மின் அஞ்சல்கள்
*ஒவ்வொரு நாளும் குத்துமதிப்பாக 20,500 கோடி மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. அதாவது, ஒவ்வொரு நொடியிலும் 24 லட்சம் அஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதில் 90% ஸ்பேம் மெயில்கள் என எடுத்துக் கொண்டாலும், மிஞ்சி நிற்கும் அஞ்சல்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
*தங்களுக்கு ஏதாவது கடிதம் வந்திருக்கிறதா என வாசல் பக்கம் இருக்கும் தபால் பெட்டியையே நாள்கணக்கில் பார்க்காமல் தவிர்ப்பவர்கள் உண்டு. ஆனால் மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில் 91% பேர், தினந்தோறும் ஒரு முறையாவது தங்கள் அஞ்சல் கணக்கைக் காண்கின்றனர். இணையம் பயன்படுத்தாமல் உங்களால் இருக்க முடியுமா? முடியாது. இந்த வகையில், மின் அஞ்சல்கள் சரியான இடத்தைப் பிடித்துள்ளன.
*மின் அஞ்சல் பயன்படுத்துபவர்களில் 75% பேர் இதற்காகத் தங்கள் ஸ்மார்ட் போன்களையே பயன்படுத்துகின்றனர். இந்த தகவல்தான், மக்கள் ஸ்மார்ட் போன்களுக்கு அடிமையாகியுள்ளனர் என்பதைக் காட்டியது.
*ஜிமெயில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ நூறு கோடியை எட்டிவிட்டது. உலகின் மக்கள்தொகை 700 கோடியை எட்டியுள்ளது. இவர்களில், இன்னும் பெரும்பாலானவர்களுக்கு இணைய இணைப்பு கிடைக்காமல் உள்ளது. எனவே, இணையம் பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் ஜிமெயில் பயன்படுத்துகின்றனர் என்பது பெரும் வியப்புக்குரிய செய்தியே.
*நல்ல திறமையுடன் மின் அஞ்சல்களை வர்த்தகப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினால், நாம் செலவழிக்கும் ஒவ்வொரு நூறு ரூபாய்க்கும் ரூ.4,500 லாபம் ஈட்டலாம். அதனால்தான் நாம் பல ஸ்பேம் மெயில்களை, நாள்தோறும் பெறுகிறோம்.
நன்றி:முத்தாரம்.
இன்று,
ஆகஸ்டு-08.
1848 – மாத்தளை கிளர்ச்சி. வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டார்.
1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் “லெ மான்ஸ்” என்ற இடத்தில் மேற்கொண்டார்.
1949 – பூட்டான் சுதந்திரம் பெற்றது.
1967 – ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது.
1990 – ஈராக் குவெய்த்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது.
================================================================================================