இந்தியாவில் இணையம்.
முதல் இணைய தளத்தையும் அதனைத் தேடி அறிய பிரவுசரையும் தந்தவர் டிம் பெர்னர்ஸ் லீ.
URL, HTML, மற்றும் HTTP போன்ற பெயர்களை எல்லாம் அவர்தான் கொடுத்தார். தொடக்கத்தில் இணையம், யார் வேண்டுமானாலும் மேம்படுத்தக் கூடிய தகவல் மையமாகவும், அனைவரும் தங்களுக்குத் தேவையான தகவலைத் தேடி எடுத்துக் கொள்ளக் கூடிய தகவல் களஞ்சியமாகவும் தான் வடிவமைக்கப்பட்டது.
அப்படி துவக்கப்பட்ட இணையம் 1991ல் செயல்படத் தொடங்கி ஆகஸ்ட் 6 அன்று தனது வெள்ளி விழா ஆண்டாகிய 25 ஐ அடிந்துள்ளது.
ஆகஸ்டு-29.
“கல்வி சார்ந்த தகவல்கள் அனைத்தும், அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும்” என்ற நோக்கம்தான் டிம் பெர்னர்ஸ் லீ இணையதளம் தோற்றுவிக்க யொசனையை தூண்டியது.
அந்த நோக்கத்துடன் 1989ல் பணியாற்றத் தொடங்கி, 1990ஆம் ஆண்டு இதனை வடிவமைத்து சோதனை செய்திட்டார் பெர்னர்ஸ் லீ.
தகவல் மையமாக அமைந்தாலும், அங்கு அந்த தகவல் உள்ளது என எப்படி அறிவது? என்ற கேள்வி, இணையத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது .
மேற்கண்ட கேள்விக்கான விடையை, முதலில் உருவான இணைய நிறுவனங்களில் ஒன்றான யாஹூ தந்தது. ஸ்டான் போர்டு பல்கலையின் மாணவரான ஜெர்ரி யங் மற்றும் தொழில் நுட்ப வல்லுநரான டேவிட் பைலோ இணைந்து, இணைய தளங்களின் பட்டியலை உருவாக்கினார்கள்.
மேற்கண்ட கேள்விக்கான விடையை, முதலில் உருவான இணைய நிறுவனங்களில் ஒன்றான யாஹூ தந்தது. ஸ்டான் போர்டு பல்கலையின் மாணவரான ஜெர்ரி யங் மற்றும் தொழில் நுட்ப வல்லுநரான டேவிட் பைலோ இணைந்து, இணைய தளங்களின் பட்டியலை உருவாக்கினார்கள்.
வகை வகையாக இணைய தளங்களைப் பிரித்துக் காட்டினார்கள்.
இணையத்தின் டைரக்டரியாக அவர்கள் உருவாக்கிய பட்டியல் இருந்தது. அதன் பின்னர், டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேசன் (DEC), அல்டா விஸ்டா (Alta Vista) என்ற தேடல் பொறியைத் தந்தது. ஹாட்பாட் (Hot Bot) என்னும் தேடல் சாதனம் அதனைத் தொடர்ந்தது.
அதன் உச்சக்கட்ட தேடலின் விடையாகத்தான் இன்று கூகுள் தேடல் மக்களை அடைந்துள்ளது.
ஒரு சில சொற்களை அமைத்து, தேவையான தேடல் சாதனத்தில் கொடுத்து, உலகின் அனைத்து இணைய சர்வர்களை உள்ளடக்கிய உலக வைய விரிவலை (World Wide Web) யிலிருந்து தேவைக்கதிகமாகவே தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியத்தை, இணைய வல்லுநர்கள் அளித்து வருகின்றனர்.
'வெப்' என அழைக்கப்படும் வைய விரிவலையும் இணையமும் ஒன்றல்ல. இணையம் என்பது, வைய விரிவலையைத் தாங்கிப் பிடிக்கும் கட்டமைப்பாகும். கேபிள்கள், கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் மற்றும் அவை சார்ந்த அனைத்தும் இணைந்த கட்டமைப்பே இணையமாகும்.
பல நெட்வொர்க்குகள் இணைந்த நெட்வொர்க் தான் இணையம்.
இதைப்படிக்கும் நேரத்தில் உலகமெங்கும் நூற்றுப் பத்து கோடி இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதைப்படிக்கும் நேரத்தில் உலகமெங்கும் நூற்றுப் பத்து கோடி இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தினந்தோறும் 340 கோடி மக்கள் இணைய தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு நிமிடத்திலும், பல கோடி கணக்கில் தகவல்கள் அனுப்பப் படுகின்றன.
பல கோடி படங்கள் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன.
தினசரி குறைந்தது 1.5 கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் .இணைய தளங்கள் மூலம் நட்க்கின்றது.
இணையத்தில் அதிக ஆதிக்கம் செலுத்துவது, சமூக வலைத் தளங்களே.
இணையத்தில் அதிக ஆதிக்கம் செலுத்துவது, சமூக வலைத் தளங்களே.
அடுத்தபடியாக தேடல் பொறிகளும், வர்த்தக தளங்களும் உள்ளன.
நிலையாக இணைய தளங்கள் இருந்த நிலை மாறி, இன்று நம்மோடு பேசி உறவு கொள்ளும் இணைய தளங்கள் உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றன.
ஆங்கிலம் மட்டுமே இணைய மொழியாக இருந்த நிலை மாறி, உலகின் அனைத்து மொழிகளும் இணையத்தின் மொழிகளாக மக்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றன.
வெறும் தகவல் தளங்களாகத் தொடங்கி, இன்று படங்கள், காணொளிப் படங்கள், நகரும் வரைவுகள் கொண்ட தளங்களாக இணையம் இயங்குகிறது. இணையம் கம்ப்யூட்டரிலிருந்து சற்று விலகிச் சென்று பல மொபைல் சாதனங்கள் வழியாக மக்களைச் சென்று அடைகிறது.
“எங்கும் எதிலும் இணையம்” (internet of things) என்ற இலக்கினை நோக்கி இணையம் சென்று கொண்டிருக்கிறது.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும், இணையத்தில் இணைக்கப்பட்டு
மக்கள் இணையத்தை அணுக வேண்டிய தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.
உலகில் அதிக அலவில் மென் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் பெயர் பெற்றதாக இருந்தாலும் இன்றைய தேதியில் 86.4 கோடி இந்தியர்கள் இணைய இணைப்பில்லாமல்தான் இருக்கிறார்கள்.
ஆண்கள் 27% பெண்கள் 17% இணையத்தில் உலாவி வருகிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது. இணைகின்றனர்.
பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருக்க காரணம் பெண்களுக்கு இணையம் பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து உலகம் முழுக்க இருப்பதால்தானாம்.
இந்தியாவில் இணைய இணைப்பு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் 1986 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
இந்தியாவில் இணையப் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டில், 105.34,81,072 மக்களில் 0.5% பேர் (55,57,455) மட்டுமே இணையத்தை அணுகிப் பயன்படுத்த முடிந்தது. 2012 ஆம் ஆண்டில், மொத்த ஜனத்தொகையில் (126,35,89,639) 12.6% பேர் (15,89,60,346) இணையத்தைப் பயன்படுத்தி வந்தனர். இன்று, 2016 ஜூலை 1 அன்று எடுத்த கணக்கின்படி, மொத்த ஜனத்தொகையில் (132,68,01,576) 34,8% பேர் (46,21,24,989) பயன்படுத்தி வருகின்றனர்.
முதலில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டும் இணைய இணைப்பு பெற Educational Research Network (ERNET) என்ற நெட்வொர்க் அமைக்கப்பட்டது.
இந்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் துறையும் (Department of Electronics (DOE)) ஐக்கிய நாடுகள் சபையின், நாடுகளின் வளர்ச்சிக்கான United Nations Development Program (UNDP) துறையும் இணைந்து இந்த முயற்சிகளை மேற்கொண்டன.
பின்னர், 1988ல், அரசின் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) அரசின் பல்வேறு துறைகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கென NICNet என்னும் நெட்வொர்க்கினை ஏற்படுத்திச் செயல்படுத்தியது.
பின்னர், 1988ல், அரசின் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) அரசின் பல்வேறு துறைகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கென NICNet என்னும் நெட்வொர்க்கினை ஏற்படுத்திச் செயல்படுத்தியது.
இந்தியாவில் இணைய சேவை, 15 ஆகஸ்ட் 1995 அன்று, வி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
அப்போது பொதுத்துறை நிறுவனமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் (Videsh Sanchar Nigam Limited (VSNL)) இதனை வழங்கியது.
அதற்கென Gateway Internet Access Service (GIAS) என்றொரு பிரிவினை இந்நிறுவனம் அமைத்து, இணைய இணைப்பினை வழங்கியது.
ஆறு மாதத்தில் 10 ஆயிரம் பேர் இணைப்பு பெற்றனர். 1995, ஜூலை 31ல், மொபைல் போன் சேவை தொடங்கப்பட்டது.
தொடக்கத்தில் விநாடிக்கு 9.6 கிலோ பிட்ஸ் என்ற அளவில் தொடங்கிய இணைய இணைப்பு வேகம், பின்னாளில் மிக வேகமாக வளர்ந்து தற்போது மெகா பிட்ஸ் என்ற அளவை எட்டியுள்ளது. லீஸ்டு லைன் எனப்படும் தனிப்பட்ட சர்வர் இணைப்பு தற்போது குறைந்த கட்டணத்தில் நொடிக்கு கிகா பிட்ஸ் வேகத்தில் கிடைக்கிறது.
இந்திய நகரங்களில், அதிக எண்ணிக்கையில், இணையத்தைப் பயன்படுத்துவோர் பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
மார்ச் மாத இறுதியில் எடுத்த கணக்கீட்டின்படி, மொத்தம் உள்ள 23.1 கோடி பேரில் 9% பேர் தமிழ்நாட்டில் உள்ளனர்.
2.1 கோடி பேர் தமிழக நகரங்களில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். மஹாராஷ்ட்ரா, டில்லி மற்றும் கர்நாடகா மாநில நகரங்களில் இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை, முறையே 1.97 கோடி, 1.96 கோடி மற்றும் 1.7 கோடி ஆக இருந்தது.
மொத்த இந்தியாவில், 34.2 கோடி பயனாளர்களில், கிராமப் புறங்களில் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக இருந்தது.
மொத்த இந்தியாவில், 34.2 கோடி பயனாளர்களில், கிராமப் புறங்களில் இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 11.2 கோடியாக இருந்தது.
கிராமப் புறங்களைப் பொருத்த மட்டில், உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு பிரிவில், 1.12 கோடி பேர், நகர்ப்புற இணையப் பயனாளர்களுக்கு இணையாக உள்ளனர். இந்த வகையில், மஹாராஷ்ட்ரா மாநிலம் 97 லட்சம் பேரையும், ஆந்திர மாநிலம் 90 லட்சம் பேரையும் கொண்டிருந்தது.
விரைவில், 'பாரத் நெட்' என்ற திட்டத்தின் கீழ், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகளில், ஆப்டிகல் பைபர் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு தரப்பட உள்ளது.
விரைவில், 'பாரத் நெட்' என்ற திட்டத்தின் கீழ், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் கிராமப் பஞ்சாயத்துகளில், ஆப்டிகல் பைபர் மூலம் பிராட்பேண்ட் இணைப்பு தரப்பட உள்ளது.
இந்த வசதி ஏற்படுத்திக் கொடுத்த பின்னர், கிராமப் புறங்களில், இணைய இணைப்பு மிக வேகமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம், இந்தியா முழுவதும் மூன்று கட்டமாக அமல்படுத்தப்படும். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளிலும், டிசம்பர் 2018க்குள், மீதம் உள்ள 1.5 லட்சம் பஞ்சாயத்துகளிலும் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும்.
சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் எடுத்த கணிப்புப்படி, இந்தியாவில் தரப்படும் சராசரியான இணைய இணைப்பு, விநாடிக்கு 3.5 மெகா பிட்ஸ் ஆக இருந்தது.
சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் எடுத்த கணிப்புப்படி, இந்தியாவில் தரப்படும் சராசரியான இணைய இணைப்பு, விநாடிக்கு 3.5 மெகா பிட்ஸ் ஆக இருந்தது.
இது உலக அளவில், இந்தியாவிற்கு 114 ஆவது இடத்தையே பெற்றுத் தந்துள்ளது.
இந்தியாவில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம், 9 கோடியே 5 லட்சத்து 30 ஆயிரம் இணைய சந்தாதாரர்களைக் கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக, அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களில் பார்தி ஏர்டெல் நிறுவனம், 9 கோடியே 5 லட்சத்து 30 ஆயிரம் இணைய சந்தாதாரர்களைக் கொண்டு முதல் இடத்தைப் பெற்றுள்ளதாக, அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அடுத்த நிலையில், வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், பி.எஸ்.என்.எல்., ஏர்செல், டாடா டொகோமோ மற்றும் டெலிநார் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.====================================================================================
இன்று,ஆகஸ்டு-29.
மைக்கேல் பாரடே |
- இந்திய தேசிய விளையாட்டு தினம்
- செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)
- பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)
- மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)