புதன், 31 ஆகஸ்ட், 2016

இணையம் என்றால் இனி ...?

கூகுள் தன் கிளை நிறுவனங்களை எல்லாம் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சித்து வரும் வேளையில் அதற்கு நேர்மாறான பாதையில் நடை போடுகிறது ஃபேஸ்புக். 
இப்படி ஒரே குடையின் கீழ் நிறுவனங்களை கொண்டுவரும்போது வெளிப்பார்வைக்கு கூகுள் டெக் உலகின் அரசன் போல காட்சியளித்தாலும் நிஜம் அதுவல்ல. ஃபேஸ்புக்தான் டெக் உலகின் ரியல் சாம்ராட். ஃபேஸ்புக்கில் பயனாளிகள் தாங்களாக முன்வந்து தங்களைப் பற்றிய தகவல்களை பகிர்கிறார்கள். 
இதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது. 
ஃபேஸ்புக் தன் கிளை நிறுவனங்கள் மேல் தன் ஆதிக்கத்தை செலுத்தாமல் அவற்றை சுதந்திரமாக செயல்பட வைக்கிறது. 
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஒக்குலஸ் போன்றவை எல்லாம் தத்தமது தனித்திறமைகளோடு விளங்குகின்றன. 
இதனால் கூகுளை விட பயனாளிகள் பற்றி அதிகம் தெரிந்து வைத்திருக்கிறது ஃபேஸ்புக்.
இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், மெசஞ்சர் என பல தளங்கள் இருந்தாலும் ஃபேஸ்புக்தான் நாம் அதிகம் பயம்படுத்தும் தளமாக விளங்குகிறது. ஆனால்  அந்தத் தளத்தின் உலகளாவிய ஆதிக்கத்தை ஒரே ஒரு குறைபாடுதான்தடுத்து கொண்டிருக்கிறது . 
அது- 'சர்ச்' ஆப்ஷன். 
இதை களைய திட்டங்கள் வகுத்து வருகிறது ஃபேஸ்புக்.
கூகுளின் வசம் ஒரு சமூக வலைதளம் கூட இல்லாத நிலையை பயன் படுத்தி  ஃபேஸ்புக் மெல்ல மெல்ல கூகுளின் பிரம்மாண்டத்தை அரிக்கத் தொடங்கியிருக்கிறது. 
2005-ல் ஆண்ட்ராய்ட் என்ற ஸ்டார்ட் அப்பை மட்டும் வாங்காமல் போயிருந்தால் நாம் இன்று பார்க்கும் கூகுள் வேறுமாதிரி இருந்திருக்கும்.

 கூகுளின்  சிறப்புமிக்க சாதனை என்றால் அது ஜிமெயில்தான் . இன்றைய தேதியில் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் ஜிமெயில்தான் .ஜிமெயிலின் மூலம் கூகுளின் மேப், காலண்டர், டாக்ஸ் ஆகியவற்றையும் பயன்படுத்த முடியும்.  இன்று 12 பில்லியன் பயனாளிகள் இவற்றை பயன் படுத்திவருகின்றனர்.

 ஆனால் இந்த எண்ணிக்கையை வெறும் 50 ஊழியர்களைக் கொண்ட வாட்ஸ் அப் நிறுவனம் ஆறே ஆண்டுகளில் எட்டிவிட்டது என்பதுதான் உண்மை . 

 வாட்ஸ் அப் கடந்த மாதம் முதல் தனது  ஒரு டாலர் சந்தா முறையை கைவிட்து விட்டது. 
இப்போது தன் பயனாளிகளை வாட்ஸ் அப் மூலம் வர்த்தக பரிவர்த்தனைகள் மேற்கொள்ளவும் தூண்டுகிறது. ஆலோசனைகளை வழங்குகிறது.
இதனால் ஜிமெயிலில் வரும் சம்பந்தமேயில்லாத பெரிய பெரிய வர்த்தக மெயில்களுக்கு எல்லாம் இனி வேலை இராது . க்ரியேட்டிவிட்டிக்கு தான் இனி இடம் இங்கே. நிறுவனங்கள் தங்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாட்ஸ் அப்பை பயன்படுத்தத் தொடங்கும் காலம் தூரத்தில் இல்லை. வாட்ஸ் அப்பில் இருக்கும் இன்னொரு வசதி நாம் அனுப்பிய தகவலை மறுமுனையில் இருப்பவர் படித்துவிட்டாரா இல்லையா என்பதை தெரிந்துகொள்ள முடியும். 
இது வர்த்தக நிறுவனங்களுக்கு தங்கள் வணிகத்துக்கு மிக சாதகமாக அமையும். இந்த பரிவர்த்தனைகளுக்கு ஃபேஸ்புக் மெசஞ்சரும்  பயன்படும். 
இதனால் வாட்ஸ் அப், மெசஞ்சர், ஸ்லாக் ஆகியவற்றுக்கு நடுவே மாட்டிக்கொண்டு கூகுள் ஜிமெயில் திணற வேண்டிய சூழல் உண்டாகி விட்டது   .
வைனை விட இன்ஸ்டாகிராமிற்கு அதிக பயனாளிகள் இருக்கிறார்கள். வளரும் நாடுகளில் அந்த தளம் மிகவும் பிரபலமாக இருக்கிறது. 
எளிமையான ஒரு தளம் என்பதால்  இன்ஸ்டாகிராம் அனைவராலும் விரும்பி பயன் படுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி இங்கும்  இன்ஸ்டாகிராமிற்கும்  ஃபேஸ்புக் பக்கபலமாக  இருக்கிறது. இந்தக் காரணங்களால் வைனிலிருந்து இன்ஸ்டாகிராமிற்கு பலர் மாறி வருகின்றனர். 
ஆப்பிள் பயனாளிகளை கவர்வதற்காக ஐ-போனில் தன் சர்ச் பாரை தக்க வைக்க கூகுள்1 பில்லியன் டாலர்களை அல்லி கொடுத்தது.
 அதேபோல் ஃபேஸ்புக்கும் இன்ஸ்டாகிராம் படங்களை பயன்படுத்த ட்விட்டருக்கு பணம் கொடுத்தாக வேண்டும். 
இப்போது  ஸ்னாப்சாட் செயலி மட்டுமே களத்தில் போட்டிக்கு நிற்கும்.  முன்னர் ஸ்னாப்சாட்டை முடக்க ஃபேஸ்புக் கொண்டுவந்த ஸ்லிங்சாட்  பயனாளிகளிடம் வரவேற்பை பெறாமல் ஓரங்கட்டப்பட்டது . 

மெசஞ்சர் ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் முறையில் செயல்படுவதால் வீசாட் செயலிக்கு போட்டியாக விளங்குகிறது. இப்போதே நீங்கள் மெசஞ்சர் மூலம் உபேர் டாக்ஸி புக் செய்யலாம். சில குறிப்பிட்ட தேடுதல்களை மேற்கொள்ளலாம். இதிலிருந்தே ஃபேஸ்புக் கூகுளை குறி வைப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
மெசஞ்சர் கூகுள் சர்ச்சை விட இன்னும் துல்லியமானதாக இருக்கும். தேவையற்ற பக்கங்கள் எல்லாம் நீக்கப்பட்டுவிடும்.  தேடுதலை எளிமையாக்கி உதவி செய்ய ஒரு டிஜிட்டல் அசிஸ்டென்ட்டும் செயல்படும்.

கூகுளின் வர்த்தக பலங்கள் அனைத்தும் ஃபேஸ்புக்கிற்கும் உள்ளது. சொல்லப்போனால் கூகுளால் செய்ய முடியாதவை எல்லாம் ஃபேஸ்புக்கால் செய்யமுடியும். ஆல்பபெட்டின் வேலையே வருமானத்தை பெருக்குவதுதான் என்பதால் ஃபேஸ்புக் வேகம் எடுப்பதை இனி கூகுளால் தடு க்க முடியாது. 
ஃப்ரீ பேஸிக்ஸ் திட்டத்தை ஃபேஸ்புக் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதன் நோக்கமே இதுதான். இணையத்தின் ராஜாவாக தான் மட்டுமே இருக்கவேண்டும் என நினைக்கிறது அந்த நிறுவனம். செய்திகள், கட்டுரைகள், வீடியோக்கள், படங்கள், மெசேஜ்கள் என அனைத்தும் அதன் வழியேதான் பார்வைக்கு வரவேண்டும் என விரும்புகிறது. 
WWW என்பதை மாற்றி  "ஃபேஸ்புக்" தான் இனி என்ற ஆதிக்கத்தை இணைய உலகில் கொண்டுவர ஃபேஸ்புக் திட்டமிட்டு செயல்படுகிறது.
அதாவது இணைய உலகின் ஆல் இந்த ஆல்  அழகுராஜா ஆக ஃபேஸ்புக் மாறிக்கொண்டிருக்கிறது.
கூகுள் இதனை எப்படி எதிர் கொள்ளப் போகிறது?
========================================================================
கூகுள் நிறுவனம் வாஸ்ட் ஆப் போன்ற ஒரு அப் வெளியிடகளம் இறங்கி யுள்ளது .

  தற்போது கூகுள் நிறுவனம் Duo என்ற video-calling அப் கலம் இறக்கியுள்ளது..

இது  நல்ல வரவேற்பை பயனர்களிடம்  பெற்றுள்ளது.


 வாட்ஸ் ஆப் போன்ற chat messenger அப்பிளிகேஷனை 
 கூகுள் நிறுவனம் வெளியிட முடிவு செய்துள்ளது.

 இதற்கு Allo என பெரியரிட்டுள்ளது.

இது கிட்டத்தட்ட Duo அப்பிளிகேஷனை போன்று இருக்கின்றது.ஆனால்  Allo ஆப்பில் voice message, Smart Reply, Whisper மற்றும் Shout போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

end-to-end encryption என்ற பாதுகாப்பு அம்சமும், incognito conversations என்ற மறைநிலை உரையாடல்கள் வசதியும் தரப்பட்டுள்ளது.இவ்வுரையாடல் பிறாரால் நம் அனுமதியின்றி பார்க்க,கேட்க இயலாது.

Snap chat போன்று அனுப்பிய தகவல்கள் அதுவே அழிக்கும் வசதியும், அதனை நாம் தெரிவு செய்து கொள்ளும் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கூகுள் GTalk மற்றும் Hangouts போன்றவற்றில், இது போன்ற வசதிகள் கொடுத்திருந்தது.

 வாட்ஸ்ஆப் போன்று Allo அப்பிளிகேஷனை கூகுள் நிறுவனம் முதன்முறையாக களத்தில் இறக்கி  
ஃபேஸ்புக்கிறகு சரியான போட்டியை தந்துள்ளது.
==========================================================================================
இன்று,
ஆகஸ்டு-31.

  • மலேசிய விடுதலை தினம்(1957)

  • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)

  • வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)

==========================================================================================
                                       "அதுதானே, மக்கள் பிரச்சனைகளை பேச உங்கள விட்டுடுவோம்மா?
                           வந்தீங்களா, ரெண்டு அம்மா பாட்ட கேட்டிங்களான்னு போயிட்டே இருக்கணும்..
            சும்மா எப்பப்பாத்தாலும் காவேரி, சிறுவாணி, பாலாறு, சட்டம் ஒழுங்கு, வேலைவாய்ப்புன்னு..." 
                    ஹெல்மெட் அணியாமல்வாகனம் ஓட்டாதீர்!
                             செல்போன் பேசிக் கொண்டு 
                                 வாகனம் ஓட்டாதீர்!!


                                                                                                   - தமிழ் நாடு காவல்துறை