செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

யார் அப்பன் வீட்டு பணம்?


ஸ்டேட் வாங்கி பணம் பெரும் பண முதலைகளுக்கு,கார்ப்பரேட் போலி சாமியார்களும் எந்த வகையில் இவர்கள் தாரை வார்க்கிறார்கள்.அனைத்தும் மக்கள் பணம்.அம்பானியிக்கு கல்விக்கடன் வசூலிக்க 45%கழிவு .அப்பணத்தை வங்கியிடம் ஒப்படிக்க 10 ஆண்டுகள் கால அவகாசம் என்று கொடுத்த இந்த வங்கி நிர்வாக  கிறுக்கன்கள் அதே அவகாசம்,கழிவை கல்விக்கடன் பெற்ற மாணவர்களுக்கு கொடுத்திருக்கலாமே.பணமும் வந்திருக்கும்.இன்னொரு மாபெரும் கடன்காரனுக்கு சில்லறைக்கடனை வசூலிக்க கொடுத்த முட்டாள்தனத்துக்கு யார் பொறுப்பு?
மாணவன் லெனின் கொலை தான் செய்யப்பட்டுள்ளார் அம்பானி,ஸ்டேட்வங்கிக்காரர்களால்.
வைத்துக்கொண்டே கடனை திருப்பிக்கட்டாத பன்னாட்டு பணமுதலைகள் அம்பானி அதானியின் கடன் வராக்கடன்.மேலும் கடன் கொடுப்பது.
கல்விக்கடன்வாங்கிய ஏழை மாணவர்களை கந்து வட்டிக்காரன்போல் மிரட்டி தற்கொலைக்கு தூண்டுவது.
மேற்படிப்புக்கு பணம் இல்லாத்தால்தானே வங்கிகளிடம் கடன் வாங்குகிறார்கள்.
வேலை கிடைத்தவர்களிடம் பணம் வராமல் உள்ளதா அவர்களை அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் சொல்லியே பணத்தைக்காட்ட வைக்கலாம்.
அதற்கு வங்கிகளுக்கு அதிகாரம் இருக்கிறது.
படித்து விட்டு வேலை தேடி அலையும் வேலை இல்லாதவர்கள் அவர்கள் குடும்ப பொருளாதார நிலையை கணக்கிட்டு அவர்கள் கடனை வராக்கடனில் சேர்க்கலாமே?
இன்றைய நிலவரப்படி பெரும் பணக்காரர்களின் நிறுவனங்கள் திரும்ப செலுத்தாத வராக்கடன் விபரத்தையும்.கல்விக்கடன் வாங்கி வராக்கடன் விபரத்தையும் வங்கிகள் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
பலலட்சம் கோடிகளை வராக்கடனில் சேர்க்கும் முன்னர் அந்த நிறுவனங்கள் மீது கடனை வசூலிக்க வங்கிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் அதில் வெளிப்படையாக கூறவேண்டும்.
அதன் மூலம் பொதுத்துறைவங்கிகளின் நடவ்டிக்கைகள்லட்சணம் மக்களுக்கு தெரிய வேண்டும்.வாங்கி அதிகாரிகள் அப்படி நடவடிக்கை எடுக்க வைத்த மத்திய ஆளும்கட்சி தலையிட்டு விபரங்களையும் பகிரங்கப்படுத்தவேண்டும்.
இப்படி வாங்கி பணத்தை ஒரு போலி சாமியார் நடத்தும் கல்வி நிறுவனத்துக்கு பள்ளி பேருந்து வாங்க 1.15 கோடிகளை கொடுக்கும் வாங்கி அதிகாரிகளுக்கு எப்படி அதிகாரம் வந்தது.?
இந்த ஜாக்கி சாமியார் சொந்தமாக ஹெலிகாப்டர் முதல் பல சொகுசுவாகனங்கள் வைத்திருக்கிறான்.
இவன் பள்ளியின் கல்விக்கட்டணங்கள் சாமானிய மக்கள் பள்ளியருகே கூட அணுக விடாதவை.
இவனுக்கு  உதவி எதற்கு?
அதேப்பகுதியில் மேற்க்கூரை கூட இல்லாமல் இருக்கும்  அரசுப்பள்ளிகள் ,போதிய இருக்கை  வசதி இல்லாத பள்ளிகள்,பழைய இடிந்து விடும் நிலையிலான பள்ளிக்கட்டிடங்கள் ஆகியவை இந்த அதிகாரிகளின் கண்ணில்படவில்லையா.
இந்த 1.10 கோடி பணத்தில் பல பள்ளிகளை சீரமைக்கலாமே.
போதிய போக்குவரத்து வசதியில்லாமல் அரசுப்பள்ளிக்கு கூட போயவரா முடியாமல் தவிக்கும் குக்கிராம மாணவர்களுக்கு உதவ வாகன இந்த ஈஷா பள்ளிக்கான வாகன வசதியைப்போல் செய்து கொடுக்கலாமே.
ஏன் இது போன்ற தேவைகள் வங்கி அதிகாரிகள் கண்ணில் படவில்லை.?ஜக்கி போலி  சாமியார் மீது வங்கி அதிகாரிகளுக்கு பக்தி பொங்கிவழிகிறது என்றால் அவர்கள் சொந்தப்பணத்தில் வாங்கி கொடுத்து நேரடியாக சொர்க்கத்துக்கு போகலாமே.ஏழை மக்களை கடன் வாங்கியதற்கு கசக்கி பிழிந்து வாங்கிய பணத்தை ஏன் செலவிட வேண்டும்?
அப்பாவி மக்களையும்,அரசையும்,ஏமாற்றும் அரசு நிலங்களை ஆக்கிரமித்து சொகுசாக கோல்ப் மைதானம் கட்டி ஹெலிகாபட்டரில் வளமாக வலம்  வரும் கைடெக் போலி சாமியாருக்கு மக்களின் பணத்தை எடுத்து காணிக்கை செலுத்துவது மிக முட்டாள்தனம்.அசிங்கம்.
இன்னமும் எவ்வளவு உண்டோ அவ்வளவு கேவலமான செயலாகும்.
இது போன்ற முட்டாள் அதிகாரிகள் கொடுக்கும் பணத்தை அவர்கள் ஊதியத்தில் இருந்து வாங்கி நிர்வாகம் பிடித்தம் செய்ய வேண்டும்.அதுமட்டுமல்ல வங்கியில் கல்விக்கடன் வாங்கி படித்து அதற்கேற்ற வேலை கிடைக்காமல்  வேறு சில்லறை வேலை பார்த்து அதன் மூலம் வாங்கிக்கடனை செலுத்திக்கொண்டிருக்கும் அனைவரும் இந்த ஈனசெயலை கண்டித்து ஸ்டேட் வங்கிக்கு கடிதங்கள் எழுத வேண்டும்.முடிந்தால் பலர் சேர்ந்து நீதிமன்றம் கூட செல்லலாம்.
அதுதான் இந்த முட்டாள் பூனைகளுக்கு மணிக்கட்டுவதாகும்.
=======================================================================================
இன்று,
ஆகஸ்டு-16.
  • பராகுவே சிறுவர் தினம்
  • சைப்ரஸ் விடுதலை தினம்(1960)
  • சத்தத்துடனான முதல் வண்ண கார்டூன் உருவாக்கப்பட்டது(1930)
=======================================================================================
 மருதநாயகம்...

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதது மருதநாயகம் எனும் கான்சாஹிப்பின் வரலாறு. 
திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலி மற்றும் பூலித்தேவனின் சமகாலத்தில் வாழ்ந்தவர். மருதுநாயகம், கான்சாஹிப், மருதநாயகம், முகம்மது கான் சாஹிப் போன்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளார். 
மதுரை அருகே உள்ள பனையூரில் பிறந்தவர். சிறுவனாக இருக்கும்போதே கம்பீரமாக தன் வாழ்நாளைத் தொடங்கினார். வீர,தீர சாகசங்களில் சிறந்து விளங்கினார்.
இவர் தனது முதல் ராணுவ அனுபவமாக, தஞ்சாவூரை தலைமையகமாக கொண்டு ஆட்சி புரிந்த மராட்டிய மன்னன் பிரதாப சிம்ஹனின் படையில் சிறிது காலம் பணி புரிந்தார். 
பின்னர் புதுச்சேரிக்கு சென்று, பிரெஞ்சு படையில் சாதாரண படை வீரராக சேர்ந்தார். அவருடைய அறிவு, தலைமைப்பண்பு, போர் நுட்பம் ஆகியவை பிரெஞ்சு தளபதிகளை வியக்க வைத்தது. அதன் விளைவாக குறுகிய காலத்தில் பல முக்கிய பதவிகளை பெற்றார்.
இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், மருதநாயகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. இதில் கோபம் அடைந்த மருதநாயகம், ஆங்கிலேயப் படையில் இணைந்தார்.
ஆங்கிலேயர் படையில் இணைந்த சில காலங்களில், மைசூர் சிங்கம் என அழைக்கப்பட்ட ஹைதர் அலியை மருதநாயகம் தோற்கடித்தார். இதனால் புகழின் உச்சிக்கே அவர் கொண்டு செல்லப்பட்டார். தெற்கு சீமையின் கவர்னராக ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்டார். 
மக்களை காப்பதிலும், அவர்களின் வாழ்வை உயர்த்துவதிலும், மருதநாயகம் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார். விவசாயம்தான் நாட்டின் உயிர்நாடி என்பதை உணர்ந்து, அதற் காக அனைத்து வகையிலும் பாடுபட்டார். ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கொடைக்கானலுக்கு முதல் முதலில் சாலை அமைக்கப்பட்டது மருதநாயகத்தின் ஆட்சியில் தான். திறமையான ஆட்சியால் அவரை மக்கள் கொண்டாடினார்கள்.
இவை எல்லாம், ஆற்காடு நவாப்பாக இருந்த முகம்மது அலிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, திருச்சி பகுதியில் மருதநாயகம் கப்பம் வசூலிக்கக்கூடாது என்று ஆற்காடு நவாப்பால் தடை விதிக்கப்பட்டது. அதற்கு ஆங்கிலேயர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆற்காடு நவாப்பிடம் கப்பம் கட்டுமாறு மருதநாயகத்திற்கு ஆங்கிலேயர்கள் உத்தரவிட்டனர். 
இதனை மருதநாயகம் ஏற்க மறுத்தார். அதன்பிறகே, ஆங்கிலேயர் களின் சூழ்ச்சியை மருதநாயகம் உணர்ந்தார். 
அதன் விளைவு, நாட்டை நாமே ஏன் ஆளக்கூடாது? என்ற சிந்தனை மருத நாயகத்துக்கு உதித்தது.
1763-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9-ந்தேதி தனது கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடியை இறக்கிவிட்டு, தன்னுடைய கொடியான மஞ்சள் நிற கொடியை ஏற்றினார். அத்துடன் பிரெஞ்சுக் காரர்களின் கொடியையும் ஏற்றி பழைய நட்பை புதுப்பித்துக் கொண்டார்.
 இதனால் ஆங்கிலேயர்களுக்கும், மருதநாயகத்திற்கும் இடையே பகை முற்றியது.
மருதநாயகத்தை வீழ்த்த ஆங்கிலேயர் படை 3 முறை படையெடுத்தது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆயுதங்களுடன் போரிட்டும் ஆங்கிலேயர் படை தோல்விகளையே தழுவியது. அவரை, வீரத்தால் வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர்களும், ஆற்காடு நவாப்பும், சூழ்ச்சியால் வீழ்த்த முயற்சித்தனர். 
அதன்படி, மருதநாயகத்தின் அமைச்சர் சீனிவாசராவ் உள்பட சிலரை கைப்பாவையாக்கினார்கள்.
இதையடுத்து, 1764-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்தேதி மருதநாயகம் தனது கோட்டையில் தனி அறையில் தொழுது கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீனிவாசராவ் உள்ளிட்டோர் மருதநாயகத்தை சிறைபிடித்து, ஆற்காடு நவாப்பிடம் ஒப்படைத்து விட்டனர். மருதநாயகத்திற்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 1764-ம் ஆண்டு அக்டோபர் 15-ந்தேதி மதுரைக்கு மேற்கே உள்ள சம்மட்டிபுரத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 
பிரமாண்டமான மாமரத்தின் கிளையில், வலுவான தூக்குக்கயிற்றில் தூக்கிலிடப்பட்டார். 2 முறை தூக்கிலிட்டும் சாகவில்லை. புதிய கயிறு தயாரிக்கப்பட்டு, 3-வது முறையாக தூக்கிலிடப்பட்டார். இதில் அவர் இறந்து விட்டார். நீண்ட நேரம் தூக்கில் தொங்கவிடப்பட்டு, அவர் இறந்து விட்டார் என்பதை உறுதி செய்த பிறகே உடல் இறக்கப்பட்டது. 
3-வது முறை தூக்கில் போடும் முன்பு அவர் காலில் கட்டி இருந்த தாயத்தை அகற்றியதாகவும், அதன்பிறகே அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
மருதநாயகம் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அன்று இரவு ஆங்கிலேய தளபதிகளின் கனவில் மருதநாயகம் வந்து மிரட்டியதாக செய்தி பரவியது. 
இதனால் புதைக்கப்பட்ட உடல் மீண்டும் தோண்டி வெளியே எடுக்கப்பட்டு, உயிர் இருக்கிறதா? என்று ஆங்கிலேயர்கள் பரிசோதித்து பார்த்துள்ளனர். 
பின்பு உடலை பல பாகங்களாக வெட்டி, பல இடங்களில் புதைத் துள்ளனர்.