திங்கள், 1 ஆகஸ்ட், 2016

புதிய தேசிய கல்விக் கொள்கை

இந்திய மோடி &ஆர்.எஸ்.எஸ். அரசு புதிய  தேசிய கல்விக் கொள் கையை உருவாக்க முயன்று வருகிறது. 
தேசியக் கல்விக் கொள்கை ஒரு தலை முறையின் கல்வியை தீர்மானிக்கக் கூடியது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கையை உருவாக்க இந்திய அரசு தற்போது கடைப்பிடித்து வரும் நட வடிக்கை ஏற்கத்தக்கதாக இல்லை.
சமுதாய அமைப்புகள், மக்கள் பிரதி நிதிகள், அரசியல் கட்சிகள், ஆசிரியர், மாணவர் அமைப்புகள், கல்வியியல் செயல்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றின் ஆலோசனை எதையும் கோரிப் பெறாமல், அதிகாரிகள் மட்டத்திலேயே இத்தகைய கொள்கை முடிவை மேற்கொள்வது இந் தியாவின் மக்களாட்சி அமைப்பிற்கே ஆபத்தானது.
இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தனது வலைதளத்தில் ஓர் ஆவணத்தை ஆங்கில மொழியில் வெளியிட்டு 30 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளது. 
இந்த ஆவணம் யாரால், எதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்பதைக்கூட வெளிப் படுத்தாமலும், இவ்வாவணத்தில் உள்ள கொள்கை முன்மொழிவுகள் (Policy Initiatives)   வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க சில உள்ளீடுகளாக (Some Inputs for Draft National Education Policy - 2016)  கொள்ளப்படும் என்பதும் எந்தவித ஜனநாயக நடைமுறைக்கும் ஏற்புடையது அல்ல.
இந்த ஆவணம்,  குழந்தைப் பருவத்திற்கான வரை யறையையே மாற்றுகிறது. கல்வியின் பொருளையும், நோக் கத்தையும் மாற்றுகிறது.
ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையான ஏக இந்தியா, ஏக மொழி, ஏகக் கலாச்சாரம் என்ற அடிப்படையில் சமஸ்கிருதத்தை இந்தியாவின் ஒற்றை மொழியாகவும், இந்தியப் பண்பாட்டின் ஒருமைப்பாட்டிற் கான மொழியாகவும் முதன்மைப்படுத் துகிறது.
இதன் விளைவு இந்திய மொழிகள் அனைத்தும் அழிவதோடு தமிழர் உள் ளிட்ட பெரும்பகுதி இந்திய மக்களை பண்பாட்டு வரலாறு அற்றவர்களாக மாற்றுகிறது.
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப் படையில் பண்பாட்டின் கூறுகளான கல்வி, மொழி ஆகியவற்றில் மாநில அரசு கொள்கை முடிவு எடுக்க இயலாத நிலையை உருவாக்கி, மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளை நடைமுறைப் படுத்துகிற அமைப்பாக மாநில அரசு சுருங்கிப் போக வழிவகுக்கிறது.
தொடக்கக் கல்வியின் இரண்டாம் நிலையிலேயே (Upper Primary-Class VI to VIII) குழந்தைகளை வேலைவாய்ப்புத் திறன்பெறச் செய்வதும், பள்ளிக் கல்வி தொடர தகுதியற்றவர் எனச் சான்றிட்டு தொழில்கல்வி கற்க 14 வயதுகூட நிரம்பாத குழந்தைகளை விரட்டுவது பெரும்பகுதி மக்களை பள்ளி - கல்லூரிக் கல்வி (Mainstream Education) யிலிருந்து வெளியேற்றி கூலி வேலையாட்களாக வாழ்வாதாரத்தைத் தேட வழிவகுக்கிறது.
உயர்கல்வியில் புதிய நிறுவனங்களை அரசு தொடங்க முதலீடு செய்யாது, சமூகநீதியின்பால் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான இடஒதுக்கீடு உரிமை, கல்வி உதவித்தொகை ஆகிய வற்றைப் பற்றி பேசாமல், அரசமைப்புச் சட்ட நோக்கத்திற்கே எதிராக அனைத்து சமூகத்தையும் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தகுதியின் அடிப் படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கல்வி உதவித் தொகை என்பது சமூகநீதிப் போராட்டத்தின் விளைவாக அமைந்த சமூக, கல்வி ரீதியாக சட்டப்படி பெற்ற அனைத்து உரிமைகளையும் ரத்து செய்யும் வழியை வகுக்கிறது.
நீதிமன்றத்தை அணுக முடியாமல் நடுவர் மன்றம் உருவாக வழிசெய்கிறது.
இதுபோல பல ஆபத்துகள் நிறைந்த இத்தகைய கல்விக்கொள்கை உருவாக் கத்தை ஏற்க இயலாது.
மக்களாட்சியில் கல்விக்கு இத்தகைய நெருக்கடியை எந்த நாட்டிலும் எந்த சமூகமும் சந்தித்தது இல்லை.
===================================================================================
இன்று,
ஆகஸ்டு-01.
பால கங்காதர திலகர்
  • உலக தாய்ப்பால் வாரம் துவக்க தினம்
  • உலக சாரணர் தினம்
  • லெபனான் ராணுவ தினம்
  • சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலகர் இறந்த தினம்(1920)
பால கங்காதர திலகர்
இந்திய சுதந்திர போராட்டத்தை முதன் முதலாக ஆரம்பித்தவர் பால கங்காதர திலகர்தான் .

மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில், கங்காதர் ராமசந்திர திலக் -- பார்வதிபாய் தம்பதிக்கு, மகனாக பிறந்தார்; இயற்பெயர், கேசவ் கங்காதர திலக். 

தாயார் நினைவாக, தன் பெயரை பாலகங்காதர திலக் என்று மாற்றிக் கொண்டார்.

நண்பர்களுடன் சேர்ந்து, 'கேசரி' என்ற மராத்தி மொழிப் பத்திரிகையும், 'மராட்டா' என்ற ஆங்கில பத்திரிகையும் துவங்கினார். அதன்மூலம், இந்திய சுதந்திரத்தை வலியுறுத்தினார்.
இந்திய கலாசாரத்துடன் சேர்ந்த கல்வியறிவை கொடுப்பதற்காக, தக்காண கல்வி சபையை தோற்றுவித்தார். 

இக்கல்வி சபைதான் பிற்காலத்தில்  பெர்குஸன் கல்லுாரியாக விரிவடைந்தது. 
சுதேசி பொருட்களுக்கு ஆதரவு அளித்தார். 

அன்னிபெசன்ட் அம்மையாருடன் இணைந்து ஹோம்ரூல் இயக்கத்திற்காக போராடினார். 
மக்களால், திலக் மகராஜ் என்று அழைக்கப்பட்டவர், 

1920 ஆக., 1ம் தேதி இறந்தார். 

===================================================================================