ஆபத்தை உண்டாக்கும் விளையாட்டு.
பல்வேறு நாடுகளின் மக்களை கட்டிப் போட்டுள்ள “போகிமேன் கோ” ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் விளையாட்டு.
இதை வடிவமைத்தவர்கள் அமெரிக்காவைச் சேரந்த நியான்டிக் நிறுவனத்தார். இதை அறிமுகப்படுத்திய இரண்டு வாரங்களிலேயே அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பிரபலமடைந்துள்ளது.
இதை தற்போது கல்லூரி, பள்ளிகள், அலுவலம், வீடு என எல்லா இடங்களிலும் விளையாட ஆரம்பித்துள்ளனர். முன்பு போகிமேன் சீட்டு கட்டில் விளையாடிவர்கள், டிவி சீரியல்களில் பார்த்தவர்களில் பெரும்பாலோர், தற்போது ஜிபிஎஸ் வசதியுள்ள ஸ்மார்ட் போனில் விளையாட துவங்கியுள்ளனர்.
இந்தியாவில் அதிகாரபூர்வமாக போகிமேன் கோ விளையாட்டு அறிமுகப்படுத்தப்படவில்லை.
இருப்பினும் இங்கும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், சிலர் விளையாடவும் தொடங்கியுள்ளனர். இதை ஐ போனில் டவுன்லோட் செய்வது சிரமம்.
சடோஜி தஜிரி போகிமேன் |
அதே நேரத்தில் ஆன்ட்ராய்ட் போன்களில் கூகுள் தேடுதளத்தில் போகிமேன் (Pokémon) என்று டைப் செய்தால் டவுன் லோட் செய்ய முடியும் என்கின்றனர்.
ஜப்பானைச் சேர்ந்த வீடியோ கேம் வடிவமைப்பாளர் சடோஜி தஜிரி என்பவர், 1996ல் முதன் முதலில் போகிமேன் விளையாட்டை வடிவமைத்தார். இவர் பள்ளிக் கூடத்தில் படிக்கும் போது பல்வேறு வகையான பூச்சிகளை சேகரிப்பதே பொழுது போக்கு. வீடியோ கேம் வடிவமைக்கும் போதும் பூச்சிகள் போன்ற உருவங்களை பயன்படுத்த தொடங்கினார்.
இதற்கு அவர் கூறும் காரணம், நகரமயமாதலால் குழந்தைகள் வண்ணப்பூச்சி போன்ற பல இயற்கையான பூச்சி இனங்களை பார்ப்பதே அரிதாகிவருகிறது.
போகிமேன் என்றால் கைக்கு அடக்கமான மிகப்பெரிய அரக்கன் அல்லது பயங்கரமான உயிரினம் என்று பொருள்.
ஒவ்வொரு போகிமேன் பொம்மையும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். எலி, பூனை, வாத்து என பல்வேறு வகைகளில் இருக்கும். இவைகளுக்கு பெயரும் வித்தியாசமாக இருக்கும். கார்டூன் படங்களில் வரும் உருவங்கள் போல், இவற்றின் வடிவமைப்பும் இருக்கும்.
இதன் பெயர்களும் பாகன், கார்பிஸ், கிரானிடோஸ், டிக்கர்ஸ்பீ, பிப்பிளப் என வித்தியாசமாக இருக்கும். இதனால் இவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகின்றனர்.
போகிமேன் கோ விளையாட்டை வடிவமைத்த நியான்டிக் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஜப்பானைச் சேர்ந்த நின்டின்டோ.
இந்த விளையாட்டின் முக்கிய அம்சம், போகிமேன் பொம்மைகள் எங்கு உள்ளது என்று கண்டு பிடிப்பதே. இதற்கென ரட்டாட, சார்மன்டர் என்று பல்வேறு பெயர்களில் மொத்தம் 151 பொம்மைகளை (உருவங்களை) வடிவமைத்துள்ளனர்.
இந்த போகிமேன் பொம்மைகள் எங்கு உள்ளன என்று ஜிபிஎஸ் வசதி உள்ள போனில் கேமிரா உடன் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று போகிமென் ஒளிந்துள்ள இடத்தில் தேடுகின்றனர்.
சாலைகளில், ரயில் தண்டவாளங்களில் செல்போன்களில்பேசிக் கொண்டே நடப்பது. கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டும் போது செல்போன்களில் பேசிக் கொண்டே ஓட்டுவது என செல்போன்களை முறையாக பயன்படுத்தாமல், தவறாக பயன்படுத்துவதால் பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்த மாதிரியான சூழ்நிலையில் போகிமென் போன்ற விளையாட்டை, சுற்றிலும் கவனம் செலுத்தாமல் விளையாடும் போது விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள வடக்கு சாண்டியாகோவில் போகிமேன் விளையாடும் போது இரண்டு மாணவர்கள் 110 அடி உயரம் உள்ள மதிற் சுவரில் இருந்து விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த போஸ்னியா என்ற நாட்டில் நடந்த உள்நாட்டு போரில் பல இடங்களில் கண்ணிவெடி புதைத்து வைக்கப்பட்டுள்ளது.
போகிமேன் விளையாட்டை விளையாடுபவர்களுக்கு, இந்த கண்ணிவெடி குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கவுதிமாலாவில் 18 வயது இளைஞர், போகிமேன் பொம்மையை தேடி செல்லும் போது, பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டை உடைத்துள்ளார். இந்த இளைஞர் கொள்ளையன் என்று கருதி சுட்டுக் கொன்றுள்ளனர். இதே போல் பால்டிமோரில் போகிமேன் விளையாடிக் கொண்டே காரை ஓட்டியவர், போலீஸ் வாகனம் மீது மோதியுள்ளார்.
நமது நாட்டில் மது குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாதே என்று எச்சரிக்கை பலகைகள் உள்ளது போல், பால்டிமோரில் போகிமேன் விளையாடிக் கொண்டே காரை ஓட்டாதே என்று எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைக்கப்பட்டுள்ளன.
பலர் செய்வது போல் எந்தநேரமும் ஸ்மார்ட் போன் கையில் வைத்துக் கொண்டு போகிமேனை தேடி அலையவேண்டியதில்லை. இவ்வாறு செய்வது மடத்தனம்.
உங்களுக்கு தேவை இதற்கு தேவைப்படும் ஆப்ஸ் மட்டுமே. உங்கள் அன்றாட அலுவல்களையும், மற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு இருக்கும் போது, அருகாமையில் போகிமேன் இருந்தால், உங்கள் ஸ்மார்ட் போனில் பீப் ஒலி எழுப்பும். அப்போது ஸ்மார்ட் போனை எடுத்தாலே போதும் என்று விபரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
எது எப்படியோ, கூடிய விரைவில் தமிழ்நாட்டிலும் போகிமேன் விளையாட்டு ஆர்வம் மக்கள் மத்தியில், குறிப்பாக இளம் சமுதாயத்தினர் மத்தியில் பரவும் என்பது மட்டும் நிச்சயம்.
அதை தொடர்ந்து இது பற்றிய செய்திகளும் வெளியாகும்விபத்துக்களும் விளையாட்டு வெறியினால் தற்கொலைகளும் கூட பெருகும் .
=====================================================================================
மாட்டை கும்பிடுவோர் கவனத்திற்கு.இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், மாட்டிறைச்சி ஏற்றுமதி 50 சதவீதம் உயரும் என தகவல் மற்றும் கடன் தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாட்டுத்தோல் உரிக்கும் தலித்கள் மற்றும் மாட்டுக்கறி உண்பவர்கள் மீது இந்துத்துா அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்துகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசும் பசுப்புனிதம் என்ற பெயரில், தலித்களுக்கு எதிராக மாட்டு அரசியலை கையாண்டு, தலித்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகின்றது,
இந்நிலையில், இந்தியாவின் தகவல் மற்றும் கடன் தர நிர்ணய நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள், பா.ஜ.க.,வின் மாட்டு அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின், அறிக்கைப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடியை எட்டும் என தெரியவந்துள்ளது.
கடந்த 2007-08ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து, 3,533 கோடி ரூபாய் மதிப்புக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது.
அதே, 2015-16 ஆண்டில், 26,682 கோடி ரூபாயாக மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பில், 30% மாட்டிறைச்சி மூலமாக செய்யப்படுகிறது.
இதில், அதிகபட்சமாக, 28% அளவிலான மாட்டிறைச்சி உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவின், மாட்டிறைச்சிகளுக்கு, சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளது.
இதில், குறிப்பிடும் வகையில், சர்வதேச அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க செய்தி ,இந்த மாட்டிறைசி ஏற்றுமதி நிறுவனங்கள் 70% பாஜக உ ட்பட்ட இந்துத்துவா வினர்தாம்.
இவர்கள்தான் இந்தியாவில் மற்றவர்களை மாட்டிறைசியை உன்னைக் கூடாது என்பவர்கள்.
=======================================================================================
400 ஆண்டுகள் வாழ்க்கை !
மனிதர்களின் நுாறு ஆண்டு வாழ்வதே பெரிய விஷயம். ஆனால் கிரீன்லாந்து சுறா 400 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை தான் முதுகெலும்பு வகை உயிரினங்களிலேயே நீண்டநாள் வாழக்கூடியது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
சுறா என்றால்பயப்படாதவர்களே இருக்க முடியாது.
ஏனெனில் இது சாதாரணமாக மனிதர்களை தாக்கி இரையாக்கி விடும்.
இந்த சுறா மீன் தொடர்பாக டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலை., சார்பில் சர்வதேச அறிவியலாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில், 16.73 அடி நீளம், 16.47 அடி நீளம் கொண்ட 2 சுறாக்களின் வயது 335 மற்றும் 392 என கண்டறியப்பட்டது.
தற்போது அட்லாண்டிக் கடலில் காணப்படும் சுறாக்கள் 1624ம் ஆண்டை சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் பல்வேறு வகை சுறாக்கள் வாழ்கின்றன. ஆனால் இதில் கிரீன்லாந்து சுறா தான் குறைந்தது 400 ஆண்டுகள் உயிர்வாழ்கிறது. பெண் சுறாக்களுக்கு 156 வயதில் தான் அதற்கான இனப்பெருக்க தகுதி வருகிறது.
கிரீன்லாந்து சுறாக்கள் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் (கிரீன்லாந்து, கனடா, ஐஸ்லாந்து) அதிகளவில் வாழ்கின்றன.
இவை 16 அடி நீளம் முதல் அதிகபட்சமாக 22 அடி நீளம் வரை வளரும். 1,100 கிலோ வரை இதன் எடை இருக்கும்.
இவை ஆண்டுக்கு ஒரு செ.மீ., உயரம் மட்டும் வளரும் என்பது ஆச்சரியமான விஷயம்.
கிரீன்லாந்து சுறா தான் உலகின் மெதுவாக வளரக் கூடியது. இவை மணிக்கு 1.17 கி.மீ., துாரம் மட்டுமே நீந்தும். மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்கிறது.
சுறா மீன்களுக்கு அதன் ஆயுட்காலம் முழுவதும் பற்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். இதனால் ஒரு சுறா மீனுக்கு அதன் ஆயுட்காலத்தில் 20 ஆயிரம் பற்கள் வரை முளைத்து விடும்.
இரையைக் கைப்பற்றும் சுறாமீன்கள் முதலில் கீழ்த்தாடைப் பற்களைக் கொண்டே இரையைக் கடிக்க ஆரம்பிக்கும். பின் மேல் தாடைக்கு அந்த இரையைத் துாக்கியடிக்கும்.
இப்படியே மேலும் கீழும் துாக்கி வீசித்தான் தனது இரையைச் சாப்பிடும். எத்தனை பெரிய இரையாக இருந்தாலும் 10 நிமிடங்களுக்குள் அதனை மென்று தின்று விழுங்கி விடும். அத்தனை கூர்மையானவை இவற்றின் பற்கள்.
கீரின்லாந்து சுறா எப்போதும் குளிர்ந்த கடல்நீரில் வாழும் தன்மையுடையது.
- 1 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தான் இவைக்கு
ஏற்றது.
கோடைகாலத்தில் இதற்காக அதிகபட்சமாக 6500 அடி ஆழம் வரை சென்று குளிர்ந்த
நீரில் வாழ்கிறது.
இதற்கு முன் கடல்வாழ் உயிரினங்களில் அளவில் மிக பெரியதாக இருக்கும் திமிங்கலம் வகைகளில், 'பாவ்ஹெட் திமிங்கலம்' (211 ஆண்டுகள்) என்பவை அதிகபட்ச வாழ்நாள் கொண்ட முதுகெலும்பு உயிரினமாக இருந்தது.
இன்று,
ஆகஸ்டு-13.
- உடல் உறுப்பு தான தினம்.
- ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார் (1913)
- பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம்91926)
- மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்(1960)
- இடது கை பழக்கமுள்ளோர் தினம்
எஸ்.பி. சற்குணபாண்டியன்
உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
பிடல் காஸ்ட்ரோ.
கியூபாவில், பிரான் அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பிறந்தார் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ.
கியூபாவை ஆட்சி செய்து கொண்டிருந்த, அமெரிக்காவின் கைப்பாவையான, புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சியை அகற்ற, கம்யூனிச புரட்சியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டார் .கியூபாவில், பிரான் அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பிறந்தார் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ.
காஸ்ட்ரோ.விடுதலைக்கு பின், மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோவுக்கு, சே குவேராவின் நட்பு கிடைத்தது. இருவரும் கியூபா வந்து, விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சியில் ஈடு
படுத்தினர்.
காஸ்ட்ரோவை, 638 முறை கொல்ல முயன்று தோற்றது அமெரிக்கா.
பல போராட்டங்களுக்கு பின், 1959 முதல், 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல், 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
கியூபாவில், அனைவருக்கும் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினார்; படிப்பறிவு பெற்றவர்களை, 96 சதவீதமாக உயர்த்தினார்.
பிடல் காஸ்ட்ரோ இடதுகை பழக்கமுள்ளவர்.
அவ ரை பெருமைப்படுத்துவதற்காத்தான் இன்று இடதுகை யாளர்கள் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
=================
மூளையின் இடது, வலது பாகங்கள் தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடது பக்க மூளை உடலின் வலது பாகத்தையும், வலது பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்தும்.
இதன்படி பார்த்தால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால் தான் வலது கை பழக்கம் ஏற்படுகிறது. ஆனால் மிகச் சிலருக்கு இடது பக்க மூளையைக் காட்டிலும் வலது பக்க மூளையின் செயல்பாடு சற்று அதிகமாக இருப்பதன் விளைவு தான் இடது கை பழக்கம். அதன் காரணமாக இடது கை பழக்கம் ஏற்படுகிறது.
இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள், வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், அத்தகைய நம்பிக்கை உண்மையானதல்ல. ஆனால், இடது கைப் பழக்கம் கொண்டவர்களை அப்படியே இருக்கவிட வேண்டும். அவர்களின் இயல்பான இடதுகைப் பழக்கத்தை மாற்ற முயற்சிக்கக்கூடாது. நமது நாட்டில் மூட நம்பிக்கை, அல்லது ஒழுக்கக் குறைவு என காரணங்கள் கற்பிக்கப்பட்டு, இந்த இடதுகைப் பழக்கம் மாற்றப்படுகிறது. இது தவறானதாகும்.உடலியக்க முறைக்கு முரணானதாகும்.
===========================