ருசி தரும் நோய்கள்.

நீங்கள் பசிக்காக சாப்பிடாமல் ருசிக்காக பல உணவுகளை சாப்பிடும் பழக்கம் உள்ளவரா.?
வார,வாரம் குடும்பத்துடன் பெரிய,நட்சத்திர உணவகங்களில் சாப்பிட்டு விட்டு வருவதை பழக்கமாக வைத்திருப்பவரா?
அப்படி வசதியானவர் இல்லை ஆனால் வீட்டில் உணவின் சுவைக்காக அஜினோமோட்டோ உப்பை சேர்த்து ருசிப்பவரா?

 பணியிடம் காரணமாக  ஊர் விட்டு ஊர் வந்து  பாஸ்ட் புட் என்ற விரைவு உணவகங்களில் வெறு வழியில்லாமல் சாப்பிடுபவரா?

நீங்கள் எல்லோருமே இதை படிப்பது நல்லது.

உங்கள் உணவில் சுவை அதிகரிக்க சேர்க்கும்  அஜினோமோட்டோ உப்பு , பாஸ்ட்புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளி லும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் ஆகியவையின் கொடுமையான மறு பக்கத்தை கண்டிப்பாக நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

 மேலைநாட்டு உணவகங்களில்  மட்டும் உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்பட்ட  இருந்த அஜினோமோட்டோ .தற்போது கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கிறது.
அதன் பின் விளைவுகள் பற்றி அறியாத மக்கள் உணவில் அஜினோமோட்டோ சுவை அதிகரிப்பதாக எண்ணி வாங்கி செல்கின்றனர்.
 மோனோ சோடியம் குளூட்டமேட்என்ற வேதிப்பெயரைக் கொண்ட  உப்புதான் , அஜினோமோட்டோ.

இந்த அஜினோமோட்டோவின் விஷத்த ன்மை கொண்டது.

 குறிப்பாக அஜினோமோட்டோ கலந்த உணவுகளை விரும்பி சாப்பிடும் குழந்தைகளுக்கு பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன.
 அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாக குறையும். 
இதனால் உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. 
மேலும் இந்த ரசாயன  பொருள் மூளையில் ஆர்குவேட் நுக்ளியஸ் என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.

 மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.

 ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப் பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம்பித்துவிடும்.

 அஜினோ மோட்டோவைப் போன்றே பாஸ்ட்புட் கடைகளிலும், ஐந்து நட்சத்திர விடுதிகளி லும் பயன்படுத்தப்படும் ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட் என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற பல விலங்கு களின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். 

இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது

. பாக்கெட்டுகளில் கிடைக் கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் போன்றவை இந்த எண்ணெய்யில்தான் தயாரிக்கப்படுகின்றன.

இந்த எண்ணெய்யைப் பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. 




ஆனால் இந்த எண்ணெய்யைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் பருமன் எல்லாம் வந்துவிடும்.


விருந்துகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள். 
பல பெற்றோர்கள், குழந்தை இதையாவது சாப்பிடுகிறதே என்று ஆசை ஆசையாக பலரும் அதை வாங்கிக் கொடுப்பர். 

சில மாதங்கள், வருடங்கள் கழித்து இந்த நோஞ்சான் எக்கச்சக்கமாக சதை போட்டு ஊளைச் சதைதான் போடும்  .

பிறப்புக் கோளாறு, உறுப்புகளில் வளர்ச்சி யற்றத் தன்மை, தலைவலி, வாந்தி, வயிற்று வலி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா, பக்கவாதம், அல்சிமர்ஸ் என்ற முதுமை நோய் மற்றும் சர்க்கரை நோய் என்பவையெல்லாம் விரைவு உணவு கடைகளில் ,நடசத்திர ஓட்டல்களில் பயன் படுத்தப்படும் அஜினோமோட்டோவும்  ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்  எண்ணை  உபயோகித்து தயாரிக்கும் உணவுகள் அதை உண்டு மகிழ்பவர்களுக்கு இலவசமாக அள்ளி வழங்கும் பக்க விளைவு  நோய்கள் .
=======================================================================================
இன்று,
ஆகஸ்டு-07.


எம்.எஸ்.சுவாமிநாதன்
  • இந்திய கைத்தறி தினம்

  • இந்திய அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)

  • இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)

  • அமெரிக்க  ராணுவம் உருவாக்கப்பட்டது(1789)
  • =======================================================================================
  • ஈஷா யோக போக மையம்?
ஈஷா யோக மைய்யத்தை பற்றி அடிக்கடி குற்ற சாட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கிறது.ஆனால் அதிகாரிகளும்,காவல்துறையினர் ஜக்கி வாசுதேவுக்கு ஆதரவாக அனைத்தையும் முக்குத்தி மறைத்து வந்தனர்.
இம்முறை அரசு அதிகாரியின் மக்களையே ஜக்கி மூளைச்சலவை செய்து முறைகேடுகள் செய்ய ஆரம்பிக்க அந்த அதிகாரி குடும்பத்துடன் வந்து குற்ற சாட்டை மனுவாக கொடுத்து விட்டார்.
ஆனால் இதுவரை அதிகாரிகளும்,காவல்துறையும் ஒன்றையும் கண்டு கொள்ளவில்லை.
வெள்ளியங்கிரி மலையையே ஆக்கிரமித்து காடுகளை அழித்து கட்டிடங்களை கட்டியுள்ளார்.
நொய்யல் ஆற்றையே காணாமலாக்கி விட்டார் .
வன விலங்குகளை காடுகளில் இருந்து விரட்டியடித்து தனது ஆசிரம எல்லையை  சட்டத்துக்கு  விரோதமாக விரித்துக்கொண்டே செல்வதால் சாலைகளில் யானை முதலான விலங்குகள் அலைய ஆரம்பித்து  உண்டாக்கியும்,விபத்துக்களில் இறந்தும் கொண்டிருக்கின்றன.
ஜக்கி சாமியாருக்கு ஆதரவாக சிலர் பேசினாலும் அவர் ஆசிரம முன்னாள் நிர்வாகியே ஜக்கியின் உண்மை முகத்தை காட்டுகிறார்.
             ஜக்கி வாசுதேவ்                                                          செந்தில்                                      
ஈஷா யோகா மையத்தில் உள்ள சம்கிருதி பள்ளியில் 14 வயது சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மச்சாரியம் ஏற்க வைப்பதாகவும், இம்மையத்தில் பல மர்ம மரணங்களை மூடி மறைப்பதாகவும் இம்மையத்தில் பணியாற்றிய முன்னாள் நிர்வாகி செந்தில்  கூறியுள்ளார். 
கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தனது மகள்களை மூளைச்சலவை செய்து துறவரம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், தனது மகள்களை மீட்டுத் தரும்படி வடவள்ளி பகுதியை சேர்ந்த முன்னாள் பேராசிரியர் காமராஜ் என்பவர் கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தலைமைச் செயலகத்துக்கு புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டிடம் எழுப்பியது, யானை வழித்தடங்களை மறித்தது, சட்ட விரோதமாக வெளிநாட்டினரை தங்க வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஈஷா யோகா மையத்தின் மீது அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பா
ளராக எட்டு ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சனியன்று செய்தியாளர்களிடம் செந்தில் கூறுகையில், ஈஷா யோகா மையத்தில் ஏராளமானவர்களுக்கு மூளைச்சலவை செய்து பிரம்மச்சாரியம் மேற்கொள்ள வைத்திருப்பதாக புகார் தெரிவித்தார். 
மேலும், ஈஷா சம்கிருதி பள்ளியில் படிக்கும் 14 வயது சிறுவர்களை கூட கட்டாயப்படுத்தி பிரம்மச்சாரியம்ஏற்க வைப்பதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தியோ, மூளைச்சலவை செய்தோ பிரம்மச்சாரியம்  ஏற்க வைப்பதில்லை என யோகா மையத்தினர் கூறுவது முற்றி
லும் பொய்யானது எனவும் தெரிவித்தார்.
இதேபோல், ஈஷா மையத்திற்கு வருபவர்களை தரம் பிரித்து யாரிடம் வேலை
வாங்கலாம், யாரிடம் பணம் வசூலிக்கலாம், யாரை பிரம்மச்சாரியம் ஏற்க வைக்கலாம்
என்பதை திட்டமிட்டு அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதே ஒருங்கிணைப்பாளர்களின் பணியாக இருப்பதாகவும் கூறினார். ஈஷா யோகா மையத்தில் கட்டிட அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், ஈஷா சம்கிருதிபள்ளி எந்தவித அனுமதியும் இல்லாமல் இயங்கி வருவதாகவும் செந்தில் புகார் தெரிவித்தார்.
அங்கு உள்ள சாமியார்கள் உள்ளிட்டோரை 20 மணி நேரம் வரை வேலை வாங்குவதாகவும், அவர்களில் பெரும்பான்மை யானவர்களுக்கு மனச்சிதைவு ஏற்படுவதாகவும், அவர்களுக்கு கோவையில் உள்ள ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

மேலும், ஈஷா யோகா மையத்தில் சுவாமி ஏகாக்ரா உள்ளிட்ட பலர் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாகவும், அவை மூடி மறைக்கப்படுவதோடு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தார். 
குறிப்பாக, சுவாமி ஏகாக்ரா மனநிலை சரியில்லாமல் தற்கொலை செய்ததாக அவரது பெற்றோர்களை யோகா மையத்தினர் சொல்லவைத்ததாக கூறிய அவர், மனநலம் சரியில்லாத ஒருவர் எப்படி பிரம்மச்சாரியம் ஏற்கமுடியும் என கேள்வி எழுப்பினார்.  
ஈஷா யோகா மையத்தில் சூரிய குளத்தில் மெர்க்குரி சிலை இருப்பதாகவும், மெர்க்குரியுடன் தண்ணீர் சேர்வதால் அங்கு குளிப்பவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதேபோல், பல பிரம்மச்சாரிகள் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர், பேராசிரியர் காமராஜ் கூறியது போல் ஈஷா மையத்தில் போதைப் பொருட்கள் பயன்பாடுகள் இருப்பதும், பிரம்மச்சாரிகளிடம் சொத்துக்களை எழுதி வாங்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் செந்தில் தெரிவித்தார்.
இவ்வாறு ஈஷா யோகா மையத்தின் மீது அங்கு பணியாற்றிய முன்னாள் நிர்வாகி ஒருவரே பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார்.

இனியாவது அந்த போலி சாமியார் ஜக்கியின் ஆசிரமத்தை அரசு சோதனையிட்டு விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.நமக்கு இன்னொரு பிரேமானந்தா கிடைப்பார் என்றே தெரிகிறது.
==========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?