சைக்கிள் மட்டுமே சொந்தம்.....
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு சைக்கிள் மட்டுமே சொந்தமாக வைத்துக் கொண்டு அதில்
அரசுப்பள்ளிக்கு சென்று ஆசிரியர் தொழில் பார்த்துக்கொண்டிருந்த பச்ச முத்து இன்று பாரி வேந்தர்.
25 ஆண்டுகளில் அவர் சம்பாதித்த சொத்து மதிப்பு பல ஆயிரங்கோடிகள் .
ஆசிரியர் தொழிலில் உண்மையாக பணியாற்றியிருந்தால் இவ்வளவு சொத்து ஒருவரால் சம்பாதிக்க
முடியுமா என்ன?
இவரின் கையாளாக இருந்து கல்லூரிகளில் சேர வரும் மாணவர்களிடம் நன்கொடையாக பலலட்சங்கள்
இவரின் கையாளாக இருந்து கல்லூரிகளில் சேர வரும் மாணவர்களிடம் நன்கொடையாக பலலட்சங்கள்
வசூல் செய்து பச்சமுத்துவிடம் கொடுத்து வந்தவரும்,பச்ச முத்துவின் கருப்பு பணத்தை திரைப்படங்கள்
எடுத்தும்,விநியோகித்தும் வந்தவரும் பச்சமுத்துவின் மறுபக்கத்தை அறிந்தவருமான மதன் காணாமல்
போய்விட்டார்.
அவரை கண்டு பிடிக்கவும்,பாரிவேந்தரின் பெயரை சொல்லி எஸ்.ஆர்.எம் கல்லூரிகளில் இடம் வாங்கித்தர பல லட்சங்களை வாங்கியதை மீட்டுத்தரவும் நூற்றுக்கணக்கான மனுக்கள் குவிந்தன.
ஆனால் நமது காவல் துறை மதனை காசி,ராமேஸ்வரம் என்று கூட்டமாக போய் வலை வீசி தேடினார்கள்.
யாருக்கு மதன் வலது,இடது கையோ ,யார் அவர் மூலம் கல்லூரிக்கு நன்கொடை கொள்ளையடித்து வருகிறாரோ அந்த பச்ச முத்து என்ற பரிவேந்தரிடம் இதுவரை காவல்துறை மதனின் விலாசத்தை கூட
விசாரிக்க வில்லை என்பதுதான் நமது காவல்துறையின் மீதான குற்ற சாட்டு.
பாரியை விசாரிக்க கூறி அல்லது கோரி பல மனுக்கள் கொடுத்த போதும் காவல்துறை அசைந்து கொடுக்கவில்லை.
காரணம் புதிய தலை முறை,வேந்தர் என்ற தொலைக்காட்சிகள் மூலம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டது தான்.
கல்லூரிகள் ,பத்திரிகைகள்,தொலைக்காட்சிகள் போல் பாரி வேந்தர் ஆரம்பித்த கடசி மூலம் மத்திய ஆளும் பாஜக வுடன் கூட்டணி வேறு.கடந்த சட்டமன்ற தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் போட்டியிட்டு விட்டு கடைசி மணிகளில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார் பாரி.
பின் எப்படி காவல்துறை நடந்து கொள்ளும்?
அனால் நீதிமன்றம் வரை சிலர் போய் கதவை தட்டியதால் விசாரித்த நீதிமன்றம் காவல்துறையை அசிங்கமாக திட்டியதால் வேறு வழியின்றி பாரியை கைது செய்துள்ளது.ஆனால் உடனே பிணையில்வெளியே வரும்படியான வசதியான பிரிவுகளிலேயே இக்கைது நடந்துள்ளது.அவர் வெளியேயும் வந்து விட்டார்.விசாரணை? அடுத்த நீதிமன்ற கணடனத்துக்குப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.
நீதிமன்ற கண்டனங்களும்,காறித்துப்பல்களும் ஜெயலலிதா அரசுக்கு பழகிப் போன ஒன்று.அதுக்கு எல்லாம் வெட்கம்,ரோசம் பார்த்தால் ஆடசி செய்யமுடியுமா?பணம் சம்பாதிக்கத்தான் முடியுமா?
இதோ பச்சமுத்து வாக இருந்து மாறிய பாரிவேந்தரின் சொத்துப்பட்டியல்-
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் 600-ஏக்கர் (காட்டாங்குளத்தூர்)
வள்ளியம்மாள் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரி
வள்ளியம்மாள் பாலிடெக்னிக்
வள்ளியம்மாள் பொறியியல் கல்லூரி
எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.பல்மருத்துவக்கல்லூரி (காட்டாங்குளத்தூர்)
எஸ்.ஆர்.எம்.பல் மருத்துவக்கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.மேனேஜ்மெண்ட் கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.ஈஸ்வரி என்ஜீனியரிங் கல்லூரி ராமாபுரம்
எஸ்.ஆர்.எம்.ஆர்ட்ஸ்&சயின்ஸ் மேனேஜ்மென்ட் கல்லூரி - வடபழனி
எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் (தூத்துக்குடி )
எஸ்.ஆர்.எம்.ஹோட்டல் (திருச்சி )
எஸ்.ஆர்.எம். 5 நட்சத்திர ஹோட்டல் கிண்டி
எஸ்.ஆர்.எம்.ஹாஸ்பிட்டல் மாம்பலம்
எஸ்.ஆர்.எம். பவர் (கடலூர்) (2000 மெ.வாட் கொண்ட மின் உற்பத்தி நிறுவனம் பணிகள் நடைபெறுகிறது)
எஸ்.ஆர்.எம்.டிராவல்ஸ் (சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொகுசு Volvo பேருந்துகள்)
எஸ்.ஆர்.எம்.டிரான்ஸ்போர்ட்ஸ் (Hyundai, Maruthi போன்ற கார்களை சுமந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்)
எஸ்.ஆர்.எம்.பார்சல் சர்வீஸ்
எஸ்.ஆர்.எம்.எலக்ட்ரிக்கல்ஸ் (சி.எப்.எல்.மற்றும் டியூப்லைட்டுகள் தயாரிக்கும் கம்பெனி)
வளசரவாக்கத்தில் பல ஏக்கர் பரப்பளவி;ல் உள்ள ஆடம்பர பங்களா
திருச்சி டி.ஆர்.பி.என்ஜினீயரிங் கல்லூரி
திருச்சி எஸ்.ஆர்.எம்.மருத்துவக்கல்லூரி
டெல்லி நொய்டா எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் (200 ஏக்கர் பரப்பளவு)
இலங்கை கொழும்புவில் கல்லூரி
அசோக் நகரில் உள்ள ஐ.ஜே.கே.கட்சி தலைமை அலுவலகம்
புதிய தலைமுறை தொலைக்காட்சி
புதிய தலைமுறை வார இதழ்
புதுயுகம் தொலைக்காட்சி
வேந்தர் தொலைக்காட்சி இவற்றுக்கான சொந்தகட்டிடங்கள்.
எஸ்.ஆர்.எம். Constructions - என்ற பெயரில் நூற்றுக்கணக்கான இடங்களில் கட்டுமானங்கள்
சென்னை தி.நகர் ஜி.என் செட்டி சாலை அடுக்குமாடி கட்டிடம்.
பாரிவேந்தரின் குடும்பம்
பாரிவேந்தரின் மனைவி பெயர் - ஈஸ்வரியம்மாள்.
மகன்கள் - பி.ரவி.டாக்டர்.பி.சத்தியநாராயணா,
மகள் பெயர் கீதா
இதில் மூத்த மகன் ரவி எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், கட்டுமானம் டிரான்ஸ்போர்ட் ஹோட்டல்கள் உள்ளிட்ட தொழில்களையும் நிர்வகித்து வருகிறார்.
2வது மகன் சத்தியநாராயணா புதிய தலைமுறை தொலைக்காட்சி, புத்தகம், மற்றும் பல்கலைக்கழத்தின் பெரும்பகுதியை நிர்வகித்து வருகிறார்.
அவரது மகள் கீதா மற்றும் அவரது கணவர் சிவக்குமார் திருச்சி டி.ஆர்.பி.என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி, ராமாபுரம் ஈஸ்வரி எனஜினீயரிங்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை நிர்வகித்து வருகின்றனர்.
=======================================================================================
இன்று,
ஆகஸ்டு-27.
கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)- உலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது(1939)
- மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)
- மால்டோவா விடுதலை தினம்(1991)
=======================================================================================