி, விவேகசிந்தாமணி இதழ்களில் தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ‘தமிழ் வியாசங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டார். 

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் புலமை பெற்றவர். தமிழ்-தமிழர் முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட பரிதிமாற் கலைஞர் 1903-ல் மறைந்தார். ‘
👀
========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?