ஈர்க்கும் ஈஷா.

கோவை வடவள்ளியைச் சேர்ந்த முனைவர் காமராஜ். 
இவரது மனைவி சத்தியஜோதி. இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து விட்டு தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். 

இவர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார்.
பின் அவர்  கூறியவை அதிர்ச்சித்தருபவவை:

"எனது மூத்த மகள் கீதா லண்டனில் எம்.டெக் முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இளைய மகள் லதா பி.டெக் முடித்துள்ளார். 

நாங்கள் குடும்பத்தோடு ஈஷா யோகா மையத்தில் யோகா பயிற்சியில் சேர்ந்தோம். அப்போது எனது இரு மகள்களை மூளைச் சலவை செய்த ஜக்கி வாசுதேவ், அவர்களை நய வஞ்சகமாக ஏமாற்றியதோடு, திருமணம் நடக்காமல் இருக்க இருவருக்கும் மொட்டை அடித்து விட்டார். 

மேலும், அவர்களுக்கு காவி உடைகளை அணிவித்து சாமியாராக்கி ஆசிரமத்திலேயே தங்க வைத்துள்ளார். 

தற்போது எனது மகள்களை பார்க்கக்கூட அனுமதிக்க மறுப்பதுடன், எங்களது சொத்துக்களையும் அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். 

இதுமட்டுமின்றி ஈஷாவிற்கு வருகின்றவர்களை கவர்வதற்காக எங்களது பெண்களை விற்பனையாளர்கள் போல் பயன்படுத்துகிறார்.

அங்குள்ளவர்களுக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் போதை மருந்து கொடுத்து 30 கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர். 


குறிப்பாக, ஈஷாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு நைட்ரஸ் ஆக்சைடு கொடுக்கப்படுவதால் அக்குழந்தைகள் பெற்றோர்களை பார்க்கும் போது சிரித்துக் கொண்டே இருக்கும். இதனால் குழந்தைகள் கோமா நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. 

மேலும், இங்கு சிறுநீரக திருட்டும் நடைபெற்று வருகிறது. 
எனவே, எனது இரு மகள்களையும், அங்கு பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளையும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு மீட்டுத்தர வேண்டும்” என மனு கொடுத்ததாக  தெரிவித்தார்.

ஏற்கனவே ஈஷா என்ற பெயரை வைத்துக்கொண்டு ஜக்கி வாசுதேவ் ஏகப்பட்ட முறைகேடுகளை செய்து வருகிறார்.

அரசு புறம்போக்கு இடங்களை வளைத்துப் போட்டதுதான் ஒரு சிறிய மலையையே முழங்கி தனது ஆசிரமத்தை நடத்த வருகிறார்.

இதற்கு அரசு அதிகாரிகளும்,அரசியல்வாதிகளும் உடந்தையாக இருக்கிறார்கள்.அதற்கும் ஈஷா கொடுக்கும் போதைதான் காரணமாக இருப்பது போல் தெரிகிறது.

இப்போது அங்கு சிறு நீரகத்திருட்டு நடப்பதாகவும் பகீர் குற்றசாட்டு எழுந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்தும் ,இங்குள்ள பெரும்பணக்காரர்களும் ஈஷாவில் பக்தர்கள் போல் வந்து சில நாட்கள் தங்குவதிலும் ,போகையில் பணத்தை அள்ளித்   தருவதிலும் தான் அந்த மர்மம் அடங்கியுள்ளது.

அவர்கள் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்கள் தங்கும் காலங்களில் ஈஷாவில் திருடப்பட்ட சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டு சிகிசை முடிந்ததும் கிளம்புகிறார்கள் என்றும் செய்திகள் உலவுகிறது.

இதை மாவட்ட ஆடசியார்,காவல்துறையினர் இந்த சத்தியஜோதி மனுவை வைத்து சோதனை செய்து மர்மங்களை வெளிக்கொணர வேண்டும்.ஆனால் நம் அதிகாரிகளும்,ஆட் சியாளர்களும் பாபா ராமதேவ் ,ரவிசங்கர் போன்ற போலி பணக்கார சாமியார்களுக்கு பக்தர்களாயிற்றே .

அவர்களை இந்த சாமியார்கள் பக்தியாலும் ,பணத்தாலும் ஈர்த்து மதி மயங்க வைத்து விடுவார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை.


இப்போது ஸ்மார்ட் போன்கள் எண்ணிக்கை எந்த அளவுக்கு அதிகரித்துவிட்டதோ, அதே அளவிற்கு  நாளுக்கு நாள் புதிது புதிதாக அதில் உபயோகிக்கப்படும் அப்ளிகேசன்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன..

பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் உபயோகிப்பது, ஷாப்பிங் செய்வது என, நாம் அன்றாடம்  அலைபேசியில் புதிதாக வரும் வசதிகளை உபயோகிப்பது அதிகரித்து வருகிறது.

இந்த ஆப்களை இன்ஸ்டால் செய்யும் போதும், உபயோகிக்கும் போதும் பெறப்படும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருட ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அதனை தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் நீங்கள் நிச்சயம் ஓசையில்லாமல் பல ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பதிவிறக்கம் செய்யப்படும் App-ஆனது, உங்களுடைய போட்டோக்கள், தொடர்புகள் போன்ற தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யக்கோரும், இந்த ஆப் அத்தகவல்களை எவ்வாறு உபயோகிக்கும், வேறு யாருடனும் அல்லது வேறு App உடனோ இத்தகவல்களை பகிர்ந்துகொள்ளுமா என, Private Policy-யில் தெளிவாக படித்து புரிந்து கொண்ட பின்னர், App-ஐ உபயோகிக்கலாமா வேண்டாமா என்பதனை முடிவெடுத்துக் கொள்ளுங்கள்..

புதிதாக பதிவிறக்கம் செய்யப்பட்ட App-பினை இன்ஸ்டால் செய்கையில் உங்களின் சுய தகவல்களை பதிவு செய்யுமாறு  கேட்கும், அதனை யார் யாரெல்லாம் பார்க்க முடியும், அதற்கு கூடுதல் பாதுகாப்பு ஏதேனும் உள்ளதா என்பதனையும் சரி பார்க்கவும்.

மொபைல் ஆப் மூலம், அடிக்கடி ஷாப்பிங் செய்பவரா நீங்கள், அப்படியெனில் உங்களுடைய நெட் பேங்கிங் மூலமாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் போது உங்கள் நெட் பேங்கிங் பாஸ்வோர்ட், அக்கவுண்ட் நம்பர் போன்ற விவரங்களை App-பில் சேமித்து வைக்காதீர்கள். 

அதனை வேறு யாரேனும் திருடி உபயோகித்தால் உங்களுடைய வங்கிப் சேமிப்புகள் அடுத்தவருக்கு கைமாறும் ஆபத்து உள்ளது.
ஹேக்கர்கள் ஒரு ஆப்பினை ஹேக் செய்தால் போதும், அதை வைத்தே உங்கள் இதர ஆப்களை உபயோகித்து அதில் சேமிக்கப்பட்டுள்ள போடோக்கள், தனிப்பட்ட முக்கியத் தகவல்களை திருடி விடக்கூடும்.
எனவே ஒவ்வொரு ஆப்பிற்கும் தனிப்பட்ட  வேறு வேறு பயனர் பெயர்,கடவுசச்சொற்களை  உபயோகிப்பது உங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றவர்கள் திருடாமல் இருப்பதற்கு  நல்லது.
======================================================================================
இன்று,
ஆகஸ்டு-02.
  • மேசிடோனியா குடியரசு தினம்
  • அமெரிக்காவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இடம்பெற்றது(1790)
  • உலகின் முதலாவது சுரங்க ரயில் சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)
  • தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)
அலெக்சாண்டர் கிரஹாம் பெல்.
1847 மார்ச் 3ம் தேதி, ஸ்காட்லாந்தில், எடின்பர்கில் பிறந்தார். 
பள்ளி செல்ல நாட்டமில்லாமல், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டார். 
பல்வேறு தோல்விகளுக்கு பின், 1876ல், தொலைபேசியைக் கண்டுபிடித்தார். 
தொலைபேசி வழியாக வந்த முதல் குரல்அவர், தன் உதவியாளரிடம்  "வாட்சன் இங்கே வாருங்கள்; உங்களைக் காண வேண்டும்' 'என்பது தான், 
போட்டோபோன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இண்டக் ஷன் பேலன்ஸ், வாய்ஸ் ரெக்கார்டிங், சிலிண்டர் உள்ளிட்ட, 60 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை பெற்றவர் அலெக்சாண்டர் கிரகாம் பெல்.
 இவரது தாயும், மனைவியும் காது கேளாதோர்; அவர்களின் துயரத்தை உணர்ந்ததால், காது கேளாதோருக்காக, பல்வேறு அமைப்புகளை ஏற்படுத்தி, பெரும் பொருள் உதவி செய்தார். 
======================================================================================
போகிமான்( pokemon). 
வெளிநாடுகளில் சமீபத்தில் மிகவும் பிரபலமடைந்த விளையாட்டு PokemonGo, இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தாமலேயெ இந்த கேமை இந்திய மண்ணிலும் விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.
 
Pokemon என்றால் என்ன?


Pocket Monsters என்பதன் சுருக்கமே போகிமான் ( pokemon). இவ்விளையாட்டில், போகிமான் உலகில் சுற்றி மறைந்திருக்கும் சிறிய போகிமான்களை தேடிக்கண்டுபிடித்து நம் வசப்படுத்த வேண்டும். பின்னர், அவற்றிற்கு பயிற்சி அளித்து, அவற்றின் சக்திகளை அதிகரித்து மற்ற போகிமான்களுடன் சண்டையிட்டு அதன்மூகம் மேலும் பலமான போகிமான்களை பெற வேண்டும்.

1996ஆம் ஆண்டில் card gameஆக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கேம், தற்போதைய நவீன உலகில் மொபைல் அப்ளிகேசன் வடிவில் Pokemon Go என்று அறிமுகப்படுத்தப்பட்ட 2 வாரங்களில் 3 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

போகிமான்களை பிடிக்க வீதி வீதியாக உலா வருகிறார்கள் உலகம் முழுவதும், இந்த கேம் இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. எனினும் VPN எனப்படும் விர்சுவல் பிரைவேட் நெட்வொர்க் மூலமாக கனெக்ட் செய்துகொண்டு தங்கள் இருப்பிடங்களை நியூயார்க், லண்டன் என்று பதிவு செய்துகொண்டு இங்கேயும் இந்த விளையாட்டை ஆட ஆரம்பித்துவிட்டார்கள் நம்மவர்கள்..

டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் தற்போது pokewalks எனப்படும் போகிமான்களை பிடிக்கும் மோகம் ஆரம்பித்துவிட்டது.மும்பையில் இதனால் கார் விபத்தே நடந்துள்ளது.

இந்தியாவில் போகிமானால் நடந்த முதல் விபத்தாக இதுதான் பதிவு செய்யப்பட்டுல்ளது.அந்த விபத்து நடந்தது பற்றிய விபரம்:
மும்பையில் உள்ள கார் டீலர் ஜாபீர் அலி, வேலையை முடித்துவிட்டு,  தனது பென்ஸ் E க்ளாஸ் காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். கோ-டிரைவர் சீட்டில் அமர்ந்து, ‘ரொம்ப நேரமா செல்போனை மூஞ்சிக்கு நேரா வெச்சி ஏதோ பண்ணிக்கிட்டிருக்கானே’ என்று கேம் விளையாடிக் கொண்டிருந்த தனது தம்பியை முதலில் கடிந்து கொண்டவர், கேமின் விதிமுறைகளைத் தெரிந்து கொண்டு ஆர்வமாகி விட்டார். ‘எங்க குடு பார்ப்போம்...’ என்று தம்பியிடமிருந்து செல்போனைப் பறித்து, காரை ஓட்டிக்கொண்டே கேமில் மும்முரமாகிவிட்டார் ஜாபீர் அலி. ‘ஆகே பக்கடோ பக்கடோ’ என்று பூச்சிகளைப் பிடிப்பதில் ஆர்வமாய் இருந்தவர், தடாலென ஒரு ஆட்டோ மீது தனது பென்ஸை நேருக்கு நேர் மோத, நல்லவேளையாக யாருக்கும் எந்தச் சேதாரமும் இல்லை. உடைந்து போன ஆட்டோவுக்கும், நசுங்கிப் போன பம்ப்பருக்கும் சேர்த்து, ஜாபீலர் அலிக்கு, சில ஆயிரங்களில் செலவு வைத்திருக்கிறான் போக்கிமான்.

‘‘போக்கிமான் கோ, எங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக மாறிவிட்டது. மும்பையில் நிறைய பேர் சாலைகளில் போக்கிமான் விளையாட ஆரம்பித்து விட்டார்கள். நடந்து கொண்டே விளையாடுவதுகூடப் பரவாயில்லை; காரில், பைக்கில் பறந்து கொண்டே விளையாடுவது கடுமையான ஆபத்துக்களை விளைவிக்கும். உங்கள் பாதுகாப்பு எங்கள் சேவை!’’ என்று பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டது மும்பை காவல்துறை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?