ஹம்மிங் பேட்

 யிங்மாப் (Yingmob) என்பது சீனாவில் இயங்கும் டிஜிட்டல் உலகக் குற்றவாளிகள் குழு.உலகில் உள்ள டிஜிட்டல் சாதனங்களில் தங்கள் கைவரிசையை காட்டி குழப்பம் உண்டாக்கி பணம் பார்ப்பதுதான் இக்குழுவின் நோக்கம்.
இந்த யிங்மாப்  உடன் தொடர்பு உள்ள ஹம்மிங் பேட் என்னும் மால்வேர் தற்போது உலகில் உள்ள ஏறத்தாழ ஒரு கோடி ஸ்மார்ட் போன்களைத் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இவற்றைத் தாக்கியதன் விளைவாக, போலியான விளம்பரங்கள் மூலம், இந்தக் குழு பல லட்சக்கணக்கான டாலர் மதிப்பில் வருமானம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. செக் பாய்ண்ட் (Check Point) என்னும் ஆய்வு அமைப்பு இதனைக் கண்டறிந்து அறிவித்துள்ளது. 
ஒரு கோடி போன்கள் என்பது உறுதி செய்யப்பட்ட தகவல். இந்த மால்வேர் தொடர்ந்து இன்னும் பல ஸ்மார்ட் போன்களைத் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
“நாசத்தை நோக்கி ஹம்மிங் பேட்” என்ற அறிக்கையை, செக் பாய்ண்ட் மால்வேர் ஆய்வு மையம் சென்ற ஜூலை 1 அன்று வெளியிட்டது. முதன் முதலாக, ஹம்மிங் பேட் மால்வேர் புரோகிராமினை, பிப்ரவரி மாதத்தில் இந்த ஆய்வு அமைப்பு கண்டறிந்தது. 
அப்போதிருந்தே, போலியான விளம்பரங்களைப் பதிவு செய்து, அதன் மூலம் பலருக்கு நிதி இழப்பினை ஏற்படுத்தியது. 
தற்போது, ஒவ்வொரு மாதமும், 3 லட்சம் அமெரிக்க டாலர் என்ற அளவில், ஹம்மிங் பேட் மால்வேர் அதனை உருவாக்கியவர்களுக்கு தேடித் தருகிறது. இதனை உருவாக்கிய குழுவில் 25 ஊழியர்கள், நான்கு பிரிவாகப் பணியாற்றுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. 
இவர்கள், தங்களுக்குள்ளாக, தங்கள் மால்வேர் தேடித்தரும் விளம்பர வருமானம் குறித்த ஆய்வு தகவல்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தைத் தாக்கிய Yispecter என்னும் மால்வேர் புரோகிராமிற்கும் இவர்களே காரணமாக இருக்கலாம் என்று இப்போது சந்தேகம் வந்துள்ளது.
இந்த மால்வேர் புரோகிராம் தாக்கியுள்ள ஸ்மார்ட் போன் கொண்டுள்ள நாடுகளில், சீனா 16 லட்சம் போன்களுடன் முதல் இடம் கொண்டுள்ளது. 
இந்தியா, 13.5 லட்சம் போன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில், 5 லட்சத்து 20 ஆயிரத்து 901 போன்களில் இந்த மால்வேர் இடம் பெற்றுள்ளது. 
அமெரிக்காவில், 2 லட்சத்து 86 ஆயிரத்து 800 போன்களில் இதன் தாக்கம் உள்ளது. இந்த மால்வேர் பெரும்பாலும் கிட்கேட் (50%) இயங்கு போன்களீல் தன் இயக்கத்தினைக் காட்டியுள்ளது. அடுத்த நிலையில், ஜெல்லிபீன், லாலிபாப் மற்றும் ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆகியவை உள்ளன.
ஹம்மிங் பேட் தான் குடியேறிய ஸ்மார்ட் போன்களில், தினந்தோறும் 50 ஆயிரம் போலியான அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கிறது. 
இந்த அப்ளிகேஷன் மூலமாக, தினந்தோறும் 2 கோடி விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. 
இந்த மால்வேர் பாதித்த போன்களில் உள்ள எந்த வகை டேட்டாவும் திருடப்படும் சூழ்நிலையிலேயே உள்ளன என்று இவற்றை ஆய்வு செய்த மையம் எச்சரிக்கை செய்துள்ளது. 
எனவே, தங்கள் நிறுவன மற்றும் அலுவலகப் பணிகளுக்கு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது .
=====================================================================================
உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் ஹார்டுவேர் நிறுவனமான சிஸ்கோ சிஸ்டம்ஸ், தன் நிறுவனத்தில் இருந்து சுமார் 14,000 பேரை வேலையை விட்டு நீக்க இருக்கிறது. 


இது அந்நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 20%. 

 காரணம், கிளவுட் தொழில்நுட்பம்தான்!
=====================================================================================
இன்று,
ஆகஸ்டு-17.
  • இ ந்தோனேஷிய விடுதலை தினம்(1945)
  • இந்தியா-பாகிஸ்தானை பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியியானது(1947)
  • காபோன் விடுதலை தினம்(1960)
  • முதல் சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)

ராட்கிளிஃப் கோடு என்பது இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை பிரிக்கும் எல்லைக்கோடு. 
இது 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17ல்  ஏற்படுத்தப்பட்டது. 
சிரில் ராட்கிளிஃப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 88 மில்லியன் மக்களைக் கொண்ட 1,75,000 சதுர மைல்கள் பரப்பளவு நிலத்தை இந்த எல்லைக்கோடு கொண்டு பிரித்தது. 
=====================================================================================
இயேசு அறையப்பட்டுள்ள சிலுவையின் மேல் பகுதியில் ‘ஐஎன்ஆர்ஐ’ என்று எழுதப்பட்டிருக்கும். இதற்குரிய விளக்கம் தெரியுமா?
ரோம சாம்ராஜ்ய சட்ட நியதியின்படி, மிகக்கொடிய குற்றவாளிகளுக்குத்தான் சிலுவையில் அறைந்து தொங்கவிட்டு கொல்லப்படுகிற மரண தண்டனையை வழங்குவார்கள். 
சிலுவையின் உச்சியில் அவன் செய்த குற்றத்தின் சுருக்கத்தை எழுதி பார்க்கிற யாவரும் வாசித்தறிந்து அவனை இகழ்ந்து நிந்திக்கும் பொருட்டு அதையும் தொங்க விடுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறான ஒரு நிகழ்வு நடந்தது. 
வழக்கை விசாரித்த தேசாதிபதியாகிய பிலாத்து, ‘‘நான் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜாஎன்று சொல்லித்திரிந்ததை தவிர வேறு  ஒரு குற்றமும் காணேன்,’’ என்று சொன்னவன், சூழ்நிலையின் நெருக்கத்தால் இயேசுவை சிலுவையில் அறைந்து  மரணம் தண்டனையை கொடுத்தான்.
 தொங்கவிட வேண்டிய குற்றச்சாட்டை எழுதும்போதும் ‘‘நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்பவர் இவர் " என்றே எழுதப்பட்டது. 
இதையே ‘ஐஎன்ஆர்ஐ’ என்ற எழுத்துக்களால் சிலுவையின் உச்சியில் குறித்திருப்பார்கள். ‘ஐ’ - ஜீசஸ் (இயேசு), ‘என்-’ நாசரேத், ‘ஆர்’- ரெக்ஸ் (கிங்), ‘ஐ’- இட்யூம்ஸ் (யூதா). இப்படி எழுதப்பட்டதை மாற்றும்படி கேட்ட போது சிலுவையில் வரையப்படும் குற்றவாளிகளின் குற்றத்தை சிலுவையில் குறிப்பிடப்படுவது வழக்கம்.இயேசுக்கு இப்படி சுக்கமாக குறிப்பிடுங்கள் என்று கூறிவிட்டார்.

இந்த வாசகம் எபிரெயு, கிரேக்கு, லத்தீன் ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. 
எபிரெயு, அப்பகுதி மக்கள் பேசுகிற மொழி. லத்தீன், ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சிமொழி. கிரேக்கம் அன்றைய உலகப் பொதுமொழி.
சரி...மூன்று மொழிகளிலும் எழுதக் காரணம் .
பாலஸ்தீன தேசத்து மக்கள் மாத்திரமல்ல, பரந்து விரிந்த ரோம சாம்ராஜ்யத்து மக்கள் மாத்திரமல்ல, உலகத்தில் வாழும் எல்லா மக்களும் இயேசு  மரணத்தை அறிந்து பயங் கொள்ள வேண்டும் என்பதற்காக இவ்வாறு எழுதப்பட்டது. 
அவர் ‘யூதர்களின் ராஜா என்று சொல்லி திரிந்தார் ’ என்று  உலகமே அறிந்து கொள்ள வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. 
======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.