ஊக்கு விக்க

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. 
இதில் தொடர்ந்து அசத்தி வரும் அமெரிக்க வீரர்கள் பதக்க மழை பெய்து வருகின்றனர். 
இது வரை 24 தங்கம், 18 வெள்ளி, 17 வெண்கலம் என மொத்தமாக 61 பதக்கங்களை குவித்துள்ள அமெரிக்க அணி, தொடர்ந்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
ஓலிம்பிக் போட்டிகள் இதுவரை 31 நடந்துள்ளது.இந்த 31 ஒட்டு மொத்த ஒலிம்பிக்  வரலாற்றில் 1000 தங்கப்பதக்கத்தை வென்றுஅமெரிக்க வீரர்கள் உலக  சாதனை படைத்துள்ளனர்

இதுவரை நடந்துள்ள 31 ஒலிம்பிக் போட்டிகளில் 27ல் பங்கேற்றுள்ள அமெரிக்க அணி மொத்தமாக 1000 தங்கம், 763 வெள்ளி, 674 வெண்கலம் என 2437 பதக்கங்களை மலை போல குவித்துள்ளது.

தவிர, இதுவரை அமெரிக்கா பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகளில், ஒரு முறை கூட முதல் மூன்று இடங்களை விட்டு வெளியேறவில்லை. அதிகபட்சமாக 1976 மான்ரியல் ஒலிம்பிக்கிலும், 1988 சியோல் ஒலிம்பிக்கிலும் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. 
இந்தியாவை பொறுத்தமட்டில் விளையாட்டு வீரர்கள் செயல்பாடுகளை வீட  இங்கிருந்து அவர்களை ஊக்குவிக்க என்று செல்லுகின்ற விளையாட்டுத்துறை அமைச்சர்கள் ,அவருக்கு உதவியாக செல்கிறவர்கள் அலம்பல்தான் ,செயல்பாடுகள்தான் அதிகம்.
இந்த முறை பதக்கம் வாங்க சென்றுள்ள இந்திய விளையாட்டு வீரர்களை வீட அங்கு ஊக்கு விக்க சென்ற அமைசர்,அதிகாரிகள்,அடிபொடிகள் எண்ணிக்கைதான் அதிகம்.
அதிலும் விளையாட்டு அமைச்சர்  ரியோலில் நடந்து கொண்ட முறை,செய்த அலம்பல் அதிகம்.
 மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் மீது ஒலிம்பிக் கமிட்டி பல்வேறு புகார்களை கூறியது. 
அவர் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடந்து கொள்கிறார். 
அனுமதி பெறாத ஆட்களை உடன் அழைத்து வந்து பாதுகாவலர்களுடன் தகராறு செய்தார். 
இதனால் பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடிகள் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. 
விளையாட்டு நடைபெறும் இடத்தில் செல்பி எடுத்துக் கொள்வது என்று அவரது நடத்தைகள் சர்வதேச அளவில் முகச்சுளிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக அவர் இன்னுமொருமுறை இப்படி நடந்து கொண்டால் ஒலிம்பிக் பார்க்கவிடாமல்  ரியோலில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று உலக ஒலிம்பிக் குழு எச்சரிக்கை அறிவிப்பை அமைச்சர் கையில் கொடுத்து விட்டதாம்.
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல்


இது எந்த நாட்டின் விளையாட்டு துறை அமைச்சருக்கும் ஒலிம்பிக் குழு இதுவரை கொடுத்திராத பாராட்டு .
அந்த வகையில் இந்தியாவும் இந்த ஒலிம்பிக்கில் சாதனை செய்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி இந்த அமைச்சர் தலைமையிலான அலம்பல் கூட்டத்தை உடனே திரும்பி வர உத்திரவிட வேண்டும்.
இவர் கூட்டம் செய்யும் செயல்களும் அதற்கு ஒலிம்பிக் குழு காட்டும் எதிர் வினையும் நம் இந்திய விளையாட்டு வீரர்களை சோர்வு கொள்ளத்தான் செய்யும்.
இவர்கள் ஒலிம்பிக் சென்று ஊக்கு வித்தது போதும்.இந்தியா திரும்பி ஊக்கு விக்கலாம் .
======================================================================================
இன்று,
ஆகஸ்டு-15.


  • பனாமா கால்வாய் திறக்கப்பட்டது(1915)

  • இந்திய சுதந்திர தினம்(1947)

  • தென் கொரியா உருவாக்கப்பட்டது(1948)

  • பஹ்ரைன் ஐரோப்பாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1971)
=======================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?