செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

இனி சி பி ஐ முடிவு செய்யும்?

தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில், திருப்பூரில் சிக்கிய, 570 கோடி ரூபாய் பற்றிய முதல்கட்ட விசாரணையை, மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., துவக்கி உள்ளது. 

பணத்துடன் பிடிபட்ட, மூன்று கன்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலி என்று சி.பி.ஐ  விசாரணையில் தெரியவந்ததாலும் வங்கிப்பணம் என்பதிலும்,ஆவணங்கள் முறையாக இல்லாத்தாலும்,அசல் ஆவணங்கள் இதுவரை கிடைக்காத்தாலும்  வழக்கு பதிவு செய்யப்பட்டதாக   சிபிஐ தெரிவித்துள்ளது..


சட்டசபை தேர்தல் மே, 16ல் நடந்தது. அதற்கு, இரு நாட்களுக்கு முன், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் - குன்னத்துார் புறவழிச் சாலையில், தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படையினர், நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, மூன்று கன்டெய்னர் லாரிகள் நிற்காமல் சென்றன; அவற்றை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்ததுடன், அவற்றில் இருந்த, 570 கோடி ரூபாயை கைப்பற்றினர்.விசாரணையில், 'அது, கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள அதே வங்கியின் கரன்சி வினியோக மையத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டது. 

வெகு கால தாமதத்திற்குப்பின்னரே எஸ்.பி.ஐ., அதிகாரிகளும் மறுநாள் உறுதிப்படுத்தினர். 
அதன் பின், இந்திய ரிசர்வ் வங்கியும், 'அந்த பணம், வங்கிக்கு வங்கி பணம் தட்டுப்பாடு காலங்களில் பணம் கொண்டு செல்வது வழக்கமான நடைமுறை தான்' என,தெரிவித்தது.


ஆனால்  அந்த கன்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலியானவை ஆந்திர மாநில மோட்டார் சைக்கிள்கள் பதிவெண்கள் என, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 
அதனால், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை, அந்த பணத்தை வைத்திருக்க, தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.இதற்கிடையில் எதிர்க்கட்சிகள், 'அது,வாக்காளர்களுக்கு தரப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம்' என்று குர்றம் சாட்டின.
தேர்தல் முடிவுகள் வெளியான பின், அந்த தொகையை எந்த வித விசாரனையை செய்யாமல்  கோவையில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியிடம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்து.
ஆனால் மூன்று கன்டெய்னரிலும் சேர்த்து வெறும் 570 கோடிகள் தான் இருந்தது என்ற தேர்தல் ஆணையம் கூறியதிலும்,ஸ்டேட் வங்கி தனது பணம்தான் என்பதை ஒரு நாளுக்கு அப்புறம்தான் கூறியது,ஆனால் பணம் பிடிபட்ட ஒருமணி நேரத்திலேயே மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி சம்பந்தமே இல்லாமல் அவசரமாக வங்கியின் பெயர் குறிப்பிடாமல் அதை வங்கியின் பணம் என்ரு மட்டும் கூறியது,அதன் பின்னரே ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது என்று பல சந்தேகங்கள் இருப்பதை சுட்டிக்காட்டி சிபிஐ சார்பாற்ற விசாரனையில்தான் உண்மை வெளியாகும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் வழக்கு தொடர்ந்தார். 
அவரது மனுவில், 'பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் போலியானவை. அது, தேர்தலுக்காக கடத்தப்பட்ட ஹவாலா பணம். எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'பூர்வாங்க முகாந்திரம் இருந்தால், முதல் கட்ட விசாரணை நடத்தலாம்' என, சி.பி.ஐ.,க்கு ஜூலை மாத துவக்கத்தில் உத்தரவிட்டது. 
வழக்கு விசாரணையின் போது, ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த பதில் மனுவில், " வங்கிகள்  பணம் இல்லாவிட்டால் வேறு வங்கியில் இருந்து பணம் கொண்டு போவது வழமைதான்" எனஉப்பு சப்பில்லாத  விளக்கம் அ ளிக்கப்பட்டது.
இந்நிலையில், '570 கோடி ரூபாய் விவகாரத்தில், உடனடியாக விசாரணையை துவங்க வேண்டும்' எனக் கோரி, டில்லியில், சி.பி.ஐ., இயக்குனரிடம், டி.கே.எஸ்.இளங்கோவன், கடந்த வாரத்தில் மனு அளித்தார். இதையடுத்து, அது பற்றிய முதல் கட்ட விசாரணையை, சி.பி.ஐ., அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

இது தொடர்பாக, டில்லி சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில், 570 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், கண்காணிப்புப் படை சோதனையில், கன்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் மாறியிருந்தது உண்மை. 
இவ்வழக்கில் வங்கியையோ, வேறு அரசு துறையையோ குறிப்பிடாமல், வழக்கை பதிவு செய்து முதல் கட்ட விசாரணையை துவக்கி இருக்கிறோம். 
முதல் கட்ட  விசாரணை முடிந்த பின்னரே, வழக்கில் சந்தேகத்திற்கிடமான நபர்களை சேர்த்து விசாரனை செய்ய முடிவெடுப்போம்  என்று அவர்கள் தெரிவித்தனர்.
சிபிஐ விசாரிப்பதால் உண்மை வெளியாகும் என்ற நம்பிக்கை பிறந்தாலும் பணம் பிடிபட்டவுடன் வங்கி அதிகாரிகளுக்கு முன்பே அதை வங்கிப்பணம் என்று சொல்லி வழக்கை திசை மாற்றிய  அருண் ஜெட்லி (ஒரு மத்திய அமைச்சரின் பணி இதுதானா?),வாக்குகள் எண்ணிக்கை நடக்கையிலேயே ஜெயலலிதா முதல்வரானதுக்கு வாழ்த்தி தேர்தல் முடிவுகளை திசை மாற்றிய பிரதமர் மோடி இவர்கள் கையில்தான் சிபிஐ உள்ளது.
எனவே உண்மை வெளிவரும்,ஆனா வராது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.=====================================================================================
இன்று,
ஆகஸ்டு-09.
தாமஸ் ஆல்வா எடிசன்


  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கம்  (1942)
  • சிங்கப்பூர் விடுதலை தினம்(1965)

  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்(1892)

  • பைசா நகர (சாய்ந்த) கோபுரம்  கட்ட  ஆரம்பிக்கப்பட்டது .ஆனால்  200 ஆண்டுகளுக்கு பின்னரே முடிவுற்றது(1173)அதன் பின்னரே ஒரு பக்கமாக சாய ஆம்பித்தது.

 ஜோதிலட்சுமிமரணம் .
1963ம் ஆண்டில் தொடங்கி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்தி வந்தவர் ஜோதிலட்சுமி. 
16 வயதிலேயே கவர்ச்சி நடிகையாக வலம்வந்த அவர், தனது இறுதிக்காலம் வரை கவர்ச்சி வேடங்களில் நடிக்க ஒருபோதும் தயங்கவில்லை.
அன்று கவர்ச்சியில் அவர் காட்டிய, கட்டிய ஆடைகளைவிட குறைவான ஆடைகளில் இன்றைய கதாநாயகிகள் உலா வருகின்றனர்.
அவரது சினிமா பிரபலத்திற்கு அடையாளமாக, ஜோதிலட்சுமி என்ற பெயரில், சென்னை பல்லாவரத்தில் தியேட்டர் ஒன்று இயங்கிவந்தது  குறிப்பிடத்தக்கது.

, 1980களில் அவரது சகோதரி ஜெயமாலினியின் சினிமா பிரவேசம் காரணமாக, ஜோதி லட்சுமிக்கு படவாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து, சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஓய்வுபெற்றிருந்த இவர், மீண்டும் முத்து (1995), சேது (1998) போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி, பெரும் வரவேற்பை பெற்றார்.


இதன்பின், கவர்ச்சி பாடல்களில் நடனம் ஆடாமல், பல்வேறு படங்களிலும், டிவி சீரியல்களிலும் குணசித்திர மற்றும் காமெடி நடிகையாகவும் வலம்வர தொடங்கினார் ஜோதிலட்சுமி. மிடில் கிளாஸ் மாதவன், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, ஜகன் மோகினி (2009), திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில், ஜோதிலட்சுமி, நகைச்சுவை நடிகையாகவும் அவர் நடித்திருந்தார்.

சுமார் 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள ஜோதிலட்சுமி, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில், ஜோதிலட்சுமி உயிரிழந்தார். இன்று பிற்பகலில், கண்ணம்மாபேட்டையில் உள்ள சுடுகாட்டில் அவரது உடல் தகனம் நடைபெறும் என, ஜோதிலட்சுமியின் மகளும், நடிகையுமான ஜோதிமீனா தெரிவித்துள்ளார். எனினும், அவரது வயது உள்ளிட்ட விவரம் கூறப்படவில்லை. மறைந்த ஜோதிலட்சுமிக்கு, சினிமா நடிகர்கள், நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
====================================================================================


தாமஸ்ஆல்வா எடிசன்.
1847-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் உள்ள மிலான் நகரில் சாமுவெல் எடிசன், நான்சி தம்பதிக்கு ஏழாவது மகனாகப் பிறந்தவர் தாமஸ்ஆல்வா எடிசன். 
சிறு வயதிலேயே காது கேட்கும் திறனை இழந்த அவர், பள்ளிப் பருவத்தில் மந்த புத்திச் சிறுவனாகவே காட்சியளித்ததுடன், மூளைக் கோளாறு உள்ளவன் என்றும் ஆசிரியர்களால் கருதப்பட்டார்.
ஏழு வயதில் எடிசனின் மூளை  சக்தி தூண்டப்பட்டு சுறுப்பாக செயல் பட ஆரம்பித்தது.
அடுத்து தனது 21 வயதுக்குள் ரிச்சர்டு பார்க்கர் எழுதிய இயற்கைச் சோதனை வேதம், தாமஸ் பெயின் எழுதிய ஆக்க நூல்கள், ஐசக் நியூட்டன் இயற்றிய கோட்பாடு, மைக்கேல் ஃபாரடேயின் செய்தி இதழில் இருந்த மின் சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நூல்களை படித்து முடித்தார். 
இதன்மூலம், அவர் செய்கை முறையில் சோதனைகளை புரிந்து படைக்கும் திறனை பெற்றார்.
அதனடிப்படையில், 1869-ம் ஆண்டில் தானாக இயங்கும் தந்திக் குறிப்பு பதிவுக் கருவியை முதல் முதலாக கண்டுபிடித்தார். 
தொடர்ந்து, கிராம ஃபோன், மின்சார பல்பு, ஜெனரேட்டர், திரைப்பட கேமரா உள்ளிட்டவற்றையும் கண்டுபிடித்த அவர், 1931 அக்டோபர் 18-ம் தேதி இறந்தார். 
=====================================================================================
முகநூல் தரவு.

ராஜா ராசா

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இன்னொரு பெயர் இருக்கு உங்களில் யாருக்காவது தெரியுமா ?

பஞ்ச ரோடு - என்று சொல்லுவார்கள் !

பஞ்ச ரோடு - என பெயர் வர காரணம் என்ன தெரியுமா?
1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான பஞ்சத்தின்பொது அப்போதைய வெள்ளைக்காரன் தோராய கணக்குப்படி சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் .
அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்கொண்டானாம் .
வெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாய் உணவு தானியங்களை கொண்டுவந்து இறக்கியும் பஞ்சம் தீரவில்லை எங்கு பார்த்தாலும் பசி பட்டினி . 
மரண ஓலங்கள் . 
அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும் மக்களை வைத்தே அந்த சாலையை அமைத்தானாம்
ரோடு போட போறவங்களுக்கு கூலியாக ஒரு குவளை அரிசி கஞ்சி குடுப்பானாம் ...
என்னுடைய தாத்தா சிறுவயதில் அவங்க அப்பாகூட போயி ரோடு போடும் இடத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருப்பாராம் .
அவங்க அப்பா ரோடு வேலை செஞ்சுட்டு கூலியா அந்த அரிசி கஞ்சிய வாங்கி என் தாத்தாவுக்கு குடுத்துட்டு தானும் குடித்துவிட்டு வீட்டுக்கு மீதியை எடுத்துவருவாராம் ...
அதனாலதான் அந்த (திருச்சி - சென்னை) ரோட்டுக்கு பஞ்ச ரோடு . அப்புடின்னு பேரு வந்துச்சாம்.
அப்போதைய மக்கள் தொகை பதினேழு கோடி மட்டுமே ...
இப்போ நூத்தி இருபது கோடிக்குமேல் ...
அதே பஞ்சம் இப்போ வந்தா என்ன ஆகும் ... ???
அப்போ இருந்த வெள்ளைக்காரன் வெளிநாடுகளில் இருந்து தானியங்களை கொண்டுவந்து இறக்கினான்.
இப்போ உங்களுக்கு எந்த நாட்டுக்காரன் தானியம் குடுப்பான்?

சீனா காரன் காசு வாங்கிகிட்டு பிளாஸ்டிக் சாமான் குடுப்பான்.

அமேரிக்கா காரன் காசு வாங்கிகிட்டு கோகோ கோலா குடுப்பான்.
யாராவது அரிசி குடுப்பானுங்களா?
முகநூலில் நண்பர்கள் எல்லாரும் பசி பட்டினி பஞ்சம் என்றால் சோமாலியாவைதான் சுட்டி காட்டுகின்றனர்.

வெளிநாட்டுகாரன் பசி, பட்டினி, ஏழை, பஞ்சம் .

இவைகளுக்கு இந்தியாவை மட்டுமே உதாரணமாக
சொல்கிறான் ...என்பது உங்களுக்கு தெரியுமா ?
இப்போது உங்கள் கண்களுக்கு கோமாளிகளாக தெரியும் விவசாயிகள் ஒவ்வொருவரும் அப்போது தெய்வமாக. தெரிவார்கள் .