கணினி பற்றிய புரிந்துணர்வு



கணினி இல்லாத நிறுவனங்கள் மட்டுமின்றி வீடுகள் கூட இன்று இல்லை எனலாம்.
மனிதனின் ஆறாவது விரலாக அதுவும் அத்தியாவசிய விரலாக கணினி அமைந்து விட்டது.
சிலர் கணினி பற்றி பேசும்போது நாம் அதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் எதற்கு வாயை திறக்க வேண்டும் என்று இருப்பவரா நீங்கள்.
அப்படி என்றால் கணினியின் அடிப்படை வார்த்தைகள் பத்தையாவது நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது.
இதன் மூலம் கணினி இயக்கம் பற்றிய புரிந்துணர்வு உங்களுக்கு கிடைக்கலாம்.கொஞ்சம் மட்டுமே கணினி பற்றி தெரிந்து கொண்டு எம்.சி.ஏ,அளவுக்கு பேசுகிறவர்கள் வாயையும் அடைக்கலாம்.
அது சரி கணினி,கணினி என்கிறீர்களே அது........?என்கிறிர்களா .அதுவும் சரிதான்.
கம்ப்யூட்டரைத்தான்  கணினி என்று சொல்லுகிறேன்.
கணினியை நீங்கள் சொல்லுகிற மாதிரியும் சொல்லலாம்.
Hardware: (வன்பொருள் ) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.
Software: (மென்பொருள் ) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.

USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.


Control Panel: (கட்டுப்பாடு  பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.


Download: (பதிவிறக்கம் )கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.


Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப் படும்.
Taskbar: ( நீள் கட்டம்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப்படும்போது கிளிக் 
செய்து பெறலாம். 
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

RAID - Redundant Array of Independent Disks:: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.

Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.

MMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.

Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த செயல்பாட்டினை இச் சுழற்சி குறிக்கிறது. இதனால் பைல்கள் கரப்ட் ஆனால் அதன் டேட்டாவும் எளிதாக மீண்டும் பெறப்படுகிறது. 

DES - Data Encryption Standard:: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டாவினை 64 - பிட் அடங்கிய தொகுப்புகளாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.
 Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப்படுவதாகும். புரிந்து கொள்ள முடியாத பார்மட்டில் டேட்டா பதியப்படும். இதனை மீண்டும் பெற மிகவும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத ரகசியமாகத் தயாரிக்கப்படும் கீ கொண்டே முடியும்.
Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.


Network: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியைத் தடுக்கும் ஒரு சாப்ட்வேர் அல்லது சிறிய ஹார்ட்வேர் சாதனம்.


Virus: (வைரஸ்) கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் ட்ரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். இமெயில் மூலம் சென்ற பின்னர் அந்த கம்ப்யூட்டரில் இருக்கும் இமெயில் முகவரிகளுக்கு மெயில் அனுப்புவது போலத் தானும் சென்று நாச வேலையில் ஈடுபடும். வைரஸ் புரோகிராம் கள் பொதுவாக எந்த அறிகுறியும் காட்டாது கம்ப்யூட்டருக்குள் இருக்கும். ஏதாவது நாள் அல்லது செயல்பாட்டினை மேற்கொள்கையில் தூண்டிவிடப்பட்டு நாச வேலையை மேற்கொள்ளும்.


Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per Inch - DPI) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதன் மூலம் சொல்லப்படுகிறது.


Email harvesting: டிஜிட்டல் உலகத்தில், ஏற்றுக் கொள்ளப்படாத தவறான செயல்பாடு. மின் அஞ்சல் முகவரிகளை மொத்தமாகத் திருடுவதற்கு ஒப்பானது. இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்குவதற்குப் பல வர்த்தகர்கள் உள்ளனர். பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களை அனுப்ப, இத்தகைய மின் அஞ்சல் பொதிகளைப் பயன்படுத்துவார்கள். போட்டிகளை நடத்தும் இணைய தளங்கள், ஏதேனும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தினைக் கூறி மின் அஞ்சல் முகவரிகளைப் பெறும் இணைய தளங்கள், அந்த வகையில் தாங்கள் பெறும் மின் அஞ்சல் முகவரிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர்.
அமெரிக்காவில் 2003 ஆம் ஆண்டு CAN-SPAM Act என்ற சட்டத்தின் கீழ் இது தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மின் அஞ்சல் முகவரியையும், அதற்கு உரியவரின் அனுமதி பெற்ற பிறகே, வேறு ஒருவர் அல்லது நிறுவனம் அல்லது இணைய தளம் பெற வேண்டும் என இந்தச் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது.

Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் விரும்பும்போது இயக்கலாம். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் விஸ்டா ஸ்டார்ட் மெனு, இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலாக உள்ள பாதிப் பிரிவு, இது போன்ற பின் செய்யப்படும் புரோகிராம்களுக்கானது. எந்த புரோகிராம்களை எல்லாம் நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, அவற்றை இதில் பதிந்து வைக்கலாம்.

Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், முகவரிக்குக் கீழாக “CC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். கார்பன் காப்பி என்பதன் சுருக்கம் இது. அனுப்பப்படும் மின் அஞ்சல் செய்தியினை, பல நபர்களுக்கு நகலாக அனுப்ப,இந்த முகவரிக் கட்டத்தினைப் பயன்படுத்தலாம். அதாவது, அனுப்பப்படும் அஞ்சல் தகவல்கள், இந்த கார்பன் காப்பி கட்டத்தில் உள்ள முகவரிக்குரியவர்களுக்கு அல்ல; ஆனாலும், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்பதே இதைக் குறிக்கிறது. அஞ்சல் யாருக்கு எழுதப்படுகிறதோ, அவரின் முகவரி “To:” என்ற பிரிவில் அமைக்கப்படுகிறது.


Blind Carbon Copy: மின் அஞ்சல் அனுப்புகையில், “BCC:” என்ற பிரிவினைப் பார்த்திருப்பீர்கள். இந்த பிரிவிலும், குறிப்பிட்ட அஞ்சலை நகலாக அனுப்பலாம். ஆனால், இந்தப் பிரிவில் உள்ள முகவரியில் உள்ளவர்கள் பெறுவதனை, அஞ்சலைப் பெறுபவர் மற்றும் கார்பன் காப்பி பிரிவில் உள்ளவர்கள் அறிய மாட்டார்கள். அவர்கள் அறியாமல், சிலருக்கு அனுப்ப இந்த ப்ளைண்ட் கார்பன் காப்பி உதவிடுகிறது. பொதுவாக, இது போன்ற பழக்கத்தை நாகரிகம் கருதி யாரும் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், இது நம்மிடமிருந்து அஞ்சலைப் பெறுபவர்களின் நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதாகும். பெறுபவர்களின் பட்டியலை, மற்றவர்களிடமிருந்து மறைக்க வேண்டும் என எண்ணுபவர்கள், இதனைப் பயன்படுத்துவார்கள்.

Domain Name: (தளத்தின் பெயர்)இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது.
======================================================================================
ன்று,
செப்டம்பர்-23.


  • நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)
  • ஹேர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)
  • நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)
  • சவுதி அரேபியா தேசிய தினம்(1932)

  • மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது(2002)
=======================================================================================
வீட்டில் நாம் கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.
ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.
அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.

அதை விட கூடுதல் பயன்கள் ஏராளம். 50 மில்லி வேப்ப எண்ணை போதும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
மொத்த செலவே ரூ 11 மட்டும், ஒரு மாதத்திற்கு.
இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய். கடையில் வாங்கும் கொசு விரட்டியில் அல்லோத்ரின் எனும் வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.
இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள். யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில் மாதம் தோறும் வாங்குகிறார்கள். ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள். நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு. அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.
மக்களை மயக்க விளம்பரம் எடுத்து கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.
ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250%.
நீங்களே உங்கள் வீட்டில் செய்து கொண்டால் குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து நமது விவசாயி பயனடைவான்.
============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?