சனி, 6 ஆகஸ்ட், 2016

தவறான தகவல்கள் மட்டுமே
'முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டப்பேரவையில் பேசும்போது, 1971-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது எனக் கூறி 2007-ம் ஆண்டு பேரவையில் கருணாநிதி பேசியதாக  ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். 
அத்துடன் மதுவிலக்கு விஷயத்தில் அதிமுக அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள கலைஞர் ,சில கேள்விகளை  ஜெயலலிதாவிடம் எழுப்பியுள்ளார்.
"மதுவிலக்கில் அதிமுக அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளது எனக் கூறும் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?
'முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டப்பேரவையில் பேசும்போது, 1971-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது எனக் கூறி 2007-ம் ஆண்டு பேரவையில் நான் பேசிய கருத்து ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மதுவிலக்கு விஷயத்தில் அதிமுக அரசு உண்மையான அக்கறை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
1971, 2007-ம் ஆண்டுகளை நினைவுகூர்ந்த முதல்வர், 21-7-2015-ல் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை மறந்து விட்டார். மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி கடந்த 10-8-2015-ல் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதுவும் அவருக்கு தெரியவில்லை.
1971-ல் திமுக ஆட்சியில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. அப்போது பேசிய நான், வேறு வழியில்லை என்பதால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும் வரை மதுவிலக்கை ஒத்திவைத்திருக்கிறோம் என குறிப்பிட்டேன்.
1971-ல் மதுவிலக்கை ரத்து செய்த திமுக அரசே 1974-ல் மதுவிலக்கை அமல்டுத்தியது. மதுக்கடைகளை மூடியது. அதனை நேற்று பேரவையில் பேசும்போது முதல்வர் மறைத்துவிட்டார். திமுக ஆட்சியில் கொண்டு ரத்து செய்யப்பட்ட மதுவிலக்கு, திமுக ஆட்சியிலேயே நடைமுறைக்கு வந்து விட்டது என்பதுதான் உண்மை.
1981-ல் முதல்வர் எம்ஜிஆர் கள், சாராய விற்பனைக்காக மதுவிலக்கை ரத்து செய்தார். அதன்பிறகு 2001-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, மது ஒழிப்பு பிரகடனம் செய்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, மலிவு விலை மது விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டது.

2003-ல் முதல்வர் ஜெயலலிதா மது விற்பனைக்காக டாஸ்மாக் நிறுவனத்தை தொடங்கி மதுக்கடைகளை திறந்தார்.
1991-ல் திமுக ஆட்சியில் இருந்த மலிவு விலை மது திட்டத்தை, பாவகரமான காரியம் எனக்கூறி ரத்து செய்து முதல் கையெழுத்து என விளம்பரம் செய்து கொண்டா். ஆனால், அதிமுக ஆட்சியில் 1-1-2002-ல் மலிவு விலை மது விற்பனை திட்டம் அறிவிக்கப்பட்டது.
1993-ல் தமிழகத்தில் உள்ள பார்கள் ஒழிக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், அவரது ஆட்சியில் 2002-ல் பார்கள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
2008-ம் ஆண்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் என்னைச் சந்தித்த பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 1,300 பார்கள், 128 மதுக்கடைகள் மூடப்பட்டன. மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் தான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது என்பதைப்போல பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது உண்மையல்ல. 
1937-ல் ராஜாஜி முதல்வராக இருந்தபோது, சென்னை மாகாணத்தில் அதுவரை நடைமுறையில் இல்லாத மதுவிலக்கை அமல்படுத்தினார். 25 மாவட்டங்களில் சேலம், சித்தூர், கடப்பா, வட ஆற்காடு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே மதுவிலக்கு இருந்தது. அதுவும் 1939-ல் முடிவுக்கு வந்தது. 

1948-ல் ஓமந்தூரார் முதல்வரான பிறகே தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தினார். இதிலிருந்து திமுக ஆட்சியில் தான் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது என்ற வாதம் எவ்வளவு தவறானது என்பது தெளிவாகிறது.
1969-ல் எம்ஜிஆர் வெளியிட்ட அறிக்கையில், மதுவிலக்கு கொள்கையில் எந்தக் கட்சிக்கும், தனி மனிதனுக்கும் உள்ள அக்கறையைவிட முதல்வர் கருணாநிதிக்கு அதிக அக்கறை உண்டு என கூறியிருந்தார். 
இந்த அளவுக்கு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருந்ததாகக் கூறப்ப்டும்  எம்ஜிஆர் ஆட்சியில்தான் 1-5-1981-ல் எம்.ஜி.ஆரால்  கள், சாராய,பிராந்தி க் கடைகள் திறக்கப்பட்டன.

முதல்வர் ஜெயலலிதா கூறுவது போல மதுவிலக்கில் அவரது அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் கடந்த 5 ஆண்டுகளில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தாதது ஏன்?'' 
என்று கலைஞர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதற்கு ஜெயலலிதா சட்டமன்றத்திலேயே உப்பு சப்பில்லாமல் ஆதாரமில்லாமல் எதையாவது கூறுவார் என்று எதிர் பார்க்கலாம்.
முன்பெல்லாம் ஆதாரமின்றி சட்டசபையில் பேசவே மாட்டார்கள்.
அப்படி பேசவும் கூடாது.
அங்கு நடப்பவை எல்லாம் ஆவணங்கள்.
அமைசர்களிடம்  பதில்  கோரி  அவர்கள் பதில்  தர வேண்டியவற்றில் சாதாரண உறுப்பினர் பாண்டியராஜன் சம்பந்தமில்லாமல்  எழுந்து பதில் தருகிறார்.அதை சபாநாயகர் என்று கூறிக்கொண்டு விதிகளின் படி அவையை நடத்துவதாகக் கூறி கொள்பவர் அனுமதிக்கிறார்.
ஆளுங்கட்சி அதிமுகவினர் திமுகவை திட்டி பேசியவை எல்லாம் அவை குறிப்பில் ஏறும் அதே வேளையில் அதற்கு திமுகவினர் தரும் பதில்கள் நீக்கப்படுகின்றன.
ஒரு சார்பான,தவறான  தகவல்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்படுகின்றன.
அனால் ஜெயலலிதா முதல்வரான பின்னரோ சட்டமன்றத்தில் அங்கு பேச வேண்டியவற்றைத்தவிர மற்ற எல்லாமும் பேசப்படுகிறது.
பேசப்படுகிறது என்பது கூட  தவறு ஏசப்படுகிறது.

கலைஞானி கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
விரைவில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என தெரிகிறது.வாழ்த்துக்கள்.
======================================================================================
இன்று,
ஆகஸ்டு-06.
  • ஹிரோஷிமா, டோரோ நாகாஷி நினைவு தினம்

  • ஜமைக்கா விடுதலை தினம்(1962)

  • பொலீவியா விடுதலை தினம்(1825)

  • உலகளாவிய வலை (WWW)தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ் லீ வெளியிட்டார்(1991)

இயக்குனருமான வியட்நாம் வீடு சுந்தரம்  மரணம் . 
அவருக்கு வயது 86.

அடிப்படையில், நாடக நடிகரும், கதை எழுத்தாளருமான சுந்தரம், கடந்த 1970ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற படத்தில், நடிகராக அறிமுகம் ஆனார்.

 இதன்மூலமாக, வியட்நாம் வீடு சுந்தரம் என அழைக்கப்பட்டார். 

அதைத்தொடர்ந்து, சிவாஜி கணேசன் நடிப்பில் பெரும் வெற்றிபெற்ற கவுரவம் என்ற படத்தை இயக்கினார். மேலும் சில படங்களை இயக்கிய சுந்தரம், ஏராளமான டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கதை, வசனம், இயக்கம் செய்வது மட்டுமின்றி, பின்னணிக் குரல் கலைஞராகவும் தனது பன்முகத்தன்மையை பதிவு செய்தவர் வியட்நாம் வீடு சுந்தரம்.

=======================================================================
  • ஹிரோஷிமா, டோரோ நாகாஷி நினைவு தினம்
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா மீது 1945 ஆகஸ்ட் 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியது. 
இதன் நினைவுநாள் இன்று "உலக ஹிரோஷிமா தினம்'  என கடைப்பிடிக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தின் போது, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் மீது, அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இத்தாக்குதல்களால் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான ஆயிரக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
'லிட்டில் பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த 'பி-29 ரக எனோலாகெய்' என்ற அமெரிக்க விமானம், ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில், உலகின் முதல் அணுகுண்டை வீசியது. இது, அப்பகுதியில் 4 சதுர மைல் அளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. அப்போது ஹிரோஷிமாவின் மொத்த மக்கள்தொகை 3 லட்சத்து 50 ஆயிரம். ஏறத்தாழ 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதில் இறந்தனர். 
  •                              ஹிரோஷிமா, டோரோ நாகாஷி நினைவு சின்னம் 
கதிர்வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். (இதன் பாதிப்பு இன்றும் தொடர்கிறது). குண்டு வீசப்பட்டு 16 மணி நேரம் கழித்து அமெரிக்க அதிபர் ஹாரிட்ரூமேன், ஜப்பான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். அணுகுண்டை சோதித்து பார்ப்பதற்காக அமெரிக்கா இதனை செய்தது எனவும் கூறப்படுகிறது. இதன் பிறகே ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டது, உலக நாடுகளுக்கு தெரியவந்தது.
மூன்று நாட்கள் கழித்து ஆக., 9ல், ஜப்பானின் நாகசாகி நகரின் மீது 'பேட் மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து 6 நாட்கள் கழித்து, 1945 ஆக., 15ம் தேதி ஜப்பான் சரணடைவதாக ஒப்புக்கொண்டது. அத்துடன் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. போரில் அணுஆயுதம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதலும், கடைசியாகவும் அமைந்தது. அணுகுண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்ட இந்த 2 நகரங்களும், அந்த சுவடே தெரியாத அளவுக்கு தற்போது பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்துள்ளது .
======================================================================================
             "ஈஷா "வெள்ளியங்கிரி மலை ஆக்கிரமிப்பு,
                         இளம்பெண்கள் சீரழிப்பு .

ஏர்டல் வாடிக்கையாளர்களே உஷார்..!!!

பா.ஜ.க உறுப்பினராக்கும் போலி Airtel Customer Care எண்கள் : பகீர் தகவல்!!!

Airtel customer care எண்களாக இணையத்தில் காணக்கிடைப்பவைகளில் சில உங்களை பாஜக உறுப்பினராக்கக் கூடும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

2014ல் பாஜக தனது தீவிர உறுப்பினர் சேர்க்கையை தொடங்கியது. 

விளைவு, உலகில் உள்ள அரசியல் கட்சிகளில் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற சிறப்பை பெறும் வகையில் அதிக உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைத்ததாக பாஜக அறிவித்தது. தொடங்கப்பட்டு 30 ஆண்டுகளேயான பாஜக, 80 ஆண்டுகள் செயல்பாட்டிலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியை விட 1.3 மில்லியன் வாக்காளர்களை அதிகம் சேர்த்ததாக  அதிர்ச்சி அளித்தது. 

சீன கம்யூனிஸ்ட் கட்சிதான் உலகின் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 35 மில்லியன் உறுப்பினர்களை கொண்டதாக கருதப்பட்ட பாஜக, இணையம் மற்றும் Missed Call மூலம் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட திட்டங்களை ஆரம்பித்ததன் மூலம், அடுத்த 5 மாதங்களில் 50 மில்லியன் உறுப்பினர்களை கட்சியில் சேர்த்ததாக அறிவித்தது.

பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் அதிகரித்ததை அடுத்து பல்வேறு மட்டங்களிலும் விமர்சனங்கள் எழுந்தது. 


அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதனை விமர்சித்தனர். பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் தில்லுமுல்லு செய்தே உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், The Wire இணையதள செய்தி நிறுவனம், புலனாய்வு செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அதில், இணையத்தில் Airtel customer care எண்களாக காணப்படுபவைகளில் சிலவற்றை அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

Google-ல் Airtel customer care எண் என தேடும் போது ‘customercarenumbers.in’, ‘icustomercare.in’ உள்ளிட்ட இணைய தளங்களில் கிடைக்கக் கூடிய post-paid மற்றும் pre-paid எண்களுக்கான toll-free தொடர்பு எண்களில் ஒன்று 1800-103-4444. இந்த எண்ணிற்கு நீங்கள் தொடர்பு கொண்டால் பா.ஜ.கவின் உறுப்பினராவதற்கான செயல்பாட்டில் உங்களை கொண்டு செல்லும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

இணையத்தில் தேடும் போது உடனடியாக கிடைக்கக் கூடிய இத்தகைய வலைதளங்கள் Airtel Customer எண்களுடன் போலியான எண்ணையும் அளிக்கின்றன. Toll-Free எண்களாக கூறப்படும் 1800-103-4444 எண்ணுக்கு அழைக்கும் போது, சில கணங்கள் ரிங் ஒலித்ததற்கு பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. பின்னர் +918220483241 என்ற எண்ணில் இருந்து “பா.ஜ.கவில் இணைய 1800-266-2020 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்” தமிழில் SMS வருவதை "The Wire" நிறுவனம் எடுத்துக்காட்டியுள்ளது. தமிழ்மொழி அறியாத பிற மாநிலத்தவர்கள் Airtel customer care எண் என நினைத்து தொடர்பு கொள்ளும் போது அது, தாங்கள் பாஜகவின் அடிப்படை உறுப்பினராகி விட்டதற்கான உறுப்பினர் எண்ணை தங்களுக்கு அனுப்பும். மேலும் உறுப்பினர் செயல்பாட்டை முழுமையாக்குவதற்கு தங்களது விவரங்களை அனுப்பக்கோரும்.

Airtel customer care எண் என தரப்பட்டுள்ள போலியான எண்ணானது Airtel-ன் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கங்களில் காணப்படவில்லை. இது தொடர்பாக Airtel நிறுவனத்தை தொடர்புகொண்ட போது, ”Airtel-ன் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தில் (www.airtel.com) அளிக்கப்பட்டுள்ள எண்ணிற்கு மட்டும் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாக” The Wire செய்தி நிறுவனத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் இணையதள பிரிவுகள் போலியான இணையதளங்கள் மூலம் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள சமூகநல ஆர்வலர்கள் சிலர், சட்டப்படி குற்றமான இது குறித்து தேர்தல் ஆணையத்தில் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல்கள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்துள்ளனர்