வெள்ளி, 22 ஜூலை, 2016

பற்றாக்குறை பட்ஜெட் சாதனை?

தொடர்ந்து நான்காம் முறையாக 
அ.தி.மு.க., அரசு தொடர்ந்து, நான்காம் முறையாக, பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. கடந்த, 2014 - 15 நிதியாண்டு கணக்குகள்படி, தமிழகத்தில், 6,407 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அடுத்த நிதியாண்டில், திருத்திய மதிப்பீடுகளின்படி, 9,481 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட, இடைக்கால பட்ஜெட்டில், 9,154 கோடி ரூபாய் பற்றாக்குறை என தெரிவிக்கப்பட்டது. நேற்றைய பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை, 15,854 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் மிக சுருக்கம்.
மொத்த வருவாய்: ரூ.1,48,175.09 கோடி
மொத்த செலவு: ரூ.1,64,029.56 கோடி
மொத்த வருவாய்
பற்றாக்குறை: ரூ.15,854.47 கோடி

தமிழ் நாடு அரசின் வணிக வரி வருவாய் வளர்ச்சி திமுக  ஆடசியில் 31,117கோடிகளாகவும் வளர்சசி  25.37% ஆகவும் இருந்தது.
ஆனால் ஜெயலலிதா பதவியேற்றப் பின்னர் அவ்வருவாயில்  தொடர் சரிவு ஏற்பட்டு இன்று 61709 கோடிகளாகவும்  வளர்சசி 2.31% ஆகவும் குறைந்து விட்டது.
இதனால்  வருவாய் இலக்கை, 72 ஆயிரத்து, 608 கோடி ரூபாயில் இருந்து, 67 ஆயிரத்து, 627 கோடி ரூபாயாக, அரசு குறைத்துள்ளது.
தமிழக அரசுக்கான வரி வருவாயில், 70 சதவீதம் வணிக வரி மூலமாக கிடைக்கிறது. 2015 - 16ல், 72 ஆயிரத்து, 608 கோடி ரூபாய் வரிவசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், 61 ஆயிரத்து, 709 கோடி ரூபாய் கிடைத்தது. 
இலக்கை விட, 10 ஆயிரத்து, 899 கோடி ரூபாய் குறைவு. வரி வளர்ச்சி, 11.6 சதவீதம் வரை எதிர்பார்த்தாலும், 2.31 சதவீதமே உயர்ந்தது.
வரி வருவாய் வளர்ச்சி, 2011 - 12ல்,27 சதவீதமாக இருந்தது, படிப்படியாக சரிந்து, 2.31 சதவீதமாக குறைந்ததால், அரசுக்கு நெருக்கடி வந்தது. 2015 - 16ல், 31 ஆயிரத்து, 870 கோடி ரூபாய், நிதி நெருக்கடியில் திணறியது.
தொழில் வர்த்தகம் மேம்படாதது, ஒருபுறம் இருந்தாலும், வரி விதிப்பு, வசூலிப்புமுறைகளில் உள்ள குறைகள், துறையில், 50 சதவீத பணியிடங்கள் காலியாக இருப்பது என, பல குளறுபடிகள் உள்ளன. இதற்குதீர்வு காணப்படும் என, எதிர்பார்த்த நிலையில், நிலைமையை சமாளிக்க, வரி வருவாய் இலக்கை அரசு அதிரடியாக குறைத்துள்ளதுகடந்த ஆண்டில், 72 ஆயிரத்து, 608 கோடி ரூபாயாக இருந்த வணிக வரி வருவாய் இலக்கு, 67 ஆயிரத்து, 629 கோடி ரூபாயாக. குறைக்கப்பட்டுள்ளது. இது, 4,979 கோடி ரூபாய் குறைவாகும். 

2016 - 17ம் ஆண்டு சம்பள செலவினத்திற்கான ஒதுக்கீடு, 45,542 கோடி ரூபாய்; ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூ கால பலன்கள் குறித்த செலவினத்திற்கான ஒதுக்கீடு, 18,868 கோடி ரூபாய். இது, மொத்த வருவாய் செலவுகளில், 39.27 சதவீதம்
* மானியம் மற்றும் உதவித்தொகைக்கான ஒதுக்கீடு, 68,211 கோடி ரூபாய். விவசாயக் கடன் தள்ளுபடி, வீடுகளுக்கு, 100 யூனிட் மின்சாரம் இலவசம் போன்ற திட்டங்களால், செலவு அதிகரித்துள்ளது
* ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவு, 10,185 கோடி ரூபாயாக இருக்கும் என கருதப்படுகிறது
* கடனுக்கு வட்டி செலுத்துதல், 21,216 கோடி ரூபாயாக இருக்கும். இது, மொத்த வருவாய் செலவுகளில், 13 சதவீதம். மொத்த வருவாய் வரவில், 14.32 சதவீதம். 
வருவாய் பற்றாக்குறை
பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை, 15,854 கோடியாக இருக்கும். நிதி பற்றாக்குறை, 40,534 கோடி ரூபாயாக இருக்கும். இது, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 2.96 சதவீதம். இது, 2017 - 18ம் ஆண்டில், 3.34 சதவீதமாக அதிகரிக்கும்.
கடன்கள்
நடப்பாண்டுக்கான நிகரக் கடன் வரம்பு, 41,085 கோடி ரூபாய். நடப்பாண்டில், நிகரக் கடன் வாங்குதல், 40,529 கோடி ரூபாய். 
வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட நிலுவையில் உள்ள கடன், கடந்த மார்ச், 31ம் தேதி அன்று, 2.52 லட்சம் கோடி ரூபாய். 
இது, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 18.43 சதவீதம்.

=====================================================================================
இன்று,
ஜூலை-22.
  • உலக  பெற்றோர் தினம்
  • காம்பியா மறுமலர்ச்சி தினம்
  • வைலி போஸ்ட்  உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் (15,596 மைல்களை 7 நாட்கள் 18 மணி 45 நிமிடங்களில்)என்ற பெருமையை பெற்றார்(1933)
  • முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி நினைவு நாள்.( 1968)
==========================================================================================
மருத்துவர் .முத்துலட்சுமி அம்மையார் 
==========================

இந்து மத சாஸ்திரங்களால் போகப்பொருளாக பாவிக்கப்பட்டு பல கொடுமைகளை அனுபவித்து வந்த பெண்குலத்துக்கு ஒரு விடிவெள்ளியாக தோன்றி இருதாரதடைச்சட்டம், பால்யவிவாக தடைச்சட்டம், சொத்துரிமை, தேவதாசி ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை கொண்டு வர அரும்பாடுபட்ட டாக்டர்.முத்துலட்சுமிரெட்டி அவர்களின் நினைவு நாள் இன்று.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்,
தமிழக சட்டசபையின் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமைகளுக்குரியவர். 
அதுமட்டுமல்ல, அநாதையாக்கப்பட்ட பெண்குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அவ்வை இல்லத்தை துவக்கியவரும் இவரே.
1952-ல் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்ட அடையாறு புற்று நோய் மருத்துவமனையை உருவாக்கியவரும் இவரே.
"பொட்டுக்கட்டுதல் எனப்படும் தேவதாசி முறை புனிதமானது, தெய்வங்களுக்கு பணிபுரியும் அற்புதமானத்தொழில், அத்தகு புனிதமான தொழிலை நீக்கக்கூடாது, தொடரவேண்டும் "
என தமிழக சட்டசபையில் தீரர் சூரர் எனப்படும் சத்தியமூர்த்தி பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தடாலடியாக எழுந்த  முத்துலட்சுமி
 " அய்யாவின் கூற்றை ஏற்கிறேன், ஆனால் காலங்காலமாக இந்த இழி நிலையில் அகப்பட்டுக்கிடக்கும் எங்கள் சமுதாய பெண்களுக்கு விடுதலை கொடுங்கள், இனி இந்த கடவுளுக்கு தொண்டு செய்யும் அற்புதமான தொழிலை அய்யா சார்ந்த சமுதாயப்பெண்கள் தேவதாசிகளாக பொட்டுக்கட்டிக்கொள்ளட்டும்"
     -என்று இதை மறித்து பேசினார்.
 சத்தியமூர்த்தி இவரது பேச்சைக் கேட்டதும் மெல்லவும்,முழங்கவும் முடியாமல்  வியர்த்து விறுவிறுக்க நிலைகுலைந்து பதில் பேச முடியாமல் அமர்ந்து விட்டார்.